கார்த்திகை நோன்பு
கார்த்திகை நோன்பு இந்து சமய மக்களினால் கடைப்பிடிக்கப்படும் முருகனுக்கான நோன்புகளுள் ஒன்றாகும். திங்கள்தோறும் கார்த்திகை நாளில் இந்நோன்பு கடைப்பிடிக்கப்படும். முந்தைய நாள் நண்பகல் உணவு எடுத்துக் கொண்டு, அன்றிரவில் நோன்பு இருந்து முருகன் வழிபாட்டை செய்வார்கள்.[1] கார்த்திகை அன்று குளித்து நோன்பு இருந்து, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்த புராணம், கந்தர் கலிவெண்பா, முருக மந்திரங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வார்கள்.[2] ஆண்டுதோறும் கார்த்திகைத் திங்களில் வரும் திருக்கார்த்திகை, ஆடியில் வரும் ஆடிக் கார்த்திகை, தையில் வரும் தைக் கார்த்திகை ஆகிய மூன்று கார்த்திகை நாட்களும் சிறப்பு வாய்ந்த நாட்களாகக் கருதுப்படுகிறது.[3]
கார்த்திகை நோன்பு | |
---|---|
கடைபிடிப்போர் | தென்னிந்தியா, இலங்கையில் உள்ள இந்துக்கள் |
வகை | சமய பண்டிகை |
முக்கியத்துவம் | முருகப்பெருமானுக்கு உகந்த நாள் |
கொண்டாட்டங்கள் | முருகன் கோவில் கொண்டாட்டம், பெண்களுக்கு மங்களகரமானது |
நிகழ்வு | திங்கள்தோறும் |
தொடர்புடையன | கௌமாரம் |
தொன்மம்
தொகுசரவணப் பொய்கையிலிருந்து முருகனை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்கள் நினைவாக கார்த்திகை நாளன்று இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்கள் என்று நம்பப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "‘இன்று கார்த்திகை விரதம்..’ கந்தனின் அருள் பெற இந்த விரத முறை கட்டாயம்!". hindustantimes. https://tamil.hindustantimes.com/photos/explanation-of-the-procedures-to-be-followed-on-karthigai-viratham-131689169122895-2.html. பார்த்த நாள்: 17 November 2023.
- ↑ "கார்த்திகை விரதம் ... கவலை தீர்ப்பான் கந்தபெருமான்". மாலைமலர். https://www.maalaimalar.com/devotional/mainfasts/karthigai-viratham-512447. பார்த்த நாள்: 17 November 2023.
- ↑ "கார்த்திகை விரதம்". இனிது. https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/. பார்த்த நாள்: 17 November 2023.
- ↑ "மாத கிருத்திகையில் இந்த 1 பொருளை வைத்து முருகனை வழிபட்டால் மண்ணும் பொன்னாகும்!". dheivegam. பார்க்கப்பட்ட நாள் 17 November 2023.