பயனர் பேச்சு:Sengai Podhuvan/தொகுப்பு 5

Add discussion
Active discussions

ஈச்சுரநிச்சயம்தொகு

ஈச்சுரநிச்சயம் என்ற நூலை சென்னைப்பேரகரமுதலியில்(Tamil Lexicon of Madras University) மேற்கோள்நூலாகப் பயன்படுத்தியுள்ளனர். அதுபற்றிய குறிப்புகளைத் தேடிபார்த்தேன். சரிவர கிடைக்கவில்லை. அதுபற்றி தெரிந்தால், அக்கட்டுரையை உருவாக்கக் கோருகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 09:53, 10 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரையை நற்கீரன் தத்துவ விவேசினி கட்டுரையில் எழுதியுள்ளார். அவரைக் கேளுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 11:13, 10 செப்டம்பர் 2013 (UTC)
தங்களது குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா! வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 17:23, 10 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்புதொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:59, 18 செப்டம்பர் 2013 (UTC)

செங்கைச் செல்விக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். நீங்களும் இருவருமாகவே கலந்து கொள்ளலாம்.--இரவி (பேச்சு) 20:21, 18 செப்டம்பர் 2013 (UTC)

தங்களைப் பற்றிய குறிப்புகள் தேவைதொகு

தமிழ் விக்கிப்பீடியா தொடர்புடைய கட்டுரை ஒன்றைத் தமிழ்நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் வெளியிடுவதற்காகத் தங்களைப் பற்றிய குறிப்புகளுடன் தங்கள் புகைப்படம் ஒன்றும் என்னுடைய msmuthukamalam@gmail.com msmuthukamalam@yahoo.co.in மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:07, 22 செப்டம்பர் 2013 (UTC)

விரைவில் அனுப்புகிறேன். நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 05:39, 22 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்....தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:37, 27 செப்டம்பர் 2013 (UTC)

உயர்ந்த உள்ளங்கள் ஊக்கம் தருகின்றன.
நன்றி.
விரைவில் குறிப்பிடுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 05:48, 27 செப்டம்பர் 2013 (UTC)

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவைதொகு

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)

ஈசல் பிடித்தல்தொகு

பொதுவன், ஈசல் பிடித்தல் கட்டுரையை நானும் குமாரும் சேர்ந்து சிறிது விக்கியாக்கியுள்ளோம். பார்க்கவும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:17, 2 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் பக்கத்தைப் பாருங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 11:25, 2 அக்டோபர் 2013 (UTC)

தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவைதொகு

வணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:37, 4 அக்டோபர் 2013 (UTC)

தொகுப்போம்--Sengai Podhuvan (பேச்சு) 19:43, 4 அக்டோபர் 2013 (UTC)

உதவி தேவைதொகு

வணக்கம் ஐயா, எனக்கு இக்குறிப்பு எந்த நூலுடையது எனப்தை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது. நூலின் பெயர் தெரியாததால், இதனை விக்கிமூலத்தில் சேர்க்க இயலவில்லை. உதவவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:18, 7 அக்டோபர் 2013 (UTC)

அன்புள்ள தினேசு, தங்களின் பன்மொழிப் புலமை விக்கிப்பீடியாவுக்குப் பெருமை சேர்க்கும்.
பதிவேற்றப்பட்டுள்ள பாடல்கள் வரலாறு அறியாத புலவர் ஒருவரால் பல புலவர்கள் பெயரில் எழுதப்பட்டுச் சேர்க்கப்பட்டவை.
திருவள்ளுவ மாலை போன்றதோர் போலித் தொகுப்பு.
வள்ளுவரைப் பற்றிய கட்டுக்கதை என்னும் குறிப்போடு இதனை இணைக்கலாம்.
தாங்கள் எந்த நூலைப் பார்த்து எழுதினீர்களோ அந்த நூலையே கருவிநூலாகக் குறிப்பிடலாம். ஒருவேளை 'தமிழ் நாவலர் சரிதை' என்னும் நூலில் இருக்கக்கூடும். பார்த்ததில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 17:53, 7 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம் ஐயா, தங்களுடைய விரிவான விளக்கத்திற்கு நன்றி. இப்பாடல்கள் கபிலரகவல் நூலோடு இணைந்து இருந்தது. இணையத்தில் தேடிய பொழுது ஜெயபாரதி என்பவரின் அகத்தியர் குழுமத்தில் இப்பாடல்களில் ஒன்று பற்றி உரையாடப்பட்டுள்ளது, அவர்களிடமும் தகவல் கேட்டுள்ளேன். தமிழ் நாவலர் சரிதை நூலை படித்ததில்லை. இப்பாடல்கள் இறைவனைப்பற்றி உள்ளதால் வேறு தலைப்பில் இணைக்கலாம் என்று எண்ணுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:11, 8 அக்டோபர் 2013 (UTC)
எழுத்துப்பிழைகள் மிகுதியாக உள்ளன. மூலத்தைத் திரும்பவும் பாருங்கள். திருத்திப் பின்னர் வெளியிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 10:19, 8 அக்டோபர் 2013 (UTC)
பிழைகளைத் திருத்தும் பணியைத் துவங்கிவிட்டேன். :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:12, 10 அக்டோபர் 2013 (UTC)
மகிழ்ச்சி --Sengai Podhuvan (பேச்சு) 10:01, 10 அக்டோபர் 2013 (UTC)

உங்களைச் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி!தொகு

 • ஐயா பெருநன்றியன். உங்களை நேரில் பார்த்து இரண்டுநாள்கள் அளவளாவும் நற்பேறு பெற்றேன். உங்கள் ஊக்கமும் உணர்ச்சியும், உழைப்பும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றது. சிவண்-சிவணுதல் பற்றிய கருத்துகளுக்கு மிக்க நன்றி. --செல்வா (பேச்சு) 05:10, 12 அக்டோபர் 2013 (UTC)
உயர்ந்த உள்ளங்களால் ஊக்கம் பெறுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 06:05, 12 அக்டோபர் 2013 (UTC)

பிரித்தானிய அருங்காட்சியக நூலகத்தில் உள்ள தமிழ் நூற்களின் நூற்பட்டியல் (ஆங்கில நூல்)தொகு

--Natkeeran (பேச்சு) 01:08, 22 அக்டோபர் 2013 (UTC)

நன்றியுரைத்தல்தொகு

  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:59, 15 அக்டோபர் 2013 (UTC)
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:02, 16 அக்டோபர் 2013 (UTC)

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)

 --நந்தகுமார் (பேச்சு) 08:29, 16 அக்டோபர் 2013 (UTC)

வல்லவர்களாகிய நீங்கள் அனைவரும் அரவணைப்பில் நல்லவர்களாகவும் திகழ வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:45, 16 அக்டோபர் 2013 (UTC)

கருத்துவேண்டல்தொகு

ஐயா! தமிழ்விக்சனரி பக்கத்தில், உங்கள் மேலான விளக்கத்தைத் தருக.வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:16, 2 ஆகத்து 2013 (UTC)

தொட்டில் பற்றிய இலக்கியக் குறிப்புகள்தொகு

ஐயா, தொட்டில் பற்றிய இலக்கியக் குறிப்புகள் உங்களிடம் இருந்தால் சேர்க்க வேண்டுகிறேன். நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:52, 1 சூலை 2013 (UTC)

 • சேர்த்துள்ளேன. வாய்ப்புக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 23:46, 2 சூலை 2013 (UTC)
நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள தகவல். -- சுந்தர் \பேச்சு 03:10, 3 சூலை 2013 (UTC)

உங்கள் ஆக்கத்தில் முகநூல் பகிர்வுதொகு

இலக்கிய வலைவாசல்தொகு

ஐயா!
Parvathisri/வலைவாசல்: இலக்கியம் தொடங்கியுள்ளேன். இப்பக்கத்தில் தங்களின் கருத்தை வேண்டுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:46, 27 ஏப்ரல் 2013 (UTC)

உதவிதொகு

ஐயா, தங்களின் உதவி இங்கு தேவைப்படுகின்றது. இந்த இராமதேவ சித்தரின் பாடலுக்கு காலம் எதுவாக இருக்கக் கூடும்?? உங்களின் கருத்து தேவை. --அராபத் (பேச்சு) 06:03, 4 சூன் 2013 (UTC)

தங்கள் பார்வைக்கு உருவாக்கப்பட வேண்டிய சைவக் கட்டுரைகள்தொகு

ஐயா, வணக்கம். தாங்கள் தமிழ் மொழியில் ஏகம் தமிழ்நூல்களை விக்கிப்பீடியாவிற்கு கொண்டுவந்தவர் என்று அனைவரும் அறிந்ததே. தங்களுடையப் பார்வைக்கு தேவையான கட்டுரைகள் எனும் பக்கத்தினை வைக்கிறேன். இதில் சைவத்தமிழ் நூல்கள் பல எழுதப்பட வேண்டியிருக்கிறது. தங்களுக்கு நேரமிருக்கும் பொழுது உருவாக்கி தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:25, 31 மே 2013 (UTC)

 • எனது இலக்கு நூல்களைத் தரும்போது உங்கள் எண்ணத்ததை நிறைவேற்றுவதும் என் கடமை. --Sengai Podhuvan (பேச்சு) 12:30, 31 மே 2013 (UTC)

அனுமதி தாருங்கள் ஐயாதொகு

வணக்கம் ஐயா அவர்களே. தற்போது தனி ஊசல் கட்டுரைக்கு ஊசல் விதி என்று பெயர் மாற்றித் தரப்பட்டுள்ளது ஐயா . ஆனால் 'ஊசலின் விதிகள்' இக்கட்டுரையின் கீழ் வரக்கூடிய ஒரு துணைத் தலைப்பு மட்டுமே ஆகும். இக்கட்டுரையில் 'ஊசல்' பற்றிய பொதுவான கருத்துக்கள், அதன் கண்டுபிடிப்பு, பயன்பாடு, விசையியல் விளக்கம், விதிகள் ஆகியவை தரப்பட்டுள்ளன ஐயா. 'Simple pendulum' என்பதன் தமிழ்ச் சொல்லாக எளிய ஊசல் அல்லது தனி ஊசல் என்பவை பொருந்துவதால் இவற்றுள் ஏதேனும் ஒன்றினைத் தலைப்பாகத் தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறேன். எனவே தலைப்பை மாற்றம் செய்யத் தாங்கள் அனுமதி நல்குமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் ஐயா. நன்றி! --Praveenskpillai (பேச்சு) 23 சூன் 2013 (UTC)

 • முன் உள்ள செய்திகள் ஊசல் விதிகளைப் புரிந்துகொள்வதற்கான முன்னுரை. எண்ணிப் பாருங்கள். பொருந்தவில்லை என்றால் 'தனி ஊசல்' தலைப்புக்கே மாற்றிவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 17:18, 23 சூன் 2013 (UTC)
நன்றி ஐயா! --Praveenskpillai (பேச்சு) 24 சூன் 2013 (UTC)
விக்கிப்பீடியாவில் எழுதப்படும் ஒரு கட்டுரையில், கட்டுரைத் தலைப்பு பற்றி ஆரம்பத்தில் மிகச் சுருக்கமாக எழுத வேண்டும். பின்னரே அதனை விரிவு படுத்த வேண்டும். அதன்படி, இக்கட்டுரைக்கு தனி ஊசல், அல்லது ஊசல் என்பதே பொருத்தம்.--Kanags \உரையாடுக 21:10, 23 சூன் 2013 (UTC)
 • கட்டுரை அறிவியல் கட்டுரை. இதில் விதிக்கு முதன்மையா, ஊசலாடுவதற்கு முதன்மையா? கட்டுரையைப் பாருங்கள். முதல் பத்தி 'தனி ஊசல்' பற்றியது. இரண்டாவது பகுதி ஊசல் விதியைக் 'கண்டறிந்தவர்' பற்றியது. மூன்றாம் பகுதி 'விதி' பற்றியது. இந்தக் கட்டுரை ஊசல் (சங்க காலம்), ஊஞ்சல் விளையாட்டுகளை விட முதன்மை பெற வேண்டிய கட்டுரை எனவே இதன் தலைப்பு ஊசல் என அமைத்தல் சாலச் சிறந்தது. --Sengai Podhuvan (பேச்சு) 21:46, 23 சூன் 2013 (UTC)

சரபம் கட்டுரைகளை இணைக்க வேண்டுகோள்.தொகு

விக்கிப்பீடியாவில் நான்கு சரபம் கட்டுரைகள் காணப்பெறுகின்றன. இவைகளை இணைப்பது குறித்து விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கத்தில் தென்காசியாரால் விளக்கப்பெற்றுள்ளது. தாங்கள் மனமுவந்து இச்செயலை செய்ய வேண்டுகிறேன். நன்றி., --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:26, 27 மே 2013 (UTC)

மிக்க நன்றி...!தொகு

  சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும்... தமிழ்மீது உள்ள தீராத அன்பினால், இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

 • அம்மாவிற்கும் எமது நன்றிகளை தெரிவித்து விடுங்கள்!
 • த இந்து நாளிதழில் இன்று வெளியான கட்டுரை என்ன ஒரு பொருத்தமான நேரத்தில் வெளியாகியிருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:56, 26 மே 2013 (UTC)
  விருப்பம் தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:21, 26 மே 2013 (UTC)
 • நன்றி தெரிவித்த செல்வசிவகுருநாதன், மகிழச்சி காட்டிய தமிழ்க்குரிசில் ஆகியோருக்குக் கடப்பாடுடையேன் ஆவேன். --Sengai Podhuvan (பேச்சு) 22:41, 26 மே 2013 (UTC)
வாழ்த்துக்கள். பெருமிதத்துடனான வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:54, 27 மே 2013 (UTC)

போதுமான ஆதாரம் இல்லாத கட்டுரைகள்தொகு

1தொகு

வணக்கம். பேச்சு:நல்வழுதி பக்கத்தில், அவர் ஏன் புலவர் மட்டுமே அரசனாக இருந்ததற்கான போதிய ஆதாரம் இல்லை என்பதைக் குறிப்பிடுங்கள். அக்குறிப்பிட்ட கட்டுரையை எழுதிய பயனர்களின் பேச்சுப் பக்கங்களில், இவ்வுரையாடலைக் கவனிக்குமாறு வேண்டுங்கள். ஒரு வார காலம் பொறுத்திருந்து, மாற்றுக் கருத்துகள் இல்லையெனில், தகுந்த ஆதாரம் உள்ள தகவலை மட்டும் கட்டுரைப் பக்கத்தில் இடுங்கள். மாற்று நோக்குகளையும் மற்றவர் குறிப்பிடலாம். ஆனால், அதற்கு போதுமான ஆதாரம் இல்லை இன்னும் கிடைக்கவில்லை என்ற அறிவிப்பையும் சேர்த்து இடலாம். ஒரு ஆளுக்கு ஒரு கட்டுரை இருப்பதே பொருத்தம். எனவே, மாற்றுக் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் உரையாடித் தீர்க்க முனைவோம். விக்கிப்பீடியா ஆதாரங்களை முன்னிறுத்தியே செயல்படுகிறது. அதே வேளை, இது தொடர்ந்து முன்னேற்றப்படும் கூட்டுழைப்பு ஆக்கம் என்பதையும் கருத்தில் கொள்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 21:48, 23 மே 2013 (UTC)

 • ரவி அவர்களுக்கு நன்றி. தங்களின் வழி நல்ல வழி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:37, 23 மே 2013 (UTC)
2தொகு
இருவரும் ஒருவரா, அல்லது வெவ்வேறு நபர்களா என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. இத் துறையில் தேர்வு பெற்ற உங்களின் முடிவு பொருத்தமாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 00:17, 24 மே 2013 (UTC)--Natkeeran (பேச்சு) 00:17, 24 மே 2013 (UTC)
 • இருவரும் ஒருவரே. அரசன் என்பது கற்பனை. புலவர் என்பதற்கு அவரது பாடல்களே சான்று. கற்பனைக் கட்டுரையோடு வரலாற்றுக் கட்டுரையை இணைப்பது அடுக்காது. அரசன் என்பதைப் புலவர் எனக் காட்டி இணைக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 01:24, 24 மே 2013 (UTC)

மின்னஞ்சல்தொகு

ஐயா. தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:23, 23 மே 2013 (UTC)

சங்ககால வரலாற்றில் திருப்பம்தொகு

 
ஆகோள் கல்வெட்டு

ஐயா, புதுக்கோட்டை அருகில் ஆகோள் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுளது. அதன் படி கோ வெண்கட்டி என்று சங்க இலக்கியங்களில் கூறப்படும் அரச்னுக்குப்பிறகு ஆண்ட பொன் கொங்கர் விண்ணக்கோன் என்ற அரசனின் ஆட்சியில் ஆகொளின் போது இறந்த கானங்கி குமரன் என்ற அடவனாற்றுப் படை வீரனுக்காக எழுப்பப்பட்டது. இதன் மூலம் கோ வெண்கட்டி, பொன் கொங்கர் விண்ணக்கோன் போன்றவர்களின் காலத்தை நிறுவ இயலும். ஆனால் இதழ்களில் அந்த சங்கப்பாடல்கள் எது என்று தரப்படவில்லை. உங்களுக்கு இவ்வீரர்கள் பற்றி பாடல் ஏதும் தெரியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:53, 30 செப்டெம்பர் 2012 (UTC)

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். தமிழி எழுத்தில் உள்ள அரிய கல்வெட்டு. இதனைக் கல்வெட்டியலார் எவ்வாறு படிக்கிறார்கள் என்னும் விளக்கம் தெரிந்து ஆராயலாம். நானும் தொல்லியல் துறையைக் கலந்து செய்தி அறிய முயல்கிறேன். அவர்கள் தரும் செய்தியைக் கொண்டு பின்னர் தொடரலாம். கல்வெட்டைப் பதிவேற்றியதற்குப் பாராட்டுகள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:18, 30 செப்டெம்பர் 2012 (UTC)

ஆரஞ்சுப்பழம் கட்டுரைதொகு

வணக்கம் ஐயா, நீங்கள் ஆரம்பித்த ஆரஞ்சுப் பழம் கட்டுரை Orange (fruit) ஆங்கிலக் கட்டுரைக்கானது எனில், அதனை ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுத்து எழுதப்பட்டிருக்கும் தோடம்பழம் / தோடை கட்டுரையுடன் இணைக்கலாமா? --கலை (பேச்சு) 10:44, 13 மே 2013 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம் ஐயா!
தமிழிலக்கியம் குறித்து பிற மொழி அறிஞர்கள் (மொழியியலாளர்கள், இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள்...) தெரிவித்துள்ள கருத்துகள் குறைந்தது 7 தேவைப்படுகிறது. ஆதார மூலத்துடன் கிடைத்தால் இன்னமும் சிறப்பு! தங்களின் நினைவில் அம்மாதிரியான கருத்துகள் ஏதேனும் இருந்தால்...அந்த கருத்துகளை இங்கே இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை வலைவாசல்:தமிழிலக்கியம் எனும் பக்கத்தில் காட்சிப்படுத்த எண்ணம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 10 மே 2013 (UTC)

 • நல்ல பணி. தேடி உதவித் பெருமை சேர்த்தல் என் கடமை. --Sengai Podhuvan (பேச்சு) 19:46, 10 மே 2013 (UTC)

கயவாகு காலம்காட்டிதொகு

ஐயா. வணக்கம். நான் கயவாகு காலம்காட்டி என்னும் ஆய்வு முறைமை பற்றி கட்டுரை எழுதிக்கொண்டிருந்ததால் சங்ககாலச் சேரர் கட்டுரைகளில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது தான் இணைப்பு வார்ப்புரு இட்டது. மேலும் நான் இணைப்பு வார்ப்புரு இடும் கட்டுரை என் கவனிப்புப்பட்டியலில் இராது. அதனால் இது போன்ற குறிப்புகளை என் பேச்சுப்பக்கத்தில் இடுங்கள்.

முன்பு போல் என்னால் அதிக நேரம் விக்கியில் இருக்க இயலாது. அலுவலகத்திலேயே 14 மணி நேரங்களுக்கும் மேலாக இருக்க வேண்டியுள்ளது. அதனால் கவனக்குறைவுகளை பொறுக்கவும். மேலும் "Gajabahu Synchronism" என்பதற்கு இணையான வேறு நல்ல தமிழ் பெயரை பரிந்துரைக்க வேண்டுகிறேன். இப்போதுள்ள பெயர் எனக்கு சரியாக பொருந்துவது போல் தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:14, 14 மார்ச் 2013 (UTC)

 • அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம்.
 • கிட்டிய காலத்தில் எட்டியவரை ஆய்ந்து படிமத்துடன் கட்டுரையை உருவாக்கியுள்ளீர்கள்.
 • முதலில் சரியான கால இணைப்பு தந்துள்ள படிமத்துக்குப் பாராட்டு. படிமக் குறிப்பில் பிழை திருத்திநுள்ளேன். படிமத்திலும் திருத்திவிடுங்கள்.
 • கட்டுரைக்குக் கயவாகு தொடர்பு என்னும் தலைப்பு பொருத்தமானது.
 • வழுதியர் காலம் உருவாக்கும்போது வழுதி (பாண்டியர்) கட்டுரையைக் கருத்தில் கொள்ளுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 15:58, 14 மார்ச் 2013 (UTC)

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்புதொகு

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Sengai Podhuvan/தொகுப்பு 5!

 
தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

 • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

அரிய பல சைவத்தின் பக்கங்களை தினம் தினம் தமிழுலகிற்கு தந்து சைவம் வளர்க்கும் பெரியோர் தாங்கள், விக்கித்திட்டம் சைவத்திற்கு வந்து, அடியவர்களுக்கும் வழிகாட்ட வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:25, 6 மே 2013 (UTC)

நரசிங்கர், சரபர் குழப்பம்தொகு

தங்களுடைய சரபமூர்த்தி (இலக்கியக் குறிப்புகள்) எனும் கட்டுரையின் முதல் வரி சரபமூர்த்தி என்பது 25 சிவமார்த்தங்களில் நரசிங்கர் என்று கூறப்படும் உருவச்சிலை ஆகும் என்று உள்ளது. ஆனால் நரசிங்கர் (நரன்-மனிதன், சிங்கம்-விலங்கினம்) மனித உடலும், சிம்ம தலையும் உடைய உயிரினமாக தோன்றிய திருமால். அவருடைய அவதாரமே நரசிங்கர் என்பது, சிவன் நரசிங்கர் வதைத்தவர். இதை சற்று கவனத்தில் கொண்டு கட்டுரைகளை திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:01, 10 மே 2013 (UTC)

 • நன்றி நடராசன். பிழையைத் திருத்தம் செய்துள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:44, 10 மே 2013 (UTC)

உயிரளபெடைதொகு

 • உயிர்மெய் அடுத்த அகரம்

சில சங்க இலக்கியப் பாடல்களில் கொற்கைஅம், கழாஅர், புகாஅர் போன்று குறிப்பிட்டுள்ளனரே. இது எதனால்?

 1. இதைப் போல் உயிஎ எழுத்தை பிரித்து எழுதும் முறைக்கு என்ன பெயர்? (இலக்கணம்)
 2. மேலும் கொற்கைஅம் என்று வரும் பாடல்கள் காலத்தால் முந்தியவை என்றும் கொற்கையம் என்று வரும் பாடல்கள் காலத்தால் பிந்தியவை என எடுத்துக்கொள்ளலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:35, 29 ஏப்ரல் 2013 (UTC)
 • கொள்கை அம் பெருந்துறை - அளபெடை அன்று
 • உயிரளபெடை பாருங்கள்
 • அளபெடை ஒரு தமிழியல். காலத்துக்கு இங்கு இடமில்லை.

வினவியதற்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:25, 29 ஏப்ரல் 2013 (UTC)

மேற்கோள்கள் சேர்த்து உதவுங்கள்தொகு

ஐயா, திமில் கட்டுரையும் முன்துறை கட்டுரையையையும் பார்க்கவும். எனக்குத் தெரிந்த சங்க இலக்கியச் சான்றுகளை எல்லாம் சேர்த்து விட்டேன். உங்கள் கருத்துக்களும் தேவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:10, 19 ஏப்ரல் 2013 (UTC)

ஐயா நீங்கள் சேர்த்த திமிலர் பற்றிய உள்ளடக்கங்கள், திமில் கட்டுரையை விட திமிலர் கட்டுரையில் இருப்பதே சேர்ந்தது. வெட்டி ஒட்டிடுங்கள். தற்போதும் திமிலர் என்ற பிரிவினர் கிழக்கிலங்கையில் உண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 20 ஏப்ரல் 2013 (UTC)

இளையர் குடிதொகு

இளையர் (குடி) --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:22, 1 மே 2013 (UTC)

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம்.
தங்களின் பேருழைப்பை மதித்து, அரிய தொண்டை மனத்தில் கொண்டு கட்டுரையில் விரிவாக்கம் செய்துள்ளேன்.
This is much ado about nothing.
We beat about the bush.
இந்தக் கட்டுரையைப் பொருத்தமட்டில் வேலையற்ற வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:11, 1 மே 2013 (UTC)

ஆர்க்காட்டுச் சோழர்தொகு

வணக்கம். நான் ஆர்க்காட்டுச் சோழர் குறிப்பை எடுத்தது மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய நூலில் இருந்து தான். இந்நூல் அக்கட்டுரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

//1.அழிசி - ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[1] இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற செய்தியும் உள்ளது.[2] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும் அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[3] அதனாலேயே சோழ நாட்டு கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர். [4] அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம் எந்தனை இடத்தில் மேலே காணும் தவறான செய்தியைப் புகுத்திக் குழப்பப் போகிறீர்கள்? தமிழக வரலாறு சான்றில்லாக் கதைக் கந்தலாக மாற வேண்டுமா உங்களைப் போன்ற நல்லவர்கள கதைக் கந்தலைப் புகுத்தமாட்டீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. என்ன செய்யலாம் எனபதை நீங்களே முடிவு செய்யுங்கள அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:03, 1 மே 2013 (UTC)//

கட்டுரையில் ஏன் ஆதன் அழிசியை அழிசியாக கொண்டார் என சான்றோடு கொடுக்கப்பட்டுளதே. அதைக் குறிப்பது விக்கிப்பீடியாவை எவ்விதத்திலும் கெடுக்காது. மேலும் கட்டுரையை படிப்பவர் இந்த தகவலை தெரிந்து கொள்வதில் எத்தவறும் இல்லை. இரண்டும் ஒருவர் என்று கண்டிப்பாக நம்ப வேண்டும் என்று கொடுக்கப்படவும் இல்லை. இந்த காரணத்தால் இந்த ஆய்வாளர் இரு பெயர்களைக் கொண்டது ஒருவனே என்று கூறுவது பல நூல்களில் வழக்கில் இருக்கும் நடைமுறை தான்.

//தமிழக வரலாறு சான்றில்லாக் கதைக் கந்தலாக மாற வேண்டுமா//

ஒப்பு நோக்குக என்னும் உள்ளடக்கத்திலேயே 3 சான்றுகள் கொடுக்கப்பட்டிருந்த போது சான்றுகளே இல்லை எனக் கூறுவது தகாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:16, 2 மே 2013 (UTC)

மயிலை சீனி வேங்கடசாமியை இழிவுபடுத்தாதீர்கள்தொகு
 • மயிலை சீனி வேங்கடசாமி மிகச் சிறந்த வரலாற்று அறிஞர். தமிழ்நாடு அரசு எழுதிய வரலாற்றுக் குழுவில் டாக்டர் மு. வ., ஔவை. துரைசாமிப் பிள்ளை, கே. கே. பிள்ளை ஆகியோர் தலைவராக இருந்த காலத்தில் வரலாற்றுக் குழுவில் உறுப்பினராக இருந்தவர். நான் அப்போது அந்தக் குழுவில் பதிப்பாசிரியன். அப்போதே அவர் தளர்திருந்த காரணத்தால் அவருடைய இல்லத்துக்குப் பல நாள் சென்று அவருக்கு உதவியவன். (1972-1980). அவர் இளையரைக் குடிமக்கள் என்று சொல்லவில்லை.
 • இளையர் குடிப்பெயர் அன்று என முனபே தெரிவித்தேன்
 • குடிப்பெயர் என்று காட்டி மயிலை சீனி வேங்கடசாமியின் பெயரைச் சொல்லி சான்று காட்டாமல் அவரது பெயருக்கும் இழுக்குத் தேடித்தரும் வகையில் செய்திகளைத் தந்துள்ளீர்கள்.
 • போகட்டும் என்று இளையர் (குடி) கட்டுரையில் தங்களை மதித்து இளையர் குடிப்பெயர் அன்று என நாகரிகமாகச் சுட்டியுள்ளேன்.
 • நீங்கள் காட்டிய சான்றுகள் அனைத்தையும் மேற்கோளாக எடுத்துக்காட்டி அவற்றில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் பாடல்களை முழுமையாகப் பொருளுணர்ந்து குறிபிட்டுள்ளேன்.
 • பாண்டியன் அவையிலிருந்த ஆதன் அழிசி வேறு
 • சோழநாட்டு சேந்தன் தந்தை அழிசி வேறு
 • அழிசியும் அவன் மகன் சேந்தனும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டு ஆர்க்காட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள்.
 • இவர்கள் "ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ," எனப் பிற்காலப் பதிற்றுப்பத்துப் பதிகம் கூறும் குடியில் ஒருவர் ஆகலாம். அல்லது இருங்கோவேள் போல் சோழநாட்டுப் பகுதியில் ஆண்டுவந்த வேளிர் குடியினர் ஆகலாம். எப்படிப் பார்த்தாலும், எங்குத் தேடினாலும் இளையர் என்பது வாலிப வீரர்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையே காணமுடிகிறது.
 • இவை ஆதன் என்னும் கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனை முன்பே எடுத்துக் காட்டி உங்களுக்குத் தெரிவித்தும் உள்ளேன்.
 • கட்டி வைத்தான் என்னும் செய்தி எந்தப் பாடலிலும் இல்லை.
 • தெளிவாகப் போலி எனத் தெரிவனவற்றை (உங்கள் கருத்துப்படி) தகவல் என்னும் பெயரில் தரப்படுவதை அறிஞர்கள் விரும்பமாட்டார்கள்.
 • நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள். அவற்றின் வன்மை மென்மைகளை அறியர்கள் உணர்ந்துகொள்வர்.
 • சரியான செய்திகளைப் பிளவுபடுத்தி மயிலை சீனி வேங்கடசாமி போன்ற நல்லறிஞர்களின் பெயரில் போலித் தகவல்களைத் தந்து அப் பெருமக்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
 • நல்லவர்களுக்கு இதைவிடப் பக்குவமாகவும் பணிவாகவும் அன்பாகவும் எடுசொல்ல முடியவில்லை.

அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:15, 2 மே 2013 (UTC)

மேலும்தொகு
 • இந்தப் பகுதியைப் பாருங்கள்.
 • புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன், மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர், இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின், வளம் கெழு நல் நாடு, (அகநானூறு 113)
 • இதில் வரும் அகவுநர் பெருமகன் என்னும் தொடரைக் கொண்டு 'அகவுநர் குடி' என ஒன்று இருந்ததாகச் சொல்லமுடியுமா
 • எனவே நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோம்
 • அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:56, 2 மே 2013 (UTC)

மீண்டும் வணக்கம். உங்களுக்கு வேண்டுமானால் மயிலை சீனி. வேங்கடசாமி ஆதன் அழிசியும், அழிசியும் ஒருவரே என்று எழுதியதை கைப்பேசி மூலம் படம்பிடித்து அனுப்புகிறேன். அதில் அவர் இளையர்களில் தான் ஆதன்-->அழிசி-->சேந்தன் வருவார்கள் எனவும் குறிப்பிட்டிருப்பார். மேலும் அதற்கான காரணமாக பாண்டியனுடன் அவன் சேர்ந்ததால் தான் சோழ நாட்டில் கட்டி வைக்கப்பட்டதாக கூறியிருப்பார். சோழன் நாட்டில் இருந்துகொண்டு பான்டியருடன் கூட்டு சேர்ந்ததால் தான் அவ்னை சோழநாட்டு மரத்தடியில் கட்டினார்கள் என்பது அவர் வாதம். உங்களது தற்போதைய மின்னஞ்சல் முகவரியை மற்ற நிர்வாகிகளோடு CC வைத்து எனக்கு smrajasubramanian@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:19, 3 மே 2013 (UTC)

வாதம் வேண்டாம்தொகு

நண்பரே

 • தேவையற்ற வாதம்.
 • உங்கள் கருத்துப்படியோ, மயிலை சீனி வேங்கடசாமி கறப்னைப் படியோ அழிசி இருவரும் ஒருவர் என்கிறீர்கள்.
 • நான அனைத்துப் பாடல்களையும் ஒப்புநோக்கிய பின்னர் சான்றுகளின்படி வெவ்வேறு அரசர்கள் என்கிறேன்.

உங்கள் கருத்தையோ என் கருத்தையோ நிலைநாட்டிவிட்டால் தமிழுக்கோ, தமிழனுக்கோ என்ன பெருமை வந்துவிட்ப்போகிறது.
நான் ராஜபக்சே இல்லை.
விட்டுவிடுங்கள்
நடந்தவை நல்லவைகளாக இருக்கட்டும்.
எதிர்காலத் தமிழ் விக்கி எப்படி இருக்கும் என்பதை நீங்கள் இன்றே காட்டுகிறீர்கள்.
வாழ்க வளமுடன். --Sengai Podhuvan (பேச்சு) 10:03, 3 மே 2013 (UTC)

நான் வாதிக்க வரவில்லை. மயிலையார் எழுதாதை நான் எழுதினேன் என்று நீங்கள் கூறினீர்கள். அதற்காகத் தான் நான் அப்படிக் கேட்டது.

//உங்கள் கருத்துப்படியோ, மயிலை சீனி வேங்கடசாமி கறப்னைப் படியோ அழிசி இருவரும் ஒருவர் என்கிறீர்கள். //

நான் அழிசி இருவரும் ஒருவர் என்று கூறவில்லை. மயிலை சீனி. வேங்கடசாமி அப்படிக் கூறுகிறார் என்று தகவலைத்தான் ஒரு தகவற்கலஞ்சியத்தில் கூறினேன். நான் விக்கிப்பீடியாவில் எழுதுவது எல்லாம் என் கருத்தல்ல. அப்படியே என் கருத்தாக இருந்தால் அதை நான் விக்கிப்பீடியாவில் எழுத மாட்டேன். விக்கிப்பீடியா மூன்றாம் நிலை தரவு தளம். இங்கு எழுதுபவர் ஒரு கண்டுபிடிப்பை செய்த விஞ்ஞானியானாலும் அதை முறையாக வேறு ஊடகங்களில் பதியாமல் விக்கிப்பீடியாவில் எழுத முடியாது. நான் கூற வந்ததை உங்களிடம் கூறிவிட்டதால் இனியும் இதுபற்றி வாதிக்க விரும்பவில்லை. இனி உங்களிடம் ஐயம் இருந்தாலோ கருத்துக்கேட்கவோ கூடாது என்றாலும் கேட்கவில்லை. மிக்க நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:40, 3 மே 2013 (UTC)

 • நட்பு மலரட்டும். நல்லன செய்ய ஒன்றுபடுவோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:50, 3 மே 2013 (UTC)

தெளிவுபெற மொழிதல்தொகு

அன்புடைய ஐயா, விக்கிபீடியாவின் மூத்த அறிஞரான தங்களை வணங்குகிறேன். பறம்புமலை எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இருக்கலாம் தவறில்லை. என்றாலும் நமது விக்கியிலேயே ஆதாரங்களோடு பறம்பு மலை என்னும் பக்கத்தில் அதை நிறுவியிருக்கிறோம். சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாநில எல்லைகளுக்கு நடுவிலும் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டும் ஈண்டு நின்றோர்க்கும் சென்று நின்றோர்க்கும் இன்னும் பாரி-கபிலரின் சாட்சியாக பறம்பு (இன்றைக்குப் பிரான்மலை என்ற பெயரில்) நிலைபெற்று நின்று வருகிறது. பறம்புமலை எது என்பதில் ஏன் ஐயம் ஏற்படுகிறது என்பதைத் தாங்கள் அறியத் தந்தால் அதைக் குறித்த ஆவணங்களைச் சேகரிப்பதற்கு அது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இது குறித்து ஆவணப்படம் ஒன்றையும் எடுக்கலாம் என்று கருதுகிறேன்... விக்கியில் அதை வெளியிட வேண்டும் என்றும் ஆர்வம் உள்ளது. அதுகுறித்தும் தங்களிடம் விரிவாகக் கலக்க விரும்புகிறேன். இளந்தலைமுறையினருக்குத் தங்களின் நெறிகாட்டுதல்கள் மிகுந்த அவசியம். தங்கள் பதில்வேண்டிக் காத்திருக்கிறேன்... அன்புடன் அருணன் கபிலன்

 • அன்புள்ள அருணன் கபிலன்! இப்போது பறம்புமலை கட்டுரையையும், அதன் பேச்சுப் பகுதியையும் பாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 02:36, 11 ஏப்ரல் 2013 (UTC)
 • நயமுடைய நன்றி

அன்புடைய ஐயா, மிகத் தெளிவாகவும் நுண்மாண் நுழைபுலத்தோடும் கட்டுரையைச் செறிவாக்கியிருக்கிறீர்கள். தங்களின் ஐயம் தீர்ந்ததா என்பது தெரியவில்லை. என்றாலும் என் ஐயம் தீர்ந்தது. கூடியவரைக்கும் இலக்கியச் சான்றுகளைப் பலமுறை சோதித்த பின்னரே ஒவ்வொரு வரியையும் விக்கியில் பதிய வேண்டும் என்கிற கொள்கை உடையவன். ஆதலால் பிழையிருப்பின் திருத்தும்போது மனமுவந்து ஏற்கிறேன். கல்வெட்டுகளில் பாரீச்சுரம் என்பது தவிர பறம்புமலை என்னும் பெயர் இல்லை என்பது உண்மை. அந்தக் கல்வெட்டுப் புகைப்படம் கிடைத்தும் உடன் விக்கிக்கு அளித்து விடுகிறேன். தங்களின் அன்புக்கும் நெறிகாட்டுதலுக்கும் என்றும் என் நன்றி உரித்து. அன்பு வணக்கங்களுடன் அருணன் கபிலன்

அன்புள்ள அருணன், தாங்கள் சேர்த்துள்ள கல்வெட்டுத் தொடரில் 'பாரீச்சுரம்' என்னும் தொடர்கூட இல்லையே! உதவுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 18:49, 16 ஏப்ரல் 2013 (UTC)

இலக்கிய வலைவாசல்தொகு

பொதுவன் ஐயாவிற்கு வணக்கம், விக்கியில் வலைவாசல் இருப்பதை அறிவீர்கள். இலக்கிய வலைவாசல் ஒன்றை விரைவில் துவக்குங்கள், அதில் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை சேர்ப்போம். தற்கால, முற்கால இலக்கியங்களையும், அவற்றின் சிறப்புக் கூறுகளையும் வலைவாசலில் சேர்க்கலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:51, 16 ஏப்ரல் 2013 (UTC)

வலைவாசல் பகுதியை இப்போது காணமுடியவில்லை. தொடர்பு தருக. இணைவோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:42, 16 ஏப்ரல் 2013 (UTC)

இன்னும் சில நாட்களில் வேலைப் பளு குறைந்துவிடும். பக்க வடிவமைப்பை உருவாக்குகிறேன். சங்க கால டையாளங்களை பக்க வடிவமைப்பில் பயன்படுத்துவோம். எந்த மாதிரி தலைப்புகளை இடலாம். அரசர், புலவர், இலக்கியம், இலக்கணம், காப்பியம் எனப் பல்வேறு தலைப்புகளை அவ்வப்போது சேமித்து வையுங்கள் ஐயா! விரைவில் தொடங்குவோம், தகவலுழவனும், தென்காசியாரும், தேனியாரும் ஆர்வமாக இருப்பார்கள் என எண்ணுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:42, 18 ஏப்ரல் 2013 (UTC)
 • ஆங்கில விக்கியில் இது எதைப்போன்றது என அறிய ஆவல். --Sengai Podhuvan (பேச்சு) 11:58, 18 ஏப்ரல் 2013 (UTC)
வலைவாசல்:இலக்கியம் பாருங்கள் ஐயா! வடிவமைப்பை மாற்றிக் கொள்வோம். தமிழ் இலக்கியத்தை மட்டுமோ பொதுவாக இலக்கியம் என்றோ கொள்ளலாம் உங்கள் விருப்பம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:27, 18 ஏப்ரல் 2013 (UTC).
விக்கிநூல்கள் என்பது ஒரு தலைப்பு தொடர்பான பல பக்கங்களை சேகரித்துக் காட்டும் இடம் ஐயா! வலைவாசல் என்பது ஒரு தனிப்பட்ட தலைப்பினை முதன்மைப்படுத்த அதன் ஆர்வலர்கள் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை முதற்பக்கத்தில் காட்டுவது போல சேமித்து, இற்றைப்படுத்தி வரும் பகுதி. வேறு எதுவும் தெரியவில்லை ஐயா! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:03, 18 ஏப்ரல் 2013 (UTC)

நம் விக்கியிலேயே வலைவாசல் பக்கங்கள் உள்ளன. காண்க வலைவாசல்:உள்ளடக்கங்கள் நானும் இயன்றவரை உதவுகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:10, 18 ஏப்ரல் 2013 (UTC)

 • ஊக்கத்தால் உந்தும் பெருமக்களுக்கு வணக்கம். உறுதுணையாய் இருப்பேன். நானும் விக்கிப்பீடியாவில் நுழைந்த காலத்தில் வலைவாசல் பகுதியைப் பார்த்திருக்கிறேன். அது இப்போது முதற் பக்கம் என்னும் காட்சிப் பக்கமாக இயங்கிவருகிறது. என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:54, 18 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ் இலக்கியத்துக்கான வலைவாசலாக விக்கி முலத்தையே பயன்படுத்தலாமே. விக்கிப்பீடியாவில் வலைவாசல்:தமிழ், வலைவாசல்:தமிழர், வலைவாசல்:தமிழ் நாடு போன்றவை ஏற்கனவே உள்ளன. முக்கியம் என்ன என்றால் இவை எல்லாம் 2012க்கு பின் இற்றைப்படுத்தப்படவில்லை என்பதுதான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:08, 19 ஏப்ரல் 2013 (UTC)

அடையாளம் திருடப்பட்டுள்ளதா?தொகு

ஐயா, வணக்கம். உங்கள் புகைப்படத்துடன் கூடிய ஒரு ஜிமெயில் முகவரியில் இருந்து எனக்கு உதவி கேட்டு ஒரு மின்னஞ்சல் கிடைத்துள்ளது. வேறு யாரேனும் உங்கள் அடையாளத்தை திருடி விளையாட முயற்சிக்கிறார்களோ என்கிற சந்தேகம் இருக்கிறது, அருள்கூர்ந்து தெளிவுபடுத்துங்கள். குறிப்பு: வந்த செய்தியையும் அந்த மின்னஞ்சல் முகவரியுடன் உங்களுக்கு விக்கியின் 'இப்பயனருக்கு மின்னஞ்சல் செய்' மூலம் அனுப்பியிருக்கிறேன். விக்கியுடன் இணைத்துள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியில் பார்க்கவும். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 21:06, 1 ஏப்ரல் 2013 (UTC)

அன்புள்ள கார்த்திகேயன்! பெரிதும் நன்றி. முனபே ஒருமுறை இது நிகழ்துள்ளது. இப்போது மீண்டும் நிகழ்கிறது. அருள்கூர்ந்து அந்த மின்னஞ்சலை எனக்கு podhuvan9@gmail.com என்ற முகவரிக்கு forward செய்யுமாறு வேண்டுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:20, 1 ஏப்ரல் 2013 (UTC)

பகுப்பு சேர்த்தல்தொகு

வணக்கம் ஐயா, பேச்சு:சிவ_மகா_புராணம் பக்கத்தில் நீங்கள் கூறியுள்ளதைக் கண்டேன். நான் எந்த பகுப்பையும் அழிக்கவில்லை. தவறுதலாக நிகழ்ந்திருக்கலாம். மன்னிக்கவும்.

வகைப்படுத்தப்படாத பக்கங்கள் பக்கத்தில் உள்ளவற்றை பகுத்துக் கொண்டிருந்தேன். நீங்களும் விரும்பினால் இவ்வழியில் பகுப்பு சேருங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:07, 22 மார்ச் 2013 (UTC)

 • நன்றி. நல்லவர்களின் துணை நலம் பயக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 06:12, 22 மார்ச் 2013 (UTC)

வேண்டுகோள்தொகு

 1. தாங்கள் துவங்குகின்ற சிவன் மற்றும் சைவம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு [[பகுப்பு:சைவ சமயம்]] என்ற பகுப்பினையும் இணைக்க வேண்டுகிறேன்.
 2. அத்துடன் சிவ உருவத்திருமேனிகள் பற்றிய புதிய பக்கங்களை ஆரமிக்கும் முன்பு [[பகுப்பு:சிவ உருவத்திருமேனிகள்]] பகுப்பினையும் ஒரு கணம் பார்த்துவிட்டு ஆரமிக்கவும்.
 1. சரபம்
 2. சரபமூர்த்தி
 3. சரப மூர்த்தி

என ஒத்த கருத்துடைய பக்கங்கள் பல உருவாவது தடுக்கப்படும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:54, 7 ஏப்ரல் 2013 (UTC)

 • அன்புள்ள ஜெகதீஸ்! சுட்டிக்காட்டி வழிப்படுத்தியமைக்கு நன்றி. பல்வேறு கற்பனைகள். தனித்தனியாக இருந்துவிட்டுப் போகட்டும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:29, 7 ஏப்ரல் 2013 (UTC)
 • சரபம் கட்டுரை, உரையாடல் பகுதிகளைப் பாருங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 20:24, 7 ஏப்ரல் 2013 (UTC)

வேண்டுகோள்தொகு

 1. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
 2. சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
 3. சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:16, 7 ஏப்ரல் 2013 (UTC)

 • தென்காசியாருக்கு நன்றி. 1 எண்ணில் உள்ள கட்டுரையோடு ஏனைய இரண்டும் இணைக்கப்படல் வேண்டும். அருள்கூர்ந்து செய்திகள் விடுபடாமல் இணைத்து உதவுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 06:32, 7 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரை அனைத்தும் நீங்களே எழுதியுள்ளதால் மற்ற கட்டுரையிலிருந்து வெட்டி ஒட்டிடுங்கள். மற்ற பக்கங்களுக்கு வழிமாற்று கொடுத்திடுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:27, 7 ஏப்ரல் 2013 (UTC)

தொல்காப்பியம் மற்றும் திருக்குறள்தொகு

ஐயா, எனக்கு நான்கு சந்தேகங்கள் இருக்கின்றன.

 1. தொல்காப்பியத்தில் உள்ள எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய சொற்களில் அதிகாரம் என்பது வடசொல் இல்லையா?. நான் ஏன் கேட்கிறேன் என்றால் தொல்காப்பியம், திருக்குறள், etc ஆகிய நூல்கள் தமிழகத்தில் வடசொற்கள் பயன்படுத்தாத அல்லது மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. முதல் மூலப்பிரதி ஓலைச்சுவடியில் வடசொற்கள் இல்லையென்றாலும் பின்பு ஓலைச்சுவடிகளை பிரதி எடுப்பவர்கள் அல்லது தொகுப்பவர்கள் வடசொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இதனால், சிலர் அதிகாரம் காப்பியம் என்பவை வடசொல் என்பதால் பிற்காலத்தில் இயற்றப்பட்டது என்கின்றனர். உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் படி தொல்காப்பியத்தின் முதல் இரண்டு அதிகாரங்களின் தொடக்கச் சுவடிகளின் இணையப் பக்கங்கள்
  1. எழுத்ததிகாரம் - [[1]]
  2. சொல்லதிகாரம் - [[2]]

இதில், எழுததிகாரச் சுவடியில், 'ர' எனும் எழுத்தைக் குறிக்க 'ா'வைப் பயன்படுத்துகின்றனர். சொல்லதிகாரச் சுவடியில் 'ர' எனும் எழுத்தைக் குறிக்க 'ர' என்றே பயன்படுத்துகின்றனர்(உயிர்மெய்யெழுத்தில் ஆகாரத்தையும் ஓகாரத்தையும் சுட்டும் காலை ரகத்திலிருந்து வேறுபடுத்தும் தமிழ் எழுத்துச் சீர் திருத்தம்). மேலும், 'அதிகாரம்' எனும் சொல் சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய சுவடிகளில் தான் இருக்கிறது. எழுத்ததிகாரச் சுவடியில் இல்லை. இதன்மூலம், தொல்காப்பியத்தை பல பிரதிகளிலிருந்து உ.வே.சா. அவர்கள் எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. மேலும் இதன்மூலம், உ.வே.சா. அவர்கள் பயன்படுத்திய எழுத்ததிகாரச் சுவடிப் பிரதி சொல்லதிகாரச் சுவடிப் பிரதியை விடப் பழையது என்பது தெரிகிறது. பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படி புதிய பிரதி எடுக்கும் போது வடசொற்கள் அதிகமாக புழங்கிய காலமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவர்கள் 'அதிகாரம்' எனும் சொல்லுடன் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று பெயரிட்டிருக்கின்றனர். தயவு செய்து 'அதிகாரம்' வடசொல்லாக இருந்தால் அதை மாற்றவேண்டும்(எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அதனால் பள்ளிப் புத்தகங்களிலும் மாற்ற வேண்டும்).

 1. தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில், முதற்பாகத்தின் பெயர் 'நூன்மரபு' என்று இருக்கிறது. ஆனால், நான் மேலேக் குறிப்பிட்டுள்ள எழுததிகாரத்தின் முதல் சுவடியில் 'முதலாவது நூன்மரபு எழுத்தெனப்படுப' என்று இருக்கிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் 'இரண்டாவது மொழிமரபு' என்று இருக்கிறது. தொல்காப்பியர் ஏன் முதல் பாடலில் வரும் 'எழுத்தெனப்படுப' என்னும் சொற்களை தலைப்பான 'முதலாவது நூன்மரபு' என்பதுடன் சேர்த்து எழுதினார்?.
 2. தொல்காப்பியத்தில் உள்ள காப்பியம் என்ற சொல் வடசொல்லா?. தொல்காப்பியம் என்ற பெயரைத் தந்த தொல்காப்பியத்தைத் தொகுத்தவர் வடசொற்கள் அதிகம் புழங்கும் காலத்தில் இருந்தவர் என்று நினைக்கிறேன்(கி.பி. 205 பின்பு). அதனால் தான் காப்பியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். காப்பியம் என்பது வடசொல்லாக இருந்தாலும் நம்மால் தொல்காப்பியத்தின் பெயரை மாற்றமுடியாது.
 3. திருக்குறளிலும் 133 அதிகாரங்கள் என்று கூறுகிறோம். அதே புதிய பிரதி எடுக்கும் போது, அவர்கள் 'அதிகாரம்' எனும் சொற்களைப் பயன்படுதுவிட்டனர் என்று நினைக்கிறேன். இங்கும் தயவு செய்து 'அதிகாரம்' வடசொல்லாக இருந்தால் அதை மாற்றவேண்டும்(எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அதனால் பள்ளிப் புத்தகங்களிலும் மாற்ற வேண்டும்).

--ச.பிரபாகரன் (பேச்சு) 16:36, 24 மார்ச் 2013 (UTC)

விளக்கம்தொகு

 • அன்புள்ள பிரபாகரன்! தங்களைப் போன்ற நன்னோக்கும், நாட்டத் துடிப்பும் கொண்ட இளைஞர்களால்தான் தமிழ் வாழும். வளரும்.
 • 'அதிகம்', 'அதிகாரம்', 'அதிகரி'(வினை) என்னும் சொறகள் தமிழில் உள்ளன. இவற்றிற்குத் தமிழில் வேர்ச்சொல் காட்ட முடியவில்லை என்பதனால் வடசொல் என்கின்றனர். கம்பராமாயணம் பகுத்துக்காட்டியுள்ள காண்டம், படலம் என்னும் தமிழ்ச்சொறகளைக் கதை நூலுக்குப் பயன்படுத்தி வருகிறோம். தொல்காப்பியமாகிய மொழிநூலுக்கோ, நெறிநூலாகிய திருக்குறளுக்கோ பொருந்திவர வாய்ப்பில்லை.
 • காப்பியம் காண்க. --Sengai Podhuvan (பேச்சு) 22:15, 24 மார்ச் 2013 (UTC)

'ஐ', 'ஔ', 'ஃ', 'ஐ'இன் உயிர்மெய் எழுத்துக்கள், 'ஔ'இன் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகிய 39 எழுத்துக்கள்தொகு

'ஐ', 'ஔ', 'ஃ', 'ஐ'இன் உயிர்மெய் எழுத்துக்கள், 'ஔ'இன் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகிய 39 எழுத்துக்கள் பற்றிய சந்தேகம். இவ்வெழுத்துக்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழர் பயன்பாட்டில் இல்லை.

 • ஐ - மூவேந்தர் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களின் படி, ஐ என்ற எழுத்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இல்லை.
 • ஔ - பாண்டிய நாட்டு தமிழ் வட்டெழுத்துகளில் 12- ஆம் நூற்றாண்டு வரையிலும் சேர நாட்டிலுள்ள தமிழ் வட்டெழுத்துக்களில் 17 – ஆம் நூற்றாண்டு வரையிலும் சோழ நாட்டுத் தமிழ் வட்டெழுத்துக்களில் 8 -ஆம் நூற்றாண்டு வரையிலும் இல்லை. மேலும், மூவேந்தர் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களின் படி, ஔ என்ற எழுத்தே இல்லை(உண்மையா?). மேலும், தோராயமாக 10 அல்லது 12ஆம் நூற்றாண்டிற்கு முன் இயற்றிய எந்த இலக்கியத்திலும் 'ஔ' என்ற எழுத்து இல்லை(சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, etc). ஆனால், தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம் நன்னூல் நேமிநாதம் ஆகிய நூல்களில் உள்ளது. அப்படியென்றால், தொல்காப்பியத்தை திருப்பி எழுதும் போது திருத்தி எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்(ஓலைச்சுவடிகளைப் பிரதி எடுக்கும் போது) அல்லது இடைச்செருகல்களாக இருக்கலாம்.
 • ஃ - பாண்டிய நாட்டு தமிழ் வட்டெழுத்துகளில் 12- ஆம் நூற்றாண்டு வரையிலும் சேர நாட்டிலுள்ள தமிழ் வட்டெழுத்துக்களில் 17 – ஆம் நூற்றாண்டு வரையிலும் சோழ நாட்டுத் தமிழ் வட்டெழுத்துக்களில் 8 -ஆம் நூற்றாண்டு வரையிலும் இல்லை. மேலும், மூவேந்தர் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களின் படி, ஃ என்ற எழுத்தே இல்லை(உண்மையா?).

மேலும் இதன்மூலம், சோழர்கள்தான் முதன் முதலில் இந்த மூன்று எழுத்துக்களையும் 9-ஆம் நூற்றாண்டில் தங்கள் கல்வெட்டுகளில் பயன்படுத்தினர். பின்பு தான் இந்த எழுத்துக்களை மற்றவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர் என்பது தெரிகிறது. சோழர்கள் வடமொழிக்கும் ஆதரவு கொடுத்தனர் என்று படித்திருக்கிறேன். இந்த 39 எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்கள் இல்லையா?. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, etc ஆகியவற்றில் 'ஐ', 'ஃ', 'ஐ'இன் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகிய 20 எழுத்துக்களும் பயன்படுத்தபட்டுள்ளன. 'ஐ', 'ஃ' எழுத்துக்கள் எட்டாம் நூற்றாண்டிற்கு மேல்தான் தோன்றின என்றால் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, etc ஆகிய இலக்கியங்களில் எப்படி வந்தன?. ஓலைச்சுவடியை புதிய பிரதி எழுதும் போது திருத்தி எழுதியிருக்கிறார்களா?. அப்படியென்றால், 'ஐ', 'ஃ', 'ஐ'இன் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகிய 20 எழுத்துக்களும் உள்ள சங்க இலக்கியங்களில் உள்ள சொற்களை இந்த எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்பு சங்க இலக்கியங்களில் எப்படி எழுதினர்?. இந்த 39 எழுத்துக்களின் வரலாற்றை அறிய ஆவலாக இருக்கிறது.

மேலும், Proto-Dravidian Language(முதனிலைத் திராவிட மொழி) என்று சொல்லப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழியில் மொத்தம் 10 உயிரெழுத்துக்கள் தான் உள்ளது என்று ஆய்வுகளின்மூலம் தெரிகிறது. அப்படியென்றால் தமிழில் 'ஐ', 'ஔ' ஆகிய உயிர் எழுத்துக்கள் இல்லை என்றால் 10 உயிரெழுத்துக்கள் வரும். ஆகையால், 'ஐ', 'ஔ', 'ஃ' ஆகிய எழுத்துக்கள் எப்படி தோன்றியது என்று நாம் ஆராய்ந்தால், Proto-Dravidian Language(முதனிலைத் திராவிட மொழி) என்பது தமிழ் மொழிதான் என்று நிரூபிக்க ஒரு பகுதியாக இது உதவும் என்று நினைக்கிறேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 16:45, 24 மார்ச் 2013 (UTC)

விளக்கம்தொகு

அன்புள்ள பிரபாகரன்!

 • புகழூர்க் கல்வெட்டில் [ஐ] வரிசைக் குறியீடு உள்ளது.
 • [ஃ] எழுத்து கல்வெட்டில் காணப்படும் காலம் அந்த எழுத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பு.
 • [ங] வரிசையில் [ங்], [ங] என்னும் இரண்டு எழுத்துக்களைத் தவிர பிற எழுத்துக்கள் இன்றுவரை பயன்பாட்டில் இல்லை என்பதற்காக அந்த எழுத்துக்களே இல்லை என்று கூறுவது சரியா?
 • எழுத்து 39 என்று இதுவரை யாரும் கொள்ளவில்லை. கற்பனைக்கு விடை இல்லை. --Sengai Podhuvan (பேச்சு) 22:34, 24 மார்ச் 2013 (UTC)

வேண்டுகோள்தொகு

 • தனித்தமிழ் வேண்டும். அவ்வளவுதான். --Sengai Podhuvan (பேச்சு) 22:34, 24 மார்ச் 2013 (UTC)

அனேகதங்காவதம்தொகு

இங்கே 15வது தலமாக உள்ள அனேகதங்காவதத்திற்கு இந்த இணைப்பைக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள இணைப்பு க வரியில் முதலாவதாக உள்ள கச்சி அனேகதங்காவதத்திற்குரியது. ஏற்கனவே அதற்கு உள்ள இணைப்பையும் இதனையும் எவ்வாறு கொடுக்கலாம்? இரு வரிகளை இடலாமா? --சிவகோசரன் 05:48, 5 செப்டெம்பர் 2011 (UTC)

க வரியிலுள்ள முதலாவது தலத்திற்கு இந்த இணைப்பைக் கொடுத்து இந்த இணைப்பில் இரு வெளியிணைப்புகளையும் கொடுக்கலாமே? --சிவகோசரன் 06:02, 5 செப்டெம்பர் 2011 (UTC)
 • அனேகதங்காவதம் பற்றிய சீராளர் சிவகோசரனின் விருப்பம் முன்பே நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்புக்கு நன்றி --Sengai Podhuvan 18:44, 6 செப்டெம்பர் 2011 (UTC)
இதனை கனக்ஸ் அவர்கள் செய்துள்ளார். நீங்கள் (செங்கைப் பொதுவன்) இக்கட்டுரயில் அண்மைக்காலமாகத் தொடர் பங்களிப்புச் செய்து வந்ததனால் இதனை நானே செய்யாமல் பரிந்துரையாக இட்டேன். கவனித்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றி --சிவகோசரன் 08:16, 19 செப்டெம்பர் 2011 (UTC)

கண்டராதித்தர்தொகு

ஐயா, உங்களுக்கு இங்கு ஒரு செய்தி உள்ளது.--Kanags \உரையாடுக 22:34, 27 அக்டோபர் 2012 (UTC)

என் தவறை திருத்திக்கொள்கிறேன்தொகு

மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். என்னைத் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம், தாங்கள் என் பேச்சுப்பக்கத்தில் ஒரு திருத்தம்(நீக்கம்) செய்துள்ளீர்கள். என் தவறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன். உங்களின் நீக்கம் தவறுதலாக நிகழ்ந்திருந்தாலும் சொல்லுங்கள். நன்றி. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:12, 4 மார்ச் 2013 (UTC)

 • அன்புள்ள கார்த்திகேயன், உங்களுடைய பேச்சுப் பக்கத்தில் நான் எந்தத் திருத்தமும் செய்யவில்லை. செய்வது அழகும் அன்று. என்னை அறியாமல் நேர்ந்திருந்தால் பொறுத்தருள்க. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:39, 4 மார்ச் 2013 (UTC)
ஐயா, பொறுத்தருள்க என்பதெல்லாம் பெரிய வார்த்தை, நான் சிறியவன் நீங்கள்தான் என்னைப் பொருத்தருள வேண்டும். உங்களை 2010-ல் சென்னையில் நடந்த விக்கி பட்டறையில் கண்டு பேசியுள்ளேன்; உங்கள் தமிழ்பற்றையும், தமிழ் விக்கியில் உங்கள் பங்கினையும் நன்கு அறிவேன். விக்கியில் நானும்(என்னைப் போன்று பலரும்) தொடர்ந்து பங்களிக்க உங்களுடனான சந்திப்பும் ஒரு காரணம். நீக்கம் தவறுதலாக நிகழ்ந்திருக்கலாம் நான் மீளமைத்துக்கொள்கிறேன். நன்றி. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:55, 4 மார்ச் 2013 (UTC)

அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கைதொகு

வணக்கம். தமிழ் பண்பாட்டு வளர்ச்சி, காப்பு, பயிற்சி குறித்த பழுத்த அறிவுள்ளவர், முன்னாளர் ஆசிரியர், அரசுப் பணியாளர் என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்ற உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:29, 25 பெப்ரவரி 2013 (UTC)

அன்புள்ள இரவி!

 • தங்களைப் போன்ற எழுச்சி மிக்க இளைஞர்களின் ஈடுபாடு திரளவேண்டும்
 • தமிழ் ஆராய்ச்சி மாணவர்களை இணைத்து ஈடுபடச் செய்ய வேண்டும். (சென்னைப் பல்கலைக் கழகத்தில் சில மாணவர்களை இணைத்தேன். அவர்கள் ஈடுகாட்டுடன் செயல்படவில்லை. அவர்களின் குறிக்கோள் தேர்வும் பணிநோக்கமுமாக உள்ளது.)
 • தமிழ் வளர்க்க நிறுவப்பட்டுள்ள அரசு நிறுவனங்கள்
  • தமிழ் இணையக் கல்விக் கழகம். (அரிய நூல்கள் பலவற்றின் மூலத்தையும், சிலவற்றின் உரைகளையும் இணையத்தில் இட்டுள்ளனர். அதன் தலைவருடனும், இயக்குநரிடமும் ஓராண்டுக்கு முன்னர் நேரிலும், தொலைபேசியிலும் போராடி Tamil LFS Kamban எழுத்தில் வெளியிடப்பட்டு அந்த எழுத்தை இறக்கம் செய்யாமல் படிக்க இயலாமல் இருந்த நிலையை மாற்றி Tamil Unicode-ல் இடுமாறு செய்துவிட்டேன். அவர்களின் பணி தொடர்கிறது. அவர்களை விக்கிக்குள் நுழைக்க இயலாது.)
  • தமிழ் வளரச்சி இயக்ககம் (நேரில் இயக்குநரிடம் விளக்கினேன். விக்கிப் பீடியாவைத் திறந்து காட்டினால் வியக்கிறார். e-mail இல்லாதவர். விக்கியில் இணைக்க முயன்று வருகிறேன்.)
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பழைய இயக்குநர் மாற்றம். அண்மையில் புதிய இயக்குநர். அணுகவில்லை. இணையத்தில் நுழையத் தெரியாதவர் என தெரிகிறது. அணுகிப் பார்க்கிறேன்.)
  • Institute of Asian Studies நிறுவனம் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் அச்சாக்கி வெளியிடும் திட்டத்தில் செயல்படுகிறது. (அவ்வளவுதான்)
  • மைய அரசின் செம்மொழி நிறுவனம் (எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. நேரில் விளக்கியுள்ளேன். ஏதோ செய்துவருகிறார்கள். இணையத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள். அவர்கள் அலுவலர்கள்.)
 • தமிழறிஞர்கள் (வாங்கும் சம்பத்துக்காக மாணவர்களை உருவாக்குகின்றனர். தன்னையோ, மாணவர்களையோ இணையத்தில் இணைக்கக்கூட விரும்பாதவர்களாக உள்ளனர்.)
 • இணையத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் word press, block spot போன்றவற்றில் தனித்தளம் அமைத்துக்கொண்டு விளையாடுகின்றனர்.
 • பல பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் நேரில் சென்று விக்கியில் மாணவர்களை இணைத்து ஊக்குவித்தல் பயனுள்ள முயற்ச்சியாக அமையும்.

எண்ணுவோம். இணைவோம். முனைவோம். அன்புள்ள.--Sengai Podhuvan (பேச்சு) 20:46, 25 பெப்ரவரி 2013 (UTC)

தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி, ஐயா. பொதுவாக ஒரு வேண்டுகோள்: பிற நிறுவனங்களைப் பற்றி வளர்முகமாக பேசும் போது வெளிப்படையாக பொதுவில் வைத்துப் பேசுவோம். ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தனிமடலில் பகிர்ந்து கொள்வோம். ஏனெனில், இந்நிறுவனங்களைச் சேர்ந்தோர் கூட இவற்றைப் படித்து வருந்தவோ தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பிழையான புரிதலையோ கொள்ளலாம். நிற்க!
தாங்கள் சுட்டியுள்ள நிலை, தமிழ் சார்ந்த துறையினர் மட்டுமல்லாது உலகளவிலும் கூட பல்வேறு துறையினரிடமும் காணக்கூடியது தான். எல்லாருக்குமே "இதில் எனக்கு என்ன உள்ளது" என்ற கேள்வியே உள்ளது. தன் குடும்பம், தன் சுற்றம் என்பதைத் தாண்டி தன் சமூகம், தனக்குப் பிடித்த துறை என்று சிந்திப்போருக்கு மட்டுமே விக்கிப்பீடியா பணி ஒரு நிறைவைத் தரக்கூடும். அத்தகைய உளப்பாங்கு உள்ளோர் மிக மிகக் குறைவானோரே? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பார்த்தால் இத்தகையோர் வெவ்வேறு பின்புலங்களில் நாம் எதிர்பார்க்கா இடங்களில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இவர்களை நாம் எப்படி கண்டடைகிறோம் என்பதே தமிழ் விக்கிப்பீடியா எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்.
தற்போது நடக்கும் கொள்கை உரையாடலானது, அரசு ஒரே ஒரு கையெழுத்தில் நிகழ்த்தக்கூடிய தொலைநோக்கு மாற்றங்கள் என்னென்ன என்பதைக் குறித்தே. இது தொடர்பாக நம்மிடம் தெளிவான அணுகுமுறை இருக்கும் பட்சத்தில், தொடர் பரப்புரை மூலம் அரசு மட்டத்தில் சரியான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பலாம். நன்றி--இரவி (பேச்சு) 15:12, 4 மார்ச் 2013 (UTC)

தொல்லுயிர்க் குறிப்புகள்தொகு

ஐயா, ஊணூர் கட்டுரையில் அன்றில் பறவைகளைப் பற்றிய சங்ககாலக் குறிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். பேச்சுப் பக்கத்தில் எனது கருத்தையும் பகிர்ந்துள்ளேன். பங்குனி ஆமைகளைப் பற்றித் தமிழ் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளனவா என அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:58, 17 பெப்ரவரி 2013 (UTC)

 • அன்புள்ள சுந்தர்! தூண்டுதலுக்கு நன்றி. சங்கப் பாடல்களில் ஆமை பற்றி உள்ள செய்திகள் அனைத்தையும் தொகுத்துத் தந்துள்ளேன். தாங்கள் கூறும் பங்குனி மாதக் குறிப்பைக் காண முடியவில்லை. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:28, 19 பெப்ரவரி 2013 (UTC)

சங்ககால மருத்துவ மனைகள்தொகு

ஐயா பின்வரும் கருத்து உங்கள் கருத்தா? உங்களது கருத்து எனில் இது ஏதும் நூலிலோ, ஆய்விதழ்களிலோ கூரியுள்ளீர்களா? வேறொருவர் கூரியவை என்றால் அந்த நூல் எதுவென தெரிவிக்கவும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:42, 21 சனவரி 2013 (UTC)

\\சங்ககாலத்தில் மருத்துவம் செய்துகொள்ளும் ஊர்கள் சில இருந்தன. சங்ககால அரசர்கள் பலர் அந்த இடங்களில் இருந்து உயிர் நீத்திருக்கிறார்கள். துஞ்சினார் என்றால் வருஞ்சாவு வந்து உயிர் நீத்தார் என்பது பொருள். அவ்வூர்களில் இருந்த மருத்துவர்கள் யார் எனத் தெரியவில்லை. அரசன் மருத்துவம் செய்யப்படாமல் உயிர் நீத்தான் என்று கொள்வதற்கில்லை. எனவே அரசன் உயிர் நீத்த அந்த ஊர்களை மருத்துவ மனைகள் என் கொள்கிறோம்.\\

 • கட்டுரையைச் செப்பம் செய்யத் தூண்டியமைக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 20:58, 21 சனவரி 2013 (UTC)

அருணந்தி சிவாசாரியார்தொகு

 • வணக்கம் அருணந்தி சிவாசாரியார், கட்டுரையில் ’ஆசாக’ என்ற சொல்லின் பொருள் தெரியாததால் ’ஆசானாக’ என்று தவறுதலாகத் திருத்தம் செய்து விட்டேன். பொருள்விளக்கம் தந்தமைக்கு நன்றி,

உங்கள் கவனத்துக்கு: மறைஞானசம்பந்தர், மறைஞான சம்பந்தர் இவர்கள் வெவ்வேறு நபர்களாக இருந்தால் தலைப்பு ஒன்றாக இருக்க முடியாது தானே?--Booradleyp (பேச்சு) 05:13, 18 பெப்ரவரி 2013 (UTC)

 • இருவரும் ஒருவரே. தமிழில் சொற்பிரிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:24, 18 பெப்ரவரி 2013 (UTC)

அப்படியானால் ஒரே நபருக்கு இரண்டு கட்டுரைகள் உள்ளன. இரண்டையும் இணைக்க வேண்டும்.--Booradleyp (பேச்சு) 08:10, 18 பெப்ரவரி 2013 (UTC)

 • எதனோடு எதனை இணைப்பது எளிது எனப் பார்த்துக் கருத்துக்கள் விடுபடாமல் இணைக்கத்தான் வேண்டும். செய்யுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 14:10, 19 பெப்ரவரி 2013 (UTC)

இரு கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் ஒரே நபரைக் குறிப்பவை போல இல்லையென்றே எனக்குப் படுகிறது. (ஒரு கட்டுரை அவர் சித்தாந்த நூல்கள் எழுதவேயில்லை என்கிறது, மற்றொன்றில் எழுதிய நூல்கள் என நிறையத் தரப்பட்டுள்ளன) எனக்கு இவர் குறித்து எதுவும் தெரியாது. அதனால் நீங்கள் உள்ளடக்கங்களை எதுவும் விடுபடாமல் சரி செய்து தாருங்கள். வேறு யாரிடமாவது இணைத்துத் தரச் சொல்லலாம். (ஏனென்றால் எனக்கு இணைக்கும் விதமும் தெரியாது!) நன்றி.--Booradleyp (பேச்சு) 16:26, 21 பெப்ரவரி 2013 (UTC)

 • பூவன் அவர்களுக்கு வணக்கம். நானே இணத்துவிடுகிறேன். அன்புள்ள --117.193.201.108 17:52, 21 பெப்ரவரி 2013 (UTC)

முடிக்கப்படாமல் உள்ள கட்டுரைகள்தொகு

வணக்கம், இந்த இணைப்பில் உள்ள உங்களின் சில கட்டுரைகள் தொகுக்கப்படாமல் ஓரிரு வரிகளுடன் காணப்படுகின்றன. முடிந்தால் இவற்றை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி ஐயா.--Kanags \உரையாடுக 07:41, 19 பெப்ரவரி 2013 (UTC)

 • அன்புள்ள கனகசீர் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் காட்டிய இணைப்பின் உள்ளே சென்றால் நான் என்ன செய்யவேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 11:37, 19 பெப்ரவரி 2013 (UTC)
பின்வரும் கட்டுரைகளைக் கவனியுங்கள். இவை அரைகுறையாக உள்ளன:

--Kanags \உரையாடுக 11:47, 19 பெப்ரவரி 2013 (UTC)

  • தொடர்கிறேன். ஊக்கம் தந்தமைக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 14:11, 19 பெப்ரவரி 2013 (UTC)
  • கனகசீர் அவர்களுக்கு! தங்களின் அன்பு வேண்டுகோளை ஆர்வமுடன் நிறைவேற்றியுள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 13:34, 20 பெப்ரவரி 2013 (UTC)

உழிஞைதொகு

உழிஞை பூ பற்றி ஒரு தனி பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும். பூளையும் உழிஞையும் வேறல்லவா? பாலாஜி (பேச்சு) 18:19, 14 பெப்ரவரி 2013 (UTC)

அன்புள்ள பாலாசீர்! உழிஞை என்பது 'முடக்கொற்றான்'. பூளை என்பது பூலாப்பூ. பூலாப்பூ பொங்கல் திருநாளின்போது கட்டப்படும் மாலையில் செருகப்படும் பூ. இவை இரண்டனுக்கும் தனித்தனிக் கட்டுரைகள் வேண்டும். பூளை (மலர்) கட்டுரை உள்ளது. உழிஞை (மலர்) கட்டுரை எழுதுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:49, 14 பெப்ரவரி 2013 (UTC)
நன்று ஐயா... சிறு வயதில் தமிழ் படிக்கும் பொழுது என்ன சங்க காலத்தில் இருந்த பூக்கள் எதுவும் இப்பொழுது இல்லையா என்று நினைத்திருக்கிறேன். ஏன் என்றால் மல்லிகையும், முல்லையும்தான் எனக்கு அப்பொழுது தெரிந்த இருந்தது. தங்களுடைய கட்டுரைகள் என்னைப்போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கம்.பாலாஜி (பேச்சு) 07:47, 15 பெப்ரவரி 2013 (UTC)

நுளம்புதொகு

வணக்கம், நுளம்பு என்பது ஈழத்தமிழில் கொசுவைக் குறிப்பதால், நீங்கள் தொகுத்த நுளம்பு என்ற கட்டுரையினை மாட்டைக் கடிக்கும் ஈ என்ற தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். தேவையான பெயரை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --Anton (பேச்சு) 03:18, 30 சனவரி 2013 (UTC)

 • அன்புள்ள அண்டன், நான் உழவன். மாடு வைத்திருந்தவன். மாட்டைக் கடிக்கும் ஈயைப் பார்த்தவன். இதனைச் சங்கப்பாடல் குறிப்பிட்டிருப்பதையும் காட்டியிருக்குறேன்.
 • எண்ணெய் என்பது எள் நெய். இன்று அதன் பொருள் மாறியுள்ளது. கடலைநெய் என்னாமல் கடலை எண்ணெய் என வழங்கப்படுகிறது. இதற்குப் பெயர்தான் சொற்பொருள் மாற்றம். அல்லது சொற்பொருள் ஏற்றம் semantics.
 • இப்படி நுளம்பு என்னும் சொல் மாட்டைக் கடிக்கும் சங்ககால வழக்குநிலை மாறி மனிதனைக் கடிக்கும் ஈழத்தமிழுக்கு மாறியுள்ளது. தமிழ்நாட்டில் வழக்கற்றுப்போன நுளம்பு என்னும் சொல் ஈழத்தில் வழங்கிவருவது பழந்தமிழுக்கும் ஈழத்துக்கும் பெருமை.
 • பழந்தமிழை மறைத்துவிட்டு ஈழத்தமிழைக் காக்கும் பணியை, ஈழத்துத் தமிழி கல்வெட்டு கண்ட பெருந்தகை செய்வது தகுமா?
 • தங்கள் பேச்சில் நுளம்பு (மாட்டைக் கடிக்கும் ஈ) தலைப்புக்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நுளம்பு கட்டுரையைக் கொசுத் தலைப்புக்கு மாற்றியுள்ளீர்கள். விளங்கவில்லை. போகட்டும்.
 • நுளம்பு, கொசு ஆகிய கட்டுரைகள் தனித்தனியாக இருக்கட்டும். வேண்டிய குறுக்கு இணைப்புகள் தரலாம். சங்கத்தமிழைத் தலைநிமிர விடுங்கள்.
 • எது முந்தியது? சங்கத்தமிழா, ஈழவழக்கா என எண்ணிப் பாருங்கள்.
 • தாங்கள் பேசியிருக்கலாம். பேசவில்லை. போகட்டும். நடுவுநிலைமையைக் கையாண்டு பெருந்தன்மையோடு தாங்களே இதனைச் செய்வது சாலச் சிறந்தது.
 • இணையதளத்தில் ஈழத்தமிழர்களின் தமிழ்த்தொண்டு ஈடு இணை இல்லாதது. இதனைக் கட்டிக் காப்பாற்றுங்கள்.

அன்புள்ள. --Sengai Podhuvan (பேச்சு) 21:12, 30 சனவரி 2013 (UTC)

வணக்கம், உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஈழத்து வழக்கில் நுளம்பு (Mosquito), கொசு (Housefly or fly) என்பன தமிழக வழக்கில் நின்று வேறுபடுவதாலும், இணையத்தில் ஈழத்து வழக்குக்கேற்ப தேடுவோரைக் கருத்திற் கொண்டும் அவ்மாற்றத்தை மேற்கொண்டேன். ஆயினும் உங்கள் கருத்திற்கேற்ப வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னால் ஆற்றக் செய்யக்கூடிய உதவி இருப்பின் குறிப்பிடுங்கள். --Anton (பேச்சு) 02:23, 31 சனவரி 2013 (UTC)

நன்றிதொகு

  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:15, 14 சனவரி 2013 (UTC)


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:30, 14 சனவரி 2013 (UTC)

 • மதனாகரன் (மதனாகு அரன்), அண்டன் (அண்டும் நண்பன்) ஆகிய எழுச்சி மிக்க இளைஞர்களின் ஈடுபாட்டால் தமிழ் விக்கி ஏற்றம் பெறும் என நம்புகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 10:33, 14 சனவரி 2013 (UTC)
Return to the user page of "Sengai Podhuvan/தொகுப்பு 5".