தருமன்

(தருமர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தருமன் அல்லது யுதிஷ்டிரன் (Yudhishthira) மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர். குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராக இருந்தவர். இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றின் அரசர்.

தருமன்
மகாபாரதம் கதை மாந்தர்
Yudhishthir Birla mandir 6 dec 2009 (29).JPG
தருமனின் சிலை
தகவல்
குடும்பம்பாண்டு (தந்தை)
குந்தி (தாய்)
கர்ணன்
வீமன்
அருச்சுனன்
நகுலன்
சகாதேவன் (தம்பிகள்);
கௌரவர் (தந்தைவழி உடன்பிறவா சகோதரர்கள்);
கிருட்டிணன்
பலராமன்; (தாய்வழி உடன்பிறவா சகோதரர்கள்)
துணைவர்(கள்)திரௌபதி
பிள்ளைகள்பிரதிவிந்தியன், சுதனு (திரௌபதிக்குப் பிறந்த மகனும், மகளும்)

இவர் அனைத்து தர்ம சாஸ்த்திரங்களையும் அறிந்தவர். தருமரின் தந்தை பாண்டு முனிவர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு துருவாச முனிவர் செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு எம தருமராசன் மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.

திரெளபதி எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தினார். கௌரவர்களுடன் நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரௌபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரௌபதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு குருசேத்திரப் போரில் கௌரவர்களை வென்று சூதில் இழந்த இந்திரப்பிரஸ்தம் மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான்.

எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு.[1]

மேற்கோள்கள்தொகு

  1. தா மா இருவரும், தருமனும், மடங்கலும், (பரிபாடல் 3 அடி 8)

வெளி இணைப்புதொகு


பஞ்ச பாண்டவர்கள்
தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமன்&oldid=3610496" இருந்து மீள்விக்கப்பட்டது