பயனர் பேச்சு:Booradleyp1/தொகுப்பு03

பாராட்டுகள்

தொகு

நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு என்னும் கட்டுரையை நீங்கள் மிக நேர்த்தியாகச் செய்திருக்கின்றீர்கள். பாராட்டுகள்! --செல்வா (பேச்சு) 11:53, 19 ஆகத்து 2013 (UTC)Reply

பாராட்டுகளுக்கு எனது நன்றி செல்வா.--Booradleyp1 (பேச்சு) 13:18, 19 ஆகத்து 2013 (UTC)Reply

நன்றி. ஆனால் தனியாக உள்ள ஒரு தள தரவு படத்தை பதிவேற்றும்போது அது பதிவேறு வதில்லையே? அதற்க்கு என்ன முறையை கையால வேண்டும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:57, 31 ஆகத்து 2013 (UTC)Reply

பிறமொழி விக்கியிலுள்ள படிமங்களை காமன்சுக்கு நகர்த்துவதே ஊக்குவிக்கப்படுகிறது. அதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று : இந்தக் கருவி வழியாக நேரிடையாக நகர்த்தலாம். ஆனால் அதற்கு TUSC கணக்கு வேண்டும், அதற்கு இங்கு பதிய வேண்டும், அல்லது அதே கருவியில் கோப்பு பெயரை மட்டும் கொடுத்து do it பொத்தனை அழுத்தினால் கீழே விக்கி உரை தானே வரும், பிறகு உங்கள் கணினியில் அந்த படத்தை தரவிறக்கி பின்னர் அக்கருவியில் வரும் விக்கி உரையுடன் (பதிப்புரிமை விவரங்கள் அதிலேயே இருக்கும்) காமன்சில் பதிவேற்றலாம், அதற்கு பழைய பதிவேற்ற படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

கூகிளில் கிடைக்கும் பெரும்பாலான படங்களை நாம் பயன்படுத்த இயலாது, கோவில்கள் படங்களை பொறுத்த வரை எடுத்தவரின் அனுமதியில்லாமல் நாம் பயன்படுத்துவது கடினம். panoramio, flickr. picasa போன்றவற்றில் cc-by-sa உரிமம் அல்லது வேறு ஏதாவது வணிக பயன்பாடு மற்றும் Derivative work போன்றவற்றை அனுமதிக்கும் இலவச உரிமத்தின் கீழ் இருந்தால் பதிவேற்றலாம். எடுத்தவரின் அனுமதி பெற பார்க்க commons:OTRS, மேலும் Commons:Commons:Email templates இங்குள்ள வடிவத்தில் எடுத்தவரிடம் இருந்து அனுமதி பெற்று permissions-commons@wikimedia.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூகிளில் இருந்து எடுத்து பயன்படுத்தத்தக்க கோப்புகளுக்கு பார்க்க விக்கிப்பீடியா:நியாயமான_பயன்பாடு--Booradleyp1 (பேச்சு) 14:25, 1 செப்டம்பர் 2013 (UTC)

பார்க்க

தொகு

இப்பக்கம் விக்கியில் உள்ளது சரி தானா? , சிறுவர்_செயற்பாட்டுக்_கழகம்_(யாழ்ப்பாணம்_இந்துக்_கல்லூரி), --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:06, 6 செப்டம்பர் 2013 (UTC)

சென்னையில் வெளிவந்த "தினத்தந்தி"யில் அந்த வார்த்தை வெளிவந்திருந்தது. ஆனால் கனினி பதிப்பில் இல்லை. dailythanthi என்பதற்க்குப்பதில் dinathanthi என--Muthuppandy pandian (பேச்சு) 07:15, 6 செப்டம்பர் 2013 (UTC) அடித்துள்ளேன் அதை சரிசெய்யுங்கள்.இப்போது "தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை" என்பதுபற்றி மொழிபெயர்த்துள்ளேன்.இதை சரிசெய்யுங்கள்.


பாலமேடு ஜல்லிகட்டில் "மதுரை மாவட்டம்" என்ற தலைப்பு தமிழ் விக்கியிலும், பரிசுப்பொருள்கள் என்பது "www.thehindu.com" 16.01.2013ல் உள்ள செய்தியில் அவர்களின் ஆடைகள் பற்றியும் பரிசுப்பொருள்கள் பற்றியும், "வாடவாசல்" (entry point) என்றும் கொடுக்கப்பட்டிள்ளது. இதில் காளை பற்றிய செய்தியில் "கொம்பு" பற்றி மிகைபடுத்திவிட்டேன்.(நீக்கிவிடவும்) --Muthuppandy pandian (பேச்சு) 05:56, 7 செப்டம்பர் 2013 (UTC)

இதில் புதிதாக இடப்பட்டுள்ளவை சரியா எனப் பார்க்கவும்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:38, 8 செப்டம்பர் 2013 (UTC)

சரியான அரசு தளத்தின் பெயரையும் அல்லது நாளிதள்களில் வந்த செய்தியின் பக்கத்தையும் எப்படி மேற்கோள்கள் பக்கத்தில் சேர்ப்பது? மற்றும் ஆங்கில விக்கியில் வந்த படிமத்தை தமிழ் விக்கிக்கு எப்படி மாற்றுவது? உதவுங்கள்--Muthuppandy pandian (பேச்சு) 09:03, 10 செப்டம்பர் 2013 (UTC)

வழிமாற்று

தொகு

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என நகர்த்தியாயிற்று, பழைய பெயருக்கு வழிமாற்று உள்ளது --குறும்பன் (பேச்சு) 14:48, 13 செப்டம்பர் 2013 (UTC)

உதவிக்கு நன்றி குறும்பன்.--Booradleyp1 (பேச்சு) 14:53, 13 செப்டம்பர் 2013 (UTC)

கையேட்டை உரை திருத்த உதவ இயலுமா?

தொகு

வணக்கங்க. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் விக்கியூடகக் கையேட்டை அச்சுக்குக் கொண்டு செல்ல வேண்டி இருப்பதால், உரை திருத்தியும் எஞ்சிய பகுதிகளை எழுதிக் கொடுத்தும் உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 06:23, 14 செப்டம்பர் 2013 (UTC)

உரை திருத்துகிறேன். அங்குள்ள பக்கங்களை எழுத எனக்குத் தெரியாது.--Booradleyp1 (பேச்சு) 08:47, 14 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி :)--இரவி (பேச்சு) 06:52, 15 செப்டம்பர் 2013 (UTC)

கிலோ வாட் மணி

தொகு

இது மின் சக்தியை (electrical energy consumption )மட்டும் கணக்கிடும் அலகு.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 04:57, 18 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

அழைப்பிற்கு நன்றி இரவி. ஆனால் என்னால் கலந்து கொள்ள இயலாது.--Booradleyp1 (பேச்சு) 04:08, 21 செப்டம்பர் 2013 (UTC)

செப்டம்பர் 29 அன்று சென்னையில் நடக்கும் பயிற்சிகள், கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இயலுமா? நிச்சயம் உங்கள் வரவைப் பலரும் எதிர்பார்ப்பார்கள். நன்றி. --இரவி (பேச்சு) 04:35, 21 செப்டம்பர் 2013 (UTC)


உதவிதேவை

தொகு

வணக்கம் , நான் இன்று தொகுத்த 2 கட்டுரைகள் புக்கிட் அகோடா எனது தொடங்கிய கட்டுரைகள் பட்டியலில் இடம் பெறவில்லை. என்ன காரணம் எனத் தெரியவில்லை. தங்களால் உதவமுடியுமா? நன்றி.

பாலா, இது குறித்து என்னால் உங்களுக்கு ஒன்றும் செய்யத் தெரியாது, மன்னிக்கவும். ஏதாவது தொழில்நுட்பச் சிக்கலாக இருக்கலாம். கனக்சிடம் கேட்டுப்பாருங்கள்.--Booradleyp1 (பேச்சு) 06:36, 23 செப்டம்பர் 2013 (UTC) தற்போது சரியாகிவிட்டது. நன்றி.ஆர்.பாலா (பேச்சு) 13:53, 24 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கியூடகக் கையேடு/வேதியியல் மற்றும் கணித குறியீடுகளைச் சேர்த்தல்

தொகு

தமிழ் விக்கியூடகக் கையேடு/வேதியியல் மற்றும் கணித குறியீடுகளைச் சேர்த்தல் கொண்டுள்ள ஆங்கில உரைகளை உரிய தமிழ் சொற்களிட்டும் மேம்படுத்தியும் தர வேண்டுகின்றேன். நன்றி--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:06, 25 செப்டம்பர் 2013 (UTC)

முடிந்தவரை செய்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 17:06, 25 செப்டம்பர் 2013 (UTC)

மிக்க நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:12, 26 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்....

தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பினை நினைவுகூர்ந்து மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:29, 27 செப்டம்பர் 2013 (UTC)

கணிதக் கட்டுரை வேண்டுகோள்

தொகு

பிரைம் நம்பர்கள் தொடர்பான கீழ்க்கண்ட கட்டுரைகளை எழுதித் தருமாறு வேண்டுகிறேன்.

நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:14, 29 செப்டம்பர் 2013 (UTC)

நேரம் வாய்க்கும்போது எழுதுகிறேன். இவ்விரு கட்டுரைகளைக் கேட்பதற்கு ஏதேனும் சிறப்புக் காரணங்கள் உண்டா?--Booradleyp1 (பேச்சு) 03:37, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை

தொகு

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:34, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

தாங்கள் சிரமபட்டு திருத்தியதற்கு நன்றி.இனிமேல் தவறாமல் தாங்கள் குறிப்பிட்டுள்ளதை போல் எழுதிவிடுகிறேன்.நன்றி.நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியே , அதே புத்தகம் தான்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:45, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

உழவன் விரைவு ரயில்‎

தொகு

அம்மா, உழவன் விரைவு ரயில்‎ என்பது உண்மையான இரயில் இல்லை train route என்று ஆங்கிலக் கட்டுரையை எழுதும் போழுதே உறுதி செய்தேன். அது சரியெனில் வழித்தடம் என மாற்றிவிடலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 16:04, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

சமன்பாடுகளுக்கான நிரல்

தொகு

வணக்கம் அம்மையே! ஆங்கில விக்கியில் அண்மையில் ஒரு நிரல் பக்கத்தைக் காண நேரந்தது. இதன்மூலம் , கனிதச் சமன்பாடுகளை எளிதில் எழுதலாமாம். பயனர்:தமிழ்க்குரிசில்/mathjaxdialog.js என்கிற பக்கத்தில் உள்ள நிரலை உங்கள் பயனர் பகத்தில் உட்பக்கம் ஒன்றில் /mathjaxdialog.js என்று சேமித்து பயன்படுத்துங்கள். பயானுள்ளதாக் இருக்கும் என நம்புகிறேன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:49, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

சிபி, இதனைப் பயனர் விருப்பத்தெரிவாக மாற்றியுள்ளனர். என் விருப்பத் தேர்வுகளில் > தோற்றம் > கணிதம் பகுதியில் தெரிவாக தேர்ந்தெடுத்தால் mathjax கொண்டு கணிதநிரல்களைக் காணலாம். --சோடாபாட்டில்உரையாடுக 00:49, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

தங்களது ஆலோசனைக்கு நன்றி. இனிமேல் அவ்வாறே எழுதுகிறேன். ஆர்.பாலா (பேச்சு) 06:57, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

பகுப்பின் தலைப்பை மாற்றுதல்

தொகு

பகுப்பு ஒன்றின் தலைப்பை மாற்றுவதற்கு: முதலில் புதிய பகுப்பை உருவாக்குங்கள். பின்னர் பழைய பகுப்பில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் பழைய பகுப்பை அகற்றி விட்டுப் புதிய பகுப்பைச் சேர்க்க வேண்டும். பின்னர் பழைய பகுப்பில் கட்டுரைகள் எதுவும் இணைக்கப்படவில்லை என உறுதி செய்து கொண்ட பின்னர் பழைய பகுப்புக்கு வார்ப்புரு:delete ஐ சேர்த்து விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:32, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

வாசனை என்பதுதான் சரியானது. பின்னட்டைக் குறிப்பினைப் புரிந்து கொண்டேன். நன்றி. ஆர்.பாலா (பேச்சு) 16:26, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 16:50, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

ISBN

தொகு

வணக்கம், பொதுவாக எல்லாப் புத்தகங்களிலும் Product Details பகுதியில் ISBN எண் கொடுக்கப்பட்டிருக்கும்.--ஆர்.பாலா (பேச்சு) 16:47, 14 அக்டோபர் 2013 (UTC) தமிழ்ப் புத்தகங்களுக்கு இணையத்தில் தேடும் வசதி இருப்பதாய்த் தெரியவில்லை. ஆங்கிலப் புத்தகங்களுக்கு இருக்கிறது. அதுவும் ISBN எண்ணை வைத்து தேடுவது போல. நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 17:09, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

மணல்தொட்டி

தொகு

ஆலோசனைக்கு நன்றி. இனிமேல் அவ்வாறே செய்கிறேன். ஒரே கட்டுரை இருமுறை தொகுக்கப்பட்டுள்ளது.கீழே இணைத்துள்ளேன், கவனிக்கவும்.

உங்களின் வழிகாட்டலுக்கு நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 06:37, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மேற்கூறிய இருகட்டுரைகளையும் கனக்ஸ் சரிசெய்துள்ளார். மணல்தொட்டியைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதைப் பார்த்தேன். இது உங்களுக்கு வசதியாக இருக்குமென நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:23, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மலையாளக் கட்டுரைகள்

தொகு

வணக்கம் அம்மையே! தற்போது நான் எழுதி வரும் மலையாள கட்டுரைகளில் பல்வேறு குறைகள் இருப்பதை அறிவேன். நான் இத்தகைய கட்டுரைகளைத் தொடங்குவது, கேரள, மலையாளம் பற்றிய அடிப்படைகள் பல தமிழில் எழுதப்பட வேண்டும் என்பதற்காகவே! என் கட்டுரைகளை உடனுக்குடன் நீங்களும் சிவகுருநாதனும், ஆதவனும், திருத்தி வருவதால் கவலையின்றி அடுத்தக் கட்டுரைகளுக்கு நகர்கிறேன். பெருமளவு தமிழ் அல்லாத சொற்களை தவிர்க்கிறேன். பிழைகள் இருப்பின் அவ்வப்போது தெளிவு படுத்துங்கள், கட்டுரைகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரைதிருத்துவேன். :) மலையாள மொழிபெயர்ப்பு பற்றி விதிமுறை பக்கம் ஒன்றை உருவாக்கினால், உரையாடலுக்குப் பின்னர், ஏற்றவாது மொழிபெயர்ப்பில் ஈடுபடுவேன். கட்டுரையில் நீங்கள் காணும் குறைகள் என்னென்ன? அவற்றை எப்படி திருத்தலாம்? விரிவான கருத்தளித்து உதவுங்கள்! எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினால் நலம். நன்றி ! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:41, 17 அக்டோபர் 2013 (UTC)Reply

மொழிபெயர்ப்பு தானியங்கி அளவுக்கு மோசமாக இருக்காது என நம்புகிறேன். மலையாளக் கட்டுரைகளில் சில திருத்தங்கள் செய்தால் மாதிரி தமிழ்க் கட்டுரை கிட்டும். அதில் இருமுறை உரை திருத்தினால் தமிழ்க் கட்டுரை அருமையாக வரும். நம்புகிறேன். கருத்தறிய ஆவல். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:44, 17 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

வணக்கம் . தங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியபடியேதான் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறேன். குழப்பங்களைக் கண்டு அஞ்சுபனல்ல நான் . உங்களின் உற்சாகமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. நகர்த்தல் முறையில் நான் செய்த சித்திக் பார்மாக் என்ன ஆனது என்றே தெரியவில்லை. கண்டிப்பாய் தொடர்ந்து எழுதுவேன். எந்தப் பிரச்சனைகளையும் சங்கடங்களையும் உரையாடல் மூலம் தீர்க்க முடியும் என நம்புகிறவன் நான். உங்களின் வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றி.   விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:21, 23 அக்டோபர் 2013 (UTC)Reply

தகவலுக்காக: விடுமுறையில் ஊருக்குச் செல்வதால் (இந்தியா, கன்னியாக்குமரி) செல்வதால் நவம்பர் 14 ஆம் தியதி வரை விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்பு எதுவும் இருக்காது.நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 10:00, 23 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்கள் பயணம் மகிழ்வுடன் அமைய வாழ்த்துக்கள்.--Booradleyp1 (பேச்சு) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

நீங்கள் கும்பகோணம் மகாமக குளம் பற்றிய பதிவில் கூடுதல் தகவல்களையும் படங்களையும் இணைத்ததிற்கு நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 07:22, 14 நவம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 12:34, 14 நவம்பர் 2013 (UTC)Reply

சரியான வழியைக்காட்டுவதற்க்கு நன்றி. சரி செய்து கொள்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 04:44, 27 நவம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:50, 27 நவம்பர் 2013 (UTC)Reply

"அரிய படம்"

தொகு

சகோதரிக்கு வணக்கம்! "இருசகோதரர்கள்" பட படிமம் எங்கே கிடைத்தது!! நன்றிகள் பல... அதே போன்று "மானசம்ரட்ணம்", "சுவர்ணலதா", "பர்மா ராணி", "என்மகன்" போன்ற திரைப்படத்திற்கான படங்கள் கிடைத்தால்.!?? இணைக்க வேண்டுகிறேன். நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 17:07, 14 நவம்பர் 2013 (UTC)Reply

’சுவர்ணலதா’ மட்டும் கிட்டவில்லை. மற்ற மூன்றையும் இணைத்துள்ளேன். கூகுள் தேடலில்தான் கிடைத்தன.--Booradleyp1 (பேச்சு) 08:59, 15 நவம்பர் 2013 (UTC)Reply

சகோதரிக்கு வணக்கம்! படங்களை இணைத்தமைக்கு நன்றி! நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 13:48, 15 நவம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:28, 15 நவம்பர் 2013 (UTC)Reply

மாவட்ட ஆட்சித் தலைவர் ல் திருத்தம் செய்தமைக்கு நன்றி--யோகிசிவம் (பேச்சு) 05:51, 20 நவம்பர் 2013 (UTC)Reply

வழிமாற்றுகள்

தொகு

வணக்கம், வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற வழிமாற்றுகளை நீக்கத் தேவையில்லை. புதிதாகக் கட்டுரை எழுதுபவர்கள், அல்லது கட்டுரையைத் தேடுபவர்கள் இவ்வாறு எழுதியே தேடுவார்கள். இவ்வாறான வழிமாற்றுகள் உருவாக்குவது நல்லது.--Kanags \உரையாடுக 21:15, 22 நவம்பர் 2013 (UTC) தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி. இனி அவ்வாறே செய்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:47, 23 நவம்பர் 2013 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம் அம்மா, சிறு உதவி ஒன்று தேவை.காணாபத்தியம் என்று ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. அது தெரியாமல் நான் காணபதியம் கட்டுரையை தொடங்கிவிட்டேன். இணைக்க வேண்டுகிறேன். மேலும் காணாபத்தியம் எனும் தலைப்பு சரியானது இல்லை என நினைக்கிறேன்.இயன்ற உதவியை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:46, 2 திசம்பர் 2013 (UTC)Reply

சரியான பெயர் குறித்து கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கேட்டுள்ளேன். தெளிவான பின் ஒன்றிணைக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 16:00, 2 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி.:)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:20, 2 திசம்பர் 2013 (UTC)Reply

ஏன் எனது கையெழுத்து ஒழுங்காக வருவதில்லை என்று தெரியவில்லை. நான் நான்கு ~ குறியை போடுகிறேன். ஆனால் அது சரியாக வருவதில்லை. என்ன செய்வது? --அண்ணாமலை 05:31, 5 திசம்பர் 2013 (UTC) மேலுள்ள நீலப்பேனாவை வைத்துதான் இங்கு கையெழுத்திட்டுள்ளேன். இதை ஏன் என்று கண்டுபிடித்து சரிசெய்ய முயற்சிக்கிறேன். நன்றி. --அண்ணாமலை 05:55, 5 திசம்பர் 2013 (UTC) சரிசெய்துவிட்டேன். எனது விருப்பத்தேர்வில் ஒரு மாற்றம் செய்யவேண்டியிருந்தது. நன்றி. --அண்ணாமலை (பேச்சு) 06:09, 5 திசம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 06:11, 5 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி. மேற்கோள்களை இணைத்துவிட்டேன். புதிய கட்டுரை எப்படி எழுதுவது என்று ஒரு காணொளி தயாரிப்பிற்காக ஆப்கான் பெண் கட்டுரையை பயன்படுத்தினேன். ரெம்பவும் குழப்ப வேண்டாமே என்றுதான் விட்டுவிட்டேன். அந்தக் படம் இங்கே . உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 23:34, 7 திசம்பர் 2013 (UTC)Reply

உதவி

தொகு
குறுங்கட்டுரை தொடர்பான உங்களின் கருத்துகளைப் புரிந்து கொண்டேன். வரும் காலங்களில் அவ்வாறே எழுதுகிறேன். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 11:32, 8 திசம்பர் 2013 (UTC)Reply
உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. யூடியூபில் பதிவேற்றியதும் காணொளியின் தரம் மங்கி விடுகிறது. என்ன காரணம் எனத் தெரியவில்லை. தொழில் நுட்ப உதவி வேண்டி ஏற்கனவே ரவி அவர்களிடம் கேட்டிருக்கிறேன். இது வரை மூன்று காணொளிகளை உருவாக்கியுள்ளேன். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 13:03, 8 திசம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:05, 8 திசம்பர் 2013 (UTC)Reply

சந்தேகம்

தொகு

ஒரு கட்டுரையில் எதை வைத்து கால அவகாச நீக்கல் வார்ப்புரு இடுவார்கள்? --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:56, 12 திசம்பர் 2013 (UTC)Reply

பழைய கணக்கு

தொகு

உங்கள் பழைய கணக்கு எரித தானியங்கி என முடக்கப்பட்டுள்ளது. பார்க்க--சண்முகம்ப7 (பேச்சு) 12:09, 22 திசம்பர் 2013 (UTC)Reply

இப்போது நீங்கள் பழைய கணக்கையே பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 12:25, 22 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி சண்முகம். பழைய கணக்கைப் பயன்படுத்த ஆரம்பித்தால் இப்பொழுதுள்ள கணக்கு என்னாகும்? அதை என்ன செய்ய வேண்டும்? என்ற விவரத்தைக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:03, 22 திசம்பர் 2013 (UTC)Reply

இந்த கணக்கு அப்படியேதான் இருக்கும். இதனை எதுவும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு விருப்பமான கணக்கினை பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 14:16, 22 திசம்பர் 2013 (UTC)Reply

தங்கள் உதவிக்கு நன்றி--Booradleyp1 (பேச்சு) 14:28, 22 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

புரிந்து கொண்டேன். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 11:51, 23 திசம்பர் 2013 (UTC)Reply

ஐயம்

தொகு

நீங்கள் பொராட்லீயா? போராடு லீயா? இல்லை இரண்டுமேவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:41, 23 திசம்பர் 2013 (UTC)Reply

நான் பூரட்லீ யைப் பரிந்துரைக்கிறேன் :) :)--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:52, 23 திசம்பர் 2013 (UTC)Reply
நானும் வழிமொழிகிறேன். -தமிழ்க்குரிசில்

டெய்லர் தொடர்

தொகு

வணக்கம் . டெய்லர் தொடரில் , நான் செய்த தொகுப்பை ஏன் மீளமை செய்தீர்கள் ? Red linksஐ தானே தூக்கி விட்டேன் . அது தவறா ? --Commons sibi (பேச்சு) 14:00, 25 திசம்பர் 2013 (UTC)Reply

சிபி, ஒரே சமயத்தில் நானும் தொகுத்ததால் முரண்பாடுகள் வந்ததால் இது நிகழ்ந்திருக்கிறது. நான் வேண்டுமென்று செய்யவில்லை. மீண்டும் உங்கள் திருத்தத்தைச் செய்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:21, 25 திசம்பர் 2013 (UTC)Reply

கண்டிப்பாக . நான் எதோ தவறு செய்து விட்டேனோ என்று பயந்துவிட்டேன் :) நன்றி--Commons sibi (பேச்சு) 14:23, 25 திசம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:26, 25 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி....!

தொகு

வணக்கம்! பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகளை சீர்செய்து அனைவருக்கும் உதவி செய்வதோடு, வழிகாட்டவும் செய்யும் உங்களின் பணியானது மிகவும் போற்றுதலுக்குரியது. விக்கி குமுகாயத்தின் சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:37, 25 திசம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:44, 25 திசம்பர் 2013 (UTC)Reply


  நன்றி
--Booradleyp1 (பேச்சு) 16:02, 25 திசம்பர் 2013 (UTC)Reply


சந்தேகம்

தொகு

அகில் பாரத் நேபாள் எக்டா சமாஜ் கட்டுரையில் கடைசியாக நீங்கள் சேர்த்த திருத்தம் புரியவில்லை. நீங்கள் அறிவித்தார் என்ற வார்த்தையை இணைத்த பின் அந்த வாக்கியம் பின்வருமாறு உள்ளது.//இந்த அமைப்பின் செயல் உறுப்பினரான ஜெனார்த்தன் தாப்பா ( Janardhan Thapa, central committee)கூறியுள்ளார்.[1] அறிவித்தார்.// எனவே கூறியுள்ளார் என்பதை நீங்கிவிடுகிறேன். நன்றி :) --ஆர்.பாலா (பேச்சு) 06:23, 28 திசம்பர் 2013 (UTC)Reply

மன்னிக்கவும். \\கூறியுள்ளார்\\ என்பதைக் கவனிக்காமல் திருத்தி விட்டேன்.--Booradleyp1 (பேச்சு) 13:37, 31 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

கடந்த நான்கு மாதங்களுக்கான (செப்டம்பர் முதல் டிசம்பர் வரை) இலக்காக 350 கட்டுரைகள் வைத்திருந்தேன். அவற்றை எழுதி முடித்ததும் மனதில் ஏற்பட்ட சந்தோஷம் அளவிலாதது. இடையில் 22 நாட்கள் இணையத்தோடு தொடர்பில்லாமல் வேறு இருந்தேன். எனது பெரும்பான்மையான கட்டுரைகளை மெய்ப்பு நோக்கியவர் தாங்களே. எனவே எனது மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். மிக்க நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 16:02, 2 சனவரி 2014 (UTC)Reply

நிர்ணயம் செய்த இலக்கை அடைந்த உங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மன நிறைவாக உள்ளது. தமிழ் விக்கியில் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் பாலா. --Booradleyp1 (பேச்சு) 16:08, 2 சனவரி 2014 (UTC)Reply

@பாலா: உங்களுடையது மட்டுமல்ல! புதுக்கட்டுரைகள் அனைத்திலும், அம்மையாரின் பங்கு இருக்கும். :) ஏதோ ஒரு ஊரில் இருந்து உங்களுக்கு பிடித்த நூலைப் பற்றி எழுதுவீர்கள். அடுத்த பத்து நிமிடத்திற்குள் அம்மையார் அந்த படத்தை பதிவேற்றியிருப்பார். அவ்வளவு வேகம். தமிழகத்தில் உள்ள சிற்றூர் பற்றி எழுதுவோம். எங்கிருந்து தகவலை எடுப்பார் என்றே தெரியாது. மூன்றாயிரம் பைட்டுகள் அளவில் தகவல் இருக்கும். இவருடைய test என்ற பக்கமே இவரது ஆய்வுக் கூடம். இங்கிருந்தே தமிழ் விக்கிக்கு பல அரிய கணித கட்டுரைகள் உருவாகின்றன. உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:37, 2 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:38, 2 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம் தமிழ்க்குரிசில் கூறியவை அனைத்தும் உண்மையே:).--நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:59, 3 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 3 சனவரி 2014 (UTC)Reply

உதவி

தொகு

யுவான் அரசமரபு கட்டுரையை சரி பாருங்கள், நிறைய ஒற்றுப் பிழைகள் (அ) எழுத்துப் பிழைக்களை செய்திருப்பேன். --குறும்பன் (பேச்சு) 23:03, 3 சனவரி 2014 (UTC)Reply

விளக்கம்

தொகு

Kabul-backed என்பது தற்போது அமெரிக்காவைக் குறிக்கும். ஆனால் சோவியத் காலகட்டத்தில் இது சோவியத் யூனியனைக் குறித்தது. நாளை இந்தியா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தால் Kabul-backed என்பது இந்தியாவைக் குறிக்கும்.--ஆர்.பாலா (பேச்சு) 18:03, 4 சனவரி 2014 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:16, 5 சனவரி 2014 (UTC)Reply

அன்புச் சகோதரி! சாலுவன் குப்பம் என்றே பெயர் பலகை, மற்றும் ஊராட்சி மன்ற பெயர்பலகை ஆகியன உள்ளன. பெயர்பலகையை நிழற்படம் எடுத்தேன் எனது கைபேசியில் இருந்தது தவறுதலாக அழிந்து விட்டது. மீண்டும் படம் எடுத்து பதிவேற்றுகிறேன். நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 08:16, 11 சனவரி 2014 (UTC)Reply

மன்னிக்கவும். தவியில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் சாளுவன்குப்பம் என்றே உள்ளன. ஒரேமாதிரி இருக்கட்டும் என்றுதான் மாற்றினேன். சாலுவன் குப்பம் என்பது சரியானால் அப்படியே இருக்கட்டும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:06, 11 சனவரி 2014 (UTC)Reply

சகோதரி! தவறு ஒன்றுமில்லை தவியில் உள்ள கட்டுரைகள் அனைத்திலும் சாலுவன் குப்பம் என்றே மாற்ற வேண்டும் வருவாய்த்துறை ஆவணங்களை த.உ.சட்டவழியாக கோரியுள்ளேன். கிடைத்த பிறகு மாற்றிக்கொள்ளலாமா?--Yokishivam (பேச்சு) 15:10, 11 சனவரி 2014 (UTC)Reply

அவ்வாறே செய்யலாம். மாற்றும் முன்பு அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கத்தில் இவ்விஷயத்தை (சான்றோடு) தெரிவித்தால் மற்ற பயனர்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:17, 11 சனவரி 2014 (UTC)Reply

கருத்துக்கு நன்றி--Yokishivam (பேச்சு) 16:46, 11 சனவரி 2014 (UTC)Reply

பார்க்க முடியமா?

தொகு

சகோதரிக்கு வணக்கம்! கொங்கு தேச அரசர்கள் பாருங்கள் நன்றி--Yokishivam (பேச்சு) 17:16, 11 சனவரி 2014 (UTC)Reply

ஜென்டில் மேன்

தொகு

ஜென்டில்மேன் (திரைப்படம்) எனும் கட்டுரையில் எனது மாற்றங்களை செய்துவிட்டேன்.ஆதலால் ஜென்டில்மேன் கட்டுரை நீக்கிவிடிமாறு கேட்டுக்கொள்கிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:01, 12 சனவரி 2014 (UTC)Reply

Return to the user page of "Booradleyp1/தொகுப்பு03".