வாருங்கள்!

வாருங்கள், ச.பிரபாகரன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:38, 22 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், ச.பிரபாகரன்!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 03:59, 23 பெப்ரவரி 2013 (UTC)

பதக்கம்தொகு

  விக்கிப்புயல் பதக்கம்
விக்கிப்பீடியாவில் இணைந்து புயல் வேகத்தில் கட்டுரைகள் எழுதிவரும் தங்களின் வேகத்தினைப் பாராட்டித் தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். தங்களின் பணி தொடர வாழ்த்துகள் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:51, 23 பெப்ரவரி 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

விக்கியில் சேர்க்கப்படும் படைப்புகளின் காப்புரிமை தொடர்பாகதொகு

வணக்கம் ச.பிரபாகரன். தமிழ் விக்கிக்கு நல்வரவு. விக்கி தொடர்பான உங்கள் ஆர்வத்தையும், நீங்கள் பங்களிக்கத் தொடங்கி இருப்பதையும் கண்டு மகிழ்ச்சி. பங்களிக்கும் போது ஒரு முக்கிய விடயத்தை கவனிக்க வேண்டுகிறேன். நீங்கள் அண்மையில் அணியிலக்கணம் தொடர்பாக தொடங்கிய கட்டுரைகள் பல த.கல்விக் கழகத்தில் இரு முழுமையாக இங்கு பிரதி செய்யப்பட்டவை. எ.கா இலேச அணி - [1] இவ்வாறு செய்வது காப்புரிமை மீறல் ஆகும். பிற மூலங்களில் இருந்து ஆக்கங்கள் விக்கியில் சேர்ப்பது என்றால் அவ் உள்ளடக்கங்கள் காப்புரிமை கட்டற்ற முறையில் தரப்பட்டு பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு செய்ய வேண்டும். இயன்றவரை உங்களின் சொந்த ஆக்கங்களை இங்கு சேர்ப்பதன் மூலம் இச் சிக்கலத் தவிர்க்கலாம். மேற்கோள்களாக பிற ஆக்கங்கள் சுருக்கமாக சுட்டப்படலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 22:16, 23 பெப்ரவரி 2013 (UTC)

அணிகள் தொடர்பான கட்டுரைகளைச் சுருக்கமாகத் தாருங்கள். காப்புரிமை உள்ள பதிப்புகளைத் தவிருங்கள். அவற்றை வெளி இணைப்புகளாக அல்லது அவற்றில் இருந்து மேற்கோள்கள் காட்டினால் அவற்றை மேற்கோள்களாகத் தாருங்கள். வரிக்கு வரி வேறு தளங்களில் இருந்து எழுதுபவை இங்கு உடனடியாகவே நீக்கப்படும் அபாயம் உள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 22:37, 23 பெப்ரவரி 2013 (UTC)

@Natkeeran & Kanags : தகவலுக்கு நன்றி நண்பரே...மற்றும் tamilvu.org இணையத்தில் ஏற்கனவே தேடிப்பார்தேன் ஏதாவது காப்புரிமை இருக்கிறதா என்று...அந்த இணையத்தில், அவர்கள் ஒரு அரசு உதவி பெரும் பொது சேவை நிறுவனம் மற்றும் அவர்கள் அந்த இணையத்தில் உள்ள தரவுகள் ஒரு பொது சேவைக்காக வைத்திருகிறார்கள் என்று குறிப்பிடிருந்தார்கள்[2]...அவர்கள் தரும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று அறுபது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை அல்லது நாட்டுடைமை ஆக்க்கப்பட்டவை...அதனால் நாம் காப்புரிமை இல்லாமல் அந்த இணையத்தில் உள்ளவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்...அதனால் தான் நான் அந்த இணையத்திலிருந்து நல்ல பயனுள்ள தரவுகளை விக்கிபீடியா பக்கத்தில் இட்டேன்...காப்புரிமை இருந்திருந்தால் கண்டிப்பாக அந்தத் தரவுகளை விக்கிபீடியா பக்கத்தில் இட்டிருக்க மாட்டேன் நண்பா...நான் விக்கிபிடியாவிற்கு புதிது என்பதால் ஒரு சந்தேகம்...காப்புரிமை இல்லாத நம்பகத்தன்மையுள்ள தரவுகளை விக்கிபீடியாவில் இட ஏதாவது procedure நான் பின்பற்றவேண்டுமா?...நன்றி... --ச.பிரபாகரன் (பேச்சு) 23:24, 23 பெப்ரவரி 2013 (UTC)


நல்ல கேள்வி ச.பிரபாகரன். உங்கள் புரிந்துணர்வுக்கும் முயற்சிக்கும் நன்றி. த.க இருந்து கலைச்சொற்களைப் பெற்று தமிழ் விக்சனரியில் சேர்த்துள்ளோம். ஆனால் பிற உள்ளக்கங்கள் பற்றி எந்தவித உரையாடல்களும் இதுவரை நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். மேலும் தமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கத்தின் காப்புரிமையும் காலாவாதி ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன். மலையாள விக்கியில் அரச கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களை பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. இங்கும் அப்படிச் செய்யலாமா என்று ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுப்போம். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:18, 24 பெப்ரவரி 2013 (UTC)

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி இந்த விடயம் தொடர்பாக ஒரு உரையாடல் தொடங்கப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 01:27, 24 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் இணையக் கல்வி கழக தளத்தில் உள்ள ஆக்கங்கள் இரு வகைப் படுகின்றன. 1)முதல் வகை அவர்கள் ஏற்றி வைத்திருக்கும் நூல்கள் - தமிழக அரசால நாட்டுடமை ஆக்கப்பட்டவை அல்லது பதிப்புரிமை காலாவதியானவை. இவற்றை பதிப்புரிமை தெளிவாகக் காலாவதி ஆகிவிட்டன என்று உறுதி படுத்திக்கொண்டால் படியெடுப்பதில் சிக்கல் இல்லை. எனினும் நடை, நம்பகத்தன்மை போன்றவற்றை கணக்கில் கொண்டு செய்ய வேண்டும். 2) இரண்டாம் வகை அப்பல்கலைக்கழகத்தின் பாடநூல்கள். இலக்கண இலக்கியப் பாடங்களை வலையேற்றியுள்ளனர். அவற்றின் பதிப்புரிமையை அவர்கள் விட்டுத் தரவில்லை - முன்பு அகரமுதலியை மட்டும் தமிழ் விக்சனரிக்குக் கொடையாகத் தந்தனர். ஆனால் பாடநூல்களுக்கும் கலைக்களஞ்சியங்களுக்கும் இன்னும் பதிப்புரிமை கொண்டுள்ளனர். எனவே இவற்றின் பதிப்புரிமை காலாவதி ஆகும் வரை / கொடையளிக்கப்படும்வரை அப்படியே படியெடுக்க வேண்டாம்.

கனக்ஸ் குறிப்பிடும் அணிக்கட்டுரைகள் அவர்களது பாடநூல்கள் பகுதியிலிருக்கின்றன என்பதால் பதிப்புரிமை பெற்றவை.--சோடாபாட்டில்உரையாடுக 02:23, 24 பெப்ரவரி 2013 (UTC)

அணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக வேறு பாடல்களைத் தரலாம். அல்லது, பாடலுக்கான விளக்கத்தைச் சொந்தமாக எழுத முனையலாம். இவ்வாறு செய்வதால் காப்புரிமை சிக்கலைத் தவிர்க்கலாம். விக்கிப்பீடியாவைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு பங்களிக்கத் தொடங்கியிருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 11:23, 25 பெப்ரவரி 2013 (UTC)

நீக்கம்தொகு

வணக்கம், நீங்கள் சோதனைக்கக உருவாக்கிய பக்கங்களை நீக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அப்பக்கத்தில் {{delete}} வார்ப்புருவை இணைத்து விடுங்கள். நிருவாகப் பயனர்கள அதனை விரைந்து நீக்குவார்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:16, 25 பெப்ரவரி 2013 (UTC)

உங்கள் விக்கிப்பீடியா நுழைவு பற்றி..தொகு

வணக்கம், பிரபாகரன். உங்கள் பயனர் பக்கத்தில் எதேச்சையாக தமிழ் விக்கிக்குள் நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்? இது எவ்வாறு என்று அறிய இயலுமா? உங்கள் கல்வி, பின்புலம் பற்றி அறிந்து கொள்ளலாமா? தமிழ் விக்கியில் பங்களிக்கத் துவங்கும் முன்பே விக்கிப்பீடியா, விக்கி மென்பொருள் பயிற்சி உண்டா? ஏனெனில் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக பங்களிக்கத் தொங்கியுள்ளீர்கள். உங்களைப் போன்ற இன்னும் பல பயனர்களை ஈர்க்க உங்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகப் படுகிறது. நன்றி--இரவி (பேச்சு) 04:54, 5 மார்ச் 2013 (UTC)

வணக்கம் இரவி அவர்களே, எனக்கு விக்கி மென்பொருள் பயிற்சி இல்லை என்றாலும், HTML JavaScript தொடர்பான நிரலாக்க மொழிகளில் பயிற்சி இருந்ததால் விக்கி மென்பொருளை கற்றுக் கொள்ள ஏதுவாக இருந்தது. நன்றிகள்... :) --ச.பிரபாகரன் (பேச்சு) 12:45, 5 மார்ச் 2013 (UTC)

விளக்கத்துக்கு நன்றி, பிரபாகரன்.--இரவி (பேச்சு) 18:35, 5 மார்ச் 2013 (UTC)

கட்டுரை உள்ளடக்கங்கள் இணைப்புதொகு

பிரபாகரன், கட்டுரைகளின் உள்ளடக்கங்களை இணைக்கும் போது, அவற்றின் வரலாறுகளையும் இணைக்க வேண்டும். எனவே உள்ளடக்கங்களை சேர்த்த பின்னர் நீக்கல் வார்ப்புரு இடாமல் / வழிமாற்றாமல் {{mergeto|}} வார்ப்புருவை இட்டுவிடுங்கள் நிருவாகிகள் யாரேனும் இணைத்து விடுவோம்.--சோடாபாட்டில்உரையாடுக 02:34, 6 மார்ச் 2013 (UTC)

தகவலுக்கு நன்றி :) --ச.பிரபாகரன் (பேச்சு) 06:02, 6 மார்ச் 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், ச.பிரபாகரன்!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:00, 2 ஏப்ரல் 2013 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் பங்களிப்புகளை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அளப்பறிய பணியான பகுப்புருவாக்கத்தை திறம்பட செய்து வருவதற்காக இப்பதக்கம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:29, 14 ஆகத்து 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி... :) ச.பிரபாகரன் (பேச்சு) 15:34, 14 ஆகத்து 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புதொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)

பகுப்புகள் தலைப்புதொகு

தமிழர் கலை என்ற பகுப்பு தமிழர் கலைகள் என்று வர வேண்டும். பெரும்பாலும், ஒரு பகுப்பை தாய்ப் பகுப்புக்குள்ளும் இட்டு கிளைப் பகுப்புக்குள்ளும் இடுவது அவசியமில்லை. எ.கா தமிழர் கலைகள் என்பது தமிழர் பண்பாடு அல்லது தமிழர் என்ற பகுப்புக்குள் வரும். எனவே தமிழர் சிற்பக்கலை என்பதை தமிழர் பண்பாட்டுக்குள் சேற்க வேண்டிய அவசியமில்லை. அது போலவே தமிழர் அடையாளம் என்ற பகுப்பும். அது தமிழர் என்ற பகுப்புக்குள் இருப்பதால், அதற்குள் மீண்டும் தமிழர் பகுப்புக்குள் இருக்கும் பகுப்புக்களைச் சேர்க்க வேண்டியதில்லை.

  • தமிழர் கலைகள்
  • தமிழர் வாழ்வியல் என்று இரு பெரும் புதிய பகுப்புக்கள் உருவாக்கப்படலாம்.

நன்றி. --Natkeeran (பேச்சு) 19:01, 20 மார்ச் 2014 (UTC)

மேலும், தமிழர் கலைகள் என்ற குறிப்பான பகுப்புக்குள் அதன் கிளைப் பகுப்புக்களை மட்டும் சேர்ப்பதுவே பொருத்தம் ஆகும். எ.கா தமிழர் சிற்பக்கலை (சரி), சிற்பக்கலை (பிழை). --Natkeeran (பேச்சு) 19:04, 20 மார்ச் 2014 (UTC)

நன்றி. இப்பொழுதே மாற்றிவிடுகிறேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 19:11, 20 மார்ச் 2014 (UTC)
தமிழ் மொழியும் தமிழரின் கலைகளுள் வருவது தான் அல்லவா. --ச.பிரபாகரன் (பேச்சு) 19:34, 20 மார்ச் 2014 (UTC)
தனியாக இருக்கலாம். பொதுவாக, மொழியை கலை என்று குறிப்பிடுவதில்லை. --Natkeeran (பேச்சு) 20:48, 20 மார்ச் 2014 (UTC)

அளவை சமயம்தொகு

அளவை சமயம் என்றால் என்ன? அது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:32, 16 ஆகத்து 2014 (UTC)

வேதத்தின் படி அளவை என்றால் அறிவு கிடைக்கும் மூலங்கள் என்று பொருள். ஏற்கனவே, அளவை (சமயம்) என்ற பக்கத்தை செங்கைப் பொதுவன் ஐயா உருவாக்கியுள்ளார். --ச.பிரபாகரன் (பேச்சு) 11:35, 16 ஆகத்து 2014 (UTC)

பெரியார்தொகு

மிகப் பரவலாக அறியப்பட்டவர்களை, அவர்கள் அறியப்பட்ட பெயரிலிலேயே அழைக்கலாம். எ.கா காந்தி. எ.கா காந்தி என்ற பெயர். பொதுவாக சாதிப் பெயர் இணைத்து வழங்கப்பட விட்டால், சாதிப் பெயரை இணைப்பது அவசியமற்றது. முக்கிய கட்டுரைகளுக்கு பெயர் மாற்றம் தேவை என்று நீங்கள் கருதினால், பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு கருத்துப் பெற்று மாற்றவும். --Natkeeran (பேச்சு) 15:52, 9 நவம்பர் 2014 (UTC)

இப்பட்டம் அரசால் வழங்கப்படாத ஒரு பட்டம். அப்படி இருக்கும் போது ஒருவர் ஒரு பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார் என்பது அவரின் விக்கிபீடியா பக்கத்தில் மட்டும் தானே இருக்க வேண்டும். இதுதானே, கலைக்களஞ்சிய முறை. மேலும், பெரியார் என்ற சொல் பல பொருட்களைக் கொண்டது. ஆகையால், அச்சொல்லுக்கு என்னென்ன வழிமாற்று பக்கங்கள் இருக்கும் என்பதை பெரியார் என்ற வழிமாற்று பக்கத்தில் குறிப்பிட்டுளேன். பெரியார் என்று தேடுபவர்கள் வழிமாற்று பக்கம் வழியாக தேவையான பக்கங்களுக்கு செல்வது தானே முறை. ஆகையால், பெரியார் என்ற வழிமாற்று பக்கத்தை மட்டும் மீளமைக்கிறேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 21:12, 9 நவம்பர் 2014 (UTC)
பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் என்று அரச வழக்கிலும் பெரியார் என்ற பெயர் பெரியாரைத் தான் குறிக்கிறது. பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்) என்ற பக்கத்தில் அதற்கான மாற்றுப் பயன்பாடுகள் தரப்பட்டுள்ளன. வேறு எ.கா பார்க்க காந்தி. --Natkeeran (பேச்சு) 22:14, 9 நவம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் ச.பிரபாகரன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--ஆதவன் 07:20, 30 திசம்பர் 2014 (UTC)

தானியங்கி வரவேற்புதொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:50, 7 மே 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:12, 8 சூலை 2015 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு

அன்புள்ள பிரபாகரன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:26, 18 மார்ச் 2018 (UTC)

கட்டுரை வழிமாற்றுதொகு

பக்க வரலாற்றுடன் உள்ள ஒரு கட்டுரையை அதன் உள்ளடக்கத்துடன் நீக்கி வேறொரு பக்கத்துக்கு வழிமாற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இரண்டு கட்டுரைகளும் முறைப்படி பக்க வரலாறுகளுடன் இணைக்கப்பட வேண்டும். இணைக்கப்பட வேண்டிய கட்டுரைகளுக்கு {{mergeto}} அல்லது {{mergefrom}} என்ற வார்ப்புருவை சேர்த்து விடுங்கள். நிருவாக அணுக்கம் கொண்டவர்கள் இவற்றை இணைக்க முடியும். அதியர் என்ற தலைப்பை அதியமான் என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளேன். அதியமான் என்பதே அதிகம் புழக்கமான சொல். இது குறித்து மாற்றுக் கருத்துகள் இருந்தால் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். உரையாடி மாற்றலாம். நன்றி.--Kanags (பேச்சு) 22:26, 18 ஆகத்து 2018 (UTC)

தகவலுக்கு நன்றி. {{mergeto}} அல்லது {{mergefrom}} ஆகியவற்றிற்குள் ஏதேனும் வேறுபாடு உண்டா?. --பிரபாகரன் 03:42, 19 ஆகத்து 2018 (UTC)

August 2018தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 07:51, 26 ஆகத்து 2018 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்.

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:18, 3 நவம்பர் 2018 (UTC)