ஆடிக்கிருத்திகை

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் இந்து சமயப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.[1] இது தென்னிந்தியா, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[2]

ஆடிக் கிருத்திகை
கடைபிடிப்போர்தென்னிந்தியா, இலங்கையில் உள்ள இந்துக்கள்
வகைசமய பண்டிகை
முக்கியத்துவம்முருகப்பெருமானுக்கு உகந்த நாள்
கொண்டாட்டங்கள்முருகன் கோவில் கொண்டாட்டம், பெண்களுக்கு மங்களகரமானது
நாள்Kṛttikā
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனகௌமாரம்

முன்னுரைதொகு

பொதுவாக தென்னிந்திய பாரம்பரியத்தின் படி கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது. 'ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது தமிழ் ஆன்றோர் வாக்கு ஆகும். ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள்.[3]

தொன்மம்தொகு

முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தை ஆடிக் கிருத்திகையாக விரதமிருந்து வழிபடுகிறார்கள்.[4]முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.[5]

விரதமுறைகள்தொகு

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப் படுகிறது.[6]

சிறப்புதொகு

மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. "ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகனுக்கு விரத வழிபாடு". மாலைமலர். https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/08/04095955/1181606/aadi-krithigai-viratham.vpf. பார்த்த நாள்: 6 April 2021. 
  2. "ஆடிக்கிருத்திகை.. முருகனின் அருள் கிடைக்கட்டும் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து". News18 Tamil. 2022-07-23. 2022-07-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. சைலபதி. "Aadi Krithigai | ஆடிக் கிருத்திகையின் சிறப்புகள் | வீட்டில் வழிபடுவது எப்படி?| Saraswathi Ramanathan". www.vikatan.com/. 2022-07-23 அன்று பார்க்கப்பட்டது.
  4. "இன்று ஆடி கிருத்திகை : கர்ம வினைகள் நீங்க முருகன் வழிபாடு!!". தினகரன். https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24535. பார்த்த நாள்: 6 April 2021. 
  5. Siva (2021-12-26). "கிருத்திகை விரத நாட்கள் 2021". Dheivegam. 2022-07-23 அன்று பார்க்கப்பட்டது.
  6. "ஆடி கிருத்திகை: சகல செல்வங்களும் அள்ளித்தரும் விரத வழிபாடு!". Samayam Tamil. 2022-07-23 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடிக்கிருத்திகை&oldid=3479784" இருந்து மீள்விக்கப்பட்டது