விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)
2-நாள் பயிலரங்கு ஒன்றினை தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.
தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்க முறையில், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியுடன் இணைந்து இப்பயிலரங்கு நடத்தப்படும்.
நோக்கம்
- புதிய பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி, பங்களிப்பதற்கான பயிற்சியளித்தல்.
- உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, புதிய பயனர்களின் வாயிலாக கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளைச் செய்தல்.
திட்டத்திற்கான மூலம்: விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023
கவனக்குவியம்
- கலைக்களஞ்சியம் குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்துதல்.
- மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் குறைந்தது ஒரு மேற்கோளாவது சேர்த்தல்.
- கட்டுரைகளில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல்.
நிகழ்வு குறித்த விவரங்கள்
- நாட்கள்: மார்ச்சு 1, மார்ச்சு 2; 2024
- நேரம்: காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை
- நிகழ்விடம்: சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி - 627 011, தமிழ்நாடு
- பயிற்சி பெற்றோர்:
- கல்லூரிப் பேராசிரியர்கள் - 65
- ஆய்வு மாணவர்கள் - 18
- பயிற்சி தந்தோரின் எண்ணிக்கை: 8
பயிற்சியாளர்கள்
ஏற்பாடுகள்
- கற்பித்தல் உள்ளடக்கங்களைத் தயாரிப்பது, நேரடியாகப் பயிற்சியளித்தல் ஆகிய பொறுப்புகளை தமிழ் விக்கிப்பீடியா குமுகாயம் எடுத்துக்கொண்டது.
- நடத்துவதற்குத் தேவைப்படும் நிதியை சி.ஐ.எஸ் தந்தது.
- வகுப்பு நடத்துவதற்கான இடம், இணைய இணைப்புடன் இருக்கும் கணினி வகுப்பறை ஆகியவற்றை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நிர்வாகம் தந்தது. பங்கேற்கும் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பினை அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் எடுத்துக்கொண்டார்.
பயிலரங்கத்திற்குப் பிறகான செயல்பாடுகள்
- பயிலரங்கம் முடிந்த பிறகு, அடுத்த 4 வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் இணையவழி கூட்டமொன்று நடத்தப்படும். கலந்துகொள்ளும் பயனர்களுக்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்பட்டு, அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.
- அதற்கடுத்த 5 மாதங்களுக்கு மாதமொருமுறை இணையவழி கூட்டம் நடத்தப்படும். கலந்துகொள்ளும் பயனர்களுக்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்பட்டு, அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக தொடரச் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.
- மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கழித்து, இப்பயிலரங்கில் பங்குகொண்ட ஆசிரியர்களை மீண்டும் வரவழைத்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்யலாம். இதே கல்லூரியில் ஒருநாள் கூடல் நிகழ்வினை நடத்தலாம். பயிலரங்கிற்குப் பிறகான நிலவரங்களின் அடிப்படையில் மேற்கொண்டு திட்டமிடப்படும்.