Praveenskpillai
வாருங்கள்!
வாருங்கள், Praveenskpillai, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--இரவி (பேச்சு) 13:23, 28 மார்ச் 2013 (UTC)
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. தாங்கள் எழுதிய சமநிலைப்புள்ளி கட்டுரைக்கு ஈடாக ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரை இருந்தால் அதன் இணைப்பைத் தர முடியுமா? அதன் அடிப்படையில் இக்கட்டுரையை மேலும் மேம்படுத்த முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 13:23, 28 மார்ச் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், Praveenskpillai!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
கட்டுரைப் போட்டி
தொகுவணக்கம். நீங்கள் கட்டுரைப்போட்டியில் உள்ள கட்டுரைகளை தேர்ந்தெடுத்து விரிவாக்குவது கண்டு மகிழ்கிறேன். ஆனால் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூன், 2013 பக்கத்தில் 15360 பைட்டுகள் தாண்டிய பிறகே கொடுங்கள். அதற்கு முன் முன்பதிவுகளை விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013 பக்கம் மட்டுமே செய்யவும். நன்றி.
மேலும் உங்களைப்பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தரவும். குறிப்பாக நீங்கள் படித்த துறையும் உங்களுக்கு பிடித்த துறையும் பற்றிய தகவல்களைப் தாருங்கள். ஆனால் இது கட்டாயம் இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:43, 13 சூன் 2013 (UTC)
அறிமுகம்
தொகுபயனர் அறிமுகத்தினை உங்கள் பயனர் பக்கத்திலேயே இடலாம். நிர்வாகிகள் பயனர் அறிமுகப் பக்கத்தில் கேட்கும்போது அங்கு கொடுக்கலாம். நனறி. --Anton (பேச்சு) 08:14, 14 சூன் 2013 (UTC)
பதில்
தொகுவணக்கம் அன்டன். பயனர் அறிமுகத்தினைப் பயனர் அறிமுகப் பக்கத்தில் இட வேன்டுமென நினைத்து விட்டேன். அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவும். நன்றி! --Praveenskpillai (பேச்சு) 13:07, 14 சூன் 2013 (UTC)
- மன்னிப்பதற்கு எதுவும் இல்லை. புரிதலுக்கு நன்றி. --Anton (பேச்சு) 13:53, 14 சூன் 2013 (UTC)
வேண்டுகோள்...
தொகுவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் எனும் பக்கத்தைத் தொகுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:15, 14 சூன் 2013 (UTC)
பதில்
தொகுவணக்கம் செல்வசிவகுருநாதன். பயனர் அறிமுகத்தினைத் தொகுக்கலாமென நினைத்து விட்டேன். அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவும். நன்றி! --Praveenskpillai (பேச்சு) 13:07, 14 சூன் 2013 (UTC)
- புரிந்து கொண்டமைக்கு நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:40, 14 சூன் 2013 (UTC)
பயனர் பக்க படிமம்
தொகுவணக்கம் நண்பரே, தங்களுடையப் பயனர் பக்கத்தில் உங்களுடைய படம் அறுபட்ட கோப்பாக உள்ளது. அதாவது உங்களது படம் விக்கப்பீடியாவில் இல்லை. இதற்கு தங்களுடையப் படத்தினை கோப்பைப் பதிவேற்று என்ற பக்கத்தில் உள்ள குறிப்புகள் படி இணைக்கலாம். அதன் பிறகு பயனர் பக்கத்தில் படிமத்தின் தலைப்பினை இட்டு காட்சிபடுத்தலாம். விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவது, படிமம் இணைப்பது போன்ற எந்த சந்தேகம் இருந்தாலும் விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்-ல் கேளுங்கள். உதவி கிடைக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:53, 21 சூன் 2013 (UTC)
எச்சரிக்கை
தொகுவணக்கம், நீங்கள் விக்கியில் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளைப் படியெடுத்து வேறு தலைப்புகளுக்கு மாற்றி புதிய கட்டுரைகளாக எழுதுகிறீர்கள். பல பயனர்களின் பல்லாண்டு காலப் பங்களிப்புகளில் உருவான கட்டுரைகளை இவ்வாறு மாற்றுவது உகந்ததல்ல. இந்நடைமுறையை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 09:02, 21 சூன் 2013 (UTC)
பதில்
தொகுவணக்கம் Kanags அவர்களே! உயர்தனிச்செம்மொழியான தமிழ்மொழி இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து சொற்களுக்கும் இணையான சொற்களைக் கொண்டுள்ளது. நிலை அவ்வாறிருக்கையில் தமிழ் அல்லாத வேற்று மொழிச் சொல்லை உபயோகப்படுத்துவானேன்? அவ்வாறு செய்தல் இத்தீந்தமிழிற்கு இழுக்கன்றோ? 'Technisium' என்ற சொல்லிற்கு 'பசகன்' என்பதே இணையான தமிழ்ச் சொல்லன்றி வேறில்லை. 'டெக்னீசியம்' என்பதெல்லாம் முறையற்ற , தவறான பயன்பாடேயாகும். மேலும் நான் பிற கட்டுரைகளை அப்படியே படியெடுத்து புதிய கட்டுரையாக எழுதுவதாகக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அக்கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திற்குச் சென்று பார்க்கின் அங்கு, கட்டுரையின் பெயரை மாற்றியதாக மட்டுமே எனது பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். தவிர, அக்கட்டுரையை இயற்றியவர்களது பெயரே கட்டுரையை எழுதியதாகக் கொடுக்கப்பட்டிருக்கும். வரலாற்றுப் பக்கத்தில் அவ்வாறு கொடுக்கப்பட்டு இருக்கையில் நான் அக்கட்டுரை உருவாவதற்குப் பங்களித்த பயனர்களின் உழைப்பை அவமதிக்கவோ வீணடிக்கவோ நினைப்பதாக எவ்வாறு கருதவியலும்? தேமதுரத்தமிழ் உலகெங்கும் பரவத் துணை புரியும் விக்கியில் அத்தமிழ் கலப்பற்ற தனித்தமிழாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியோடுள்ளேன். மீண்டும் உரைக்கிறேன்- நான் கட்டுரையின் பெயரை மற்றுமே மாற்ற விழைகிறேன். பயனர்களின் பங்களிப்பில் ஒருபோதும் உரிமைகோரவில்லை.மேலும் அப்பங்களிப்பிற்கு உரிய மரியாதையைச் செலுத்துகிறேன். இதில் ஏதேனும் தவறிருப்பின் மன்னித்தருளவும். மேலும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கருத்துக்களைக் குறிப்பிடுவதைப் பற்றித் தெளிவுபடுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. Praveenskpillai (பேச்சு) 10:23, 21 சூன் 2013 (UTC)
- கட்டுரையின் தலைப்பினை மாற்ற விரும்பி இவ்வாறு செய்துள்ளீர்கள் என்றால், இனி அவ்வாறு செய்யாதீர்கள். தற்பொழுது இருக்கும் கட்டுரையின் தலைப்பினை விட தகுந்ததாக தாங்கள் நினைக்கும் தலைப்பினைப் பற்றி அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஏற்றதாக இருக்கும் பட்சத்தில் நிர்வாகிகள் அத்தலைப்பினை மாற்ற தங்களுக்கு உதவுவார்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:03, 21 சூன் 2013 (UTC)
வணக்கம் சகோதரன் ஜெகதீஸ்வரன் அவர்களே! கட்டுரைத் தலைப்பு பிறமொழிக்கலவாத் தனித்தமிழ்ப்பெயராக இருக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு பெயரை மாற்றினேனேயன்றி வேறொரு காரணம் இல்லை. நன்றி!--Praveenskpillai (பேச்சு) 10:12, 21 சூன் 2013 (UTC) வணக்கம் சகோதரன் ஜெகதீஸ்வரன் அவர்களே! கட்டுரையின் பேச்சுப்பக்கம் என்பது யாது, அதனை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்துத் தெளிவுபடுத்தும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. Praveenskpillai (பேச்சு) 10:23, 21 சூன் 2013 (UTC)
- விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு கட்டுரையிலும் கட்டுரை, உரையாடல் என்ற இருபகுதிகள் உள்ளன. கட்டுரை என்பதன் அருகில் உரையாடல் என்று இருக்கும் பகுதியே பேச்சுப்பக்கமாகும். இப்பக்கத்தில் கட்டுரைச் சார்ந்த உங்களுடைய யோசனைகள், விருப்பங்கள், தலைப்பு மாற்றம், பகுப்பு நீக்கம் போன்ற பலவற்றைப் பற்றி குறிப்பிடலாம். பொதுவாக பிறர் தொகுத்துள்ள கட்டுரைகளில் நீக்கம், பெருமாற்றம் செய்யும் முன் அது பற்றி இப்பக்கத்தில் கூறவேண்டும். அதனை பிற விக்கிப்பீடியர்கள் படித்து தங்களது கருத்தினை தெரிவிப்பார்கள், அதன் படி மாற்றம் செய்வது அல்லது தவிர்ப்பது நிகழும். தாங்கள் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்கும் பொழுது இது போன்ற விக்கிப்பீடியா கொள்கைகள் புரியும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் குறிப்பிடுங்கள். தொடர்ந்து பங்களிக்க எனது வாழ்த்துகள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:14, 21 சூன் 2013 (UTC)
தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி.--Praveenskpillai (பேச்சு)
- இருக்கும் ஒரு கட்டுரையை புதிய தலைப்புக்கு வழிமாற்றுவதற்கு கட்டுரையின் மேற்பக்கத்தில் வலப்பக்கத்தில் உள்ள drop-down menu வில் "நகர்த்துக" என்பதைத் தெரிவு செய்து பொருத்தமானதொரு தலைப்பிற்கு கட்டுரையை நகர்த்தலாம். இதனால், கட்டுரையாளர்களின் வரலாறு சேமிக்கப்படும். ஆனால், நீங்கள் செய்தது வேறு. புதிய கட்டுரையை எழுதி சேமித்து விட்டு, பழைய கட்டுரையைப் புதிய கட்டுரைக்கு வழிமாற்றியிருக்கிறீர்கள். இதனால் புதிய கட்டுரையில் உங்கள் பங்களிப்புகள் மட்டுமே வரலாற்றில் காணப்படும். ஏனையோரின் பங்களிப்புகள் இருக்காது. மேலும், கலைச்சொற்களைப் பயன்படுத்தும் போது அவற்றை அக்கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் குறிப்பிட்டு மாற்றுவது நல்ல நடைமுறை.--Kanags \உரையாடுக 11:40, 21 சூன் 2013 (UTC)
தங்களுடைய தகவலுக்கு நன்றி. --Praveenskpillai (பேச்சு)
பிரவீன் முதலில் கட்டுரைகளின் பெயர்களை மாற்றுவதைப்பற்றி பேச்சுப்பக்கங்களில் உரையாடுங்கள் மற்றய பயனர்களின் கருத்தை அறியுங்கள் பின்னர் ஒப்புதல் இருந்தால் பெயரை மாற்றுங்கள், நன்றி--சங்கீர்த்தன் (பேச்சு) 16:56, 21 சூன் 2013 (UTC)
இனி அவ்வாறு செய்கிறேன். நன்றி.--Praveenskpillai (பேச்சு)
- நன்றி..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 17:00, 21 சூன் 2013 (UTC)
அறிவியல் தமிழ்
தொகுவணக்கம், Praveenskpillai!
தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் தமிழ் கட்டுரைகள் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியலைத் தமிழுக்கும், தமிழ் பேசுவோருக்கு அறிவியலையும் எடுத்துச்செல்வதில் உங்கள் பங்களிப்பு உதவியாக அமையும். கலைச்சொற்கள் உதவி தேவைப்படின் கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். தமிழ் உசாத்துணைகள் உதவி தேவை எனின் :உசாத்துணைப் பக்கத்தில் கேக்கவும். உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடிய மேலதிக இணைப்புகள்:
நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் பல அறிவியற் கட்டுரைகளில் பங்களித்து வருவது கண்டு மகிழ்ச்சி. கலைச்சொற்கள் பற்றி சில கருத்துக்கள். பொதுவாக எங்கும் நல்ல தமிழ்ச் சொற்களை எடுத்தாள வேண்டும் என்ற உங்கள் கருத்துச் சரியே. எனினும் சில இடங்களில் பொதுவாக வழங்கப்படும் அறிவியற் பெயர்களை எடுத்தாள்வது உதவியாக அமையும். எ.கா காகம், புலி, சிங்கம் என்று கட்டுரைகள் அமைவது சரி. ஆனால் தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் புதிய ஒரு விலங்குக்கு அதன் அறிவியற் பெயரைப் பயன்படுத்துவது பொருத்தமே. வேண்டுமானால் பொருத்தமனா தமிழ்ச் சொற்களையும் தரலாம். காலப் போக்கில் அறிவியற் தமிழ் மேலும் பலம் பெறும் போது நாம் மேலும் முழுமையாக தமிழில் தரக் கூடிய சூழல் வரும். --Natkeeran (பேச்சு) 17:10, 21 சூன் 2013 (UTC)
பதக்கம்
தொகுவிடாமுயற்சியாளர் பதக்கம் | ||
விக்கிக் கட்டுரைகளில் கிராந்தகத்தினை தவிர்க்கவும், தனித்தமிழ் தலைப்புகளை நாடவும் தாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தினை தருகிறேன். பேச்சுப் பக்கத்தில் நிர்வாகிகள் மற்றும் விக்கிப்பீடியர்களுடன் இணைந்து ஆலோசிப்பதற்கும் நன்றி. தொடர்ந்து செயல்படுங்கள். சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:27, 22 சூன் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
புரிதலுக்கு நன்றி
தொகுபல இடங்களில் உங்கள் உரையாடலில் புரிந்து கொள்ளும் இணக்கப் பண்பு தென்படுகிறது. இது தொடரும் என்று நம்புகிறேன். கலைச்சொற்கள் குறித்த பல உரையாடல்கள் இதற்கு முன்னரும் நடந்து இருக்கின்றன. அவற்றைப் பார்வையிடுவது நலம். கிரந்த எழுத்துக்களை முற்றிலும் தவிர்ப்பது குறித்து இன்னும் ஒருமித்த முடிவேதும் எட்டப்படவில்லை. உரையாடல்கள் நல்லவை தான். ஆனால் ஒருமித்த முடிவெட்டப்படாத உரையாடல்களில் செலுத்தும் நேரத்தைக் கட்டுரையாக்கத்தில் செலுத்தலாம் என்பது எனது சொந்தக் கருத்து. எனது கருத்தை உங்கள் மீது திணிக்க விரும்பவில்லை. உங்கள் தமிழார்வம் உவகையளிப்பதாலும் நீங்கள் தொடர்பங்களிப்பாளராகத் தொடர வேண்டும் என்ற விருப்பத்திலும் இதைத் தெரிவிக்கிறேன். நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:35, 22 சூன் 2013 (UTC)
நன்றிகள்
தொகுவணக்கம் சகோதரன் ஜெகதீஸ்வரன் அவர்களே!இணையத்தில் விக்கியின் உதவியோடு உலகெங்கும் பரவும் பைந்தமிழ் பிறமொழிக்கலப்பற்று இருத்தல் வேண்டுமென்பது எனது விழைவாதலால் இவ்வாறு செய்கிறேன். அதனைப் புரிந்து கொண்டதற்காகக் கோடி நன்றிகள்! தனித்தமிழைப் பரப்ப மேலும் உறுதியோடு முயல்வேன்!! --Praveenskpillai (பேச்சு) 22 சூன் 2013 (UTC)
- வணக்கம் மரு. பெ. கார்த்திகேயன் அவர்களே! தங்கள் பாராட்டிற்கு நன்றி. 'ஒருமித்த முடிவெட்டப்படாத நிலையில் உரையாடல்களில் செலுத்தும் நேரத்தைக் கட்டுரையாக்கத்தில் செலுத்தலாம்' என்கிற உங்களின் கருத்தோடுடனே எனது கருத்தும் ஒத்துப்போகிறது. கட்டுரையாக்கத்தில் என் பொன்னான நேரத்தைச் செலவிடுவதே எனது விருப்பம். விக்கியில் தொடர்ந்து பங்களிப்பேன். உங்களைப் போன்றோரின் ஊக்கமே என்னைச் செலுத்துகிறது. மீண்டும் நன்றிகள்! --Praveenskpillai (பேச்சு) 22 சூன் 2013 (UTC) விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:54, 22 சூன் 2013 (UTC)
பிரவீன் பிள்ளை நண்பரே, தாங்கள் தமிழ் தலைப்புக்கு மாற்ற எண்ணும் கட்டுரைகளில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்படாமல் சிவப்பிணைப்பாக உள்ளது கண்டேன். தங்களுக்கு ஆர்வம் இருப்பதால் அவற்றினை புதிய பக்கங்களாக உருவாக்கலாம். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் தாங்கள், தங்களது நண்பர்களுக்கு விக்கப்பீடியா பற்றி எடுத்துரைத்து அவர்களையும் இப்பணியில் ஈடுபட செய்யலாம் என்பது என் விருப்பம். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:03, 22 சூன் 2013 (UTC)
- கண்டிப்பாக நண்பரே! சிவப்பிணைப்பாக உள்ள கட்டுரைகளை உருவாக்குகிறேன். என் நண்பர்களுக்கும் விக்கியைப் பற்றி எடுத்துரைக்கிறேன். நன்றி! --Praveenskpillai (பேச்சு) 22 சூன் 2013 (UTC)
எனது விடுமுறை நாட்கள் இறுதி பெற்று நான் எனது கல்லூரி விடுதிக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதால் விக்கியுடன் நான் செலவழிக்கும் நேரம் குறையலாம். ஆனால் விக்கியை விட்டு நான் எங்கும் செல்வதில்லை!
--Praveenskpillai (பேச்சு) 27 சூன் 2013 (UTC)
வணக்கம், Praveenskpillai!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 05:37, 2 சூலை 2013 (UTC)
- நன்றிகள்!!--Praveenskpillai (பேச்சு) 2 சூலை 2013 (UTC)
2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013
தொகுதேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:16, 5 சூலை 2013 (UTC)
கட்டுரைப் போட்டித் தலைப்புகள்
தொகுவணக்கம், பிரவீன். கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் யாவும் http://meta.wikimedia.org/wiki/List_of_articles_all_languages_should_have பக்கத்தைச் சேர்ந்தவை. அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகளை மேம்படுத்துவதே இப்போட்டியின் நீக்கம். எனவே, புதிதாக தலைப்புகளைச் சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தலைப்புகள் பக்கத்தில் நீங்கள் செய்த மாற்றங்களை மீள்விக்க வேண்டி இருக்கிறது. நன்றி. --இரவி (பேச்சு) 13:58, 17 சூலை 2013 (UTC)
- மன்னிக்கவும். தங்கள் தகவலிற்கு நன்றி! --Praveenskpillai (பேச்சு) 20 சூலை 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரைகள்
தொகுவணக்கம் பிரவீன் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் என்ற பக்கத்தைக் காணவும் தங்கள் ஐயத்திற்கு விடைகிடைக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:59, 3 ஆகத்து 2013 (UTC)
- தங்கள் தகவலிற்கு நன்றி! --Praveenskpillai (பேச்சு) 4 ஆகத்து 2013 (UTC)
தொடர் கட்டுரைப் போட்டி - திசம்பர், 2013
தொகுவணக்கம், இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும் என்பது போட்டி விதிகளில் ஒன்று. நீங்கள் விரிவாக்கிய கட்டுரை பல இப்பட்டியலில் இல்லையெனக் கருதுகிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நன்றி! --Anton·٠•●♥Talk♥●•٠· 16:41, 5 சனவரி 2014 (UTC)
மின் மறுப்பு
தொகுமின் மறுப்பு கட்டுரையின் உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. அக்கட்டுரை உள்ளடக்கங்கள் நகர்த்தப்பட்டுள்ளனவா? அதனை நீக்கலாமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 05:50, 16 சனவரி 2014 (UTC)
ஆம். நீக்கலாம்! --பிரவீன் (பேச்சு) 05:56, 16 சனவரி 2014 (UTC)
- வழிமாற்று ஏற்படுத்தியுள்ளேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:58, 16 சனவரி 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Praveenskpillai!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:23, 14 சூலை 2015 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகுதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:56, 4 மே 2017 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.