அயிரி ஆறு
அயிரி ஆறு மைசூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. அயிரியாறு இக்காலத்தில் அரங்கி ஆறு என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இதனை இரண்டு சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. வடுகர் பெருமகன் ஆண்ட எருமை நன்னாட்டில் அயிரி ஆறு உள்ளது. [1] காட்டுமயில் பாகற்காயைத் தின்றுவிட்டு அயிரி ஆற்றங்கரையில் இருந்துகொண்டு வயிர் என்னும் யாழ் ஓசை போல் நரலுமாம். இந்த ஆற்றைத் தாண்டித் தமிழர் பொருளீட்டச் செல்வார்களாம். [2]