தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7 8










முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

தொகு

தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு

தொகு

வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு

தொகு

வணக்கம். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணியை எளிதாக்குவதற்காக துணைப் பகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதம், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதவியல், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-கணிதவியலாளர்கள் ஆகியனவும் அடங்கும். இந்தக் கட்டுரைகளில் தங்களின் பங்களிப்பினை வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:53, 2 சனவரி 2023 (UTC)Reply

'பதிவு செய்தல்' பகுதியில் உங்களின் பதிவில் திருத்தம் செய்துள்ளேன். எனது புரிதல் சரியென நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 2 சனவரி 2023 (UTC)Reply

வணக்கம். ஈருறுப்புப் பரவல் கட்டுரையை நிறைவு செய்தமைக்கு நன்றி. செம்மைப்படுத்துதல் முடிந்ததால், {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த வார்ப்புருவினை இடுவதன் மூலமாக, செம்மைப்படுத்தியது யார் என்ற விவரம் பதிவாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:42, 7 சனவரி 2023 (UTC)Reply

 Y ஆயிற்று

மிக்க நன்றி. இந்தக் குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:30, 7 சனவரி 2023 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம். இந்தக் கட்டுரையைப் படித்தால், ஒன்றுமே புரியவில்லை. உங்களின் கருத்தினை பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தானியங்கித் தமிழாக்கமாக இருந்தால், நீக்கலாம் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:24, 15 சனவரி 2023 (UTC)Reply

@Selvasivagurunathan m: தாமதமாகப் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையைச் சரிசெய்ய முடியுமாவெனப் பார்க்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:16, 17 சனவரி 2023 (UTC)Reply
 Y ஆயிற்று

தங்களின் உதவிக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:25, 19 சனவரி 2023 (UTC)Reply

வகை நுண்கணிதம்

தொகு

வகை நுண்கணிதம் கட்டுரையை செம்மைப்படுத்தியமைக்கு நன்றிகள்.

  • தகவல்: வகையீட்டு நுண்கணிதம் எனும் மிகத் துல்லியமான சேய்ப் பகுப்பு ஏற்கனவே இருப்பதால், நுண்கணிதம் எனும் தாய்ப் பகுப்பை கட்டுரையிலிருந்து நீக்கியிருக்கிறேன்.
  • ஐயம்: வகையீட்டு, வகை இவற்றிற்கிடையே ஏதேனும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளதா? பகுப்பிற்கு வகையீட்டு நுண்கணிதம் என்பதாக ஏன் தலைப்பிட்டார்கள் என்பதனை அறிந்துகொள்ளவே இந்த வினா.
  • வேண்டுகோள்: செம்மைப்படுத்துதல் முடிந்ததை பேச்சுப் பக்கத்தில் அறிவித்து உதவுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:26, 25 சனவரி 2023 (UTC)Reply

வணக்கம். செம்மைப்படுத்துதல் முடிந்ததை பேச்சுப் பக்கத்தில் அறிவித்து உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:30, 28 சனவரி 2023 (UTC) @Selvasivagurunathan m:Reply

  • நுண்கணிதம் என்ற தாய்ப் பகுப்புக்குள்ளும் இக்கட்டுரை அடங்கும். உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம் என்ற கட்டுரையானது, தூத்துக்குடி மாவட்டம் என்ற சேய் பகுப்பு, தமிழ்நாட்டின் மாவட்டங்கள் என்ற இரு பகுப்புக்குள்ளும் அடங்குவதைப் போல.
  • சில இடங்களில் வகை நுண்கணிதம் என்றும் வேறுசில இடங்களில் வகையீட்டு நுண்கணிதம் என்றும் வழங்கப்படுகிறது. " differential" என்பது "வகையீடு" என அழைக்கப்படும்.
  • இனிமேல் செம்மைப்படுத்துதல் முடிந்ததை பேச்சுப் பக்கத்தில் குறித்துவிடுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:19, 30 சனவரி 2023 (UTC)Reply
    வணக்கம் மேம் மணல் தொட்டியில் வகுபடும் தன்மை விதிகள் எழுதிவருகிறேன் ..... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 13:24, 12 திசம்பர் 2023 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம். இந்தப் பக்கத்தில் காணப்படும் பெரும்பாலான கணிதக் கட்டுரைகள் தானியங்கித் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்டவை போன்று தெரிகின்றன. அவற்றை குறைந்தபட்சம் குறுங்கட்டுரைகளாக மாற்ற இயலுமா? புதிதாக எழுதுவது எளிது எனக் கருதினால் நீக்குவதற்கு பரிந்துரை செய்யலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இவற்றை கவனித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 26 சனவரி 2023 (UTC)Reply

கவனிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:22, 30 சனவரி 2023 (UTC)Reply
https://ta.wikipedia.org/s/5jnn கட்டுரை எழுதியுள்ளேன் மேம் இதில் மேற்கோள்கள் 10 11 12 சிகப்பாக வருகிறது ஏன் என புரியவில்லை மேம் சரி செய்து உதவ வேண்டும் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:22, 16 சனவரி 2024 (UTC)Reply
எனது மணல் தொட்டியில் முதல் படம் வரவில்லை மேம் https://en.wikipedia.org/wiki/Square_root_of_2 ஏன் என்று புரியவில்லை இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 17:07, 28 சனவரி 2024 (UTC)Reply

வணக்கம். வளர்த்தெடுக்க இயன்றவற்றை வளர்த்து, மற்றக் கட்டுரைகளை நீக்கப் பரிந்துரைத்ததை அறிந்துகொண்டேன். தங்களின் பேருதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 4 பெப்ரவரி 2023 (UTC)

@Selvasivagurunathan m: உங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் முன்னெடுக்கும் கிடப்பில் கிடக்கும் கட்டுரைகளின் துப்புரவு பணிகளில் நானும் சிறிதளவு பங்களிக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் தரமற்றக் கட்டுரைகள் களையப்படவேண்டும் என்ற நோக்கில் முனைப்புடன் செயல்படும் உங்கள் முயற்சி நிறைவுபெற வாழ்த்துகளுடன்--Booradleyp1 (பேச்சு) 04:58, 5 பெப்ரவரி 2023 (UTC)

  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 05:11, 5 பெப்ரவரி 2023 (UTC)

உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது, தமிழ் விக்கியின் பலமாகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சிறிய குழுவே தீவிரமாக இயங்கினாலும், சிறப்பான முறையில் பங்களிப்பினைத் தருவது நமது கூடுதல் பலம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:05, 5 பெப்ரவரி 2023 (UTC)

  விருப்பம் Booradleyp1 (பேச்சு) 03:44, 6 பெப்ரவரி 2023 (UTC)

தகவல்

தொகு

வணக்கம். உங்களின் உதவிக்கு நன்றி. ஆனால், ஜான்சி கட்டுரையானது இந்த நிகழ்வின்போது கணக்கில் வந்துவிட்டது. அப்போது, சத்திரத்தான் அவர்கள் பகுப்பை நீக்கவில்லை; பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இடவில்லை. இதனை நேற்று அவருக்கு சுட்டிக்காட்டிய பிறகு, தேவைப்படும் தொகுப்புகளைச் செய்தார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 9 மார்ச் 2023 (UTC)

தகவலுக்கு நன்றி மா. செல்வசிவகுருநாதன். --Booradleyp1 (பேச்சு) 12:58, 9 மார்ச் 2023 (UTC)

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

வணக்கம். அழைப்பினை ஏற்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பகுதியில் தங்களின் பெயரை பதிவுசெய்து உதவுமாறு வேண்டுகிறோம். மற்றவர்களுக்கு இதுவொரு ஊக்கமாக அமையும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 4 மே 2023 (UTC)Reply

நினைவூட்டலுக்கு நன்றி மா. செல்வசிவகுருநாதன். பதிவுசெய்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:18, 5 மே 2023 (UTC)Reply

பத்மா ஆறு

தொகு

வணக்கம். பத்மா ஆறு எனும் கட்டுரையை பத்மா நதி கட்டுரையோடு ஒன்றிணைத்திருக்கவேண்டும் எனக் கருதுகிறேன். ஏனெனில் பத்மா ஆறு கட்டுரையில் தகவற்சட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. புவியியல் வரைபடமும் இருந்தது. பரவாயில்லை; கொஞ்சம் காத்திருங்கள், ஒன்றிணைப்பினை செய்துவிட்டு தங்களுக்கு இங்கு தெரிவிக்கிறேன்.

நீங்கள் ஏற்கனவே அறிந்தபடி, ஒத்த கட்டுரைகளை ஒன்றாக இணைப்பதற்கென்று விக்கிப்பீடியாவில் கொள்கைகளும், நெறிமுறைகளும் உள்ளன. தகுந்த உள்ளடக்கங்களை ஏற்கனவே இட்டவர்களுக்கு credit இருக்கவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.

உங்களின் பார்வைக்கு: விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:20, 14 மே 2023 (UTC)Reply

தங்கள் கருத்தினை ஏற்று இனிவரும் கட்டுரைகளில் கவனமாய் இருக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:30, 14 மே 2023 (UTC)Reply

கீழ்க்காணும் செய்படிகளைச் செய்துள்ளேன்:

  1. 'பத்மா ஆறு' கட்டுரையில் இருந்த (கூடுதல்) உள்ளடக்கங்களை 'பத்மா நதி' கட்டுரையில் சேர்த்தேன். ஏனெனில் 'பத்மா நதி' கட்டுரைதான் முதலில் எழுதப்பட்டதாகும் (அந்நாளில் ஒரு வார காலத்திற்கு முன்பு). இப்போது, அனைவரின் பங்களிப்புகளும் வரலாற்றில் பதிவாகிவிட்டன.
  2. ஒன்றிணைத்த பிறகு, தலைப்பினை 'பத்மா ஆறு' என்பதாக நகர்த்தினேன். தலைப்பில் தனித்தமிழ் இருக்கட்டும் என்பதற்காக.
  3. அதன்பிறகு, தனித்தமிழ் இருக்கட்டும் என்பதற்காக கட்டுரையின் உள்ளே அனைத்து இடங்களிலும் நதியை ஆறு என்பதாக மாற்றியுள்ளேன்.

உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:03, 14 மே 2023 (UTC)   விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:03, 15 மே 2023 (UTC)Reply

பீடேட் அமைப்பு

தொகு

பீடேட் அமைப்பு எனும் கட்டுரையை நீக்கப் பரிந்துரை செய்திருந்தீர்கள். இணையான ஆங்கிலக் கட்டுரைக்கு மொழியிடை இணைப்பு உள்ளது. யாராவது செம்மைப்படுத்துகிறார்களா எனப் பார்க்கலாமா? தங்களின் கருத்தினை அறிந்துகொள்ள விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 23 மே 2023 (UTC)Reply

\\யாராவது செம்மைப்படுத்துகிறார்களா எனப் பார்க்கலாமா?\\  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:53, 23 மே 2023 (UTC)Reply

நன்றிகள்

தொகு

தற்போது நடைபெற்று வரும் செம்மைப்படுத்துதல் பணியில் ஈடுபட்டு, 100 எனும் எண்ணிக்கையைக் கடந்து, கட்டுரைகளைச் செம்மைப்படுத்தி வருகிறீர்கள். இந்த அரும்பணியை செய்துவரும் தங்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். -- ஒருங்கிணைப்பாளர்கள் Sridhar G, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 14 சூன் 2023 (UTC)Reply

பதக்கம்

தொகு
  செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் Booradleyp1, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 105 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:12, 2 சூலை 2023 (UTC)Reply

செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!

தொகு

வணக்கம்.

அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!

திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்


விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

தலைப்பு மாற்றப்பட்டது

தொகு
பாலியத்து அச்சன்கள் என மாற்றியாகிவிட்டது அம்மா. நன்றி--Balu1967 (பேச்சு) 14:51, 12 அக்டோபர் 2023 (UTC)Reply
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:55, 12 அக்டோபர் 2023 (UTC)Reply

நினைவுப் பரிசு

தொகு

வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டதற்கு நன்றி. நினைவுப் பரிசு பெற இந்தப் படிவத்தை நிரப்பி உதவவும் நன்றி.-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா (✉) 10:26, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

 Y ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 11:11, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பங்களித்து வருவதற்கு நன்றிகள். 'தற்போதைய 749 எனும் எண்ணிக்கையை 31-சனவரி-2024 அன்றைக்குள் 600 எனும் எண்ணிக்கையாக மாற்றவேண்டும்' என்பது என்னுள் உள்ள இலக்கு. அதன்பிறகு, பிப்ரவரி மாதத்தை சிறப்பு மாதமாக அறிவித்து, இந்த 600 எனும் எண்ணிக்கையை சுழியம் ஆக்கிவிடலாம்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:50, 17 அக்டோபர் 2023 (UTC)Reply
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:31, 18 அக்டோபர் 2023 (UTC)Reply

உதவி

தொகு
மதிப்பு மிகு மேம் வணக்கம் https://ta.wikipedia.org/s/5jnn எனது மணல் தொட்டியில் உள்ள கட்டுரையை தமிழாக்கம் சரி பார்த்து பொது வெளியில் நகர்த்த அனுமதி வழங்க வேண்டும் நன்றி மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:08, 1 நவம்பர் 2023 (UTC)Reply
மதிப்பு மிகு மேம் வணக்கம் https://ta.wikipedia.org/s/5jnn எனது மணல் தொட்டியில் உள்ள கட்டுரையை தமிழாக்கம் சரி பார்த்து பொது வெளியில் நகர்த்த அனுமதி வழங்க வேண்டும் நன்றி மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:19, 16 நவம்பர் 2023 (UTC)Reply
கணித கட்டுரையை தங்களின் மேலான பார்வைக்கு ..... நகர்த்தலாமா மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 03:22, 26 நவம்பர் 2023 (UTC)Reply
கணித கட்டுரை வேண்டும் மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 14:21, 24 திசம்பர் 2023 (UTC)Reply
@இ.வாஞ்சூர் முகைதீன்: ஐயா, பகுப்பு:கணிதத் துறைகள் எனும் பகுப்பிலுள்ள சேய்ப் பகுப்புகளையும் அவற்றிற்குள்ளே வகைப்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகளையும் பார்வையிடுங்கள். அதன் மூலமாக, இல்லாத கட்டுரைகளைப் பற்றி அறிந்துகொள்ள இயலும். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளிலும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்யுங்கள்; விக்கிப்பீடியாவின் கூறுகளை கற்றுக்கொள்ள உதவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:44, 24 திசம்பர் 2023 (UTC)Reply

வணக்கம். வரைவு:வகுபடும் தன்மை விதி பக்கத்திலுள்ள உள்ளடக்கங்களை சரிபார்த்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 21 திசம்பர் 2023 (UTC)Reply

 Y ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 13:54, 22 திசம்பர் 2023 (UTC)Reply
மிக்க நன்றி. பொதுவெளிக்கு நகர்த்திவிட்டேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:13, 22 திசம்பர் 2023 (UTC)Reply
வரைவு:ஒல்ப்காங் ஹான்‎ கணிதவியலாளர் கட்டுரையை நகர்ததலாமா மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:13, 26 திசம்பர் 2023 (UTC)Reply
 Y ஆயிற்று. @வாஞ்சூர் முகைதீன்--Booradleyp1 (பேச்சு) 04:29, 27 திசம்பர் 2023 (UTC)Reply
மகிழ்ச்சி இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 13:59, 27 திசம்பர் 2023 (UTC)Reply
மதிப்பு மிகு மேம் வரைவு:எரிக் மைக்கேல் ரெய்ன்ஸ்
https://ta.wikipedia.org/s/cera கணிதவியலாளர் கட்டுரையை நகர்ததலாமா மேம் சரி செய்து உதவிட வேண்டுகிறேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:26, 28 திசம்பர் 2023 (UTC)Reply
வரைவு:சிறப்பு சார்புகள்
https://ta.wikipedia.org/s/cexb கணித கட்டுரையை நகர்ததலாமா மேம் சரி செய்து உதவிட வேண்டுகிறேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 19:04, 29 திசம்பர் 2023 (UTC)Reply
வரைவு:சிறப்பு சார்புகள்
https://ta.wikipedia.org/s/cexbபுதிய கட்டுரை எழுதியுள்ளேன் மேம் சரிபார்த்து உதவ வேண்டுகிறேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 10:47, 31 திசம்பர் 2023 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம். ஒரு வரைவுக் கட்டுரையை, நிர்வாக அணுக்கம் இல்லாத பயனரால் பொதுவெளிக்கு வழிமாற்று இல்லாமல் நகர்த்த இயலுமா என்பதனை அறிய விரும்புகிறேன். வரைவு:சோதனை டிசம்பர் எனும் வரைவை வழிமாற்று இல்லாமல் நகர்த்த முயற்சி செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். வழிகாட்டல் நிகழ்படம் உருவாக்குவதற்கு உதவிகரமாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:41, 28 திசம்பர் 2023 (UTC)Reply

@Selvasivagurunathan m: தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னால் வழிமாற்றில்லாமல் நகர்த்த இயலவில்லை.--Booradleyp1 (பேச்சு) 07:33, 2 சனவரி 2024 (UTC)Reply

பயிலரங்கு 2024

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பயனர்களின் பங்களிப்பினைப் பெறுவதற்காக பயிலரங்கு 2024 (திருநெல்வேலி) திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிலரங்கத்தின் முக்கியக் கூறுகள்:

தொகு
  1. அறிவியல், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் கல்லூரி ஆசிரியர்கள் 50 பேருக்கு, தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  2. நாள் 1 - அறிமுகமும், அடிப்படைப் பயிற்சியும் (தளத்தில் உலவுதல், தொகுத்தல்). ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, விரிவாகக் கற்றுத் தரப்படும்.
  3. நாள் 2 - கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளை புதிய பயனர்கள் செய்வர். பயிற்சி தருபவர்கள் உடனிருந்து உதவுவர்.
  4. 1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலானது புதிய பயனர்களிடத்து தரப்படும். அவர்களுக்கு விருப்பமான கட்டுரையை அவர்கள் தேர்ந்தெடுத்து, மேம்பாட்டுப் பணிகளைச் செய்வர்.
  5. பயிலரங்கத்தின் முடிவில் மொத்தமாக 250 கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் (ஒரு பயனர், 5 கட்டுரைகளை மேம்படுத்துவார்).
  6. புதிய கட்டுரையை வரைவு எனும் தலைப்பின்கீழ் உருவாக்குவதற்கு வழிகாட்டல் தரப்படும். நேரமிருப்பின், ஒவ்வொருவரும் ஒரு கட்டுரை மட்டும் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.

உங்களிடம் கோரப்படும் உதவி:

தொகு

பயிற்சி பெறும் புதிய பயனர்களுக்கு தரவேண்டிய பட்டியலை உருவாக்குவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை வரிசையாக இடலாம்.

சில குறிப்புகள்:

  1. திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  2. விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  3. ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  4. மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
  5. மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.

பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.

மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 8 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Odious number

தொகு

வணக்கம், en:Odious number இதற்குத் தமிழ்ச் சொல் உண்டா? முடிந்தால் இதனைத் தமிழாக்கம் செய்யுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:52, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

@Kanags: எனக்கு இதற்கான கணிதத் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. கட்டுரையை உருவாக்க முடியும். ஆனால் 'Odious' - 'கேவலமான, அருவருப்பான' - என்ற நேரடியான தமிழாக்கம் கொண்டு இதற்கான தமிழ்ப் பெயரை உருவாக்கலாமா (இதற்கு மாறான பண்புடைய எண் 'evil number' எனவும் உள்ளது). அல்லது ஒற்றை எண்ணிக்கையில் '1' களைக் கொண்ட இரும எண் என்ற இதன் பண்பைக் கொண்டு காரணப் பெயராக இதற்கு உருவாக்கலாமா என்று ஆலோசித்து பொருத்தமான பெயரைத் தேர்ந்தெடுக்க முடிந்தால் நான் இருவித எண்களுக்கும் கட்டுரைகளை உருவாக்குகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 11:26, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
Odious, Evil இரண்டும் நேரடிக் கருத்தைக் கொண்டுள்ளது போல்தான் தெரிகிறது. உருசிய மொழிக் கட்டுரைகளைப் பார்த்தேன். அவையும் இவ்வாறே நேரடிக் கருத்தையே, கேவலமான எண் Одиозное число, Злое число தீய எண், கொண்டுள்ளன. ஏனைய மொழிகளிலும் அவ்வாறே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 12:12, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
பரிந்துரைக்கு மிகவும் நன்றி. 'கேவலமான எண்', 'தீய எண்' என்ற தலைப்புகளைக் கொண்டு கட்டுரைகளை உருவாக்குகி விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:25, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
odd என்பதே odious என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கக் காரணமாயிருந்திருக்கிறது. அதுபோல even போல ஒலிக்கும்விதமாக evil தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழிலிலும் ஒரு, இரு வரும்படியாக ஒரூஉ எண், இருள் எண் என்று பெயரிடுவது பொருத்தமாக இருக்கும். [ஒருவுக ஒப்பிலார் நட்பு - ஒருவுதல் (விட்டுவிடுக/ நீங்குக) என்பது detestable (odious) என்பதோடு பொருந்தி வருகிறது]. The bra, The Ket என்பதற்கெல்லாம் கட்டுரைகள் உருவாகும்போது இன்னும் இருக்கிறது வேடிக்கை. Paramatamil (பேச்சு) 16:39, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
@Paramatamil: உங்கள் பரிந்துரைக்கு நன்றி. ஆனால் "ஒரூஉ" என்ற சொல் ஏன் செய்யுட்களில் வரும் சொற்கள் போல உள்ளது போல தோன்றுகிறது. ஏன் "உ" என்பது சொல்லின் இறுதியில் வருகிறது என்பதற்கான காரணம் விளங்கவில்லை.--Booradleyp1 (பேச்சு) 04:07, 12 ஏப்பிரல் 2024 (UTC)Reply
@Kanags: Paramatamil பரிந்துரைத்த பெயர் குறித்து தங்களது கருத்தைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்."கேவலமான எண்" என கட்டுரை உருவாக்கிவிட்டு வழிமாற்றாக அவர் பரிந்துரைத்த பெயரைக் கொடுக்கலாமா?.
@Paramatamil: பரிந்துரைத்த சொற்கள் இரண்டும் சிறந்த சொற்களாகவே எனக்குத் தெரிகிறது. இவ்விரண்டு எண்களும் odd, even என்ற கருத்தியலில் இருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது. நேரடிக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. எனவே நாமும் அவர் பரிந்துரைத்த ஒரூஉ எண், இருள் எண் என்ற சொற்களையே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். இலக்கணம்: மரூஉ.--Kanags \உரையாடுக 11:10, 12 ஏப்பிரல் 2024 (UTC)Reply
ஆம்! ஒரூஉ எண், இருள் எண் என்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 11:28, 12 ஏப்பிரல் 2024 (UTC)Reply
@Kanags:, @கி.மூர்த்தி:, @Paramatamil: மூவரின் பரிந்துரைகளுக்கும் மிக்க நன்றி. அவ்வாறே கட்டுரைகளை உருவாக்கி விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:32, 12 ஏப்பிரல் 2024 (UTC)Reply

நல்ல கட்டுரை- அழைப்பு

தொகு
 

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,350 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)Reply

கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகோள்

தொகு

வணக்கம். இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:21, 4 சூன் 2024 (UTC)Reply

விக்கித்திட்டம் கணிதம்

தொகு

வணக்கம். WikiProject Mathematics எனும் ஆங்கிலப் பக்கத்திற்கு இணையான விக்கித்திட்டம் கணிதம் எனும் பக்கத்தை தொடங்கியுள்ளேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் விக்கித்திட்டம் எனும் கருத்துருவை தமிழ் விக்கிப்பீடியாவிலும் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக விக்கித்திட்டம் கணிதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டப் பணியாக, நீங்கள் உருவாக்கும் கணிதம் குறித்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் {{விக்கித்திட்டம் கணிதம்}} என்பதனை இட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வார்ப்புரு இடப்படும் கட்டுரைகள், பகுப்பு:விக்கித்திட்டம் கணிதம் கட்டுரைகள் எனும் பகுப்பில் பட்டியலாக சேரும். இவ்வாறு செய்வதன் காரணமாக, கணிதம் குறித்தான கட்டுரைகளின் பட்டியல் இற்றையாகிக் கொண்டே இருக்கும்.

குறிப்புகள்:

  1. ஏற்கனவே இருக்கும் கணிதம் கட்டுரைகளில் தானியங்கி மூலமாக இந்த வார்ப்புருவை சேர்க்க முயற்சிகள் எடுக்கப்படும்.
  2. இத்தகு கூட்டு உழைப்பின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை ஆழம் எனும் அளவீடு அதிகரிக்கும்.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:27, 12 சூன் 2024 (UTC)Reply

நன்றி செல்வசிவகுருநாதன். இனிவரும் கட்டுரைகளில் இந்த வார்ப்புருவை இணைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:12, 13 சூன் 2024 (UTC)Reply
வேண்டுகோளை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:12, 13 சூன் 2024 (UTC)Reply
குறுங்கட்டுரைகள் பகுப்பின் பேச்சுப் பக்கத்தில் நான் செய்த மாற்றத்தால், ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகிறேன். கணிதம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு மட்டும் இட்டால் போதுமானது. வேறு எதுவும் செய்யவேண்டியது இல்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 24 சூன் 2024 (UTC)Reply

சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பணியை விரைந்து முடிக்கும் வகையில், சூலை 2024 மாதத்தை சிறப்பு மாதமாக அறிவிக்க இருக்கிறோம். கூடுதலாக, சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றை 13-சூலை-2024 அன்று சென்னையில் நடத்தவிருக்கிறோம். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை வழங்க அன்புடன் அழைக்கிறோம். நிகழ்வு குறித்த விவரங்கள் சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளன. நேரடியாக பங்களிக்க இயலவில்லை எனும் சூழலில், அன்றைய நாளில் இணையம் வழியே இணைந்தும் பயனர்கள் தங்களது பங்களிப்பைச் செய்யலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:45, 14 சூன் 2024 (UTC)Reply

வணக்கம். இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு நன்றிகள்! சூலை மாதத்தை இந்தப் பணிக்கான சிறப்பு மாதமாக அறிவித்துள்ளோம். உங்களால் நேரடி தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை எனில், சூலை 13 அன்று இணையம் வழியே நம் குழுவினருடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறேன். இங்கு உங்களின் விருப்பத்தை இட்டால், மற்றவர்களுக்கு ஊக்கப்படுத்துதலாக அமையும். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:00, 2 சூலை 2024 (UTC)Reply

வணக்கம். இந்த நிகழ்வு நடைபெறுவதையொட்டி, புதிய பட்டியல் ஒன்றை உருவாக்கியுள்ளோம். நீங்கள் மேம்படுத்த விரும்பும் கட்டுரைகளின் தலைப்புகளை இந்தப் பக்கத்தில் பதிவு செய்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:28, 12 சூலை 2024 (UTC)Reply

அங்கு சில கட்டுரைகளைப் பதிவு செய்திருக்கிறேன். தொடர்-தொகுப்பு நடக்கும் ஜூலை 13 இல் தான் சரிபார்க்கவேண்டுமா, அல்லது இப்போதிருந்தே செய்யலாமா? Booradleyp1 (பேச்சு) 13:01, 12 சூலை 2024 (UTC)Reply
இப்போதிருந்தே செய்யலாம். கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம். திட்டத்தின் நிறைவைக் கொண்டாடும் வகையிலும், பயனர்கள் அவ்வப்போது நேரில் சந்தித்து பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்வினை நடத்துகிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:22, 12 சூலை 2024 (UTC)Reply
நன்றி சிவகுருநாதன். என்னால் இயன்ற அளவுக்கு செய்கிறேன். இப் பணியினை முன்னெடுத்து சிறப்பாகப் பங்காற்றிவரும் உங்களுக்கும் இதர பயனர்களுக்கும் எனது வாழ்த்துகளும் பாரட்டுதல்களும். Booradleyp1 (பேச்சு) 13:28, 12 சூலை 2024 (UTC)Reply
வாழ்த்துகளுக்கு நன்றி! உங்களின் பங்களிப்பும், வாழ்த்துக்களும் எப்போதும் எங்களை ஊக்குவிக்கும். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:42, 12 சூலை 2024 (UTC)Reply

இந்த நிகழ்வை ஆவணப்படுத்தும் பொருட்டு, இந்தப் பக்கத்தில் தங்களின் கையொப்பம் இட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:59, 14 சூலை 2024 (UTC)Reply

 Y ஆயிற்று Booradleyp1 (பேச்சு) 04:14, 14 சூலை 2024 (UTC)Reply

தொடர்-தொகுப்பு 2024

தொகு

வணக்கம்!

தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Booradleyp1&oldid=4059530" இலிருந்து மீள்விக்கப்பட்டது