முன்துறைமுகம்

(முன்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முன்துறை என்பது சங்ககாலத்தில் கழிமுகங்களின் வெளிப்பகுதியில் காணப்படும் துறைமுகமாகும். இது கழிமுகத்தின் வெளிப்பகுதியை குறிக்கிறது என்பதை ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தில் கூறப்படும் முன்துறை இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய் என்னும் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் இம்முன்துறையில் நாவாய் நங்கூரமிட்டு பாய்மரத்தை மடக்கி வைத்திருக்கும் என்பதை தூங்கு நாவாய், துவன்று இருக்கை என்று பட்டினப்பாலை குறிக்கிறது. நீர்க்கலங்களில் இருந்து நிறை அதிகமான பொருட்கள் இறக்கப்பட்டவுடன் தன் பாய்மரங்களை மீண்டும் உயர்த்தி நீரோட்டம் அதிகமாக இருக்கும் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறைக்கு செல்லும். இதையே புறம் கூம்போடு மீம்பாய் கலையாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் என்று குறிப்பிடுகிறது. மேற்குறித்த சங்கப்பாடல்கள் கழிமுகங்களில் வெளிப்பகுதியில் நீரோட்டம குறைவு என்பதால் அங்கே உள்ள முன்துறையில் நங்கூரமிட்டு பாய்மரம் இறக்கி நிறை அதிகம் கொண்ட பொருட்களை இறக்கிவிட்டு, கழிமுகத்தின் வாய்ப்பகுதியில் நீரோட்டம் அதிகம் என்பதால் அங்கே பாய்மரத்தை ஏற்றி மிக வேகமாக கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறையை அடையுமாம் தமிழர் கலங்கள் என்பதையே குறிக்கின்றன.

முன்துறைமுகங்கள் தொகு

பெயர் துறைமுக அரசன் நாடு சிறப்புகள்
கொற்கை முன்துறை பாண்டிய இளவரசன் தென்பாண்டி நாடு பாண்டியன் ஆண்ட புகழ்பெற்ற கொற்கையின் முன்துறையானது வலம்புரி சங்குகளை அதிகமாகக் கொண்டது.[1] மேலும் இக்கொற்கை முன்துறையில் முத்துக்களும் கிடைத்தன. இது கழிமுகத்தின் வெளிப்பக்கமாக அமைந்திருந்தது.[2][3]
புகார் முன்துறை சோழ வேந்தன் சோழ நாடு இந்த புகார் முன்துறையில் நாவாய்கள் பாய்மரமிறக்கி அதிக நிறையுள்ள பொருட்களை இறக்கிவிட்டு[4] மீண்டும் பாய்மரமேற்றி வேகமாக புகார் பெருந்துறைக்கு செல்லும்.[5]
தொண்டி முன்துறை சேர வேந்தன் சேரநாடு [6][7]
கழார் முன்துறை பரதவர் கோமான் மத்தி சோழ நாடு [8][9]
வீரை முன்துறை வீரை வேண்மான் தித்தன் - போர்க்குணம் மிக்க வேளிரின் வீரை முன்துறையானது அதிகமான உப்பு வளங்களை கொண்ட உப்பளங்களை உடையது.[10]

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன் புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணி பொலிந்த – பழையர் மகளிர் பனித்துறை பரவ - அகம் 201-4
  2. அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய் - ஐங்குறுநூறு - நெய்தல் 185
  3. நல் தேர் வழுதி கொற்கை முன்துறை வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் - அகநானூறு 130
  4. முன்துறை, தூங்கு நாவாய், துவன்று இருக்கை, மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; (பட்டினப்பாலை 172-175)
  5. கூம்போடு மீம்பாய் கலையாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்
  6. வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, (அகம் 290)
  7. குண கடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச் சேயள் அரியோட் படர்தி; (குறுந்தொகை 128)
  8. ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்துறை கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் - 376
  9. பரதவர் கோமான், பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை, நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய், - அகம் 226
  10. அடுபோர் வேளிர் வீரை முன்துறை நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை- அகம் 206
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்துறைமுகம்&oldid=1459264" இலிருந்து மீள்விக்கப்பட்டது