வாருங்கள், கி. கார்த்திகேயன்! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் கி. கார்த்திகேயன், உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் கி. கார்த்திகேயன், உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--Theni.M.Subramani 06:44, 10 ஜூன் 2010 (UTC)


வணக்கம்

தொகு

வணக்கம் கார்த்திகேயன், நல்ல கட்டுரைகளைத் தொடங்கி வருகிறீர்கள். வாழ்த்துகள். மதுரகாளியம்மன் கட்டுரையில் பக்தர் நோக்கிலிருந்து எழுதப்பட்ட சில வாக்கியங்களை மாற்றியமைத்துள்ளேன். ”அருள் பாலித்தல்” போன்ற தொடர்கள் நம்பிக்கையாளர்கள் / பக்தர்கள் பார்வையிலிருந்து வருவன. நாம் விக்கியில் தகவல்களை மட்டும் எழுதுவதால், பொதுவான பதங்களை பயன்படுத்த வேண்டும்.--சோடாபாட்டில் 05:05, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

PostgreSQL

தொகு

இதை போஸ்ட்கிரே எஸ்குயெல் என்று பிரித்து எழுதலாமா. இப்போதுள்ள தலைப்பு சட்டென்று புரியமாட்டேங்குது.--சோடாபாட்டில் 08:45, 15 நவம்பர் 2010 (UTC)Reply

பதில் இங்கே சொல்லவேண்டுமா அல்லது சோடாபாட்டில் -அவர்களின் பேச்சுபக்கத்தில் சொல்ல வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை. எனவே என்னுடைய பதிலை சோடாபாட்டில் பேச்சுப்பக்கதில் தந்துள்ளேன்.
ஆங்கிலத்தில் postgresql போஸ்கிரெஸ்குயெல் எனவே உச்சரிக்கவேன்டும்(உச்சரிக்கப்படுகிறது.)((எ-டு)ajax - ஏஜக்ஸ், mySQL - மைசெக்யூல், Linux - லைனக்ஸ் என்றே உச்சரிக்கவேண்டும் ஆனால் தமிழ் நடைமுறையில் அஜாக்ஸ், மைஎஸ்க்யூஎல், லினக்ஸ் என்றே வழங்கப்படுகிறது.) அதை எண்ணிதான் அவ்வாறு தலைப்பிட்டேன். நடைமுறைக்கு ஏற்றவண்ணம் திருத்திக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனையில்லை. விரும்பினால் தலைப்பை நகர்த்தும் முன் இன்னும் சிலரிடம்(கணிணி சார்ந்த தொழில்நுட்பம் குறித்து அறிந்தவர்கள், எழுதிவருபவர்கள்) வேண்டுமாணால் கேட்டுவிடுங்கள். --நன்றி கி. கார்த்திகேயன்

மகிழ்ச்சி

தொகு

சென்னை விக்கிச் சந்திப்பில் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. நீங்கள் மேலும் பல நல்ல பங்களிப்புகளைத் தரவும், சென்னையில் பல விக்கிக் களப் பணிகளில் ஈடுபடவும் வேண்டுகிறேன். நன்றி--இரவி 07:34, 16 நவம்பர் 2010 (UTC)Reply

கண்டிப்பாக இரவி சென்னை விக்கிச் சந்திப்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு உங்களைப்போன்றவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். விக்கியின் இது போன்ற நிகழ்வுகளை எல்லோருக்கும் மறவாமல் தெரிவிக்கவும் கலந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். என்னாலானா பங்களிப்பை எப்போதும் அளிக்க தயாராகவுள்ளேன்.

பலே!

தொகு
  அசத்தும் புதிய பயனர் விருது
--த. விக்கியில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் --சோடாபாட்டில் 08:04, 16 நவம்பர் 2010 (UTC) Reply
மிக்க நன்றி நண்பரே.. நான் இவ்விருதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. தேனி சுப்பிரமணி அவர்கள் எனக்கான பேச்சுப்பக்கத்தை உருவாக்கிய பிறகு எனக்கு விக்கிப்பீடியாவிலிருந்து கிடைத்த முதல் பாராட்டுதல் "நல்ல கட்டுரைகளை துவங்கி எழுதிவருகிறீர்கள்" என உங்களிடம் இருந்துதான் கிடைத்தது. தற்போது "அசத்தும் புதிய பயனர் விருது"-ம் உங்களிடம் இருந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இதுபோலவே நீங்கள் புதிய பயனர்களை இனங்கண்டு அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி பாராட்டி எழுத தூண்டவேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.

பக்க இணைப்பு

தொகு

கார்த்திகேயன், உள்ளிணைப்பற்ற பக்கங்களில் உள்ளிணைப்பு கொடுத்து வருவது நல்ல முயற்சி. கட்டுரை எழுதுவது மட்டுமின்றி இது போன்ற பராமரிப்புப் பணிகளிலும் ஈடுபடுவது பயன்தரத்தக்கது. தவறாக எடுத்துக்கொள்ளாமல் இதைக் கருத்தில் கொள்ளவும்: உள்ளிணைப்புத் தரும் போது சிவப்பு இணைப்பு அதிகம் வராத படி பார்த்துக் கொள்ளவும். காட்டாக ஆனையிறவுக் கோட்டை கட்டுரையில் நீரேரி என்பதைச் சிவப்பிணைப்பாக்கி இருந்தீர்கள். அதை ஏரிக்கு இணைப்பு தந்திருக்கலாம். தங்களைக் குறை கூறுவதற்காக ‌இதைச் சொல்லவில்லை. நட்பு எண்ணத்துடனேயே கூறுகிறேன். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:49, 18 ஏப்ரல் 2011 (UTC)

நான் பக்க இணைப்பு கொடுப்பது குறித்த உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. பெரும்பாலும் நான் பக்க இணைப்பு கொடுக்கும்போது அதற்கான கட்டுரை வேறு ஏதேனும் பெயரில் இருக்கிறதா என பாரத்துவிட்டு கொடுப்பதுதான் வழக்கம், சில சமயங்களில் சரியாக கவனிக்காமல் விட்டுவிடுகிறேன். அவ்வப்போது இதுபோன்ற சிறுசிறு பாராட்டுதல்களையும், பிழை சுட்டிகாட்டலையும் எல்லா விக்கிபீடியர்களுக்கும் குறிப்பாக புதிய விக்கிபீடியர்களுக்கு நீங்கள்(எல்லோரும்) தொடரந்து வழங்கவேண்டும், அது தமிழ் விக்கிபீடியாவை மேலும் பல உயரங்களை அனாயசமாக எட்ட உதவும். மிக்க மகிழச்சி மிக்க நன்றி ;) கி. கார்த்திகேயன்

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் கி. கார்த்திகேயன்,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi கி. கார்த்திகேயன்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

ஊடகப் போட்டி

தொகு

கார்த்தி,

உங்கள் புகைப்படங்களை ஊடகப் போட்டியில் பதிவேற்றுங்கள். பரிசுகளை வெல்லலாம் :-). வலைவாசல்: ஊடகப் போட்டி வழியாகச் சென்று விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:59, 18 நவம்பர் 2011 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

தொகு




தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், கி. கார்த்திகேயன்!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 04:26, 9 பெப்ரவரி 2013 (UTC)

ஐயா வணக்கம், 'கொ மா கோ இளங்கோ' என்ற பெயரிலான கட்டுரை ஒன்றை நான் தோற்றுவித்தேன். போதிய உசாத்துணைகள் வழங்கிய பின்னரும் அந்த பக்கத்தில் சிக்கல் தொடர்கிறது. ‌‌‌எனவே அனுபவம் மிக்க தங்களை உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம். Rajaguru Kar Balan (பேச்சு) 17:21, 11 செப்டம்பர் 2021 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கள்

தொகு

வணக்கம், கி. கார்த்திகேயன்!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:32, 3 மார்ச் 2013 (UTC)

நன்றி இரவி :).

சென்னை விக்கியர் சந்திப்பு

தொகு

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:02, 4 மார்ச் 2013 (UTC)

எழுத்து

தொகு

ற் கடின ஒலி, வல்லினம், ற் க்குப் பிறகு மெய்யெழுத்து வருவது இல்லை. வரவேற்ப்பு என்பது பிழை, வரவேற்பு, மற்போர் என்பதே சரி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:17, 29 மார்ச் 2013 (UTC)

சரிதான் கவனிக்கல, என்னோட உலாவி cache-ல் இருந்து முன்னாடி டைப்பண்ண வாக்கியங்களை option-ஆ கொடுக்கறப்பபோ கவனிக்காம இத செலக்ட் பண்ணிட்டேன்(வரவேற்ப்பு, வரவேற்பு இரண்டுமே cache-ல இருந்திரு க்கு). முத வேலையா என்னோட cache-ஐ clear பண்ணிடறேன். தமிழ்குரிசில் என்னை கையும் களவுமா புடிச்சிட்டீங்க ;), தப்ப சொன்னதுக்கு நன்றி கி. கார்த்திகேயன் (பேச்சு) 16:48, 29 மார்ச் 2013 (UTC)
மறுமொழியை காமெடியா போட்டிருக்கீங்க!! தொடர்க உங்கள் பணி, அப்போதுதான் நம்ம விக்கியர் உறவு ரிலாக்சா போகும். :) என் தப்பையும் பார்க்கும்போதெல்லாம் தெரிவிக்க வேண்டுகிறேன். :)))))) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:07, 29 மார்ச் 2013 (UTC)

முதற்பக்கச் செய்திகள்

தொகு

செய்திகளைச் சரியாகவே இணைத்து வருகிறீர்கள். விக்கிசெய்தியில் குறிப்பிட்ட செய்தி இருந்தால் அதற்கும் ஓர் இணைப்பைத் தருவது செய்திக்கு வலுவூட்டும். பொருத்தமான ஒரு படம் இணைப்பது எப்போதும் நல்லது. மேலும், அனைத்து மொழி விக்கிசெய்திகளையும் மூடி விடுவதற்கு பரிந்துரைத்திருக்கிறார்கள்.--Kanags \உரையாடுக 09:32, 31 மார்ச் 2013 (UTC)

நன்றி! மூடிவிட விடுக்கப்பட்டுள்ளப் விக்கியின் பரிந்துரை வருத்தமளிக்கிறது. கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:34, 31 மார்ச் 2013 (UTC)
கார்த்திகேயன், நீங்கள் முதற்பக்கச் செய்திகளை இற்றைப்படுத்தி வருவது குறித்து மகிழ்ச்சி. செய்திகள் சுருக்கமாக இருத்தல் நலம். விவரங்களுக்கு விக்கிச்செய்தி இணைப்பைத் தருவதே முறைமை. கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கூடுதல் செய்திகள் தர இது உதவும். காட்டாக, இன்றைய செய்தியில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதுடன் கூடுதல் விவரங்களை விக்கிச்செய்தியில் கொடுக்கலாம். விக்கிசெய்தியில் கட்டுரை இல்லையென்றாலும் நீங்களே அங்கும் விவரமாக கொடுக்கலாம். --மணியன் (பேச்சு) 06:39, 6 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி! புரிந்துகொண்டேன். இனி பின்பற்றி வழக்கமாக்கிக் கொள்கிறேன். கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:24, 6 ஏப்ரல் 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், கி. கார்த்திகேயன்!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:59, 2 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி இரவி.. :) அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:06, 2 ஏப்ரல் 2013 (UTC)

முதற்பக்க அறிமுக வேண்டல்

தொகு

வணக்கம், கார்த்திகேயன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய விவரங்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கி. கார்த்திகேயன் பக்கத்தில் தர முடியுமா? ஏற்கனவே விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். நன்றி. --இரவி (பேச்சு) 18:27, 10 ஏப்ரல் 2013 (UTC)

வணக்கம் இரவி, விக்கியின் முதற்பக்கத்தில் என்னை அறிமுகப்படுத்த விழைந்தமைக்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி :). எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள், 100 கட்டுரைகளை உருவாக்கிய பின் விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கி. கார்த்திகேயன் பக்கத்தில் விவரங்களைத் தந்துவிடுகிறேன். இன்னும் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் 100 கட்டுரை என்கிற இலக்கை அடைந்துவிடுவேன் என நம்புகிறேன். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 10:21, 11 ஏப்ரல் 2013 (UTC)
  விருப்பம் நானும் 500 கட்டுரைகள் என்னும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:34, 11 ஏப்ரல் 2013 (UTC)
தமிழ்க்குரிசில் விடாதீங்க, விரட்டிப்புடிங்க(இப்புடிலாம் உசுப்பேத்தி, தமிழ்விக்கிக்கு புதுசா ஒரு 50, 100 கட்டுரை கிடைச்சா சரிதான் ;) ). வாழ்த்துக்கள் :). --கி. கார்த்திகேயன் (பேச்சு) 21:59, 11 ஏப்ரல் 2013 (UTC)
சரி, கார்த்திகேயன். உங்கள் இலக்கை அடைந்த பிறகு அறிமுகத்தைத் தாருங்கள்.--இரவி (பேச்சு) 12:01, 11 ஏப்ரல் 2013 (UTC)


நன்றி

தொகு

வாழ்த்துகளுக்கு நன்றி கார்த்தி. அப்புறம் இன்னொரு சேதி. பயனர்:கி. கார்த்திகேயன்/Reference இந்த பக்கத்துக்கு காப்புரிமம் என்ன? ஏனென்றால் இதை நான் சுட்டிருக்கேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:28, 18 ஏப்ரல் 2013 (UTC)

ஆகா.. அந்தப் பக்கமா, அது Creative Commons license-ல இருக்கு :). ஆனா, நீங்க கேட்ட பிறகுதான் எனக்கு கூட ஒரு யோசனை வருது... அந்தப் பக்கத்தை படியெடுத்துப் பயன்படுத்தறவங்க அதுக்கு கட்டணமா புதுசா 10 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைய தொடங்கனும், 10 புதுப்பயனர்களை சேர்க்கனும் சொல்லிடலாம்னு இருக்கேன்... கி. கார்த்திகேயன் (பேச்சு) 23:10, 18 ஏப்ரல் 2013 (UTC)

பத்மா சுப்ரமணியம் குறித்த கட்டுரை...

தொகு

வணக்கம், கார்த்திகேயன்!
விக்கிப்பீடியா:தேவைப்படும் கட்டுரைகள் எனும் பக்கத்தில் பத்மா சுப்ரமணியம் குறித்த கட்டுரை வேண்டுமென ஏப்ரல் 8 அன்று குறிப்பிட்டிருந்தேன். அதனை நீங்கள் நல்ல முறையில் உருவாக்கிவிட்டீர்கள் (தற்செயலானது என நினைக்கிறேன்...). நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 29 ஏப்ரல் 2013 (UTC)

ஓ அப்படியா... மகிழ்ச்சி(கூடவே வருந்துகிறேன், ஆம் தற்போதுதான் கவனித்தேன் அந்தப் பட்டியல் புதுப்பயனர்கள் எழுதுவதற்காக உருவாக்கப்பட்டிருப்பதை... :( ஒரு புதுப்பயனர் எழுதுவதை தடுத்து விட்டேனோ...?). ஆனால், முழுக்க முழுக்க தற்செயலானதே... கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:40, 29 ஏப்ரல் 2013 (UTC)


சென்னை விக்கியர் சந்திப்பு

தொகு

மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:35, 21 மே 2013 (UTC)Reply

அழைப்புக்கு நன்றி பாலா, ஆனால் 26-ம் தேதி எனக்கு மற்றொரு முக்கியப்பணி உள்ளதால் கலந்து கொள்ள முடியாது. இம்முறையும் விக்கிப்பட்டறையில் கலந்துகொள்ள முடியாமைக்கும், உங்களைச் சந்திக்க முடியாதற்கும் வருந்துகிறேன். பணிப்பளுவின் காரணமாக என்னால் முன்புபோல விக்கிப் பங்களிப்புகளைச் செய்ய முடியாமலிருக்கிறேன். விரைவில் விக்கிக்கு என நேரம் ஒதுக்கி பங்களிக்கும் வகையில் என்னுடைய கால அட்டவணையை மாற்றி பங்களிப்பேன். நன்றி. --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:46, 21 மே 2013 (UTC)Reply

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:19, 18 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் தொலைப்பேசி எண் தேவை. என் எண் 99431 68304. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான நேர அட்டவணை, இட விவரங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா பக்கத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். அருள்கூர்ந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 19:56, 27 செப்டம்பர் 2013 (UTC)
வருந்துகிறேன் வெள்ளியன்று மாலை 6 மணிக்கே ஒரு வேலையின் காரணமாக ஊருக்கு செல்லவேண்டியதாகிவிட்டது, என்னால் பண்பாட்டுச் சுற்றுலா மற்றும் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம் இரண்டிலும் கலந்து இயலவில்லை(நான் மிகவும் ஆவலாக இருந்தேன், எல்லா சக விக்கியர்களையும் சந்தித்து அளவளாவலாம் என்று...) :(. உங்கள் செய்தியையும் இப்பொழுதுதான் கவனித்தேன், தகவல் தர இயலாமைக்கு வருந்துகிறேன். நன்றி. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:19, 30 செப்டம்பர் 2013 (UTC)

கணினியியல் வலைவாசலை மேம்படுத்த வேண்டுகோள்

தொகு

வணக்கம் நண்பரே,

தாங்கள் மிகவும் ஆர்வத்துடன் வலைவாசல்:கணினியியல் என்ற வலைவாசலை அமைத்திருப்பதைக் கண்டேன். அந்த வலைவாசல் தொடக்க நிலையிலேயே உள்ளது. இவ்வாறு நெடுங்காலம் பராமரிக்கப்படாமல் இருப்பின் அந்த வலைவாசல் நீக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே தாங்கள் வலைவாசலை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:15, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

நினைவூட்டியதற்கு நன்றி! நானும் நீண்ட நாட்களாக எண்ணியிருந்தேன் விரைவில் மேம்படுத்துகிறேன்.--அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:45, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

தொகு
  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:48, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:19, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:15, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல்

தொகு

காண்க: விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா#பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல் --Anton·٠•●♥Talk♥●•٠· 15:24, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

தொகு

வணக்கம் கார்த்திகேயன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கி. கார்த்திகேயன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 10:38, 7 மே 2014 (UTC)Reply

100 கட்டுரைகளை உருவாக்கிவிட்டதால் நீங்கள் கேட்டுக்கொண்டபடி என்னைப்பற்றிய அறிமுகத்தை தந்துள்ளேன் :). அறிமுகத்தில் திருத்தங்கள்/மாற்றங்கள் தேவைப்படின் தெரியப்படுத்தவும். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:25, 8 மே 2014 (UTC).Reply
  விருப்பம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:34, 8 மே 2014 (UTC)Reply
எடுத்த சபதம் முடித்து அறிமுகத்தைத் தந்தமைக்கு நன்றி :)--இரவி (பேச்சு) 13:04, 11 மே 2014 (UTC)Reply
உங்கள் அறிமுகத்தைச் சற்று உரை திருத்தி விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளேன். சூலை மாதம் மூன்றாம் வாரத்தில் முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் இடம்பெறும்,--இரவி (பேச்சு) 13:20, 11 மே 2014 (UTC)Reply
நன்றி இரவி :) --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:16, 12 மே 2014 (UTC)Reply

அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறுகிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 09:16, 7 திசம்பர் 2014 (UTC)Reply

நன்றி இரவி :) கடந்த சில மாதங்களாக என்னால் முன்போல் தொடர்ந்து பங்களிக்க முடியவில்லை (ஆனாலும் அவ்வப்போது உள்ளே புகுபதிகை செய்து வந்து போய்க் கொண்டிருந்தேன்). இனிவரும் காலங்களில் முன்போல இயன்றவரை பங்களிக்கிறேன். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:34, 8 திசம்பர் 2014 (UTC).Reply
வாழ்த்துக்கள் கார்த்திகேயன் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:38, 8 திசம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்!! :) -08:37, 26 திசம்பர் 2014 (UTC)

சான்று சேர்க்கும் திட்டம்

தொகு
 

வணக்கம் கி. கார்த்திகேயன்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:50, 17 மே 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் கி. கார்த்திகேயன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:26, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கம், கார்த்திகேயன். உங்கள் பங்களிப்புகளை எதிர்நோக்குகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:10, 11 சனவரி 2015 (UTC)Reply

மணிவேல் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார்

தொகு

மணிவேல் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார். இங்கு பாருங்கள்.--இரவி (பேச்சு) 12:29, 22 சனவரி 2015 (UTC)Reply

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - உங்களுக்குத் தெரியுமா

தொகு

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:42, 7 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:41, 29 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை

தொகு
 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:53, 8 திசம்பர் 2016 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள கார்த்திகேயன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 15:48, 24 மார்ச் 2018 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.