2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை

2007 சீனாவின் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை (2007 Chinese anti-satellite missile test) ஜனவரி மாதம் 11 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு சீனாவால் நடத்தப்பட்டது. சீனாவின் காலநிலை அறியும் செயற்கைக்கோளான (Chinese weather satellite) எஃப் ஒய்-1சி (FY-1C) எனும் பெங்குயின் (Fengyun) வகைச் செயற்கைக்கோள் சீனாவால் ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டது. இச்செயற்கைக் கோளானது பூமியிலிருந்து 537 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்தது. இதன் எடை 750 கிலோகிராம்கள் ஆகும்.

தகர்ப்பு ஏவுகணை தொகு

செயற்கைக் கோளைத் தகர்த்த ஏவுகணை (kinetic kill vehicle) வினாடிக்கு 8 கிலோமீட்டர்கள் எனும் வேகத்தில் சென்று தாக்கியது.இந்த ஏவுகணை சீனாவின் சிசாய் ஏவுதளத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பல்லடுக்கு திட எரிபொருள் ஏவுகணை ஆகும்.

அறிவிப்பு தொகு

ஏவியேசன் வீக் & இசுபேச் டெக்னாலசி இதழ் (Aviation Week & Space Technology magazine) இச்சோதனையைப் பற்றிய முதல் செய்தியை வெளியிட்டது. பின்னர் சனவரி மாதம் 18 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்பு சபை இச்சோதனையை உறுதி செய்தது.[1] முதலில் சீன அரசு இச்சோதனை தொடர்பாக வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. பின்னர் சனவரி மாதம் 23 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு சீன வெளியுறவுத் துறை அமைச்சு இச்சோதனை நடத்தப்பட்டதை உறுதி செய்தது.[2] மேலும் இச்சோதனையைப் பற்றி சப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு முன்னரே தகவல் தெரிவித்ததாகவும் அறிவித்தது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. BBC News (2007). Concern over China's missile test. Retrieved சன. 20, 2007. பரணிடப்பட்டது 2011-05-12 at the வந்தவழி இயந்திரம்
  2. "China admits satellite shot down". BBC News. January 23, 2007 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 22, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5whIR4xbG?url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6289519.stm. பார்த்த நாள்: சன. 23, 2007. 
  3. "China confirms anti-satellite missile test". The Guardian (London). January 23, 2007 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 22, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5whIRy74c?url=http://www.guardian.co.uk/china/story/0,,1996689,00.html. பார்த்த நாள்: சன. 23, 2007.