ஹாரங்கி ஆறு

ஹாரங்கி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். சங்கப்பாடல்கள் அயிரி ஆறு எனக் கூறுவது இது எனக் கொள்ளத் தக்கது. இது 50 கிமீ நீளமுடையது. குடகு மாவட்டத்திலுள்ள புஷ்பகிரி மலையில் உற்பத்தியாகும் ஹாரங்கி குசால்நகர் அருகே காவிரியுடன் கலக்கிறது. இதன் நீர்பிடிப்பு பகுதி 717 சதுர கிமீ ஆகும். ஹாரங்கி அணையானது இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது குசால்நகர் - மடிக்கேரி சாலையிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரங்கி_ஆறு&oldid=2464496" இருந்து மீள்விக்கப்பட்டது