தத்துவ விவேசினி
தத்துவ விவேசினி என்பது சுயசிந்தனை (Free Thought), பகுத்தறிவு (Rationalism), சமயசார்பின்மை (Secularism), இறைமறுப்பு (Atheism) போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி சென்னை இலௌகிக சங்கத்தால் 19 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட ஓரு தமிழ் இதழாகும்.[1] இந்த இதழை பு. முனிசுவாமி நாயகர் முன்னின்று 1882 முதல், 1888 வரை நடத்தினார்.[மேற்கோள் தேவை]
இதன் இதழ்களைத் தொகுத்து வே. ஆனைமுத்து இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இவ்விரு தொகுப்புக்களுக்கும் இவர் ஆராய்ச்சி முன்னுரைகளும் வழங்கி உள்ளார்.[2]
இந்த இதழை மறுத்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த உதயபானு பத்திரிகையில் பல கட்டுரைகளும், அதன் தொகுப்பான ஈச்சுர நிச்சயம் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளன. இதனூடாக அக்காலத்தில் நடைபெற்ற கொள்கை விவாதத்தில் இந்த இதழ் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது தெளிவாகிறது.