என்.ஏ.ஏ.சி.பி.
நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் (National Association for the Advancement of Colored People), குறுக்க எழுத்து என்.ஏ.ஏ.சி.பி. (N.A.A.C.P.) ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையானதும் வலிமையானதுமான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கங்களில் ஒன்றாகும். டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ் மற்றும் இன்னும் இரண்டு ஆபிரிக்க அமெரிக்கர்கள், மூன்று வெள்ளை அமெரிக்கர்கள், மற்றும் ஒரு யூதர் ஆகிய நபர்கள் பெப்ரவரி 12, 1909 ஆபிரிக்க அமெரிக்க சமூக உரிமையை முன்னேற்றத்துக்காக இந்த சங்கத்தை உருவாக்கினார்கள்.
இச்சங்கம் நிறம் படி ஒதுக்குச்செயலை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டது. 1920கள், 1930களில் நீதிமன்றம் வழியால் இச்சங்கம் ஆபிரிக்க-அமெரிக்கர்களுக்கு எதிராக இருந்த பல சட்டங்களை செல்லாததாக ஆக்கியுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்களை சட்டதுக்குப் புறம்பாகத் தூக்கிலுடும் (Lynching) வழக்கத்துக்கு எதிராகவும், நிறப்பிரிக்கைக்கு எதிராகவும் போராடி பல அவற்றை சட்டபடி குற்றங்களாக்குவதில் வெற்றி கண்டுள்ளது.
இன்று இந்த சங்கத்தின் அடித்தளம் பால்ட்டிமோர், மேரிலன்டில் அமைந்துள்ளது.