பெருந்துறைமுகம்

பெருந்துறை என்பது சங்ககாலத்தில் கழிமுகங்களின் உட்பகுதியில் காணப்படும் துறைமுகமாகும். நீர்க்கலங்களில் இருந்து நிறை அதிகமான பொருட்கள் முன்துறையில் இறக்கப்பட்டவுடன் தன் பாய்மரங்களை மீண்டும் உயர்த்தி நீரோட்டம் அதிகமாக இருக்கும் கழிமுகத்தின் உட்பகுதியான இப்பெருந்துறைக்கு செல்லும். இதையே புறம் கூம்போடு மீம்பாய் கலையாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் என்று குறிப்பிடுகிறது. மேற்குறித்த சங்கப்பாடல்கள் கழிமுகங்களில் வெளிப்பகுதியில் நீரோட்டம குறைவு என்பதால் அங்கே உள்ள முன்துறையில் நங்கூரமிட்டு பாய்மரம் இறக்கி நிறை அதிகம் கொண்ட பொருட்களை இறக்கிவிட்டு, கழிமுகத்தின் வாய்ப்பகுதியில் நீரோட்டம் அதிகம் என்பதால் அங்கே பாய்மரத்தை ஏற்றி மிக வேகமாக கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறையை அடையுமாம் தமிழர் கலங்கள் என்பதையே குறிக்கின்றன.

பெருந்துறைமுகங்கள் தொகு

பெயர் துறைமுக அரசன் நாடு சிறப்புகள்
கொற்கை பெருந்துறை பாண்டிய இளவரசன் தென்பாண்டி நாடு கொற்கைஅம் முன்துறையில் குளித்த முத்துக்களை கொற்கைஅம் பெருந்துறையில் விற்பர். அதன் காவலன் பாண்டிய வேந்தன். பெருந்துறையில் முத்தை வாங்கிச் சூடிக் கொள்வர்.[1][2][3]
கழார் பெருந்துறை பரதவர் கோமான் மத்தி சோழ நாடு கழாஅர்ப் பெருந்துறையில் விழாக்கள் கொண்டாடப்பட்டன.[4]
பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் சோழ வேந்தன் புகார், சோழ நாடு இப்பெருந்துறையிலேயே பண்டங்களை பற்றிய கணக்கு வழக்குகள் எடுக்கப்பட்டு சோழரின் புலிச்சின்னம் கணக்கு எடுத்த பண்டத்தின் மீது பொறிக்கப்படும்.[5]
ஊணூர் தழும்பன் பாண்டிய நாடு [6]

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை, மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கைஅம் பெருந்துறை முத்தின் அன்ன - அகம் 27-7
  2. இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும் கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும்நெய்தல் போலத் - ஐங்குறுநூறு - நெய்தல் 188
  3. தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல் கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு - சிலம்பு ஊர்காண் காதை 79-80
  4. கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் - அகம் 222
  5. பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் ..... புலி பொறித்துப் புறம் போக்கி மதி நிறைந்த மலி பண்டம் - பட்டினப்பாலை - 105-135
  6. வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, குவளை உண்கண் இவளைத், தாயே ஈனா ளாயினள் ஆயின், ஆனாது நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும், செந்நுதல் யானை பிணிப்ப, வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே - புறம் 348
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்துறைமுகம்&oldid=1962815" இலிருந்து மீள்விக்கப்பட்டது