பயனர் பேச்சு:Yokishivam/தொகுப்பு02

படங்கள் தொடர்பான காப்புரிமை

தொகு

நீங்கள் தெரிவுசெய்த உரிமத்தின் படி படிமம்:KADAUVL.jpg காப்புரிமை உங்களது. இந்த நூலை அல்லது அட்டப்படத்தை நீங்கள் உருவாக்கினால் அந்தக் காப்புரிமை உங்களதாக அமையும். இல்லாவிடின் நூல் அட்டை என்ற உரிமத்தைத் தேர்தெடுக்கவும். இந்தப் படத்தை நீங்கள் எடுத்து இருந்தாலும் நூல் அட்டை என்ற உரிமமே பொருத்தமாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 01:55, 3 நவம்பர் 2013 (UTC)Reply

காப்புரிமை விலக்கு

தொகு

அன்புள்ள Natkeeran ! வணக்கம்!! மேற்கண்ட கடவுள் உண்டா இல்லையா? சிறு புத்தகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவினால் வெளியிடப்பட்ட நூலாகும். யாவராலும் எடுத்தாள அனுமதிக்கப்பட்ட புத்தகமாகும். மேலும் தாங்கள் கூறிய //நூல் அட்டை என்ற உரிமத்தைத் தேர்தெடுக்கவும்//. எவ்வாறு? என தயவு செய்து பகரவும்--யோகிசிவம் (பேச்சு) 02:08, 3 நவம்பர் 2013 (UTC)Reply

  அனுமதி திருத்தியுள்ளேன் (வரலாற்றைக் காட்டவும் சொடுக்கி) மாற்றங்களை காணுங்கள்--ஸ்ரீதர் (பேச்சு) 02:32, 3 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

தங்களின் உதவிக்கு நன்றி!--யோகிசிவம் (பேச்சு) 04:25, 3 நவம்பர் 2013 (UTC)Reply

வலைப்பூ

தொகு

அன்புச் சகோதரன்! தீபாவளி முடிந்ததா? நான் தங்களிடம் வலைப்பூ தொடங்குவது குறித்து ஆலோசனை கேட்டேனே? எப்ப..பூ தருவீங்க?! நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 18:49, 3 நவம்பர் 2013 (UTC)Reply

மறுமொழி

தொகு

சகோதரா! தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பாருங்கள்-நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 02:17, 8 நவம்பர் 2013 (UTC)Reply

நண்பா எப்போது?

தொகு

சகோதரா! தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பார்த்தீர்களா?--யோகிசிவம் (பேச்சு) 11:10, 10 நவம்பர் 2013 (UTC)Reply

அரிய படம்

தொகு

சகோதரிக்கு வணக்கம்! "இருசகோதரர்கள்" பட படிமம் எங்கே கிடைத்தது!! நன்றிகள் பல... அதே போன்று "மானசம்ரட்ணம்", "சுவர்ணலதா", "பர்மா ராணி", "என்மகன்" போன்ற திரைப்படத்திற்கான படங்கள் கிடைத்தால்.!?? இணைக்க வேண்டுகிறேன். நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 17:00, 14 நவம்பர் 2013 (UTC)Reply

’சுவர்ணலதா’ மட்டும் கிட்டவில்லை. மற்ற மூன்றையும் இணைத்துள்ளேன். கூகுள் தேடலில்தான் கிடைத்தன.--Booradleyp1 (பேச்சு) 08:59, 15 நவம்பர் 2013 (UTC)

நன்றி!

தொகு

சகோதரிக்கு வணக்கம்! படங்களை இணைத்தமைக்கு நன்றி! நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 13:48, 15 நவம்பர் 2013 (UTC)     விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:28, 15 நவம்பர் 2013 (UTC)

கருத்திடுக

தொகு

அன்பு கனக்ஸ் "பாவலர்" ஓம் முத்துமாரி அவர்களை நன்கு அறிந்தவர்களில் நானும் ஒருவன் என்பதாலும் தமுஎகச-வின் கலை இலக்கிய இரவு என்கிற கலை நிகழ்ச்சி மேடைகளில் பல நிகழ்வுகள் இணைந்து பணியாற்றியவன் என்கிற நிலையிலேயே "பாவலர்" ஓம் முத்துமாரி என நகர்த்தினேன். தலைப்பு மீண்டும் ஓம் முத்துமாரி என மாற்றப்பட்டுள்ளதே? மீண்டும் "பாவலர்" ஓம் முத்துமாரி என மாற்றலாமா? அருள் கூர்ந்து கருத்திடுக. அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 15:29, 19 நவம்பர் 2013 (UTC)Reply

வணக்கம்! சிறீதரன் அவர்களுக்கு ஒரு தகவலை நீங்கள் தெரிவிக்க விரும்பினால்... நீங்கள் அவரின் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். அப்போதே அவரின் கவனத்திற்கு அச்செய்தி செல்லும்; நன்றி! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:34, 19 நவம்பர் 2013 (UTC)Reply
ஐயா, கட்டுரையின் உரையாடலில் என் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:16, 19 நவம்பர் 2013 (UTC)Reply

மறுமொழி

தொகு
வணக்கம்! செல்வ சிவகுரு, மறதியாக பதிவு செய்து விட்டேன் சிறீதரன் அவர்களின் பேச்சுப்பக்கத்திற்கு சென்றேன், அதற்குள் தங்களின் தகவல் நன்றி--யோகிசிவம் (பேச்சு) 15:42, 19 நவம்பர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  விடாமுயற்சியாளர் பதக்கம்
நீங்கள் ஒரு களைப்படையாத, சிறந்த உழைப்பாளி! நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:43, 19 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றியுரைத்தல்

தொகு
  பதக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க பாராட்டினை நல்கியமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --யோகிசிவம் (பேச்சு) 22:55, 19 நவம்பர் 2013 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

மாவட்ட ஆட்சித் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, கட்டுரைகளில் தரப்பட்டுள்ள இணைய இணைப்பை (தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கான இணையதளம்) என்னால் பார்க்க முடியவில்லையே?--Booradleyp1 (பேச்சு) 05:55, 20 நவம்பர் 2013 (UTC)Reply

மறுமொழி

தொகு

அன்பு சகோதரி! நானும் பல முறை முயன்றுதான் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கான இணையதளம் பார்க்க முடிந்தது.நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 06:07, 20 நவம்பர் 2013 (UTC)Reply

ஆனால் கட்டுரையிலுள்ள தள முகவரி Intranet என உள்ளதால் அந்த துறைக்குள் உள்ளவர்கள் மட்டுமே புகுபதிகை செய்து பார்க்க முடியும் என நினைக்கிறேன். நீங்கள் எவ்வாறு பார்த்தீர்கள் என்பதை எனக்கும் விளக்கினால் நானும் முயற்சி செய்து பார்ப்பேன்.
  • சரவணப் பொய்கை கட்டுரையில் நீங்கள் இணைத்துள்ள படம் ஒன்றில் கம்பி வலையில் விநாயகர்-என்று விளக்கம் தந்திருக்கிறீர்கள். அப் படத்தைத் தனியாக ஓப்பன் பண்ணிப் பார்க்கும் போது கம்பி வலைச் சட்டத்தின் மீது நாகர் வடிவம் தெரிகிறது. விநாயகர் தெரியவில்லையே.
  • இன்னுமொரு சந்தேகம், பழனிதானே முருகனின் படைவீடு? பழனியும் திரு ஆவினன் குடியும் ஒன்றா இல்லை வேறுவேறா? நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:22, 22 நவம்பர் 2013 (UTC)Reply

ஆறு படைவீடு (ஆவினன்குடி)

தொகு

\\அப் படத்தைத் தனியாக ஓப்பன் பண்ணிப் பார்க்கும் போது கம்பி வலைச் சட்டத்தின் மீது நாகர் வடிவம் தெரிகிறது. விநாயகர் தெரியவில்லையே\\

நாகர் அருகில் இருப்பது விநாயகர் சிலை:::
தவறு என்னுடையதுதான். எனது மடிக்கணினியின் திரை மிகவும் சிறியது. அதனால் முதல் பார்வையில் தெரியவில்லை. இப்போது படிமத்தை நகர்த்திப் பார்த்தால் விநாயகர் அருமையாகக் காட்சியளிக்கிறார்.

\\இன்னுமொரு சந்தேகம், பழனிதானே முருகனின் படைவீடு? பழனியும் திரு ஆவினன் குடியும் ஒன்றா இல்லை வேறுவேறா?\\

ஆம் பழனி என்பது ஊரின் பெயர். பழனி மலை மீது போகரால் நவபாசண சிலையை, முருகனின் திருவுருவை செய்து வழிபாடு செய்யப்பட்டது. ஆனால் திரு ஆவினன்குடி என்பது படைவீடு, பழனியும், திரு ஆவினன்குடியும் வேறு வேறு ஆகும். பழனி என்கிற ஊரில் இருக்கிற ஆறுபடைவீட்டில் ஒன்றுதான் திரு ஆவினன்குடி. நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 17:56, 22 நவம்பர் 2013 (UTC)Reply

அப்படியானால் பழனி மலை மேலுள்ள கோவில் ஆறுபடை வீடு இல்லையா, நான் இதுவரை அம்மலை மீதுள்ள முருகன் கோவிலைத்தான் அறுபடை வீடுகளில் ஒன்று என எண்ணியிருந்தேன். தெளிவுபடுத்தியதமைக்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:56, 23 நவம்பர் 2013 (UTC)Reply

படிமம்

தொகு

வணக்கம். சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படிமங்கள் நீங்கள் எடுத்தவையா?--Booradleyp1 (பேச்சு) 15:29, 3 திசம்பர் 2013 (UTC)Reply

மறுமொழி

தொகு

வணக்கம்! சகோதரி சமீபத்தில் எனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தேன், எனது கைபேசியில் எடுக்க முடிந்தவற்றை இணைத்துள்ளேன். நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 15:34, 3 திசம்பர் 2013 (UTC)Reply

படிமம் தேவையாயின் இணைக்கலாம்

தொகு

மேலும் திப்புவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், ஆங்கிலேயர்களை சிறைவைத்த பாதாள சிறைச்சாலை, பாதாள சிறையில் இருக்கும் பீரங்கி, பாதாள சிறையை ஆங்கிலப்படை குண்டு வீசிய துளையுள்ள இடம் அனைத்தும் பதிவேற்றியுள்ளேன். தேவையெனில் கட்டுரைகளில் இணைக்கவும். நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 15:41, 3 திசம்பர் 2013 (UTC)Reply

இப் பயணத்தின்போது நீங்கள் எடுத்து பதிவேற்றியுள்ள படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளன. உரிய கட்டுரைகளில் இணைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:28, 4 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

தகவலுக்கு நன்றி!--யோகிசிவம் (பேச்சு) 14:31, 4 திசம்பர் 2013 (UTC)Reply

ஆளுமைகள்

தொகு

வணக்கம், எஸ். வி. சகஸ்ரநாமம் பற்றிய கட்டுரைக்கு நன்றி. ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் எழுதும் போது கவனிக்க வேண்டியவை: கட்டுரையின் முதல் பந்தியில் அந்நபர் பிறந்த இறந்த நாட்கள், எதற்காக அறியப்படுகிறார் போன்ற பொது விபரங்கள் தரப்பட வேண்டும். அடுத்த பந்திகளில் அவரது வாழ்க்கைச் சுருக்கத்தைத் தரலாம்.--Kanags \உரையாடுக 20:35, 6 திசம்பர் 2013 (UTC)Reply

வழிகாட்டலுக்கு நன்றி

தொகு

வணக்கம்! தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி, நடைமுறைப் பின்பற்றப்படும். மேலும் எஸ். வி. சகஸ்ரநாமம் கட்டுரையை திருத்தினால் இன்னும் கூடுதலாக நெறிமுறைகளை அறிய ஏதுவாகும் என்று எண்ணுகிறேன். தயவு செய்து உதவ முடியுமா? நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 00:53, 7 திசம்பர் 2013 (UTC)Reply

உங்கள் கட்டுரையை மணியன் அழகாகத் திருத்தியிருக்கிறார்.--Kanags \உரையாடுக 04:02, 7 திசம்பர் 2013 (UTC)Reply
கட்டுரையை பார்த்தேன்! புரிந்து கொண்டேன். நன்றி!--Yokishivam (பேச்சு) 10:35, 7 திசம்பர் 2013 (UTC)Reply

தகவல் பிழை

தொகு

வணக்கம்! சுதிர் இடைக்குழுக்கள் என்பது வெகுஜன அரங்கம் என்கிற துணை அமைப்புகளான, தொழிளாலர், விவசாயி, மாதர், மாணவர் போன்ற அமைப்புகளுக்கும், கட்சிக்கும் இடையேயான இணைப்பு, வழிகாட்டுதல், கட்சி முடிவுகளை வெகுஜன அரங்கத்தின் பிரதிநிதிகள், கட்சியின் பொறுப்பாளர்கள் அங்கம் வகிக்கும் குழுதான் இடைக்குழு- வட்டக்குழு- ஒவ்வொரு வட்டத்திற்குமான குழு ஆகும். தயவு செய்து கலந்துரையாடவும் நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 01:09, 7 திசம்பர் 2013 (UTC)Reply

யோசனை சொல்லுங்கள்

தொகு

அன்பு தமிழ்! தற்போது தொகுத்துக்கொண்டிருக்கும் புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் இதில் வங்கதேசமும் உள்ளது. ஆனால் ஏற்கனவே வங்காள தேசம் என்ற கட்டுரை உள்ளது, வங்காள தேசம் கட்டுரையில் புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்ல் உள்ள தகவல்கள் இல்லை. வங்கதேசம் (புராதனம்) எனத் தலைப்பிட்டுத் தொகுக்கலாமா?--Yokishivam (பேச்சு) 14:25, 13 திசம்பர் 2013 (UTC)Reply

உங்கள் விருப்பம்!

1. புராதன வங்க தேசம் பற்றிய கட்டுரையை எழுதிவிட்டு, அதன் இணைப்பை வங்காளதேசம் கட்டுரையில் தரலாம். 2. நிறைய தகவல்கள் இல்லை என்றால், வங்கதேசம் கட்டுரையிலேயே தனித் தலைப்பில் எழுதலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:30, 13 திசம்பர் 2013 (UTC)Reply

உதவி

தொகு

அன்பு தமிழ்! பொதுவகத்தில் உள்ள 1733 Homann Heirs Map of India - Geographicus - India-homannheirs-1733.jpg இந்த கோப்பை கட்டுரையில் இணக்க உதவவும்---Yokishivam (பேச்சு) 05:54, 14 திசம்பர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தங்களின் கடும் உழைப்பையும், விடாமுயற்சியினையும் கண்டு வியக்கிறேன். நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:14, 14 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் செல்வசிவகுருநாதரே! விக்கியின் சிவயோகி அவர்களுக்கு களைப்பு என்றால் என்னவென்று தெரியுமா? ஆச்சரியமாக உள்ளதே!!!!! அன்பின்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:50, 15 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

தொகு
  பதக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க பாராட்டினை நல்கியமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --Yokishivam (பேச்சு) 06:19, 14 திசம்பர் 2013 (UTC)Reply

அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்

தொகு

அரண்மனை அருங்காட்சியகம், மைசூர் இதனை ஜகன்மோகன் அரண்மனை என தலைப்பு மாற்றம் செய்து இக்கட்டுரையை [1] ன்படி திருத்தம் செய்தால் சிறப்பாக இருக்கும்--ஸ்ரீதர் (பேச்சு) 02:59, 16 திசம்பர் 2013 (UTC)Reply

சிவயோகி,நான் தங்கள் கட்டுரையுள் சில திருத்தங்களை மேற்கொண்டு உரை திருத்தியுள்ளேன். கருத்துப் பிழை பொருட்பிழை இருந்தால் திருத்தலாம். ஏதும் அதில் பிழையாக மாற்றி உள்ளேனா?--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:20, 16 திசம்பர் 2013 (UTC)Reply

பேச்சு:ஜகன்மோகன் அரண்மனை பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 05:39, 16 திசம்பர் 2013 (UTC)Reply

நான் சிவயோகி அல்ல நண்பரே! யோகிசிவம். ஜகன்மோகன் அரண்மனை வேறு, மைசூர் அரண்மனை வேறு, அரண்மனை அருங்காட்சியகம், மைசூர் வேறு ஒவ்வொன்றும் தனித்தனியே உள்ளது. மேலும் அரண்மனை அருங்காட்சியகம், மைசூர் என்பது மைசூர் அரண்மனையினை ஒட்டி (ஒரே வளாகம்) பின்புறமுள்ளது. ஜகன்மோகன் அரண்மனை என்பது தனியாக மைசூர் அரண்மனைக்கு மேற்கு திசையில் உள்ளது. இதைப்பார்க்க அரண்மனை வளாகத்தைவிட்டு வேளியே வந்து வேறு பாதையில் செல்ல வேண்டும். லலிதா மகால் என்னும் ஓர் அரண்மனை மைசூர் சாமுண்டி கோவலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த லலிதா மஹால் கிட்டத்தட்ட ஜகன்மோகன் அரண்மனை போன்றே இருக்கும், அதில் தற்போது ஐந்து நட்சத்திர விடுதி நடைபெறுகிறது.--Yokishivam (பேச்சு) 09:47, 16 திசம்பர் 2013 (UTC)Reply

[2] இந்த இணைப்பில் உள்ள அருங்காட்சியம் தான் நீங்கள் கட்டுரையில் குறிப்பிடுவது என்று நினைக்கிறேன். ஆனால் இவ்விணைப்பில் ரெசிடென்ஷியல் மியூசியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அம்ப விலாசுக்குப் பின் உள்ளது என்ற குறிப்பும் உள்ளது. இது சரியானதா என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 14:13, 16 திசம்பர் 2013 (UTC)Reply


ஜெகன்மோகன் அரண்மனையின் படிமங்கள் விக்கி பொதுவகத்தில் இங்கு உள்ளன. இத் தலைப்பில் கட்டுரை உருவாக்கினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.--Booradleyp1 (பேச்சு) 14:21, 16 திசம்பர் 2013 (UTC)Reply

மிகச்சரிதான்! சோதரி

தொகு
உண்மைதான்! அம்ப விலாசுக்குப் பின் உள்ளது என்ற குறிப்பும் சரிதான். நான் துவக்கிய கட்டுரைஅருங்காட்சியகம் இதுதான்--Yokishivam (பேச்சு) 13:45, 17 திசம்பர் 2013 (UTC)Reply

பெயர் மாற்றலாமா?

தொகு

ஜகன்மோகன் அரண்மனை என்பதை அரண்மனை அருங்காட்சியகம், மைசூர் என மாற்றலாமா? நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 14:04, 17 திசம்பர் 2013 (UTC)Reply

கூகுள் தேடலிலும், நான் தந்திருந்த இணைப்பிலும், இந்த மியூசியத்தின் பெயர் 'residential museum' என்றும் இது அரண்மனைக்குப் பின்புறமும் அமைந்துள்ளது என்றும், அரண்மனைக்குள்ளும் மற்றொரு மியூசியம் உள்ளது என்றும் தரப்பட்டுள்ளது. நீங்கள் நேரில் சென்று பார்த்த போது நீங்கள் குறிப்பிடும் இந்த மியூசியத்தின் பெயர்ப்பலகையில் என்ன பெயர் இருந்தது என்று கூறினீர்கள் என்றால் நாம் தலைப்பைப் பற்றி ஒரு தெளிவுக்கு வரமுடியும் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:39, 17 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

பெயர் மாற்றியமைக்கு நன்றி! படத்திற்கு [3] ல் உள்ள படத்தைப் பதிவேற்றுவது எப்படி? நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 14:28, 17 திசம்பர் 2013 (UTC)Reply

இவை காப்புரிமை கொண்ட படிமங்கள். நாம் அந்த இணைய தளத்தில் இருந்து நாம் அவற்றை பதிவேற்ற முடியாது என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:42, 17 திசம்பர் 2013 (UTC)Reply

வேறு படிமங்கள் பதிவேற்றும் வரை அந்த இணைய தளம் வெளி இணைப்பாக இருக்கலாம்--ஸ்ரீதர் (பேச்சு) 06:14, 18 திசம்பர் 2013 (UTC)Reply

இது சரியா?

தொகு

\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என உள்ளது. கலந்துரையாடவும்--Yokishivam (பேச்சு) 12:46, 21 திசம்பர் 2013 (UTC)Reply

பாருங்கள்

தொகு

அன்பு ஸ்ரீதர்! மேலாண்மறைநாடு கட்டுரையை கொஞ்சம் பார்க்கமுடியுமா? அன்புடன்--Yokishivam (பேச்சு) 17:45, 21 திசம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--ஸ்ரீதர் (பேச்சு) 02:54, 22 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

அன்பு ஸ்ரீதர்! நன்றி!! மேற்கோள்களை இடுவது விவரியுங்களேன், அன்புடன்--Yokishivam (பேச்சு) 03:44, 22 திசம்பர் 2013 (UTC)Reply

காண்க - விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்--ஸ்ரீதர் (பேச்சு) 04:53, 22 திசம்பர் 2013 (UTC)Reply

குருந்தொகை

தொகு

குருந்தொகை என எழுதுவது தவறு. அது குறுந்தொகை. நீங்கள் மேலும் தொகுக்காதிருக்க குருந்தொகையை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:09, 3 சனவரி 2014 (UTC)Reply

தவறுக்கு வருந்துகிறேன்-தவறுதலாக தட்டச்சு செய்துவிட்டேன்.--Yokishivam (பேச்சு) 02:40, 3 சனவரி 2014 (UTC)Reply

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Yokishivam/தொகுப்பு02!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--Anton·٠•●♥Talk♥●•٠· 14:54, 3 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம் மேலும் பணி தொடர்க -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:14, 4 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம் --Booradleyp1 (பேச்சு) 11:34, 4 சனவரி 2014 (UTC)Reply
  விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:11, 5 சனவரி 2014 (UTC)Reply
  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:59, 11 சனவரி 2014 (UTC)Reply
  விருப்பம் இட்ட அனைவரின் ஆலோசனை, வழிகாட்டலில் பணியை தொடர்கிறேன் நன்றி--Yokishivam (பேச்சு) 17:13, 11 சனவரி 2014 (UTC)Reply

பார்வைக்கு

தொகு

வணக்கம். கொமரலிங்கம், கொழுமம் இரு கட்டுரைகளிலும் தமிழ்நாடு வரைபட மேற்கோள்கள் இரண்டு இராமநாதபுரம், கமுதி வட்டத்துக்குரியதாக இருந்தது. அதை மாற்றியிருக்கிறேன்.

எனக்கு மற்றுமொரு சந்தேகம். கொழுமம் கட்டுரையில்: \\மடத்துக்குளம் வருவாய் வட்டத்தின் வருவாய் கிராமம் (கிராம எண்:37) உட்கடை ஊர் ஆகும்.\\ -கொழுமம் ஊருடன் இதன் தொடர்பு புரியவில்லை.--Booradleyp1 (பேச்சு) 15:47, 4 சனவரி 2014 (UTC)Reply

தகவல்

தொகு

வணக்கம்! சகோதரி மடத்துக்குளம் வருவாய் வட்டத்தின் 37வது கிராமம் சங்கர்ராமநல்லூர் இந்த கிராமத்தின் துணைக்கிராமம் கொழுமம். வருவாய் துறையில் துணைக்கிராமத்தை உட்கடைக்கிராமம் என குறிக்கப்படும்--Yokishivam (பேச்சு) 13:07, 5 சனவரி 2014 (UTC)Reply

நன்றி. எனக்கு இது பற்றி தெரியாதாகையால் உட்கடை என்பது ஒரு தனி கிராமம் என்று எண்ணி விட்டேன்.--Booradleyp1 (பேச்சு) 17:16, 5 சனவரி 2014 (UTC)Reply

பார்க்க முடியமா?

தொகு

சகோதரிக்கு வணக்கம்! கொங்கு தேச அரசர்கள் பாருங்கள் நன்றி--Yokishivam (பேச்சு) 17:16, 11 சனவரி 2014 (UTC)Reply

கொங்கு நாட்டு அரசர்கள் என்று தலைப்பை மாற்றியிருக்கிறேன். (தேசம் என்பதை விட நாடு என்பது சரியான தமிழ்ச் சொல் என நினைக்கிறேன்) மேலும் கொங்கு நாட்டு அரசர்கள் என்ற துணைப்பகுப்புக்குள் 27 கட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:50, 12 சனவரி 2014 (UTC)Reply

நன்றி

தொகு

சகோதரிக்கு நன்றிகள்!நன்றிகள்!!--Yokishivam (பேச்சு) 16:42, 12 சனவரி 2014 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

வணக்கம். சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் கட்டுரையில் உள்ள படிமங்களின் பெயர்கள், எகா: படிமம்:Photo-0089 1.jpg என்றவாறு உள்ளன. அப்படிமங்கள் குறிக்கும் இடங்கள் அல்லது பொருள்கள் சம்பந்தமான பெயராக இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால்தான் யாராவது அவை குறித்து தேடும் போது கிடைக்க வாய்ப்புண்டு. --Booradleyp1 (பேச்சு) 15:06, 13 சனவரி 2014 (UTC)Reply

Return to the user page of "Yokishivam/தொகுப்பு02".