பாசுபத அஸ்திரம்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் ஆயுதம்

பாசுபதாஸ்திரம் (IAST: Pāśupatāstra, சமசுகிருதம்: पाशुपतास्त्र) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் ஆயுதமாகும். சிவபெருமானின் ஐந்து ஆயுதங்களாக சிவாஸ்திரம், அகோர அஸ்திரம், பாசுபத அஸ்திரம், பிரத்தீங்கர அஸ்திரம், யோமாஸ்திரம் ஆகியவை கருதப்படுகின்றன. [1] முருகப்பெருமான், ராமர், அர்ஜூனன் மற்றும் சூரனின் குடும்பத்தினர் ஆகியோர் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பெற்றுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

பசுபதாஸ்திரத்தினை அர்ஜூனனுக்கு வழங்கும் சிவபெருமான்

சொல் இலக்கணம்

தொகு

ஓரியுரிகள் முதல் பிரம்மன் வரையான தேவர்கள் வரை அனைவரையும் பசு என்கிறது சைவ சமயம். பசுக்களின் தேவனாக சிவபெருமான் இருப்பதால் அவரை பசுபதி என்று அழைக்கின்றனர். பசுபதிநாதரின் ஆயுதம் என்பதால் பாசுபதம் என்று அழைக்கிப்படுகிறது.

ஆயுதத்தின் குணங்கள்

தொகு

பாசுபத அஸ்திரத்தினை எதிரிகள் மீது ஏவினால் அவரை விட பத்து மடங்கு பலமுள்ள ஒருவர் தோன்றி அவரை அழிப்பார். ஒரு படையின் மீது ஏவினால் படையுள்ளோர் போல பலம்வாய்ந்த எதிர் படை தோன்றி அனைவரையும் அழிக்கும்.

அர்ஜூனன் பாசுபதம் பெற்ற புராணம்

தொகு

இதிகாசமான மகாபாரதத்தில் அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து இந்த ஆயுதத்தினைப் பெற்று அசுரனைக் கொன்றதாக குறிப்பிடப்படுகிறது.[2] சிவபெருமானிடமிருந்து ஆயுதத்தினைப் பெற அர்ஜூனன் கடுமையாக தவமிருந்தார். அதனால் அர்ஜூன தவம் என்பது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. எண்ணற்ற சிவாலயங்களில் அர்ஜூன தவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

புராணக் கதை

தொகு

பாசுபத தேவை

தொகு

பாரதப் போரின் போது பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு, அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தினை பெற வேண்டியது அவசியம் என கண்ணன் கருதினார். அதனால் அர்ஜூனனை தவமியற்ற கானகத்திற்கு அனுப்பினார்.

அர்ஜூனன் தவம்

தொகு

கானகத்தில் அர்ஜூனன் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். கடுமையான தவத்தில் இருக்கும் அர்ஜூனை இந்திரன் பல வழிகளிலும் தொந்தரவு செய்தார். இந்திரனின் கட்டளைப் படி ரம்பை, ஊர்வசி போன்ற அரம்பையர்கள் அர்ஜூனனுக்கு தொந்தரவு தந்தார். ஆனால் அர்ஜூனன் கடுமையாக தவம் இருந்தார். அர்ஜூனனின் தவ வலிமை கண்டு இந்திரன் விலகினார்.

கிராத மூர்த்தி

தொகு
 
காஞ்சிபுரம் சிவவேடன் - அருச்சுனன் மோதல் சிற்பம்

ஆனால் மூகாசுரன் எனும் அசுரன் காட்டுப் பன்றி வடிவில் அர்ஜூனனை அழிக்க வந்தான். அதனால் சிவபெருமானும், பார்வதியும் வேடர்களைப் போல காட்டிற்கு வந்து,. மூகாசுரன் என்ற அசுரனை சிவபெருமான் வேடுவக் கோலத்தில் வேட்டையாடினார். அர்ஜூனனும் சிவபெருமானும் ஒரே நேரத்தில் பன்றியின் மீது அம்பை விட்டனர். சிவபெருமான் தன்னுடைய அம்பினால்தான் பன்றி இறந்தது என வாதிட்டார், அர்ஜூனன் அவனுடைய அம்பினால்தான் பன்றி இறந்தது என வாதிட இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. இறுதியில் வேடுவக் கோலத்தில் வந்தது சிவபெருமான் என்பதை அறிந்து அர்ஜூனன் சரணடைய.. சிவபெருமான் பாசுபத அஸ்திரம் அர்ஜூனனுக்கு தந்தார்.

அர்ஜூனன் தபசு

தொகு
 
அர்ஜூன தபசு குறித்தான ஓவியம்

அர்ஜூனன் பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருப்பது அர்ஜூனன் தபசு எனப்படுகிறது. தமிழ்நாட்டில் சேத்துப்பட்டு அருகே மேல்நந்தியப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் அர்ஜூனன் தபசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக அர்ஜூனன் தபசு மரம் நடப்படுகிறது. அர்ஜூனன் போல வேடமணிந்த நாடக நடிகர் சிவபெருமானை நோக்கி தவமிருக்க மரத்தில் ஏறுகிறார். மரத்தில் ஏறி தவம் புரிந்து சிவபெருமானிடம் அஸ்திரம் பெறுகிறார். தவசு மரத்தின் அருகே குழந்தை வரம் வேண்டி, வழிபடுகின்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறார்.

கோவில்கள்

தொகு

பாசுபத அஸ்திரத்தினைப் பெற அர்ஜூனன் தவம் மேற்கொண்ட தளமாக பல்வேறு இடங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

  • புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகில் உள்ள திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில் - இந்தத் தளத்தில் அர்ஜூனனைச் சோதிக்க சிவபெருமான் வேடுவ கோலத்தில் வந்தமையாக அதன் தலபுராணம் கூறுகிறது. [3] திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், சிவபெருமான் கிராத மூர்த்தியா, அம்பிகை வேடுவச்சியாக உள்ளவாறு ஐம்பொன் சிலைகள் உள்ளன.
  • தமிழ்நாடு மாநிலத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் -


இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. தஞ்சைப் பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் இன்று தொடக்கம் - தினமணி - 23 ஜனவரி 2020
  2. http://temple.dinamalar.com/New.php?id=384 அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்
  3. http://www.shivatemples.com/sofct/sct049.php பரணிடப்பட்டது 2015-05-31 at the வந்தவழி இயந்திரம் திருமேனி அழகர் கோவில், திருவேட்டக்குடி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபத_அஸ்திரம்&oldid=3376470" இலிருந்து மீள்விக்கப்பட்டது