காலகேயர்கள்
காலகேயர்கள், இந்து தொன்மவியல் கூறும் தானவர்களில் ஒரு பிரிவினர் ஆவார். காசியபர் மற்றும் கலா தம்பதியருக்கு பிறந்த 60,000 மகன்கள் ஆவார். இவர்கள் அசுரர்களின் தலைவரான விருத்திராசூரன் மற்றும் பிறர் தலைமையில் தேவர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள்.[1]
மகாபாரதம்
தொகுமகாபாரதத்தில் பல இடங்களில் காலகேயர்களை குறித்துள்ளது. தீர்த்த யாத்திரை பர்வத்தில், பெருங்கடல் ஆழத்தில் மறைந்திருக்கும் காலகேயர்களை வெளிக்கொணர, தேவர்கள் அகஸ்திய முனிவரிடத்தில் கடலை உறிஞ்சிக் குடிக்குமாறு வேண்டினர். அகத்தியரும் அவ்வண்னமே செய்தபடியால், கடலிருந்து காலகேயர்கள் வெளிப்பட்டனர். போரில் பெரும்பாலான காலகேயர்களை தேவர்கள் வீழ்த்தினர்..[2]போரிலிருந்து தப்பிய சில காலகேயர்கள் பாதாள உலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.[3]
வன பருவத்தில் காலகேயர்களை குறித்துள்ளது. தானவர்களில் ஒரு பிரிவினரான நிவாதகவசர்களுடன் சேர்ந்து காலகேயர்கள், தேவர்களுக்கு எதிரான போரில் கலந்து கொண்டு தேவலோகத்தைத் தாக்கினர். இந்திரன் தனது மகனான அருச்சுனன், தேரோட்டியான மாதலி உடன், நிவாதகவச்சர்களை அழிக்கும் பணியை ஒப்படைத்தான். இந்தப் பணியை முடித்துவிட்டு, தேவலோகத்திற்குத் திரும்பியபோது, அருச்சுனன் ஒரு அற்புதமான நகரத்தைக் கண்டான். மாதலி அருச்சுனனிடம்அந்த நகரம் ஹிரண்யபுரம் என்ற தங்க நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும், ஒரு வரத்தின் விளைவாக பிரம்மாவால் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார். காசியபரின் மனைவிகளான பூலோமா மற்றும் கலா என்ற இரண்டு பெண்களால் இந்த வரம் வேண்டப்பட்டது. அவர்கள் தங்கள் மகன்களும், தானவர்களுமான நிவாதகவசர்கள் மற்றும் காலகேயர்களை தேவர்கள், நாகர்கள் மற்றும் அசுரர்கள் வெல்ல முடியாதவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். இருப்பினும், அவர்கள் மனிதர்களுக்கு எதிராக எந்த பாதுகாப்பையும் நாடவில்லை. தேரோட்டி மாதலி அவர்கள் இந்திரனுக்கும் எதிரிகள் என்பதால் அவர்களை அழிக்க அருச்சுனனை வற்புறுத்தினார். அருச்சுனன் பாசுபத அஸ்திரத்தினை ஏவி ஹிரண்யபுரத்தையும், நிவாதகவசர்கள் மற்றும் காலகேயர்களை அழித்தான். [4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ www.wisdomlib.org (2019-01-28). "Story of Kālakeya". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ www.wisdomlib.org (2012-12-07). "Section CIV [Mahabharata, English]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ www.wisdomlib.org (2012-12-08). "Section CV [Mahabharata, English]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ Vyasa's Mahabharatam (in ஆங்கிலம்). Academic Publishers. 2008. pp. 273–274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89781-68-2.