Sree1959
Joined 14 சனவரி 2015
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன்
விக்கிப்பீடியா:பாபேல் | ||||
---|---|---|---|---|
| ||||
பகுப்பு:விக்கிப்பீடியர்கள் |
எனது பயனர் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். எனது பெயர் ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன். நான் சென்னையில் வசிப்பவன். பொதுக் காப்பீட்டுத் துறையில் இந்தியாவிலும் (தமிழ்நாட்டின் சேலம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை), ஐக்கிய அரபு அமீரகத்திலும் (துபாய்) ஏறக்குறைய முப்பத்தாறு ஆண்டுகள் பணிபுரிந்து, தற்போது தொழிலில் ஓய்வில் இருக்கிறேன். நான் 2010 முதல் விக்கிபீடியாவுடன் இணைந்திருந்தாலும், சமீப காலம் வரை எனது பங்களிப்புகள் குறைவாகவே இருந்தது. 2023 செப்டம்பர் 24 அன்று தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் 20-வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை மீண்டும் தூண்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சக விக்கிப்பீடியர்கள் மிகவும் உதவிகரமாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு குறுக்கே எவ்வித தடைகள் இருப்பினும் அவற்றை அப்புறப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்பவர்கள் என்பதை அவர்களது உறுதியான மனப்பான்மை தெளிவுபடுத்துகிறது. தஞ்சாவூர் நிகழ்வின் போது நான் தொடர்பு கொண்ட பெரும்பாலோரிடத்தில் இந்த மனப்பான்மையே பிரதிபலிக்கிறது. இந்த நேர்மறை மனப்பான்மை, சமூகத்திற்கு தங்களால் இயன்ற அளவு பங்களிக்க வேண்டும் என்ற வலுவான தூண்டுதலின் விளைவாக இருக்கக்கூடும்.
விக்கிப்பீடியா, பொதுமக்களின் பங்களிப்பை ஆதாரமாகக்கொண்டு மாபெரும் தகவல் களஞ்சியத்தை அமைக்கும் நோக்கத்தின் மூலம், கல்வியை ஊக்குவித்து, அறிவைப் பரப்பிவருவது மனித குலத்திற்கு ஒரு உன்னதமான சேவை. இந்தப் பெருமை ஒவ்வொரு விக்கிப்பீடியரின் முகத்திலும் ஒளிர்வதைக் காணலாம்.
எனது பார்வையில், விக்கிப்பீடியா பொதுமக்களுக்கு பயன்படும் ஒரு அறிவுப் பொக்கிஷம். ஏராளமான தகவல்கள் அளிக்கக்கூடிய ஒரு திறந்த மூல களஞ்சியத்தை கட்டியமைப்பது சாதாரண சாதனையன்று. இதன் கருத்து, அறிவை பற்றிய ஒரு வடநாட்டு பழமொழியை[1] எனக்கு நினைவூட்டுகிறது. அதை இங்கே பதிவு செய்கிறேன்.
न चोरहार्यं न च राजहार्यं ।
न भ्रातृभाज्यं न च भारकारि ।
व्यये कृते वर्धते नित्यम् ।
विद्यधनम् सर्वे धनात् प्रधानम् ।।
பொருள்: கல்வி தான் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம். அதை யாராலும் திருட முடியாது, எந்த அரசனும் கைப்பற்ற முடியாது. இது சகோதரர்களிடையே விநியோகிக்கப்படவில்லை, பளுவாகவும் இல்லை. அது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அதை பகிரும்போது, அது விரிவடைகிறது!

குறிப்பு
தொகு- ↑ சர்மா, காசிநாத் (1880). சுபாஷித் ரத்தின பாண்டகரம். நிர்ணய் சாகர் பிரஸ்.
யாத்திரை
தொகுநான் உலகம் முழுவதும் பயணம் செய்வதை விரும்புகிறேன். மேலும், எனது சொந்த நாடான இந்தியாவிற்கு வெளியே ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமே வசித்துள்ளேன். நான் பின்வரும் நாடுகளுக்குச் சென்றுள்ளேன்.
பகுப்பு:பயனர் ta-N பகுப்பு:பயனர் en-5 பகுப்பு:பயனர் ml பகுப்பு:பயனர் hi பகுப்பு:பயனர் sa பகுப்பு:பயனர் te-1