காயா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Myrtales
குடும்பம்: Melastomataceae
பேரினம்: Memecylon
இனம்: M. umbellatum
இருசொற் பெயரீடு
Memecylon umbellatum
Burm.f.

காயா (Memecylon umbellatum) காய்ப்பது இல்லை. எனவே இதனைக் 'காயா' என்றனர். இம்மரம் இலங்கையில் காயான் என அழைக்கப்படும். இது அநேகமாக கத்தி கைபிடி, கோடரி கைபிடி, விறகிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

திருமால் தெய்வத்தை 'காயாம்பூ மேனியன் என்பர். மை நிறம் கொண்ட இந்தத் தெய்வத்தைத் தொல்காப்பியம் 'மாயோன்' எனக் குறிப்பிடுகிறது. மாயோனைத் தெய்வமாகக் கொண்ட முல்லை நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று காயா-மலர்.

சங்க இலக்கியங்களில் காயா தொகு

காயா என்னும் மலர் சங்க இலக்கியங்களில் இவ்வாறு பயின்று வருகிறது. அவற்றில் அது விளக்கப்படும் பாங்கினை இங்குக் காணலாம்.

முல்லை-நிலத்தில் மணி என்னும் நீல-நிறத்தில் பூக்கும்.[1]
மயில் கூட்டம் போல் பூத்துக் கிடக்கும்.[2]
செறிவான இலைகளை உடையது. மகளிர் நெற்றியில் கைக்கும் பொட்டுப்போல் பூத்துக் கிடக்கும்.[3]
மகளிர் பறித்து விளையாடித் தழையாடையில் இணைத்துப் பயன்படுத்துவர்.[4]
சிறுசிறு பூக்களாக இருக்கும்.[5]
முல்லை-நிலத்தில் பூக்கும்.[6]
தேன் கொண்டது.[7]
மென்மையானவை.[8]
மணியைப் போன்ற காயா பவள நிற முல்லை நிலத்தில் உதிர்ந்து கிடக்கும்.[9]

மேலும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள் குறிப்புகள் தொகு

  1. பொன் கொன்றை மணி காயா/நன் புறவின் நடை முனையின் - பொரு 201,202
  2. கரு நனை காயா கண மயில் அவிழவும் - சிறு 165
  3. செறி இலை காயா அஞ்சனம் மலர - முல் 93
  4. பசும்பிடி வகுளம் பல் இணர் காயா/விரி மலர் ஆவிரை வேரல் சூரல் - குறி 70,71
  5. புல்லென் காயா பூ கெழு பெரும் சினை - குறு 183/5
  6. காயா கொன்றை நெய்தல் முல்லை - ஐங் 412/1
  7. தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு - ஐங் 420/2
  8. காயா மென் சினை தோய நீடி - அகம் 108/14
  9. மணி மண்டு பவளம் போல காயா/அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய - அகம் 374/13,14

10. கருவிளை யொண்மலர்காள்  காயா மலர்காள்  திருமால் உருவொளி  காட்டுகின்றீர்  -நாச்சியார்  திருமொழி-9/10

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயா&oldid=3296264" இலிருந்து மீள்விக்கப்பட்டது