பேச்சு:கண்டராதித்தர்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic கேள்வி
கேள்வி
தொகுதஞ்சை வரைக்கும் இராட்டிடகூடர்கள் முன்னேறி வந்தார்களா? எந்த சரித்திர ஆசிரியர்கள் அப்படி சொல்லி இருக்கிறார்கள்? காஞ்சி வரைக்கும் தானே முன்னேறி வந்தார்கள்?--விமலாதித்தன் 18:44, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
"கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவனுக்குப் பெருமை சேர்த்துள்ளார்." மேற்கண்ட வரிகள் இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாதவை ஆகும். ஏனெனில் ஒட்டக்கூத்தர் கண்டராத்திதருக்கு சம காலத்தவரே அல்ல. மிகவும் பிற்காலத்தில் இரண்டாம் இராஜராஜன் காலத்தவர். எனவே, மேற்கண்ட வரிகளை நீக்கி விடலாம். --ஜீவா (பேச்சு) 03:13, 22 அக்டோபர் 2012 (UTC)
- குறிப்பிட்ட இரு நூல்களும் இரண்டாம் இராசராசன் மீது பாடப்பட்டதாக நூல்களின் கட்டுரைகளில் குறிப்பிடுகிறார் செங்கைப் பொதுவன் ஐயா. முரண்பாடு காணப்படுகிறது.--Kanags \உரையாடுக 07:26, 22 அக்டோபர் 2012 (UTC)
- எளியேன் கட்டுரையில் உள்ளவை மு. அருணாசலம் கருத்து. கண்டன் காலத்தில் இராட்டிரகூடர் ஆட்சி தொண்டை மண்டலம் முழுமையும் பரவியிருந்தது. பரவல் சான்று 2 கட்டுரையாளர் விமலாதித்தன் தொண்டை மண்டலம் என்பதைக் காஞ்சி எனக் கொண்டிருக்கிறார். எனவே தஞ்சை, காஞ்சி என்னும் கருத்துக்களை விடுத்து தொண்டை மண்டலம் முழுமையும் பரவியிருந்தது எனக் குறிப்பது தக்கது. --Sengai Podhuvan (பேச்சு) 23:27, 27 அக்டோபர் 2012 (UTC)
- பிந்திய புலவர் முந்திய அரசன் புகழைப் பாடியிருக்க மாட்டாரா? பிந்திய புலவர் பாடியவை முந்திய அரசருக்குச் சான்றாகாதா? எனவே குறிப்பை நீக்கவேண்டியதில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 10:12, 28 அக்டோபர் 2012 (UTC)
- நன்றி ஐயா.--Kanags \உரையாடுக 11:40, 28 அக்டோபர் 2012 (UTC)