கொமரலிங்கம்

இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்

கொமரலிங்கம் (ஆங்கிலம்:KOMARALINGAM-) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி . மடத்துக்குளம் வருவாய் வட்டத்தின் வருவாய் கிராமம் (கிராம எண்:39) ஆகும்.[4][5]

கொமரலிங்கம்
—  கிராமம்  —
கொமரலிங்கம்
இருப்பிடம்: கொமரலிங்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°29′20″N 77°20′58″E / 10.489015°N 77.349436°E / 10.489015; 77.349436
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை 11,737 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெயர் சிறப்பு

தொகு

கொங்கு நாட்டில் வாழ்ந்த வள்ளல்களில் குமணவள்ளல் பின் வந்தோர் இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் இவ்வூர் அமராவதி ஆற்றின் கரையில் இருந்ததால் கரையூர் என அழைக்கப்பட்டதாக இங்குள்ள கல்யாண பெருமாள் கோவில் கல்வெட்டு தெறிவிக்கிறது.[6]

அமைவிடம்

தொகு

பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பழனியிலிருந்து சுமார் 22 கி.மீ.தூரத்திலும், உடுமலைப்பேட்டையிலில் இருந்து 12 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 415 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 7 கி.மீ தூரத்தில் ஐவர்மலை சமணர் குகைகள் அமைந்துள்ளது.

முக்கிய பயிர்

தொகு

இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), கரும்பு, வாழை அதிகமாக விளைகின்றன. இது அமராவதியாற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளதால் செழிப்பான நிலப்பகுதியாகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொழுமம் கிராமத்தில் 1816 வீடுகள் உள்ளது. இவ்வூரில் 11737 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 5888,பெண்கள்5849 பாலின விகிதம் 962. எழுத்தறிவு பெற்றவர்கள் 6467 பேர். இதில் 3726 பேர் ஆண்கள்; 2741 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 62.38%. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 1341 ஆண் குழந்தைகள் 680,பெண் குழந்தைகள் 661 ஆவர்.[7]

நிர்வாக அலகு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.
  6. கொழுமம், கொமரலிங்கம்- ஐவர்மலை-முனைவர். தி.மனோன்மணி- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு-2007-
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் சனவரி02, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமரலிங்கம்&oldid=3929289" இலிருந்து மீள்விக்கப்பட்டது