முதல் நாட் போர் (குருச்சேத்திரப் போர்)
மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் முதல் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள்
தொகுகௌரவர் அணியில் துச்சாதனன், படை முன்னணியில் சென்றான்; பாண்டவர் அணியில் பீமன், படை முன்னணியில் சென்றான். இருபக்கத்துப் படை வீரர்களுக்குள் வயதில் சிறியவனான அபிமன்யு, அனைவரிலும் மூத்தவரான வீடுமரை எதிர்த்துப் போரிட்டான். அபிமன்யுவின் தேர்க்கொடியில் கர்ணீகார மரம் பொன்னால் சித்தரிக்கப்பட்டு விளங்கிற்று[1] முதல் நாட் போரில் பாண்டவர்களின் அணி மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. தருமன் பயந்தான்; துரியோதனன் மகிழ்ச்சியிற் திளைத்தான். "என்ன செய்வோம்?" என கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்ட பாண்டவர்களின் மனதை கிருஷ்ணன் தேற்றினான்.
நிகழ்ந்த மரணங்கள்
தொகு1. விராடனுடைய மகன் உத்தரன்
2. விராடனுடைய இரண்டாம் மகன் சுவேதன்
உசாத்துணை
தொகுசக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.
- ↑ மகாபாரதம்-ராஜாஜி-வானதி பதிப்பகம் - ஐம்பத்து ஒன்றாம் பதிப்பு