கந்த சஷ்டி கவசம்

முருகன் கவசப் பாடல்

கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் பாடலை பாடியுள்ளார். அவற்றுள், திருச்செந்தூர் சஷ்டி கவசமே மிகவும் பிரபலம். இதன் காலம் 19ஆம் நூற்றாண்டு.[1][2] இதனை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரங்கேற்றினார். கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன் எனும் பதம் சென்னிமலை தல (சிரம் - தலை, சென்னி என்றாலும் தலை, கிரி - மலை; சிரகிரி - சென்னிமலை) இறைவனைக் குறிப்பது ஆகும்.[3] இந்தப் பாடல் மொத்தம் 244 வரிகளைக் கொண்டுள்ளது

'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் வெளியிடப்பட்ட கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்நூல் பெரிதும் அறியப்படுவது ஆகும். இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்பர்.

இசை வடிவம்

தொகு

இந்தப் பாடலுக்கு பலர் இசையமைத்துள்ளனர். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இந்த கந்த சஷ்டி கவசம் புகழ் பெற்றது ஆகும். அவர்கள் பாடியதில் ஒரு வரி மூலத்திலிருந்து வேறுபடுகிறது. மூலத்தில் ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க என்று இருப்பதை அவர்கள் ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க என்று பாடியுள்ளனர். ஆபேரி, கல்யாணி, சுபபந்துவராளி, சிந்து பைரவி,தோடி ஆகிய ராகங்களை உள்ளடக்கிய ராகமாலிகையாக இது பாடப்படுகிறது.

இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் ஒளிபரப்புகின்றனர்.[4]

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
  2. "சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! - வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்". விகடன் (31 அக்டோபர், 2016)
  3. குமுதம் ஜோதிடம்; 28.03.2008; சென்னிமலையின் திகட்டாத தேனமுதன் கட்டுரை
  4. கந்த சஷ்டி கவசம் ஒளிபரப்பு நேரம் பரணிடப்பட்டது 2011-09-20 at the வந்தவழி இயந்திரம், பார்த்த நாள், 08, ஏப்ரல், 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்த_சஷ்டி_கவசம்&oldid=4013754" இலிருந்து மீள்விக்கப்பட்டது