தி வயர் (The Wire) ஒரு அமெரிக்கத் தொலைக்காட்சி நாடகத் தொடர். அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தைக் கதைக்களமாகக் கொண்டது. இதனை உருவாக்கிப் பெரும்பாலான பகுதிகளை எழுதியவர் எழுத்தாளர் டேவிட் சைமன். ஐந்து பருவங்களும் அறுபது அத்தியாயங்களும் கொண்ட இத்தொடரை அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் எச்பிஓ ஜூன் 2, 2002 - மார்ச் 9, 2008 காலகட்டத்தில் ஒளிபரப்பியது.

தி வயர் (The Wire)
வகைகுற்ற நாடகம்
உருவாக்கம்டேவிட் சைமன்
நடிப்புடாமினிக் வெஸ்ட்
ஜான் டோமன்
இட்ரிஸ் எல்பா
பிராங்கி ஃபாய்சன்
லேனி கில்லார்ட் இளையவர்
வுட் ஹாரிஸ்
டியர்ட்ரா லவ்ஜாய்
வெண்டெல் பியர்ஸ்
லான்ஸ் ரிட்டிக்
ஆண்ட்ரே ரோயோ
சோஞா சோன்
கிரிஸ் பவர்
பவுல் பென்-விக்டர்
கிளார்க் பீட்டர்ஸ்
ஏமி ரயான்
ஐடான் கில்லென்
ஜிம் ட்ரூ-ஃபாரஸ்ட்
ராபர்ட் விஸ்டம்
சேத் கில்லியம்
டோமெனிக் லொம்பார்டோசி
ஜே. டி. வில்லியம்ஸ்
மைக்கேல் கே. வில்லியம்ஸ்
கோரே பார்க்கர் ராபின்சன்
ரெக்.ஈ. காத்தே
சாட் எல். கோல்மான்
ஜேமி ஹெக்டர்
கிளின் டர்ன்மான்
கிளார்க் ஜான்சன்
தாமஸ் மெக்கார்த்தி
பென்கா அகின்னாபே
நீல் ஹஃப்
ஜெர்மெய்ன் கிராஃபர்ட்
டிரிஸ்டான் வைல்ட்ஸ்
மைக்கேல் கோஸ்ட்ரோஃப்
மிஷேல் பாரெஸ்
இசய்யா விட்லாக் இளையவர்
முகப்பு இசைடாம் வெய்ட்ஸ்
முகப்பிசை"வே டவுன் இன் த ஹோல்"
பருவம் 1:
தி பிளைண்ட் பாய்ஸ் ஆஃப் அலபாமா
பருவம் 2:
டாம் வெய்ட்ஸ்
பருவம் 3:
தி நெவில் பிரதர்ஸ்
பருவம் 4:
டோமாஜே
பருவம் 5:
ஸ்டீவ் எர்ல்
முற்றிசை"தி ஃபால்" - பிளேக் லே
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்5
அத்தியாயங்கள்60
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புடேவிட் சைமன்
ராபர்ட் எஃப் கோல்ஸ்பெரி (பருவங்கள் 1–3)
நினா நோபிள் (பருவங்கள் 3–5)
தயாரிப்பாளர்கள்கேரன் எல். தோர்சன்
எட் பர்ன்ஸ் (பருவங்கள் 3–5)
ஜோ ஷப்பேல் (பருவங்கள் 3–5)
ஜார்ஜ் பெலிகானோஸ் (பருவம் 3)
எரிக் ஓவர்மயர் (பருவம் 4)
படப்பிடிப்பு தளங்கள்பால்ட்டிமோர், மேரிலாந்து
படவி அமைப்புஒற்றை ஒளிப்படக்கருவி
ஓட்டம்55–60 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஎச்பிஓ
படவடிவம்480i எஸ்டிடிவி
ஒலிவடிவம்டால்பி எண்ணிம முறை 5.1
ஒளிபரப்பான காலம்சூன் 2, 2002 (2002-06-02) –
மார்ச்சு 9, 2008 (2008-03-09)
வெளியிணைப்புகள்
இணையதளம்

தி வயரின் ஐந்து பருவங்களும் பால்டிமோர் நகரின் ஏதேனும் ஒரு கூற்றினை மையமாகக் கொண்டவை. காலவரிசைப்படி அவையாவன - சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருள் வர்த்தகம், நகரின் துறைமுகச் சூழல், நகர அரசும் நிர்வாக அமைப்புகளும், பள்ளிச் சூழல் மற்றும் அச்சு ஊடகச் சூழல். இத்தொடரில் நடித்தவர்களில் அதிகமானோர் வேறு எந்தப் புகழ்பெற்ற வேடங்களிலும் நடிக்காத குணச்சித்திர நடிகர்கள். மேலோட்டமாகப் பார்க்கையில் தி வயர் ஒரு குற்ற நாடகமாகத் தெரிந்தாலும் அது உண்மையில் ஒரு அமெரிக்க நகரம், அதில் மக்கள் எப்படி வாழ்கின்றனர், தனிமனித வாழ்வில் அமைப்புகளின் தாக்கம், ஒருவர் எப்படி இறுதியில் தனது கொள்கைகளைக் கைவிட்டு தான் சார்ந்திருக்கும் அமைப்பின் பகுதியாகப் போகிறார் என்பன பற்றியானதெனச் சைமன் கூறியுள்ளார்.[1] இத்தொடர் அமெரிக்க நகர வாழ்க்கையை யதார்த்தமாகச் சித்தரிப்பதோடு பல சமூக-அரசியல் கூறுகளை ஆழமாக நோக்குகிறது.

ஒளிப்பரப்பான போது சுமாரான பார்வையாளர் ஆதரவையே பெற்றிருந்த தி வயர் எந்த முக்கிய தொலைக்காட்சி விருதினையும் வெல்லவில்லை. எனினும் இதனை இது வரை வெளியான தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் மிகச் சிறந்ததாகப் பல ஊடக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.[2][3][4][5][6][7]

தயாரிப்பு

தொகு

உருவாக்கம்

தொகு
 
தி வயர் இன் உருவாக்குனர் டேவிட் சைமன்

சைமன் முதலில் தனது அனுபவங்களையும், தனது எழுத்தாளர் கூட்டாளியும் முன்னாள் கொலைக்குற்றத் துப்பறிவாளருமான எட் பர்ன்சின் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு காவல்துறை பற்றிய நாடகத்தை உருவாக்க எண்ணினார். வன்முறை மிகுந்த வாழ்க்கை கொண்ட போதைப் பொருள் விற்பனையாளர்களைப் பற்றிப் பால்டிமோர் காவல்துறையினர் ஒட்டுக் கேட்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்திய புலன் விசாரனைகளில் பர்ன்ஸ் பங்கேற்றிருந்தார். அப்போது காவல்துறையின் சிவப்பு நாடா சிக்கல்களால் மிகவும் நொந்து போயிருந்தார். தி பால்டிமோர் சன் நாளிதழின் காவல்துறை பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய போது சைமனுக்கும் அதே போன்ற அனுபவங்கள் ஏற்பட்டியிருந்தன.

பால்டிமோர் நகரை சைமன் நன்கறிந்திருந்ததால் அதனைத் தனது தொடரின் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். சைமன் முன்பு என்பிசி தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஒரு தொடரைத் தயாரித்த போது தொலைக்காட்சி நிறுவனத்தாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. அது போன்று தனது புதிய தொலைக்காட்சித் தொடரிலும் நிகழக்கூடாதென விரும்பிய சைமன், எச்பிஓ நிறுவனத்தை அணுகினார். சைமன் எச்பிஓ வுக்காக முன்பு தி கார்னர் என்னும் குறுந்தொடர் ஒன்றைத் தயாரித்த போது இரு தரப்புக்கும் நல்லுறவு ஏற்பட்டிருந்தது. முதலில் ஒரு காவல்துறை நாடகத் தொடரை எச்பிஓ ஒளிபரப்பத் தயங்கியது. எனினும் புதிய கதைக்களங்களை அறிமுகப்படுத்தும் அதன் வழக்கத்திற்கேற்ப தி வயரின் முதல் அத்தியாயத்தைத் தயாரிக்க ஒத்துக்கொண்டது.[8][9] பால்டிமோர் நகரின் மேயரை அணுகி தனது புதிய தொடரின் படபிடிப்பை அந்நகரில் நடத்த அனுமதி வேண்டினார். தொடர் நகரின் நிழலுலகைப் பற்றியானதெனினும் அதற்கான அனுமதி உடனே கிட்டிவிட்டது. தொடரினால் நகரின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் எந்தத் தாக்கமும் ஏற்படாவிட்டாலும் சில பார்வையாளர்களின் எண்ணங்களை மாற்ற முடியுமெனச் சைமன் நம்பினார்.[8]

நடிகர் தேர்வு

தொகு

பெரும் புகழ் கொண்ட நடிகர்களைத் தவிர்த்து, கதை மாந்தர்களுக்குப் பொருத்தமாகத் தோன்றும் நடிகர்களையே தேர்வு செய்ததற்காகத் தி வயர் போற்றப்பட்டுள்ளது.[10] வழக்கமாகத் தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் நடிகர்களின் உருவத் தோற்றங்கள் போலில்லாமல் யதார்த்தமாகக் காணக்கிடைக்கும் பலவகையான உருவத்தோற்றங்கள் தி வயரின் கதை மாந்தரிடத்து காணக்கிடக்கின்றன. அழகானவர்கள் மட்டுமே தொலைக்காட்சியில் தோன்றுவார்கள் என்ற எழுதப்படாத விதியினை மீறிப் பலதரப்பட்ட தோற்றங்கொண்டவர்களை தி வயர் பார்வையாளர்களுக்குக் காட்டியது.[11]

முதல் பருவ நடிகர் தேர்வுக்காகப் பல நடிப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டன. பல்வேறு பாத்திரங்களுக்காகத் தேர்வில் கலந்து கொண்ட லான்ஸ் ரெட்டிக் இறுதியில் செடரிக் டேனியல்ஸ் பாத்திரத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டார்.[12] புகழ் பெற்ற ஓமார் லிட்டில் பாத்திரத்துக்கு ஒரே ஒரு நடிகர் தேர்வுக்குப் பின் மைக்கேல் கே. வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.[13] நிஜ வாழ்வில் புகழ்பெற்ற பல அரசியல்புள்ளிகள், முன்னாள் காவல்துறையினர், குற்றவாளிகள் போன்றவர்கள் தி வயர் தொடரில் நடித்துள்ளனர்.[14][15] 1980களில் எட் பர்ன்ஸ் பங்கேற்ற ஒரு புலன் விசாரணையின் மூலம் கைது செய்யப்பட்ட மெல்வின் வில்லியம்ஸ் என்னும் போதைப் பொருள் கும்பல் தலைவர், ஜே லாண்ட்ஸ்மேன் என்னும் முன்னாள் புலன் விசாரணையாளர் ஆகியோர் தி வயரின் பல பருவங்களில் தொடர்ந்து நடித்தனர்.[16][17] பால்டிமோர் நகரக் காவல்துறைத் தலைவர் கேரி டி’அடாரியோ முதல் இரு பருவங்களுக்குத் தொடரின் ஆலோசகராகப் பணியாற்றினார்; ஒரு சிறு பாத்திரத்திலும் நடித்தார்.[18][19] ஹெச்.பி.ஓ வின் முந்தைய தொலைகாட்சித் தொடர்களான தி ஓஸ், தி கார்னர் போன்றவற்றில் நடித்தவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் தி வயரிலும் நடித்தனர். மேலும் அத்தொடர்களில் பணியாற்றிய படப்பிடிப்புக் குழுவினர் பலரும் தி வயரில் பணியாற்றினர்.[20][21][22][23][24][25]

படப்பிடிப்பு குழு

தொகு

தி வயரில் பணியாற்றிய படப்பிடிப்பு குழுவினரில் பலர் முன்பு ஹோமிசைட், தி கார்னர் ஆகிய தொடர்களில் பணியாற்றியவர்கள்.[1][26] தி வயரின் பல அத்தியாயங்கள் சைமன் மற்றும் அவரது நண்பர் எட் பர்ன்சின் கூட்டு முயற்சியில் எழுதப்பட்டன. பர்ன்ஸ் நான்காவது பருவத்திலிருந்து தொடரின் தயாரிப்பாளர்களுள் ஒருவரானார்.[27] இவ்விருவரைத் தவிர ஜார்ஜ் பெலிகானோஸ், ரிச்சர்ட் பிரைஸ், டென்னிஸ் லெஹானே போன்ற குற்றப்புனைவு எழுத்தாளர்களும் தி வயரின் அத்தியாயங்களை எழுதினர்.[28][29] பெலிகானோஸ் மூன்றாம் பருவத்தின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.[30][30] மேலும் பல எழுத்தாளர்களும் தி வயருக்காகக் கதைகளை எழுதியுள்ளார்கள். கிளாக் ஜான்சன், டிம் வேன் பேட்டன், ஜோ ஷப்பேல் ஆகியோர் தி வயரின் இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர்.[31][32] தி வயர் தெளிவாக நுண்மையாக இயக்கப்பட்டமைக்காகப் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.[10]

அத்தியாய அமைப்பு

தொகு

எச்பிஓ விலும் பிற சில பன்னாட்டு தொலைக்காட்சிகளிலும் தி வயர் ஒளிபரப்பப்பட்ட போது ஒவ்வொரு அத்தியாயத்துக்கு முன்னரும் அதில் நடக்கப்போகும் நிகழ்வுகளுக்குத் தொடர்புடைய, முந்தைய அத்தியாயங்களில் நிகழ்ந்த காட்சிகள் சில காட்டப்பட்டன. அனைத்து அத்தியாயங்களும் ஆர்ப்பாட்டமில்லாத துவக்கக் காட்சிகளைக் கொண்டிருந்தன. துவக்கக் காட்சிக்குப்பின் கருந்திரை காட்டப்பட்டு பின்னணியில் அறிமுக இசை ஒலிக்கும். அடுத்து தொடரின் கதைக்களத்தை உணர்த்தும் காட்சித் தொடர்களுடன் நடிகர்கள், தொழில் கலைஞர்களது பெயர்கள் காட்டப்படும். இக்காட்சித் தொடர்கள் பருவத்துக்குப் பருவம் மாற்றப்பட்டன. நடிகர்களது பெயர்கள் மட்டுமே காட்டப்பட்டன; அவர்கள் நடித்த பாத்திரங்களின் பெயர்கள் காட்டப்படவில்லை. இக்காட்சித் தொடர் முடிவுற்றவுடன் அந்த அத்தியாயத்தில் பேசப்படும் வசனம் ஒன்று, பேசுபவர் பெயருடன் கறுப்பு பின்னணியில் காட்டப்படும். மூன்று அத்தியாயங்களில் மட்டும் கதை மாந்தர் பேசிய வசனமன்றி வேறு தொடர்கள் காட்டப்பட்டன. ஒரு அத்தியாயத்தில் ஒரே நிகழ்நேரத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பல கதை நடப்புகள் மாறி மாறிக் காட்டப்படும். அத்தியாயங்கள் அடுத்து என்ன நிகழும் என்ற திகிலும் ஆர்ப்பாட்டமுமின்றி நிதானமாக முடிந்தன. முடியும் காட்சியில் பின்னணியில் முடியும் இசை ஒலிக்கக் கருந்திரை தோன்றும்.

தி வயர் நிகழ்ச்சியில் பின்னணி இசையில் பாடல்களைச் சேர்க்கவில்லை, தனியாக இசைத்துணுக்கையும் நிகழ்ச்சிக்காக உருவாக்கவில்லை. காட்சிகளில் வரும் பொருட்களிலிருந்து ஒலிக்கும் இசையே பின்னணி இசையாக வரும்படி அமைத்துள்ளனர். எடுத்துக்காட்டாகத் திரையில் தோன்றும் இசைப்பெட்டியில் ஒலிக்கும் இசையே மெல்லப் பெருகி ஒலிப் பின்னணியை ஆக்கிரமித்துப் பின்னணி இசையாக மாறுகின்றது. பருவங்களின் இறுதியில் வரும் தொகுப்புக் காட்சிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டும் இவ்வழக்கம் பின்பற்றப்படவில்லை.[33] நிகழ்ச்சியின் தொடக்கப் பாணி இசை டாம் வாட்ட்ஸ் என்பவரால் இயற்றப்பட்ட வே டவுன் தி ஹோல் ("Way Down in the Hole") என்ற புளூஸ் ரக இசையாகும். ஒவ்வொரு பருவத்திலும் இவ்விசை வெவ்வேறு காட்சித்தொகுப்புகளின் பின்னணியில் ஒலிக்கிறது.[34][35] நிகழ்ச்சியில் முடிவுப் பாணி இசை பிளே லே என்பவரால் இயற்றப்பட்ட "தி ஃபால்" ("The Fall"). பருவ இறுதி அத்தியாங்களில் இறுதிக் காட்சிகளின் பின்னணியில் வெவ்வேறு பாடல்கள் ஒலிக்கின்றன.[29] ஜனவரி 8, 2008 இல் நன்சச் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் "தி வயர்" நிகழ்ச்சி தொடர்பாக இரு இசைத் தொகுப்புகளை வெளியிட்டது. இவற்றில் நிகழ்ச்சியின் அனைத்து பருவங்களின் இசையும், பால்ட்டிமோர் நகரத்தின் இசைக் கலைஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.[36]

பாணி

தொகு

யதார்த்தவாதம்

தொகு

தி வயரின் எழுத்தாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் ஒரு அமெரிக்க நகரின் யதார்த்த பிம்பத்தைத் திரையில் கொண்டு வர விழைந்தனர். சைமன் பால்ட்டிமோர் சன் நாளிதழில் இதழாளராகப் பணி புரிந்தவர். தனது முந்தைய நூலுக்காகக் கொலைக்குற்றக் காவல்துறைப் பிரிவை ஓராண்டு காலம் ஆய்வு செய்தவர். அப்போது பால்ட்டிமோர் காவல் துறையில் 20 ஆண்டுகள் பணி புரிந்து பின் நகரில் உட்பகுதி பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பர்ன்சை சந்தித்தார். இருவரும் சேர்ந்து பால்ட்டிமோர் நகரின் போதைப் பொருள் வெளியையும் பண்பாட்டையும், வறுமையினையும் ஆய்வு செய்து தி கார்னர் என்ற நூலை எழுதினர். தி வயர் நிகழ்ச்சியின் பல கதைக்கருக்கள் அவர்களது அனுபவங்களின் அடிப்படையின் உருவாகின.

தி வயரில் தாங்கள் காண விரும்பிய யதார்த்தத்தை உண்மையான கதை மாந்தர்களை உருவாக்குவதன் மூலம் கொண்டு வர முயன்றனர். நிகழ்ச்சியின் கதை மாந்தர்கள் பால்ட்டிமோர் நகரின் உண்மையான மக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டனர்.[37] நிகழ்ச்சியில் அடிக்கடி தொழில் முறை நடிகரல்லாதோர் பலர் சிறு பாத்திரங்களில் நடித்தனர். இதன் மூலம் நகரின் உண்மை முகங்களும் குரல்களும் நிகழ்வில் இடம்பெற்று அதன் யதார்த்த பிம்பத்தை உறுதிபடுத்தின.[38] நிகழ்ச்சியின் வசனங்களில் பால்ட்டிமோர் வட்டார வழக்கு மொழி பரவலாகப் பயன்படுத்தபட்டுள்ளதும் நிகழ்ச்சியின் யதார்த்தைக் கூட்டியது.[38]

தி வயர் நிகழ்வின் துப்பறிவாளர்கள் பிற தொலைக்காட்சித் தொடர்களில் வரும் துப்பறிவாளர் கதை மாந்தர்களைப் போல மக்களைக் காத்து சேவை புரிய வேண்டும் என்ற தூண்டுதலால் பணியாற்றுவதில்லை. தாங்கள் தேடும் குற்றவாளிகளைவிட தாங்கள் புத்திசாலிகள் என்ற அறிவு மமதையால்தான் உந்தப்பட்டு பணியாற்றுகிறார்கள். அவர்களில் சிலர் தன்னலமற்றவர்களாக இருந்தாலும் மேலும் பலர் திறமையற்றவர்களாகவும், வன்மம் நிறைந்தவர்களாகவும், சுய தம்பட்டக்காரர்களாகவும் இருக்கிறார்கள் அல்லது சிவப்பு நாடா மற்றும் உள்ளரசியலால் முடக்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் அனைவரும் எப்போதும் பணம் சம்பாதிக்கும் ஆசையாலும், பிறரை துன்புறுத்தும் எண்ணங்களாலும் தூண்டப்பட்டு செயல்படுபவர்களில்லை. அவர்களிலும் பலர் சூழ்நிலை காரணங்களால் குற்றச்சூழலில் சிக்கி அதில் தொடர்ந்து இயங்குகிறார்கள். அவர்களுக்கும் மனித குணங்கள் உள்ளன. ஆனாலும் அவர்களது செய்கைகளின் கொடூர விளைவுகளைத் தி வயர் பூசி மறைப்பதில்லை; அப்பட்டமாகவே காட்டுகிறது.[1]

தி வயர் நிகழ்ச்சி காவல்துறை, நிழலுலகம் இரு தரப்புச் சூழலையும் யதார்த்தமாகச் சித்தரிக்கிறது. நிஜ வாழ்வின் குற்றவாளிகள் சிலர் காவல்துறை துப்பறியும் முறைகளை அறிந்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சியினைப் பார்ப்பதாகவும் சில செய்திக் குறிப்புகள் கூறியுள்ளன.[39][40] ஐந்தாவது பருவத்தில் பால்ட்டிமோர் சன் நாளிதழின் செய்தி அறையினை தி வயர் சித்தரித்த விதம் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிகவும் யதார்த்தமானதெனப் போற்றப்பட்டுள்ளது.[41] டிசம்பர் 2006 இல் வாஷிங்கடன் போஸ்ட் இதழில் வெளியான ஒரு செய்தியில் பால்ட்டிமோர் நகரின் நிஜ ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்கள், தி வயர் நிகழ்வு தங்கள் சமூகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் நிகழ்ச்சியின் பல பாத்திரங்கள் தாங்கள் அறிந்திருக்கும் நிஜ வாழ்வு நபர்களை ஒத்திருப்பதாகவும் கூறினர். மேலும் போதைப் பொருட்களும் வன்முறையும் கருப்பின சமூகத்தில் ஏற்படுத்தும் பெரும் பாதிப்புகளைப் பற்றி அச்செய்தி கவலை தெரிவித்ததது.[42]

காட்சிப் புதினம்

தொகு

இந்நிகழ்ச்சியில் பல முக்கிய நிகழ்வுகள் பார்வையாளர்களுக்குக் காட்டப்படுவதில்லை. அவை நடந்துவிட்டன என்பதை கதைமாந்தர் பிறர் மூலம் அறிந்து கொள்வதிலிருந்தும், பேசும் வசனங்களிலிருந்தும் பார்வையாளர்கள் தெரிந்து கொள்கின்றனர். காட்சிப் பின்னணியில் விவரித்துக் கூறல், மீள்காட்சிகளாக முன் நடந்தவற்றைக் கூறல் போன்ற தேவையற்ற பார்வையாளர் விளக்கங்களும் இடம் பெறுவதில்லை. இதனால் கதையினைப் புரிந்து கொள்ள பார்வையாளர் நிகழ்வின் ஒவ்வொரு காட்சியினையும் பாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வசன வரியினையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. பிற குற்றப் புனைவு நிகழ்வுகளைப் போலல்லாமல் ஆழமான கதைக்களத்தையும், புதினத்தைப் போன்ற கதையமைப்பையும் தி வயர் பெற்றிருக்கிறதெனச் சலோன்.காம் இணையத்தளம் வருணித்துள்ளது.[28] ஒவ்வொரு பருவத்திலும் 10 முதல் 13 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் காலநீளம் கொண்டவை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கதைக்கருவை அறிமுகப்படுத்தி முடிக்காமல் பல அத்தியாயங்களுக்கு நீண்டு சென்று கதை சொல்லும் உத்தியைச் சைமன் கையாண்டார். இதன் மூலம் பார்வையாளர்களின் ஆர்வம் கூடுவதுடன் கதைக்கரு முடியும் போது அவர்களது மனநிறைவும் அதிகரிக்கின்றது. பல நேர்காணல்களில் தனது நிகழ்ச்சி ஒரு “காட்சிப் புதினம்” போன்றதெனச் சைமன் கூறியுள்ளார்.[1][8][43]

சமூக விமர்சனம்

தொகு
 
கொலைகள் அதிகம் நிகழும் பால்ட்டிமோரின் ”கொலை சந்து” தி வயரில் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தி வயரின் இரண்டாம் பருவத்தைச் சைமன் பின்வருமாறு வர்ணித்தார்:

" [இப்பருவம்] அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் வஞ்சிக்கப்படுவதையும் உழைப்பின் மரணத்தையும் பற்றியான ஒரு நோக்கல். இது சமூக ஒப்பந்தத்தின் தளைகளின்றி தங்குதடையற்ற முதலாளித்துவம் செயல்பட அனுமதிக்கக் கூடாதென வாதிடுகிறது. அத்தகைய முதலாளித்துவம் பலரை வஞ்சித்துச் சிலருக்கு மட்டுமே ஆதாயம் தேடித் தரும்."[37]

மூன்றாம் பருவம் சீர்திருத்தம் மற்றம் சீர்திருத்தக்காரர்கள் பற்றியானது. போதைப் பொருள் விலக்குக் கொள்கையின் தோல்வியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. போதைப் பொருள் ஒழிப்பு முயற்சி எப்படி அமெரிக்க அடித்தளத்தின் மீதான போராக உருவெடுத்துள்ளதெனக் காட்டுகிறது.[37][40][44] எட் பர்ன்ஸ் பால்ட்டிமோர் காவல்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற உடன் சில காலம் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின் சைமனுடன் சேர்ந்து புத்தகங்களை எழுதத் தொடங்கினார். தி வயரின் நான்காம் பருவத்தில் அவரது ஆசிரியப் பணி அனுபவங்கள் வெளிப்படுகின்றன. அப்பருவத்தின் மையக் கருவாகக் கல்வி உள்ளது. பள்ளிக் கல்வி அமைப்பின் மீது மட்டும் கவனம் செலுத்தப்படவில்லை; பள்ளிகள் பெருஞ்சமூகத்தின் ஓரங்கமாகவே காணப்படுகின்றன. வெளிச் சமூகத்தில் நடப்பவை எப்படி மாணவர்களின் கல்வியை பாதிக்கின்றன எனக் காட்டப்படுகின்றது. கல்வி என்பது பள்ளிகளைத் தவிர்த்துப் பல்வேறு மூலங்களிலிருந்தும் குழந்தைகளுக்குக் கிட்டுகின்றன. போதைப் பொருள் கும்பல்காரர்களும் அதில் அடங்குவரெனப் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.[45] இப்பருவத்தின் மூலம் மாணவர்கள் எப்படி போதைப் பொருள் கும்பல் காரர்களாகவும் குற்றவாளிகளாகவும் மாறுகின்றனர் என்பதையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிட்டுவதில்லை என்பதையும் இப்பருவம் உணர்த்துகின்றது.[46]

மையக் கருத்துகள்

தொகு

அமைப்புகளில் பிறழ்வு

தொகு

நிகழ்ச்சியில் காட்டப்படும் பால்ட்டிமோர் நகரக் காவல் துறை, நகர மன்றம், நகரக் கல்வித் துறை, பால்ட்டிமோர் சன் நாளிதழ், நகரத் துறைமுகத் தொழிலாளர் சங்கம், பார்க்ஸ்டேல் போதைப்பொருள் கடத்தல் கும்பலென அனைத்து அமைப்புகளும் ஒரு விதத்தில் ஒத்தவையேயென டேவிட் சைமன் கருதுகிறார். இவை அனைத்தும் ஏதேனும் ஒருவகையில் பிறழ்ந்துள்ளன. இவற்றின் உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளாலேயே வஞ்சிக்கப்படுகின்றனர்.[1] போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை துப்பறிவாளர் ஒருவர் கூறும் வசனமான “மலக்கழிவு மேலிருந்து கீழாகப் பாயும்” என்ற கருத்து தொடர் முழுவதும் மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது. குறிப்பாகக் காவல்துறையில் நடக்கும் தவறுகளுக்கு மேலதிகாரிகள் தங்கள் கீழ்பணி புரிபவர்களையே பலிகடா ஆக்க முயலுகின்றனர். தி வயர் தொடர் தனி மனிதர்களைக் கருணையுடனும் அமைப்புகளை அவநம்பிக்கையுடனும் அணுகுவதாகச் சைமன் கூறியுள்ளார்.[40] கதைமாந்தரது வாழ்வில் அவரது தனிப்பட்ட கொள்கைகளுக்கும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் குறிக்கோள்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம், தி வயர் தொடரின் மையக் கருத்தாக உள்ளது.

கண்காணிப்பு

தொகு

மின்னணு கருவிகள் கொண்டு பிறரைக் கண்காணிப்பதும் காவல்துறையினர் பயன்படுத்தும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொழில்நுட்பங்களும் தொடரின் அமைப்புக்கும் கதைகருவுக்கும் முக்கியக் கருபொருட்களாக உள்ளன. ”தி வயர்” என்ற சொல் காவல்துறையினர் ஒட்டுக்கேட்கப் பயன்படுத்தும் கருவி என்று பொருள்படும். இத்தலைப்பு பார்வையாளரது அனுபவத்துக்கு உருவகமாக அமைந்துள்ளதெனச் சலோன்.காம் இணைய இதழ் கூறியுள்ளது. எப்படி ஒட்டுக்கேட்கும் கருவிகள் நிழல் உலகை அவதானிக்க காவல்துறைக்கு உதவுகின்றனவோ அதே போன்று இத்தொலைக்காட்சித் தொடரும் பார்வையாளர்களுக்கு உதவுகின்றது.[28]

கதை மாந்தர்

தொகு
 
சிறப்புக் காவல் பிரிவு: (இடமிருந்து), பிரெஸ், டேனியல்ஸ், மெக்நல்ட்டி, லெஸ்டர் ஃப்ரீமன் (அமர்ந்திருப்பவர்), ரோண்டா பெர்ல்மேன், கீமா கிரெக்ஸ்
 
பார்க்ஸ்டேல் குற்றக்குழு: (இடமிருந்து), வீ-பே பிரைஸ், ஸ்ட்ரிங்கர் பெல், டி ஏஞ்சலோ பார்க்ஸ்டேல், பூட், போடி
 
துறைமுகத்தில் : (இடமிருந்து), தி கிரீக், நிக் சபோத்கா, ஃபிராங்க் சபோத்கா
 
அரசியல்வாதிகள்; (இடமிருந்து), டாம்மி கார்செட்டி, கிளே டேவிஸ், நார்மன் வில்சன்
 
ஸ்டான்ஃபீல்ட் குற்றக்குழு; (இடமிருந்து), கிரிஸ் பார்ட்லோ, மார்லோ ஸ்டான்ஃபீல்ட், ஸ்னூப், ஓ-டாக், சீஸ் வாக்ஸ்டாஃப்
 
மாணவர்கள்; (இடமிருந்து) டூக்கி, ரேண்டி, மைக்கேல், நேமண்ட்


தி வயர் நிகழ்வில் அதிகமான எண்ணிக்கையில் நடிகர்கள் தோன்றுகின்றனர். அவ்வப்போது வந்து செல்லும் நடிகர்களும் பலர் உள்ளனர். அவர்களில் மிகப் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பினத்தவர். இது பால்ட்டிமோர் நகரின் மக்கள் தொகை யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கின்றது. இப்படி ஒரு நிகழ்ச்சி பெரும்பாலான கருப்பின நடிகர்களைக் கொண்டுள்ளமை அமெரிக்கத் தொலைக்காட்சி வெளியில் மிகவும் அரிதானது. பெரும்பான்மையான கருப்பின நடிகர்களைக் கொண்டு நீண்ட நாள் ஒளிபரப்பான அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பட்டியலில் தி வயர் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

தி வயரின் எழுத்தாளர்கள் தங்களது முக்கிய பாத்திரங்களைக் கொலை செய்யத் தயங்கவில்லை. இதனால் ஒரு பாத்திரம் முக்கியமானது என்றாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது என்றாலும் கூட அது நிகழ்ச்சியின் இறுதி வரை உயிருடன் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. ஒரு குறிப்ப்பிட்ட பாத்திரத்தின் மரணம் ஏன் நிகழ்ந்தது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் சைமன் பின்வருமாறு கூறினார் “நாங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கையை விற்கவில்லை. சிக்கல்களை எளிதில் வென்றுவிடலாம் என்றும் சொல்லவரவில்லை. இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க கேளிக்கையாக உருவாக்கப்படவில்லை. இது அமைப்புகள் தனி மனிதர்கள்மீது கொண்டுள்ள தாக்கத்தைப் பற்றி ஒரு வாதத்தை முன்வைக்கின்றது. இது ஒரு அமைதியான நிகழ்ச்சியல்ல, கோபமான ஒன்று”[47]

முக்கிய கதைமாந்தர்

தொகு

முதலாம் பருவத்தின் கதை மாந்தரை இரு தரப்பினராகப் பிரிக்கலாம் - காவல்துறையினர் மற்றும் அவர்களுக்குத் துணைபுரிவோர் ஒரு தரப்பு, போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றொரு தரப்பு.

ஜிம்மி மெக்நல்ட்டி என்னும் காவல்துறை துப்பறிவாளரின் முயற்சியால் ஏவான் பார்க்ஸ்டேல் தலைமையிலான குற்றக் கும்பலைப் பிடிக்க ஒரு காவல்துறை சிறப்புப் பிரிவு உருவாக்கப்படுகின்றது. அதன் தலைவர் லெப்டினன்ட் செடரிக் டேனியல்ஸ். பதவி உயர்வு பெற்று துறையில் முன்னேற வேண்டுமென்ற வேட்கைக்கும் பணியைச் செவ்வனே முடிக்க வேண்டுமென்ற கடமையுணர்வுக்குமிடையே சிக்கித் தவிப்பவர். டேனியல்சின் அணியில் இடம்பெறும் மெக்நல்ட்டி திறமை வாய்ந்த துப்பறிவாளராக இருந்தாலும் தனி வாழ்வில் ஒழுங்கின்மையும், மேலதிகாரிகளின் சொல்பேச்சுக் கேளாத்தன்மையும் கொண்டவர். திறமையான பெண்விழைவோள் துப்பறிவாளரான கீமா கிரெக்ஸ், அவருக்குத் துப்பு சொல்லும் போதைப் பழக்க அடிமை பபிள்ஸ், குறைவான உய்த்தறிவுடைய முரட்டுத் துப்பறிவாளர்கள் ஹெர்க் மற்றும் கார்வர், அனுபவமிக்க துப்பறிவாளர் லெஸ்டர் ஃப்ரீமேன், காவல்துறை கேப்டனின் மருமகனும் கையலாகாத துப்பறிவாளனுமான ரோலாண்ட் பிரெஸ்பைலூஸ்கி (பிரெஸ்) அரசு தரப்பு வழக்கறிஞர் ரோண்டா பெர்ல்மேன் ஆகியோர் பார்க்ஸ்டேல் குழுவுக்கு எதிராகச் செயல்படும் சட்ட ஒழுங்கு தரப்பு பாத்திரங்கள்.[28] இவர்களது மேலதிகாரிகளான பால்ட்டிமோர் காவல்துறை ஆணையாளர் எர்வின் பரெல், அவரது துணையதிகாரி மேஜர் வில்லியம் ரால்ஸ் இருவரும் நகரில் குற்றங்களைக் குறைப்பதைக் காட்டிலும் தங்கள் பதவிகளைத் தக்கவைப்பதிலும் துறையின் உள்ளரசியலைப் பற்றியும் அதிகம் கவலைப் படுபவர்கள்.

இவர்களது இலக்கான ஏவான் பார்க்ஸ்டேல் பால்ட்டிமோர் நகரின் மேற்குப் பகுதியில் பெரும் போதைப் பொருள் பேரரசை நடத்துபவர். ஈவு இரக்கமற்ற விடாமுயற்சியாளன் பார்க்ஸ்டேலின் வலது கை வர்த்தகத்தில் புலியான ஸ்ட்ரிங்கர் பெல். பார்க்ஸ்டேல் குழுவின் எதிரிகளைக் கொலை செய்யும் அடியாட்கள் வீ-பே பிரைஸ், பேர்ட், ஸ்டிங்க்கம், ஸ்லிம் சார்லஸ் ஆகியோர். ஏவானின் அக்கா மகன் டி ஏஞ்சலோ தனது மாமனின் பேரரசின் ஒரு சிறு பகுதியை நிருவகிப்பவன். பூட், வேலஸ், புரோடி ஆகியோர் அவனுக்குக் கீழ் பணிபுரியும் அடிமட்ட ஆட்கள்.[28] இவர்களைத் தவிர போதைப் பொருள் விற்பனையாளர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் ஓமார் பார்க்ஸ்டேல் குழுவின் முக்கிய எதிரியாக இருக்கிறான்.

இரண்டாவது பருவத்தில் பால்ட்டிமோர் துறைமுகத்தில் பணிபுரியும் பல புதிய பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தொழிற்சங்கத் தலைவன் ஃபிராங்க் சபோத்கா, அவனது மருமகன் நிக்கி, மகன் சிக்கி அவர்களுள் முக்கியமானவர்கள். பால்ட்டிமோர் நகருக்கு போதைப் பொருட்களை மொத்தமாக வழங்கும் பெரும்புள்ளியான தி கிரீக், அவனது வலது கை ஸ்பிரோஸ் வோண்டாஸ், துறைமுக ரோந்து அதிகாரி பீடி ரசல் போன்றோரும் அறிமுகமாகின்றனர்.

மூன்றாம் பருவத்தில் போதைப் பொருள் சிக்கலை வித்தியாசமான கோணத்தில் அணுகும் மேஜர் பன்னி கோல்வின் அறிமுகமாகிறார். பால்ட்டிமோர் நகரின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுபடுத்தும் புரோபோசிஷன் ஜோ, பார்க்ஸ்டேல் குழுவின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் புதிய குழுவின் தலைவன் மார்லோ ஸ்டான்ஃபீல்ட், நகரின் மேயர் பதவிக்குப் போட்டியிடும் நகர்மன்ற உறுப்பினர் டாம்மி கார்செட்டி, சிறையிலிருந்து விடுதலையாகும் பழைய பார்க்ஸ்டேல் அடியாள் கட்டி ஆகியோர் இப்பருவத்தின் பிற முக்கிய பாத்திரங்களாவர். பள்ளி அமைப்பு மற்றும் மாணவர்கள்மீது போதைப் பொருள் வர்த்தகத்தின் தாக்கம் பற்றியான நான்காம் பருவத்தில் டூக்கி, ரேண்டி, நேமண்ட், மைக்கேல் எனும் நான்கு புதிய மாணவக் கதை மாந்தர் அறிமுகமாயினர். இவர்கள் தவிர மார்லோ ஸ்டான்ஃபீல்டின் அடியாட்கள் கிரிஸ் பால்ட்ரோ, ஸ்னூப், புரபோசிஷன் ஜோவின் அக்கா மகன் சீஸ் ஆகியோருக்கும் அதிக திரைநேரம் கிட்டுகிறது. ஊடக அமைப்புகளில் ஏற்படும் நெறி பிறழ்வைச் சித்தரிக்கும் நான்காம் பருவத்தில் ஊடகவியலாளர் பாத்திரங்களான அகஸ்டஸ் ஹெய்ன்ஸ், ஆல்மா கிட்டீரேஸ், ஸ்காட் டெம்பிள்டன் அறிமுகமாயினர். முந்திய பருவங்களில் சிறு பாத்திரங்களில் தோன்றிய வழக்கறிஞர் மாரீஸ் லெவி, ஊழல் அரசியல்வாதி கிளே டேவிஸ் போன்றோருக்கு அதிக திரைநேரம் தரப்பட்டது.

பருவம் ஒன்று

தொகு

பருவம் ஒன்று பார்க்ஸ்டேல் குற்றக் குழுவைப் பிடிக்கப் பால்ட்டிமோர் காவல்துறை சிறப்புப் பிரிவின் முயற்சிகளைச் சித்தரிக்கின்றது. 13 அத்தியாயங்களைக் கொண்டது. ஏவான் பார்க்ஸ்டேலின் அக்கா மகன் டீஏஞ்செலோ பார்க்ஸ்டேலை ஒரு கொலை வழக்கிலிருந்து பார்க்ஸ்டேல் குழு தப்ப வைக்கிறது. இதனால் கோபம் கொண்ட துப்பறிவாளர் ஜிம்மி மெக்நல்ட்டி, நீதியரசர் டேனியல் ஃபேலானின் ஆதரவை நாடுகிறார். ஃபேலானின் முயற்சியால் பார்க்ஸ்டேல் குழுவை முடக்க லெப்டினன்ட் செடரிக் டேனியல்ஸ் தலைமையில் புதிய சிறப்புக் காவல் பிரிவொன்று உருவாக்கப்படுகிறது. அவர்களது விசாரணைமூலம் பார்க்ஸ்டேல் குழுவின் ஆழமும் அதிகாரமும் புலனாகுகின்றன. அவர்களுக்கு எதிராகச் செயல்படும் கொள்ளைக்காரன் ஓமார் லிட்டிலும் அறிமுகமாகிறான். பார்க்ஸ்டேல் குழு காவல்துறை விசாரணையை எதிர்கொள்ளும் அதே வேளை ஓமாரின் தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றது. பார்க்ஸ்டேல் குழு நகரின் பொதுத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி குறிமொழியில் தகவல்களைப் பரிமாறுகின்றது. சிறப்புக் காவல் பிரிவு பார்க்ஸ்டேல் ஆட்கள் பயன்படுத்தும் பேஜர் மற்றும் பொதுத் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டுத் துப்பறிகின்றது. பார்க்ஸ்டேல் குழுபற்றிப் பல தகவல்களைச் சேகரித்து மேலும் துருவி விசாரணை செய்யத் துவங்கும் வேளையில் டேனியல்சின் உயரதிகாரிகள் அரசியல் காரணங்களுக்காக விசாரணையை உடனே முடிக்கும்படி உத்தரவிடுகின்றனர். இதனால் ஏவானை ஒரு சிறிய குற்றத்துக்காகக் கைது செய்து அவனையும் வீபே பிரைஸ் போன்ற அவனது அடியாட்கள் சிலரையும் சிறையிலடைக்கின்றனர். ஆனால் ஸ்ட்ரிங்கர் பெல் குற்றச்சாட்டுக்காளாகாமல் தப்பி விடுகிறான். பார்க்ஸ்டேல் குழு அவனது கட்டுப்பாட்டுக்கு வருகிறது. சிறப்புக் காவல் பிரிவும் மூடப்படுகிறது. டேனியல்சுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. மெக்நல்டி படகுக் காவல் படைப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார்.

பருவம் இரண்டு

தொகு

இரண்டாம் பருவத்தில் போதைப் பொருள் பிரச்சனையுடன் உழைக்கும் வர்க்கத்தின் சிக்கல்களும் சித்தரிக்கப்படுகின்றன. பால்ட்டிமோர் நகர துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத் தலைவன் ஃபிராங்க் சபோத்கா தனது சக தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்காகத் துறைமுகம் வழியாகப் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதற்கு துணை போகிறான். பால்ட்டிமோர் நகருக்கு ஒட்டு மொத்த அளவில் போதைப் பொருட்களை வழங்கும் தி கிரீக்கும் அவனது ஆட்களும் இப்பருவத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் சரக்குப் பெட்டியில் அடைத்து வைத்துக் கடத்திய பாலியல் தொழிலாளிகள் 13 பேர் மூச்சுத் திணறி இறந்து போகின்றனர். இதனைத் துப்பறியக் காவல்துறை மேலதிகாரிகள் டேனியல்சின் சிறப்புக் காவல் பிரிவை மீண்டும் உயிர்ப்பிக்கின்றனர். காவல்துறை உயரதிகாரி மேஜர் வால்ச்செக்கின் பகையை சம்பாதித்த சபோத்காவை எதிலாவது சிக்கவைத்து சிறையலடைப்பது இப்பிரிவின் உள்நோக்காக உள்ளது. அவர்களது விசாரணையால் ”தி கிரீக்” குழுவின் செயல்பாடுகள் வெளித்தெரிய வருகின்றன. இதைத் தெரிந்து கொள்ளும் “தி கிரீக்” உண்மை வெளிவராமல் இருக்க சபோத்காவைக் கொலை செய்து விட்டுப் பால்ட்டிமோர் நகரை விட்டு வெளியேறுகிறான். நகரின் மற்றொரு பகுதியில் பார்க்ஸ்டேல் குழுவின் சிக்கல்கள் தொடருகின்றன. ஏவான் சிறை சென்ற பின்னால், குழுவின் கட்டுப்பாட்டாளனாக மாறுகிறான் ஸ்ட்ரிங்கர் பெல். விற்பனை செய்யத் தரமான போதைப் பொருள் கிட்டாமல் வர்த்தகம் மந்தமடைவதால், மற்றொரு பெரும் போதைப் பொருள் விற்பனையாளனான புரொபோசிஷன் ஜோவுடன் கூட்டணி அமைக்கிறான். சபோத்காவின் மரணத்துடன் மீண்டும் சிறப்புக் காவல் பிரிவு கலைக்கப்படுகிறது.

பருவம் மூன்று

தொகு

மூன்றாவது பருவத்தில் பார்க்ஸ்டேல் குழு மீண்டும் நிகழ்ச்சியின் மையக் கருபொருளாகிறது. இம்முறை பால்ட்டிமோர் நகரின் அரசியல் களமும் கதைபொருளாகின்றது. போதைப் பொருள் வர்த்தகத்திற்கு நடைமுறையில் சட்ட ஏற்பு வழங்கினால் என்ன நடக்கும் என்பதை தி வயர் ஆராய்கின்றது. காவல்துறை உயரதிகாரி பன்னி கோல்வின் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு எதிரான முயற்சியில் புதிய உத்தி ஒன்றை அறிமுகப்படுத்துகிறார். நகரின் பயன்படுத்தப்படாத சில பகுதிகளில் போதைப் பொருட்களைத் தங்கு தடையின்றி விற்கலாம் என்று போதைப் பொருள் குற்றக் குழுக்களுக்கு அறிவிக்கின்றார். "ஹாம்ஸ்டெர்டாம்" என்று அவர்களால் செல்லப் பெயரிடப்படும் இப்பகுதியால் நகரின் பிற பகுதிகளில் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான வன்முறையும் குற்றங்களும் குறைகின்றன. பார்க்ஸ்டேல் போதைப் பொருள் பேரரசின் மையமாக இருந்த அதி உயர் கட்டடங்கள் இடிக்கப்பட்டதால் அவர்களுக்குப் பின்னடைவு ஏற்படுகிறது. ஸ்ட்ரிங்கர் பெல் நகரின் பிற குற்ற கும்பல்களுடன் கூட்டுறவு வர்த்தகத்தில் ஈடுபட்டு இதனைச் சமாளிக்கிறான். ஆனால் இளம் குற்றக் குழு தலைவனான மார்லோ ஸ்டான்ஃபீல்டுடன் பார்க்ஸ்டேல் குழு மோதும் நிலை உருவாகின்றது. இரு குழுக்களுமிடையே நடைபெறும் மோதல்களால் குற்றங்கள் அதிகரித்து டேனியல்சின் சிறப்புப் பிரிவு அதனைப் புலனாயத் தொடங்குகிறது. கோல்வினின் புதிய முயற்சியால் குற்றங்கள் குறைந்தாலும், அவரது முயற்சிபற்றிய செய்தி வெளியே கசிந்து பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. மேயர் தேர்தலுக்குப் போட்டியிடும் நகர மன்ற உறுப்பினர் டாம்மி கார்செட்டி அதை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார். கோல்வினின் முயற்சிகள் நிறுத்தப்படுகின்றன. ஸ்ட்ரிங்கர் பெல்லுக்கும் சிறையிலிருந்து விடுதலையான ஏவான் பார்க்ஸ்டேலுக்கும் வேறுபாடுகள் முற்றி, ஏவான் ஸ்ட்ரிங்கரைக் கொலை செய்ய ஏற்பாடு செய்கிறான். பிறகு சிறப்புக் காவல் பிரிவினரால் கைது செய்யப்படுகிறான். இதனால் பார்க்ஸ்டேல் குழு செயலிழந்து அவர்களது பகுதிகள் ஸ்டான்ஃபீல்ட் குழுவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

பருவம் நான்கு

தொகு

தி வயரின் நான்காவது பருவத்தின் கதைக்களம் விரிவடைந்து பால்ட்டிமோர் நகரின் பள்ளிக்கல்வித் துறையினையும் உள்ளடக்குகிறது. டூக்கி, ரேண்டி, மைக்கேல், நேமண்ட் ஆகிய நான்கு பதின்ம வயது இளைஞர்கள் அறிமுகமாகினறனர். போதைப் பொருள் வர்த்தகமும் குற்றக் குழுக்களும் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கமும், அவர்கள் சார்ந்திருக்கும் பள்ளிக்கல்வி அமைப்பும் இப்பருவத்தில் மையக் கதைப்பொருளாகின்றன. குற்றக்குழு சூழலால் அவர்கள் வாழ்வில் நடக்கும் பெரும் மாற்றங்கள் இப்பருவத்தில் பதிவாகின்றன. பள்ளிக்கல்வித் துறையைச் சீர்திருத்த விரும்பும் மேயர் கார்செட்டி அரசியல் காரணங்களால் எப்படி தடம் பிறழ்கிறார் என்பதையும் இப்பருவம் காட்டுகிறது.

இதுதவிர பால்ட்டிமோரின் நிழலுலகில் மார்லோ ஸ்டான்ஃபீல்டின் வளர்ச்சியையும் சித்தரிக்கின்றது இந்தப் பருவம். மார்லோ கொலையாளிகள் கிரிஸ் மற்றும் ஸ்னூப் ஆகியோரின் உதவியுடன் தன் எதிராளிகள் பலரையும் கொலை செய்து பால்ட்டிமோரை ஆட்டிப் படைக்கிறான். கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை இடிந்து கிடக்கும் அடுக்குமாடி வீடுகளில் போட்டு மறைத்து விடுகிறார்கள் மார்லோவின் கொலையாட்கள். நகரின் மற்றொரு புறம் புரபோசிஷன் ஜோ போதைப் பொருள் வர்த்தகத்தை முறைப்படுத்தி வன்முறையைக் குறைக்க முயலுகிறான். அதற்காக ஒரு குற்றக்குழு கூட்டுறவு சங்கத்தையும் தொடங்குகிறான். அதில் இணையும் மார்லோ பின் ஜோவைக் கொலை செய்து நகரின் ஈடு இணையில்லா கடத்தல் பேரரசனாகிறான்.

பருவம் ஐந்து

தொகு

தி வயரின் ஐந்தாவது பருவத்தில் பால்ட்டிமோரின் ஊடகத்துறைக் கூடுதல் கருபொருளாகிறது.[48] பால்ட்டிமோர் சன் நாளிதழில் நடக்கும் நிகழ்வுகள், வணிக வெற்றிக்காக ஊடகத்துறையில் நடக்கும் பிறழ்வுகள் ஆகியவை சித்தரிக்கப்படுகின்றன.[49] மார்லோ ஸ்டான்ஃபீல்டின் குற்றக்குழுவைப் கையும் களவுமாகப் பிடிக்க இயலாமல் சிறப்புக் காவல்படைத் திணறுகிறது. வருவாய் பற்றாக்குறையால் காவல்துறையின் நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கிறார் மேயர் கார்செட்டி. மார்லோ மீதான புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட துப்பறிவாளர் மெக்நல்ட்டி பொய்யான ஒரு ஊடகப் பரபரப்பை ஏற்படுத்தி மார்லோ மீதான விசாரணை தொடர முயலுகிறார். மார்லோவின் ஆட்கள் செய்த கொலைகளையெல்லாம் ஒரு தொடர் கொலைகாரன் செய்ததாக ஜோடித்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கிறார். நகரின் மாபெரும் குற்றக்குழுத் தலைவனாக உருவாகியிருக்கும் மார்லோவுக்கும் கொள்ளைக்காரன் ஓமாருக்கும் மோதல்கள் முற்றுகின்றன. ஓமார் மார்லோவின் ஆட்களால் கொல்லப்படுகிறான். ஆனால் மார்லோவின் அசுர வளர்ச்சியால் உருவாகிய சிக்கல்களே அவனை நிழலுலகிலிருந்து விலகச் செய்கின்றன. மார்லோ போதைப் பொருள் வர்த்தகத்திலிருந்து விலகிய பின்னால் குற்றக்குழு கூட்டுறவு சங்கம் நகரின் அவனது இடத்தை நிரப்புகிறது.

தாக்கம்

தொகு

விமர்சக எதிர்வினை

தொகு

தி வயர் இன் முதல் பருவம் சாதகமான விமர்சனங்களைப் பெற்றது.[50][51] எச்பிஓ தொலைக்காட்சியின் முன்னணித் தொடர்களான சிக்ஸ் ஃபீட் அண்டர், தி சொப்ரானோஸ் ஆகியவற்றை விட இதுவொரு சிறந்த நாடகத் தொடர் என்று சில விமர்சகர்கள் கருதினர்.[52][53][54] டேவிட் சைமனின் முந்தையத் தொடர்களின் பல கூற்றுகள் தி வயரிலும் காணப்படுவதாக ஒரு விமர்சகர் கருதினார். எனினும் போதைப் பொருள் வர்த்தகத்தின் மீதான அரசின் போரை ஆவணப்படுத்துவதால் மிகவும் பயனுள்ளது என்று கூறினார்.[55] மேலும் ஒரு விமர்சகர் இத்தொடரின் மெதுவான கதை நகர்வும், தாராளமான வசைச்சொல் பயன்பாடும் இதன் வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்கலாம் என்று கருதினார்.[31]

விமர்சர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றாலும் நீல்சன் பார்வையாளர் தரவரிசையில் தி வயர் மிகவும் பின்தங்கியே இருந்தது. இதற்குக் காரணமாகச் சைமன் கூறுபவை: மிகவும் ஆழமான கதைக்களம், தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் குறைவாக இருந்த நேரத்தில் ஒளிபரப்பட்டமை, பால்ட்டிமோர் நகர வழக்கு மொழியினை அதிகமாகப் பயன்படுத்தியமை மற்றும் அதிக எண்ணிக்கையில் ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர்கள் நடித்திருந்தமை.[56] பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் கதைக்களம் அமைந்திருந்ததாகச் சில விமர்சகர்கள் கருதினர். மேலும் முன்னரே எஃப்.எக்ஸ் தொலைக்காட்சியில் இதே போன்ற கதைக்களம் உடைய தி ஷீல்ட் என்னும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால் தி வயர் தவறான நேரத்தில் வெளியானதாகவும் கருதினர்.[55] ஆனால் புகழ்பெற்ற பொழுதுபோக்கு இதழான எண்டெர்டெய்ன்மெண்ட் வீக்லி இல் தி வயர் இன் முதல் பருவ இறுவட்டு வெளியீட்டுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது.[57]

முதல் பருவத்தைக் காட்டிலும் இரண்டாம் பருவம் தாக்கம் மிகுந்ததென்று ஐக்கிய இராச்சியத்தின் தி கார்டியன் இதழ் எழுதியது. மையக் கதைக்களத்தை ஆழ்ந்து ஆராயும் அதே வேளை புதிய கதைக்களங்களை அறிமுகப்படுத்தியதைப் புகழ்ந்தது.[32] மூன்றாம் பருவமும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. எண்டெர்டெய்ன்மெண்ட் வீக்லி இதழ் தி வயர் நிகழ்ச்சியை 2004 ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொடராக அறிவித்தது. தொலைக்காட்சித் தொடர்களில் மிகவும் “அறிவார்ந்த, ஆழமான, தாக்கமிக்க” தொடர் என்று தி வயர் ஐப் புகழ்ந்தது.[58] குறைவான பார்வையாளர் எண்ணிக்கையால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விடும் என்று அஞ்சிய பால்ட்டிமோர் சிட்டி பேப்பர் இதழ், அது தொடர்ந்து ஒளிப்பரப்பாகப் பத்து காரணங்களை வெளியிட்டது. ஆழமான பாத்திரப்படைப்பு, ஓமார் லிட்டில், நிஜ உலகின் அப்பட்டமான பிரதிபலிப்பு, பால்ட்டிமோர் நகரின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஆகியவை அவற்றில் சில.[59] மூன்றாம் பருவம் முடியும் தருவாயிலும் கூடப் பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் ஈர்க்கத் திணறியது தி வயர். இதனால் அதை எச்பிஓ நிறுவனம் நிறுத்தக்கூடிய வாய்ப்பு உருவானது.[60] தி சோப்ரானோசின் வெற்றிக்குப் பின்னர் எச்பிஓ நாடகத் தொடர்களின் மீதான பார்வையாளர் எதிர்பார்ப்பு மாறிவிட்டதென்றும், டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் தொடரின் போட்டியும் பார்வையாளர் எண்ணிக்கையைக் குறைத்து விட்டதென்றும் டேவின் சைமன் கூறினார்.[61]

மூன்றாம் பருவம் முடிந்து ஈராண்டுகளுக்குப் பின் நான்காம் பருவம் ஒளிபரப்பானது. அப்போது சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கிள் இதழில் டிம் குட்மேன் தி வயர் அமெரிக்காவின் போதைப் பொருள் வர்த்தகப் போரைச் சித்தரிப்பதுடன் இனம், வறுமை, அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தின் அழிவு, ஏழை மக்களை அரசியல் முறை கைவிட்டமை, நம்பிக்கையிழப்பின் கொடுமை போன்றவற்றை எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் அமெரிக்க நகர்ப்புற ஏழைகளின் பாட்டைத் தொலைக்காட்சி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆழமாகப் படம்பிடித்திருப்பதாகவும் பாராட்டினார்.[62] அதுவரை வெளிவந்த பருவங்களுள் நான்காவதே மிகச் சிறந்ததென நியூயார்க் டைம்ஸ் கூறியது.[63] சிக்காகோ சன்-டைம்ஸ் இதழின் டக் எல்ஃப்மேன் தி வயர் மிக அதிகமான குறிக்கோள் கொண்டதென்று குறிப்பிட்டாலும், மெதுவான கதை நகர்வு, அளவுக்கதிகமான கதையாழம் போன்றவற்றை குறை கூறினார்.[64] லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் இந்நிகழ்ச்சியைப் பற்றி ஒரு தனித் தலையங்கமே எழுதியது. பார்வையாளர்களைச் சிந்திக்கத் தூண்டும் அறிவார்ந்த நாடகங்களின் பொற்காலமெனக் கருதக்கூடிய இக்காலகட்டத்தில் கூடத் தி வயர் தனித்து நிற்பதாகப் பாராட்டியது.[65] டைம் இதழ் நிகழ்ச்சியின் நான்காம் பருவத்தைப் பாராட்டுகையில் “இது போல எந்தவொரு நகரும் ஒரு நகரைக் காதலித்ததில்லை, கண்டித்ததுமில்லை, காவியமாக்கியதுமில்லை” என்று குறிப்பிட்டது.[66] விமர்சனங்களைத் தொகுத்து மதிப்பெண் அளிக்கும் மெடாகிரிட்டிக் இணைய தளத்தில் இந்நிகழ்ச்சி 98% மதிப்பெண் பெற்றுள்ளது. தொலைக்காட்சி வரலாற்றில் இது இரண்டாவது அதிகமான மதிப்பெண் ஆகும்.[3]

தொலைக்காட்சி வரலாற்றில் இது தான் மிகச் சிறந்த தொடர் என்று பல இதழ்களின் தொலைக்காட்சி விமர்சகர்கள் கூறியுள்ளனர். டைம்,[66] எண்டெர்டெய்ன்மெண்ட் வீக்லி,[58] தி சிக்காகோ டிரிபுயூன்,[67], ஸ்லேட்,[48] சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கிள்,[68] ஃபிலடெல்ஃபியா டெய்லி நியூஸ்[69] தி கார்டியன்,[32] பிபிசி[70] ஆகியவை அவற்றுள் ஒரு சில. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா தி வயர் தான் தனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சித் தொடரெனக் குறிப்பிட்டுள்ளார்.[71]

விருதுகள்

தொகு

தி வயர் நிகழ்ச்சி நிறைய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் பலவற்றை வென்றுள்ளது. நாடகத் தொலைக்காட்சித் தொடர்களுக்கான சிறந்த எழுத்தாக்கம் எம்மி விருது இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றப்புனைவு விருதுகள், அமெரிக்க திரைப்படத் தொகுப்பாளர் விருதுகள் (எட்டி விருதுகள்), அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் சங்க விருதுகள், ஐரியத் திரைபபட மற்றும் தொலைக்காட்சி விருதுகள் போன்றவற்றையும் வென்றுள்ளது. இது தவிர என்.ஏ.ஏ.சி.பி. வழங்கும் சிறந்த பிம்பம் விருது, தொலைக்காட்சி விமர்சகர் விருதுகள், அமெரிக்க எழுத்தாளர் சங்க விருதுகள் போன்ற விருதுகளுக்கும் பல முறை பரிந்துரைக்கபப்ட்டது. இந்நிகழ்ச்சி வென்ற பெரும்பாலான விருதுகள் அதன் நான்காவடு மற்றும் ஐந்தாவது பருவங்களுக்கு வழங்கப்பட்டன. அமெரிக்க இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் விருதும், பீபாடி விருதும், ஆர்ட்டியோஸ் விருதும் இரண்டாம் பருவத்துக்குக் கிடைத்தன. நிகழ்ச்சியின் நான்காம் பருவம் புராட்காஸ்டிங் அன்ட் கேபிள் அமைப்பின் விமர்சகர் விருதையும், முதலாம் மற்றும் மூன்றாம் பருவங்கள் டைம் இதழ் விமர்சகர் விருதினை வென்றன.

கல்வியிலும் ஆய்வுலகிலும்

தொகு

தி வயர் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு முடிந்த பின்னர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ், புரவுண், ஹார்வர்ட் போன்ற பல பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் இந்நிகழ்ச்சி தொடர்புடைய பல பாடங்களை அறிமுகம் செய்தன. சமூகவியல் முதற்கொண்டு திரைப்பட ஆய்வு வரை பல துறைகளில் இப்பாடங்கள் நடத்தப்பட்டன. மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ளா பிலிப்ஸ் அகாடெமி என்னும் உயர்நிலைப் பள்ளியிலும் இது போன்ற ஒரு பாடம் கற்பிக்கப்படுகிறது.[72][73] டெக்சஸ் பல்கலைக்கழகம், சான் அண்டோனியோவில் கற்பிக்கப்படும் ஒரு பாடத்தில் தி வயர் ஒரு புனைவுப் படைப்பாகக் கற்பிக்கப்படுகிறது.[74] மேலும் பாரிசிலுள்ள நாந்தெர் பல்கலைக்கழகத்தில் ஒரு பெரும் ஆய்வரங்குத் தொடரின் பகுதியாகக் கற்பிக்கப்படுகிறது.[75]

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏன் நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகள் பாடத்தில் தி வ்யர் நிகழ்ச்சியைப் பாடத்திட்டப் பகுதியாகக் கருதுகிறது என்பதை வாஷிங்க்டன் போஸ்ட், இதழில் வெளியான ஒரு கட்டுரையில் அன்மோல் சத்தா மற்றும் வில்லியம் ஜூலியஸ் வில்சன் ஆகியோர் பின்வருமாறு விளக்குகின்றனர்.

தொழில்மயமழிதல், குற்றங்கள், சிறைகள், கல்விச் சூழல் ஆகியவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்று ஆய்வாளர்கள் அறிந்திருந்தாலும், இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தனியாக அணுகி ஏனையவற்றைப் புறந்தள்ளியே ஆய்வு செய்து வந்தனர். ஆனால் தி வயர் ஒரு புனைவுப் படைப்பென்பதால் ஆய்வுலகின் வழமையான கட்டுப்பாடுகளைத் தவிர்த்து விட்டது. நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வை பாதிக்கும் பலதரப்பட்ட காரணிகளை ஒரே கதைக்களத்தில் ஒன்றிணைத்து விட்டது.[76]

யோர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் ரோஜர் பர்ரோஸ் தி இண்டிபெண்டெண்ட் இதழில் "தி வயர்" குறித்து ”சமகால நகர்ப்புறவியலின் புரிதலுக்கு இந்நிகழ்ச்சி அற்புதமாக உதவுகிறது” என்றும் “இதே பொருள்பற்றி ஏராளமான பணச்செலவில் செய்யப்படும் வறட்டு, சுவாரஸ்யமற்ற ஆய்வுகளிலிருந்து இது வேறுபட்டு நிற்கிறது” என்றும் கூறியுள்ளார்.[77]

ஒளிப்பரப்பாளர்கள்

தொகு

தி வயர் இன் ஐந்து பருவங்களும் எச்பிஓ தொலைக்காட்சியில் 2002, 2003, 2004, 2006, மற்றும் 2008, ஆண்டுகளில் ஒளிபரப்பாகின. பொதுவாக வாரம் ஒரு முறை ஒரு புதிய அத்தியாயம் ஒளிபரப்பப்பட்டது.[78] அமெரிகக நகைச்சுவைத் தொலைக்காட்சி அலைவரிசை பிஈடி இலும் தி வயர் ஒளிபரப்பானது.[79] ஐக்கிய இராச்சியத்தில் எஃப்.எக்ஸ் தொலைக்காட்சியிலும் பிபிசி 2 தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.[80] அயர்லாந்தில் டிஜி4 மற்றும் 3ஈ, ஆஸ்திரேலியாவில் ஏபிசி2, போலந்தில் டிவிஎன், சுவீடனில் எஸ்விடி, நார்வேயில் என்.ஆர்.கே, இஸ்ரேலில் எக்ஸ்ட்ரா ஹாட் மற்றும் யெஸ் ஆக்‌ஷன், கனடாவில் தி மூவி நெட்வொர்க் மற்றும் மூவி செண்ட்ரல், பின்லாந்தில் சப் டிவி மற்றும் எம்டிவி3, ஜெர்மனியில் ஃபாக்ஸ்சேனல், ஆசியாவில் சினிமாக்ஸ், மத்திய கிழக்கு நாடுகளில் எம்பிசி ஆக்‌ஷன் போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் தி வயர் ஒளிபரப்பானது.

இறுவட்டு வெளியீடுகள்

தொகு
பருவம் வெளியீடு தேதி அத்தியாயங்கள் சிறப்பாம்சங்கள் வட்டுகள்
இறுவட்டு நிலப்பகுதி 1 இறுவட்டு நிலப்பகுதி 2 இறுவட்டு நிலப்பகுதி 3
1 அக்டோபர் 12, 2004[81] ஏப்ரல் 18, 2005[82] மே 11, 2005[83] 13
  • படப்பிடிப்புக் குழுவினருடன் மூன்று உரையாடல்கள் (ஒலி மட்டும்)
5
2 ஜனவரி 25, 2005[84] அக்டோபர் 10, 2005[85] மே 3, 2006[86] 12
  • படப்பிடிப்புக் குழுவினருடன் இரண்டு உரையாடல்கள் (ஒலி மட்டும்)
5
3 ஆகஸ்ட் 8, 2006[87] பெப்ரவரி 5, 2007[88] ஆகஸ்ட் 13, 2008[89] 12
  • படப்பிடிப்புக் குழுவினருடன் மூன்று உரையாடல்கள் (ஒலி மட்டும்)
  • டேவிட் சைமன் மற்றும் படைப்பாளிகள் அணியுடன் ஒரு கேள்வி பதில்
  • டேவிட் சைமனுடன் ஒரு உரையாடல்.[29]
5
4 டிசம்பர் 4, 2007[90] மார்ச் 10, 2008[91] ஆகஸ்ட் 13, 2008[92] 13
  • படப்பிடிப்புக் குழுவினருடன் ஆறு உரையாடல்கள் (ஒலி மட்டும்)
  • "இட்ஸ் ஆல் கனகெடெட்" - சிறுபடத்தொகுப்பு
  • "தி கேம் இஸ் ரியல்" - சிறுபடத்தொகுப்பு
4
5 ஆக்ஸ்ட் 12, 2008[93] செப்டம்பர் 22, 2008[94] பெப்ரவரி 2, 2010[95] 10
  • படப்பிடிப்புக் குழுவினருடன் ஆறு உரையாடல்கள் (ஒலி மட்டும்)
  • "தி வயர்: தி லாஸ்ட் வோர்ட்" – விவரணப்படம்
  • "தி வியர் ஒடிசி" – முதல் நான்கு பருவங்கள் பற்றிய ஒரு பார்வை
  • தி வயர் முன்கதைகள்
  • நிகழ்ச்சி முடிவுக் கொண்டாட்டங்கள்
4
அனைத்தும் டிசம்பர் 9, 2008[96] டிசம்பர் 8, 2008[97] பெப்ரவரி2, 2010[98] 60
  • முன்பு வெளியான பெட்டி வெளியீடுகள்
23

இந்த இறுவட்டு வெளியீடுகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனினும் அவற்றில் சிறப்பாம்சங்கள் இல்லாமையை சில விமர்சகர்கள் குறை கூறினர்.[10][11][99][100]

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 David Simon."The Target" commentary track[DVD].HBO.
  2. Traister, Rebbeca (September 15, 2007). "The best TV show of all time". Salon.com. Archived from the original on செப்டம்பர் 3, 2011. பார்க்கப்பட்ட நாள் March 7, 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "The Wire: Season 4". Metacritic. பார்க்கப்பட்ட நாள் March 7, 2008.
  4. "The Wire: Season 5". Metacritic. பார்க்கப்பட்ட நாள் March 7, 2008.
  5. "The Wire: arguably the greatest television programme ever made". Telegraph (London). April 2, 2009. http://www.telegraph.co.uk/news/uknews/5095500/The-Wire-arguably-the-greatest-television-programme-ever-made.html. பார்த்த நாள்: April 2, 2009. 
  6. Wilde, Jon (July 21, 2007). "The Wire is unmissable television". London: guardian.co.uk. http://www.guardian.co.uk/culture/tvandradioblog/2007/jul/21/thewireisunmissabletelevis. பார்த்த நாள்: September 7, 2009. 
  7. Carey, Kevin (February 13, 2007). "A show of honesty". London: guardian.co.uk. http://www.guardian.co.uk/commentisfree/2007/feb/13/thewire. பார்த்த நாள்: September 7, 2009. 
  8. 8.0 8.1 8.2 Ian Rothkirch (2002). "What drugs have not destroyed, the war on them has". Salon.com. Archived from the original on 2007-03-13.
  9. Alvarez, Rafael (2004). The Wire: Truth Be Told. New York: Pocket Books. pp. 18–19, 35–39.
  10. 10.0 10.1 10.2 Chris Barsanti (2004). "Totally Wired". Slant Magazine.
  11. 11.0 11.1 Bill Wyman. "The Wire The Complete Second Season". National Public Radio.
  12. Joel Murphy (2005). "One on one with... Lance Reddick". Hobo Trashcan.
  13. Joel Murphy (2005). "One on One With Michael K. Williams". Hobo Trashcan.
  14. Deford, Susan (February 14, 2008). "Despite Past With Bill Clinton, Ulman Switches Allegiance". The Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/02/13/AR2008021301620.html. பார்த்த நாள்: May 13, 2010. 
  15. David Zurawik (July 12, 2006). "Local figures, riveting drama put The Wire in a class by itself". The Baltimore Sun இம் மூலத்தில் இருந்து 2012-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120926144712/http://articles.baltimoresun.com/2006-07-12/features/0607120099_1_simon-wire-entire-season. 
  16. "Character profile – Jay Landsman". HBO. 2006. பார்க்கப்பட்ட நாள் December 19, 2007.
  17. "Character profile – Dennis Mello". HBO. 2008. பார்க்கப்பட்ட நாள் January 15, 2008.
  18. "The Wire season 2 crew". HBO. 2007. Archived from the original on அக்டோபர் 12, 2007. பார்க்கப்பட்ட நாள் October 14, 2007.
  19. "Character profile – Grand Jury Prosecutor Gary DiPasquale". HBO. 2008. பார்க்கப்பட்ட நாள் February 12, 2008.
  20. "The Wire + Oz". Cosmodrome Magazine. January 26, 2008. பார்க்கப்பட்ட நாள் February 11, 2009.
  21. Erik Dellums filmography. Retrieved December 24, 2009.
  22. Peter Gerety filmography. Retrieved November 11, 2009.
  23. Clark Johnson filmography. Retrieved November 11, 2009.
  24. Toni Lewis filmography. Retrieved December 24, 2009.
  25. Callie Thorne filmography. Retrieved November 11, 2009.
  26. "Org Chart – The Law". HBO. 2004. பார்க்கப்பட்ட நாள் October 16, 2007.
  27. "The Wire season 4 crew". HBO. 2007. Archived from the original on அக்டோபர் 12, 2007. பார்க்கப்பட்ட நாள் October 14, 2007.
  28. 28.0 28.1 28.2 28.3 28.4 Dan Kois (2004). "Everything you were afraid to ask about The Wire". Salon.com. Archived from the original on 2006-11-19.
  29. 29.0 29.1 29.2 "The Wire Complete Third Season on DVD", ASIN B000FTCLSU
  30. 30.0 30.1 Birnbaum, Robert. "Interview: George Pelecanos". Identity Theory. பார்க்கப்பட்ட நாள் September 17, 2007.
  31. 31.0 31.1 Todd Weiser (June 17, 2002). "New HBO series The Wire taps into summer programming". The Michigan Daily. Archived from the original on May 26, 2008. பார்க்கப்பட்ட நாள் September 10, 2010.
  32. 32.0 32.1 32.2 Jim Shelley (August 6, 2005). "Call The Cops". London: The Guardian Unlimited. http://www.guardian.co.uk/media/2005/aug/06/tvandradio.guide2. பார்த்த நாள்: April 9, 2010. 
  33. "On The Corner: After Three Seasons Shaping The Wire's Background Music, Blake Leyh Mines Homegrown Sounds For Season Four". Baltimore City Paper. 2006.
  34. ""The Wire" on HBO: Play Or Get Played, Exclusive Q&A With David Simon (page 16)". 2006. பார்க்கப்பட்ட நாள் October 17, 2007.
  35. "Character profile – Walon". HBO. 2008. பார்க்கப்பட்ட நாள் March 12, 2008.
  36. "Nonesuch to Release Music from Five Years of "The Wire"". November 12, 2007. பார்க்கப்பட்ட நாள் November 14, 2007.
  37. 37.0 37.1 37.2 Richard Vine (2005). "Totally Wired". The Guardian (London). http://blogs.guardian.co.uk/theguide/archives/tv_and_radio/2005/01/totally_wired.html. பார்த்த நாள்: April 9, 2010. 
  38. 38.0 38.1 Margaret Talbot (2007). "Stealing Life". The New Yorker. Archived from the original on செப்டம்பர் 4, 2012. பார்க்கப்பட்ட நாள் October 14, 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  39. William K. Rashbaum (January 15, 2005). "Police Say a Queens Drug Ring Watched Too Much Television" (Subscription required). த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2005/01/15/nyregion/15drug.html?ex=1154664000&en=c6b05200199da2db&ei=5070. 
  40. 40.0 40.1 40.2 Jesse Walker (2004). "David Simon Says". Reason (magazine).
  41. Brian Lowry (December 21, 2007). "'The Wire' gets the newsroom right". Variety. http://www.variety.com/article/VR1117978111?refCatId=1682. பார்த்த நாள்: December 22, 2007. 
  42. Carol D., Leoning (December 11, 2006). "'The Wire': Young Adults See Bits of Their Past". The Washington Post. p. B01. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/12/10/AR2006121001034.html. பார்த்த நாள்: March 17, 2007. 
  43. Alvarez 28, 35–39.
  44. Alvarez 12.
  45. "Interviews—Ed Burns". HBO. 2006.
  46. "Behind The Scenes Part 1—A New Chapter Begins". HBO. 2006.
  47. David Simon (2003). "David Simon Answers Fans' Questions". HBO. Archived from the original on டிசம்பர் 4, 2003. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  48. 48.0 48.1 Jacob Weisberg (September 13, 2006). "The Wire on Fire: Analyzing the best show on television". Slate (magazine). p. 1. http://www.slate.com/id/2149566/. 
  49. NPR interview with Simon broadcast the week of Jan. 12, 2008
  50. "Television Critics Association Introduces 2003 Award Nominees". Television Critics Association. Archived from the original on அக்டோபர் 13, 2006. பார்க்கப்பட்ட நாள் September 10, 2010.
  51. "The Wire: The Complete First Season". Rotten Tomatoes.
  52. Alan Sepinwall (August 6, 2006). "Taut 'Wire' has real strength.". Newark Star-Ledger. p. 1. 
  53. Aaron Barnhart (2006). "'The Wire' aims higher: TV's finest hour is back". Kansas City Star. Archived from the original on 2011-07-13.
  54. Leslie Ryan (2003). "Tapping The Wire; HBO Police Drama Tops Television Week's Semiannual Critics Poll List". Television Week. http://goliath.ecnext.com/coms2/gi_0199-2945445/Tapping-The-Wire-HBO-Police.html. 
  55. 55.0 55.1 Robert David Sullivan (2002). "Slow Hand". The Phoenix (newspaper).
  56. David Simon (2004). "Ask The Wire: David Simon". HBO. Archived from the original on 2007-05-16.
  57. "DVD Request of the Week". Entertainment Weekly. July 11, 2003 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 20, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020231010/http://www.ew.com/ew/article/0,,465300,00.html. 
  58. 58.0 58.1 Gillian Flynn (December 23, 2004). "The Best of 2004". Entertainment Weekly இம் மூலத்தில் இருந்து நவம்பர் 30, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111130204643/http://www.ew.com/ew/article/0,,1009257,00.html. 
  59. Brent McCabe, Van Smith (2005). "Down To The Wire: Top 10 Reasons Not To Cancel The Wire.". Baltimore City Paper. Archived from the original on 2006-08-22.
  60. Dana Stevens (2004). "Moyers Says "Ciao" to Now, but HBO had better not retire The Wire.". Slate (magazine).
  61. Marisa Guthrie (2004). "The Wire fears HBO may snip it". New York Daily News இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 2, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202104241/http://www.nydailynews.com/archives/entertainment/wire-fears-hbo-snip-article-1.608149. பார்த்த நாள்: July 23, 2012. 
  62. Tim Goodman (September 6, 2006). "Yes, HBO's 'Wire' is challenging. It's also a masterpiece.". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?file=/c/a/2006/09/06/DDG7BKV7HK26.DTL. பார்த்த நாள்: August 25, 2010. 
  63. Virginia Heffernan (September 9, 2006). "Higher Learning in the Drug Trade for Four Baltimore Students". The New York Times. http://www.nytimes.com/2006/09/09/arts/television/09wire.html?ex=1315454400&en=678cccd2cfd5056f&ei=5088&partner=rssnyt&emc=rss. பார்த்த நாள்: April 9, 2010. 
  64. Doug Elfman (2006). "Critic Reviews for The Wire Season 4 at Metacritic". Chicago Sun-Times. http://www.metacritic.com/tv/the-wire/season-4/critic-reviews. 
  65. Los Angeles Times (September 2, 2006). "High 'Wire' Act". Los Angeles Times. http://articles.latimes.com/2006/sep/02/opinion/ed-wire02. 
  66. 66.0 66.1 James Poniewozik (December 17, 2006). "10 Best TV Shows". டைம் இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 20, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110220044825/http://www.time.com/time/magazine/article/0,9171,1570781,00.html. 
  67. Steve Johnson (June 1, 2003). "Why HBO's 'The Wire' is the best show on TV". Chicago Tribune. http://articles.chicagotribune.com/2003-06-01/news/0306010314_1_baltimore-police-reporter-drug-bad-show. 
  68. Tim Goodman (May 30, 2003). "HBO scores again with a stellar second season of 'The Wire'". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2003/05/30/DD157653.DTL. 
  69. "It's time to get 'Wire'-d – after all, it's the best show on TV". Philadelphia Daily News. Archived from the original on நவம்பர் 30, 2006. பார்க்கப்பட்ட நாள் September 10, 2010.
  70. "Unknown". Charlie Brooker's Screenwipe. BBC Four. "The best show... of the last twenty years is another HBO show—not as well known—called The Wire. The Wire is quite simply a stunning piece of work... it actually physically pains me to use this phrase, because anyone who uses it sounds like an absolute tosser, but it is, truly, multilayered; it is just fucking brilliant." —Charlie Brooker
  71. "Barack Obama on his favorite TV show". Chicago Tribune. January 14, 2008 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 27, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101027042032/http://featuresblogs.chicagotribune.com/entertainment_tv/2008/01/barack-obama-on.html. பார்த்த நாள்: September 5, 2010. 
  72. "Getting Down to 'The Wire'". Phillips Academy. Archived from the original on டிசம்பர் 29, 2010. பார்க்கப்பட்ட நாள் February 2, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  73. Walker, Childs (November 26, 2010). "Hopkins students discover Baltimore through 'The Wire'". The Baltimore Sun. Archived from the original on பிப்ரவரி 3, 2011. பார்க்கப்பட்ட நாள் November 26, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  74. "Spring 2012 Courses: 4000-Level". The University of Texas at San Antonio. பார்க்கப்பட்ட நாள் February 3, 2012.
  75. "Séminaire "The Wire : a fiction in the ghetto" - Race, classe et genre dans les séries télévisées" (in French). Université Paris Ouest Nanterre La Défense. பார்க்கப்பட்ட நாள் June 25, 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  76. Chaddha, Anmol (September 12, 2010). "Why we're teaching 'The Wire' at Harvard". The Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/09/10/AR2010091002676.html. பார்த்த நாள்: September 21, 2010. 
  77. Silverman, Rosa (May 16, 2010). "Sociology degree students to study 'The Wire'". The Independent (London). http://www.independent.co.uk/news/education/education-news/sociology-degree-students-to-study-the-wire-1974850.html. பார்த்த நாள்: November 28, 2010. 
  78. "The Wire, Def Comedy Jam Set For On-Demand Premieres". World Screen News. 2006. Archived from the original on ஜூன் 17, 2008. பார்க்கப்பட்ட நாள் September 10, 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  79. "BET's editing butchers 'The Wire' story line". The Daily Bruin. 2007. Archived from the original on 2012-01-26.
  80. "BBC Two to show US TV's The Wire". BBC News. March 12, 2009. http://news.bbc.co.uk/2/hi/entertainment/7940061.stm. பார்த்த நாள்: March 12, 2009. 
  81. "The Wire: The Complete First Season (2002)". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  82. "The Wire: Complete HBO Season 1". Amazon.co.uk. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  83. "Wire, The – The Complete 1st Season (5 Disc Box Set)". EzyDVD.com.au. Archived from the original on அக்டோபர் 6, 2009. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  84. "The Wire: The Complete Second Season (2003)". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  85. "The Wire: Complete HBO Season 2". Amazon.co.uk. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  86. "Wire, The – The Complete 2nd Season (5 Disc Box Set)". EzyDVD.com.au. Archived from the original on அக்டோபர் 6, 2009. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  87. "The Wire: The Complete Third Season (2004)". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  88. "The Wire: Complete HBO Season 3". Amazon.co.uk. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  89. "Wire, The – The Complete 3rd Season (5 Disc Set)". EzyDVD.com.au. Archived from the original on அக்டோபர் 6, 2009. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  90. "The Wire: The Complete Fourth Season (2005)". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  91. "The Wire: Complete HBO Season 4". Amazon.co.uk. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  92. "Wire, The – The Complete 4th Season (5 Disc Set)". EzyDVD.com.au. Archived from the original on அக்டோபர் 6, 2009. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  93. "The Wire: The Complete Fifth Season (2008)". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  94. "The Wire: Complete HBO Season 5". Amazon.co.uk. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  95. "Wire, The – The Complete 5th Season (4 Disc Set)". EzyDVD.com.au. Archived from the original on பிப்ரவரி 14, 2010. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  96. "The Wire: The Complete Series (2008)". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  97. "The Wire: Complete HBO Season 1–5". Amazon.co.uk. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010.
  98. "Wire, The – The Complete Series (24 Disc Box Set)". EzyDVD.com.au. Archived from the original on மார்ச் 5, 2010. பார்க்கப்பட்ட நாள் September 11, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  99. Jason Clark (August 1, 2006). "The Wire: The Complete Third Season". Entertainment Weekly இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 19, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110819005356/http://www.ew.com/ew/article/0,,1219875,00.html. 
  100. James Poniewozik (August 14, 2006). "5 stellar series to catch up with on DVD". டைம் இம் மூலத்தில் இருந்து ஜனவரி 21, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110121221218/http://www.time.com/time/magazine/article/0,9171,1223358,00.html. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தி வயர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_வயர்&oldid=4165560" இலிருந்து மீள்விக்கப்பட்டது