இலா
இலா (Ila) (சமக்கிருதம்: इला) இந்து தொன்மவியலின் படி, சூரிய குலத்தின் இச்வாகு வம்ச நிறுவனரான வைவஸ்தமனுவின் மகன்களில் ஒருவர் ஆவார். ஒரு முறை இலன் வேட்டையாட காட்டிற்குச் சென்ற போது, காட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரும் ஆண்கள் பெண்களாக மாற நேரிடும் எனும் சாபத்தை அறியாத இளன், காட்டின் அக்குறிப்பிட்ட பகுதியில் சென்றதால் பெண்னாக உருவமாற்றம் அடைந்தான் இளன். பெண்னாக மாறிய இளன், இலா தேவி என பெயர் சூட்டப்பட்டான்.
இலா | |
---|---|
மனைவி இலாவுடன் புதன் | |
தேவநாகரி | इल/इला |
சமசுகிருதம் | Ila/Ilā |
துணை | புத தேவன் |
சந்திரனுக்கும் தாரைக்குப் பிறந்த புதன் தேவனுக்கும்- இலா தேவிக்கும் பிறந்தவர் புரூரவன் ஆவார்.
இலாவை வேதங்களில் நாவன்மைக்கான தேவதையாக, இதா (சமக்கிருதம்: इडा) என்றும், புரூரவனின் தாயாகவும் குறிப்பிடப்படுகிறது.[1] இலன் இலா எனும் பெண்னாக மாறிய நிகழ்வை லிங்க புராணம், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புராண, இதிகாசங்களில் இலா
தொகுலிங்க புராணம் மற்றும் மகாபாரத காவியத்தின் படி, வைவஸ்தமனுவிற்கு பெண்னாகப் பிறந்தவர் இலா. பின்னர் வைவஸ்தமனு பெரும் வேள்வி செய்து மித்திர வருண தேவதைகளின் உதவியால் இலா தேவி பிரத்தியும்மன் எனும் ஆணாக மாறினாள்.[2][3][4] கூர்ம புராணம் மற்றும் அரி வம்சம், மார்கண்டேய புராணம், பாகவத புராணம் மற்றும் பத்ம புராணம் போன்ற புராணங்களின் படி, ஆண் குழந்தை பேறு அற்ற ஒரு பெற்றோர்கள், அகத்தியர் துணையுடன் மித்திர-வருண தேவர்களை வேண்டி பெரும் வேள்வி செய்தனர். வேள்விச் சடங்கில் குறை எற்பட்டதால், இலா எனும் பெண் குழந்தை பிறந்தது.[3][5][6][7] சில புராணங்களின் படி, வைவஸ்தமனுவின் மனைவி சிரத்தா தேவி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்க விரும்பினாள். சிரத்தா தேவியின் விருப்பத்திற்கிணங்க, வசிட்டர் வேள்வி செய்தார். வேள்வியின் பயனால் வைவஸ்தமனுவின் மனைவியான சிரத்தா தேவிக்கு இலா எனும் பெண் குழுந்தை பிறந்தது.
ஆனால் இலாவின் தந்தையான வைவஸ்தமனு, வசிட்டரின் துணையுடன் விஷ்ணு பகவானை வேண்டி, இலா எனும் தன் பெண் குழந்தையை, இலன் எனும் பெயரில் ஆண் குழுந்தையாக மாற்றினார். ஆணாக மாறிய இலாவிற்கு பிரத்தியும்மன் எனப் பெயரிடப்பட்டது.[8][9][10][11] பிரம்மாண்ட புராணங்களில் பெண்னாகப் பிறந்த இலா இறுதி வரை பெண்னாகவே இருந்தாள் எனக் கூறுகிறது.
பிரஜாபதியான கர்தம மகரிஷியின் மகனே இலன் என இராமாயணம் கூறுகிறது. இராமாயணத்தின் உத்திரகாண்டத்தில் அஸ்வமேத யாகத்தின் பெருமைகளைக் கூறும் போது இலாவின் கதை குறிப்பிடப்பட்டுள்ளது.[6][12]
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Bharatiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-413-8, p.57
- For hymns, see Ṛgveda I.13.9, I.142.9, I.188.8, II.3.8, III.4.8, VII.2.8, X.70.8 and X.110.8
- For mother of Pururavas, Ṛgveda X.95,18
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;LP_MBH
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 3.0 3.1 Williams, George Mason (2003). Handbook of Hindu mythology. Saint Barbara: ABC-CLIO Inc. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-106-9.
- ↑ Swami Vijnanananda (2008) [1921]. The S'Rimad Devi Bhagawatam. Vol. 1. BiblioBazaar, LLC. pp. 62–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4375-3059-9.
- ↑ O'Flaherty pp. 303-4
- ↑ 6.0 6.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Pattanaik46
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;connerila
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Hudson, D. Dennis (2008). The body of God: an emperor's palace for Krishna in eighth-century Kanchipuram. Oxford University Press US. pp. 413–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-536922-9.
- ↑ Samuel, Geoffrey (2008). The origins of yoga and tantra: Indic religions to the thirteenth century. Cambridge University Press. pp. 67–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-69534-3.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;shashi
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Pargiter, F.E. (1972). Ancient Indian Historical Tradition. Delhi: Motilal Banarsidass. pp. 253–4.
- ↑ Swami Venkatesananda (1988). The concise Rāmāyaṇa of Vālmīki. SUNY Press. pp. 397–9.
ஆதார நூல்கள்
தொகு- Doniger, Wendy (2002). "Transformation of Subjectivity and Memory in the Mahabharata and the Ramayana". In Shulman, David Dean (ed.). Self and self-transformation in the history of religions. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-514450-3.
- O'Flaherty, Wendy Doniger (182) [1980]. Women, androgynes, and other mythical beasts. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-61850-0.
- Meyer, Johann Jakob (1989) [1971]. Sexual life in ancient India. Delhi: Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0638-2.
- Pattanaik, Devdutt (2001). The man who was a woman and other queer tales of Hindu lore. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56023-181-3.
- Vanita, Ruth; Kidwai, Saleem (2001). Same-sex love in India: readings from literature and history. Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-29324-6.