இணையத்தமிழன் பிரபாகரன் எதையும் சாதிக்க நம்மால் முடியும் |
---|
பெயர் | இணையத்தமிழன் பிரபாகரன் |
---|
இன்று செவ்வாய், சூன் 6 of 2023, விக்கிப்பீடியாவில் 1,54,285 கட்டுரைகளும்: 2,19,862 பயனர்களும் உள்ளனர்.
நாம் யார் என்பது இங்கு(விக்கிபீடியாவில்) முக்கியம் இல்லை....நாம் இங்கு(தமிழுக்காக) என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்....
|
|
|
|
|
இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.
|
|
|
|
|
|
|
|
 | இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 3 மாதங்கள், 15 நாட்கள் ஆகின்றன. |
---|
|
|
விக்கியில் தமிழ். தமிழுக்காக விக்கிதொகு
தமிழ் வளர்ச்சிக்காக, தமிழகத்தில் அரசு கோடிகளை கொட்டி வீதியில் முழக்கங்களை செய்துகொண்டிருக்கும் அதே வேளையில், ஒரு மூலையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி ஒரு சிறிய குழுவால் தமிழ் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அபரிமிதமான வளர்ச்சி. இந்த குழுவினரில் ஒரு சிலர் தவிர ஏனையோர் தமிழ் மொழிக்காக தம்மால் ஏதேனும் பங்களிக்க முடியும் என்பதை ஒருபோதும் எண்ணிப்பார்த்திராதவர்கள். பெரும்பான்மையோர் எதேச்சையாக தமிழ் விக்கிக்குள் நுழைந்தவர்கள். மருத்துவர்கள், விவசாயிகள், பொறியியலாளர்கள், கணிப்பொறி வல்லுனர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், வாகன ஓட்டுனர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள், உணவுப்பொருள் விற்பனையாளர், பிழைப்பிற்காக தேசம் கடந்தவர்கள். என்று பலர். இவர்களில் தொழில்முறை தமிழ்ச் சான்றோர் என்று எவருமில்லை. இவர்கள் இன்று தமிழ் தாயின் கரங்களை பிடித்து அமெரிக்க சர்வரில் ஏற்றிவிட்டு உலகை உலா வரவைத்து அழகு பார்க்கின்றனர். பல நாடுகள், பல பின்புலங்கள், பல்வேறு வயது பிரிவினர், பலதரப்பட்ட மக்கள், பல சூழல்களில் விக்கிப்பீடியாவில் ஒன்று கூடியுள்ளனர். இவர்களின் நோக்கமும் கனவும் ஒன்றே. தமிழ் பேசும் நல்லுலகிற்கு ஒரு தகவல் களஞ்சியம் கிடைக்க வேண்டும். அது ஒரு நூலகத்தில் அலமாரியில் அல்ல, அனைவரின் கைகளிலும் கிடைத்தாகவேண்டும். அதுவும் தமிழில்!.
காத்திருக்கும் மறுமலர்ச்சிதொகு
கைபேசி, நுண்ணறி பேசி, லேப்டாப் , ஐ பேட், டேபிலேட் பீசீ என இணையத்தில் மெல்ல மெல்ல காலடி எடுத்துவைக்கும் தமிழ் கூட்டங்களுக்காக இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவுப் படையல் தயாராகி கொண்டிருக்கிறது. அறிவு பெட்டகம் ஒன்று இங்கே பரிணாமத்தில் உள்ளது. நீங்களும் இந்த இணைய பரிணாம வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
ஏன் விக்கிபீடியாதொகு
ஒரு சமுதாயத்தின், ஒரு இனத்தின் நாகரீக வளர்ச்சியின் உச்ச நிலை அந்த இனம் தமக்கென ஒரு தகவற்களஞ்சியத்தை கொண்டிருப்பதுதான். இலக்கியம், அறிவியல் போன்ற பலதுறைகளில் புலமையுடன் இருக்கும் தமிழர்கள் ஆவணப்படுத்துதலில் அடி சருக்கியவர்கள். இனி அது இருக்க கூடாது. நாம் இதுவரை (நமது தமிழ் இனத்தின் தொடக்கம் முதல் இன்று வரை வழிவழியாக கடத்தப்பட்ட மற்றும்,) பெற்ற, கற்ற அறிவுகளை ஆவணப்படுத்துவோம். விக்கிபீடியா அதற்கான ஒரு களம்தான்.
ஈடுபாடு மிக்க பகுப்புகள்தொகு
எனது பங்களிப்புகளின் புள்ளிவிவரங்கள்
பங்களிப்புப் புள்ளிவிவரம்
|
---|
|
|
மேற்கோள்கள்
|
|
|
|
|
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:ச.பிரபாகரன்
|