அழிசி
காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு நாட்டை ஆண்ட அரசன் அழிசி. அவன் மகன் சேந்தன். இருவரும் அரசர்கள்.[1] இவன் சோழரோடு அனுக்கத்தொடர்பு உடையவன்.[2] இவனை இளையப் பெருமகன் என பரணர் குறிப்பதன் மூலம் வாளேந்திய வீரர் படைக்கு இவன் தலைவன் என அறியலாம்.[3]
ஒப்பு நோக்குக
தொகு- ஆதன் அழிசி - ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[4] இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற செய்தியும் உள்ளது.[5] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும் அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[6] அதனாலேயே சோழ நாட்டு கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர்.
மூலம்
தொகுசங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். 2007. pp. 135–138.