யுயுத்சு
யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரியின் முதன்மை பணிப்பெண் சுக்தாவுக்கும் பிறந்த மகன் ஆவார். இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன் முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் பிறந்தவர். [1]
பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தார். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர் இவர் ஒருவரே ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கௌரவர்கள் மொத்தம் 101 பேர்!". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.