புரூரவன் (ஆங்கிலம்:Pururavas) (சமஸ்கிருதம்:पुरूरव) என்பவர் சந்திர குலத்தினை சேர்ந்தவராவார். இவரைப் பற்றி இந்து சமய இதிகாசமான மகாபாரதத்திலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் புதன் மற்றும் - இலா தம்பதியினரின் மகனாகவும்[1] , கேசி எனும் அரக்கனுடன் போரிட்டு ஊர்வசியை மீட்டவராகவும் அறியப்படுகிறார். ஊர்வசியுடன் இல்லறம் நடத்தி ஆயு என்ற மகனைப் பெற்றார். அதன் பின்பு ஊர்வசி மீண்டும் இந்திர லோகம் சென்றதால் துறவியாக வாழ்ந்து மறைந்தார்.

ஊர்வசி - புரூரவன் ராஜா ரவி வர்மாவின் ஓவியம்

பிறப்பு

தொகு

பிரகஸ்பதியின் மனைவி தாரை, சந்திரனைக் கூடி, புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவஸ்தமனுவின் மகன் இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டில் யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன், இலா எனும் பெண் உருவமடைந்தான். பின்னர் புத தேவன், இலாவை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தையே புரூரவன் ஆவார்.[2]

ஊர்வசியும் புரூரவனும்

தொகு

தேவ மகளிர் ஊர்வசியைக் கேசி என்ற அரக்கன் கவர்ந்துசென்றான். புரூரவன், கேசியிடமிருந்து ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்து விட்டான். இவர்களுக்குப் பிறந்த மகன் ஆயு. புரூருவனின் வழித்தோன்றல்களே சந்திர குலத்தவர்கள் ஆயுவின் மகன் நகுசன். நகுசனின் மகன் யயாதி.

ஒரு நாள் மன்னன் பூரூரவசை, ஊர்வசி பிரிந்து சென்றதால் மனம் கலங்கிப் போனான். பின்னர், சோகம் குறைந்தவுடன் மனதில் வைராக்கியம் ஏற்பட்டது. மாபெரும் மன்னனாக இருந்த நான் ஒரு பெண்ணின் வலையில் வீழ்ந்து அவள் கைப்பாவை ஆகினேன். ஊர்வசி என்னிடம் வேத வாக்கியங்கள் மேற்கோள்களாக கூறியும், அவள் நற்போதனைகள் என் மனதில் பதியவில்லை. பாம்பை கயிற்றாக எண்ணியது எனது குற்றம் தானே. விவேகியாக இருப்பவர்கள், தீயவர் சேர்க்கையை விட்டுவிடவேண்டும். சாதுக்களை அண்டி, சேவை செய்து கொண்டு இருப்பவனுக்கு கர்மத்தளை என்ற அக்ஞான இருள் நீங்கி விடுகிறது. துயரக்கடலில் மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு பிரம்மத்தை அறிந்த சித்தர்களான ஞானிகள், உறுதியான படகு போன்றவர்கள்.

ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடன் மன்னர் புரூரவஸ் என்ற இளநந்தன் உலகத்திடம் பற்று நீங்கிற்று. அவனுடைய பந்த-பாசங்கள் எல்லாம் அழிந்தன. அவர் ஆத்ம ஞானியாக பற்று-பாசமில்லாமல் மண்ணுலகில் சுற்றித் திரிந்தார்.

இதனையும் காண்க

தொகு

சான்றாவணம்

தொகு
  • A Dictionary of Hindu Mythology & Religion by John Dowson

மேற்கோள்கள்

தொகு
  1. புதனின் மகன் புரூரவன்
  2. Dandekar, R.N. (1962). Indian Mythology in S. Radhakrishnan ed. The Cultural Heritage of India, Calcutta: The Ramakrishna Mission Institute of Culture, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85843-03-1, pp.229-30, 230ff
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூரவன்&oldid=4057655" இலிருந்து மீள்விக்கப்பட்டது