எருமையூரன்

எருமை நன்னாட்டை இப்போது மைசூர் என்கிறோம். மகிஷம் என்பது எருமையைக் குறிக்கும் வடசொல். மகிஷ ஊர் மைசூர் ஆயிற்று.

சங்ககாலப் புலவர் நக்கீரர் இவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். எருமையூரன் என்ற பெயர் பெற்ற அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டியர் மன்னனை எதிர்த்து தோல்வி அடைந்தவன். [1] புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் வாழ்ந்த எருக்காட்டூர் எருமையூரனின் ஊர் ஆகலாம். எருமையூர் அரசன் எருமையூரன். இந்த ஊர் கள் இறக்குவதில் சிறப்புற்று விளங்கியது என்பதை இந்த ஊருக்குத் தரப்பட்டுள்ள அடைமொழியால் அறியலாம்.

அயிரி ஆறு பாய்ந்த எருமை நன்னாட்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை.

மேற்கோள் தொகு

 1. கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
  ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
  சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
  போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
  நார் அரி நறவின் எருமையூரன்,
  தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
  இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
  எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
  முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
  கொன்று, களம்வேட்ட ஞான்றை, - அகநானூறு 36
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமையூரன்&oldid=2566226" இலிருந்து மீள்விக்கப்பட்டது