சுபலன்
சுபலன் என்பவன் மகாபாரத இதிகாசத்தில் வரும் ஒரு கதை மாந்தராவார். சுபலன் காந்தார நாட்டின் மன்னன். (இந்நாடு தற்போது ஆப்கானிஸ்தானில் ஒரு முக்கிய நகராக உள்ளது.) இவரின் மகன் சகுனி. சிவபக்தையான காந்தாரி இவரது மகள். பீஷ்மர் சுபலனின் காந்தார தேசம் சென்று, இரு கண் பார்வையற்ற திருதராட்டிரனுக்கு மணமுடிக்க காந்தாரியை பெண் கேட்க, சுபலன் மறுத்த போதிலும், காந்தாரி தானே முன்வந்து கண்களில் துணியைக் கட்டிக் கொண்டு, திருதராட்டிரனை மணம் முடிக்க ஒப்புக் கொண்டாள்.[1]