அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்

அரண்மனை அருங்காட்சியகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூர் நகரில் உள்ள அரண்மனை, அருங்காட்சியகம் ஆகும்.

Jaganmohan Palace, mysore, india.JPG

இந்த அரண்மனை மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்டது. உடையார் குடும்பத்தினர் அம்பாவிலாஸ் எனப்படும். மைசூர் அரண்மனை கட்டப்படும் வரை இங்கு இருந்தனர்.

அருங்காட்சியகம்தொகு

அரசக் குடும்பத்தினர், பயன்படுத்திய உடைகள், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட (சிம்மாசனம்) இருக்கைகள், அரசகுடும்பத்தினரை ஓவியர் ரவிவர்மாவால் எழுதப்பட்ட ஓவியங்கள் , ஓய்வு அறைகள், படுக்கையறைகள், உணவுக்கூடங்கள், அரசர்கள் சிறு வயதினராக இருந்தபொழுது பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள், அரச குடும்பத்துப் பெண்கள் வெளியில் செல்வதற்கு பயன்படுத்திய மூடிய பல்லாக்குகள் போன்றவை உள்ளது. அதற்கடுத்த பகுதியில் அரசர்கள், படைத்தளபதிகள், படைவீரர்கள் பயன்படுத்திய வாள், வேல், ஈட்டி, கத்தி, கவச உடைகள், துப்பாக்கிகள், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கத்திகள், குத்து வாள், முதலிய பார்வைக்கு உள்ளது.

அரண்மனை முழுக்க கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்கள், சிற்பங்கள், திரைகள் நிறைந்துள்ளன. இந்த அரண்மனையில் உள்ள தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள், அரண்மனை வளாகத்தில் உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிசுகளின் வரலாறும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படுகிறது.

பராமரிப்புதொகு

இந்த அரண்மனை, கர்நாடக அரசினாலும் இந்திய தொல்லியல் துறையினாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளி இணைப்புகள்தொகு