வைராக்கியம் (வேதாந்தம்)

வைராக்கியம் (சமசுகிருதம்: वैराग्य) என்பது உலகம் தரும் இன்பப் பொருட்களின் மீதான பற்றை நீக்குவதே. இது சந்நியாசிகளுக்கு இருக்க வேண்டிய முதல் குணமாகும். சிலர் வைராக்கியம் என்பதற்கு பிடிவாதம் எனத் தவறாக பொருள் கொள்கின்றனர். விவேகம் அடைந்தவர்களுக்கு வைராக்கிய குணம் எளிதில் அமையும். தர்ம சாத்திரங்களான உபநிடதங்களை குருமுகமாக பயில விவேகம், வைராக்கியம், முமுச்த்துவம், புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை மற்றும் மன அமைதி அவசியம்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.archive.org/stream/vairagyasatakamo025367mbp/vairagyasatakamo025367mbp_djvu.txt
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைராக்கியம்_(வேதாந்தம்)&oldid=4056275" இலிருந்து மீள்விக்கப்பட்டது