இளையர் (குடி)
இளையர் என்பவர் சங்க காலக் குடிகளில் ஒருவர். ஆதன், அழிசி மற்றும் சேந்தன் ஆகியோர் இளையர் குடியில் தோன்றியவர்கள்.[1] சேந்தனின் தந்தை அழிசியும், அழிசியின் தந்தை ஆதனும் ஆவர்.[2] இந்த இளையர் குடியினர் வெல்போர் சோழர் என்ற சோழரின் கிளைக் குடியினர் ஆவர்.[3]
ஆட்சிப்பகுதி
தொகுஇவர்கள் ஆர்க்காடு என்னும் நாட்டை ஆண்டுவந்தனர். இந்த ஆர்க்காட்டை இளையர் குடியில் தோன்றிய அழிசி ஆண்டதால் இக்காட்டை அழிசியம் பெருங்காடு என்றும் அழைப்பர். இக்காட்டில் நெல்லிமரங்கள் அதிகம். இப்பகுதியை பற்றி குறிக்கும் சங்க இலக்கியங்கள் இந்நாட்டை நீர் வளம் (கழனி), நெல்லி மரங்கள், சோழர் குடியாட்சி போன்றவற்றொடு இணைத்துக் காட்டுவதால் இது தஞ்சை மாவட்டத்தின் ஆர்க்காட்டுக் கூற்றமே அன்றி வட தமிழக ஆர்க்காடு இல்லை என அறியலாம்.[4]
படை பலம்
தொகுபாண்டியர் தொடர்பு
தொகுஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[8] இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற செய்தியும் உள்ளது.[9] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும் அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[10] அதனாலேயே சோழ நாட்டு கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர்.
இளையர் யார்
தொகுமேலே காட்டப்படுள்ள மேற்கோள் சான்றுகள் அனைத்தும் இளையர் என்போரை வாட்போர் வீரர் எனவே காட்டுகின்றன.
மூலம்
தொகுசங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். 2007. pp. 135–138.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 குறுந்தொகை - 258:6
- ↑ திதலை எஃகின் சேந்தன் தந்தை, தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,-(நற்றிணை 190)
- ↑ 3.0 3.1 நற்றிணை - 87:3
- ↑ வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் அரியல் அம் கழனி ஆர்க்காடு (நற்றிணை 190)
- ↑ குறுந்தொகை 258:5
- ↑ ஏந்து கோட்டு யானைச் சேந்தன்
- ↑ குறுந்தொகை 258:6
- ↑ புறம் 71:4-19
- ↑ குறுந்தொகை - 258:6
- ↑ #மூலம்
- ↑ காவிரிப், பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த, ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை, நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு (குறுந்தொகை 258)
- ↑ நற்றிணை 190
- ↑ வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு, நெல்லி (நற்றிணை 87)
- ↑ புறம் 71