காந்தாரி மகாபாரதக் கதையில் வரும் ஒரு கதைமாந்தர் ஆவார். இவர் காந்தார நாட்டு (இன்றைய காந்தகார்/ ஆப்கானிஸ்தான்) மன்னனான சுபாலனின் மகள் ஆவார். காந்தார நாட்டு இளவரசன் சகுனி இவரது சகோதரர் ஆவார். காந்தாரி குருவம்சத்தைச் சேர்ந்த திருதராஷ்டிரனை மணந்து கொண்டார்.

திருதராஷ்டிரன் பிறவிக்குருடர் ஆகையால், பதிபக்தியின் காரணமாக காந்தாரியும் தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார். காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவர்களது மகன்களே கௌரவர் எனப்பட்டனர்.

இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். தனது மகன்கள் அழியக் காரணமாக இருந்த கிருஷ்ணனை, இவர் கிருஷ்ணனின் குலம் அழிய சபித்தார். இதுவே கிருஷ்ணரின் யாதவ வம்சத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தாரி&oldid=3789712" இலிருந்து மீள்விக்கப்பட்டது