சங்ககால இலங்கை

தொகு

இலங்கை, ஈழம் என்பன பழந்தமிழ்ச் சொற்கள். இலங்கை என்னும் சொல்லுக்கு ‘ஒளி பொருந்திய நாடு’ என்பதும், ஈழம் என்னும் சொல்லுக்குக் ‘கிழக்குநாடு’ என்பதும் பொருள்.

ஈழத்துச் சங்க காலப் புலவர்

தொகு

ஈழத்துப் பூதன்தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள. இவை எல்லாமே அகத்திணைப் பாடல்கள். அக்கால அரசர்கள் யாரையும் இவர் பாடவில்லை என்பதை எண்ணும்போது, இவரை ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழ்ந்தவர் எனக் கொள்வதை விட, ஈழத்தில் இருந்துகொண்டு இவர் பாடிய பாடல்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன எனக் கொள்வது மேலானது எனத் தோன்றுகிறது.

ஈழத்து உணவு

தொகு

கரிகாலன் ஆட்சிக் காலத்தில், புகார் நகரச் சந்துபொந்துகளிலெல்லாம் குவிக்கப்பட்டிருந்த செல்வ வளங்களில் ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவை. [1] காழகத்து ஆக்கம் என்பது பர்மாத் தேக்குப் பொருள்கள். [2]

தொன்மாவிலங்கை

தொகு

இலங்கையைச் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சிறுபாணாற்றுப்படை இலங்கையைத் ‘தொன்மாவிலங்கை’ இன்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம் இதனை வழிமொழிந்து ‘தொல் இலங்கை’ என்று குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் இலங்கை

தொகு

இலங்கைத் தீவைப் போலத் தமிழ்நாட்டிலும் ஓர் இலங்கை. இதனை ‘நன்மா இலங்கை’ என்றும், ‘பெருமா இலங்கை’ என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வூர் திண்டிவனம் பகுதியில் உள்ளது. சங்ககாலத்தில் இப்பகுதி ஓய்மானாடு எனப்பட்டது. இங்கு ஓவியர், ஒளியர் ஆகிய மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒளிர்வது ஓவியம். ஒளியும் ஓவியமும் ‘ஓய்’ என மருவின. இதனால் ஒளியர், ஓவியர் குடிகளின் தலைமகன் ‘ஓய்மான்’ எனப்பட்டான்.

தமிழகத்தில் ஒளிநாட்டின் தலைநகர் நன்மாவிலங்கை. பெருமாவிலங்கை என்றெல்லாம் சுட்டப்பட்ட இலங்கை. ஈழநாட்டின் தலைநகர் பண்டைக் காலத்தில் இலங்கை. இப்போது கொழும்பு. கொழுவிய நகரம் கொழும்பு. கொழுவியது இலங்கும். அதாவது ஒளிரும். ஆகவே இலங்கை கொழும்பு ஆயிற்று. [3] [4] [5]

இராமன், சீதை பற்றிய குறிப்புகள்

தொகு

இராமன் இலங்கையை வென்ற செய்தியைத் தமிழின் பழமையான நூல்கள் குறிப்பிடுகின்றன. சங்கப் பாடல்களில் இராமாயணம் [6] [7]

கயவாகு

தொகு
  • கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக் கயவாகு செங்குட்டுவன் கோயில் கட்டி நடத்திய கண்ணகி விழாவுக்கு வந்திருந்தான். [8]
  • கயவாகு இலங்கையில் கோயில் எடுத்துக் கண்ணகியை வழிபட்டான். [9]

ஈழம் வென்ற கிள்ளி

தொகு

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழமன்னன் கிள்ளி காஞ்சிபுரத்தையும், தஞ்சாவூரையும், ஈழத்தையும் தாக்கிப் போரிட்டான் என முத்தோள்ளாயிரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. தஞ்சைச்சோழர் பற்றிக் குறிப்பிடும் இந்த நூல் சங்ககாலத்துக்குப் பின் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் நோன்றியது. [10]

ஈழத்துப் பிராமி கல்வெட்டு

தொகு

வெல்லாவெளிப் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று ‘பருமக நாவிக’ என்று ஒருவன் பெயரைக் குறிப்பிடுகிறது. இது ‘பெருமகன் நாவிகன்’ என்னும் தமிழ் வடிவத்தின் சிதைவு. நாவாய் வணிகத் தலைவன் நாவிகன். சிலப்பதிகாரம் நாவாய் கணிகத் தலைவனை ‘நாய்கன்’ எனக் குறிப்பிடுகிறது. இது கிறித்து காலத்துக்கு முன்பே ஈழநாட்டில் தமிழ் புழக்கத்தில் இருந்த்தை மெய்ப்பிக்கிறது.

ஈழத்துச் சொற்கள்

தொகு

ஈழத்துத் தமிழ்ச்சொற்கள் தமிழின் திசைச்சொற்களாகக் கொள்ளப்பட்டன. [11]

முடிபு

தொகு

இந்தியாவோடு ஒட்டிக்கொண்டிருந்த நிலப்பரப்பு முதற்சங்கக் கடற்கோளுக்குப் பின்னர் விலகித் தனித் தீவாக மாறியது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் ஏழ்தெங்கநாட்டின் பகுதியாக இலங்கை விளங்கியது எனலாம். பௌத்தம் பரவுவதற்கு முன்னர் ஈழத்தில் பேசப்பட்ட மொழி தமிழே. [12] சிங்களம் வடமோழியோடு தொடர்புடையது.

அடிக்குறிப்பு

தொகு
  1. ஈழத்து உணவு என்பது என்ன?
    • அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் கரும்பைத் தமிழ்நாட்டுக்குப் கொண்டுவந்தனர் என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.
    அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
    நீரக இருக்கை ஆழி சூட்டிய
    தொல் நிலை மரபின் நின் முன்னோர் (புறம் 99)
    • கரும்பு நியூகினியா தேயத்தில் கி.மு. 6000 ஆண்டுக்கு முந்தியது என்பது அதன் வரலாறு. கரும்பு அது ஈழநாட்டின் வழியே தமிழகம் வந்திருக்கலாம். *இதனையே பட்டினப்பாலை நூல் ‘ஈழத்து உணவு’ எனக் குறிப்பிடுகிறது என எண்ணிப் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இவை சர்க்கரைக்கட்டியால் செய்த தின்பண்டங்கள் போலும்.
    • தமிழ்நாட்டின் சங்ககால விளைச்சலில் நெல்லும் கரும்பும் முதன்மை பெற்றிருந்த்தைச் சங்கப்பாடல்கள் பல தெரிவிக்கின்றன. (கரும்பு நடு பாத்தி (குறுந்தொகை 262, ஐங்குறுநூறு 65).
    • பனைவெல்லத்தில் செய்த வெல்லத்தைத் தொல்காப்பியம் ‘பனாஅட்டு’ எனக் குறிப்பிடுகிறது.
    பனையின் முன்னர், அட்டு வரு காலை,
    நிலை இன்று ஆகும், ஐ என் உயிரே;
    ஆகாரம் வருதல் ஆவயினான. தொல்காப்பியம், 285 உயிர்மயங்கியல்.
  2. ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் (பட்டினப்பாலை 191)
  3. தொன்மாவிலங்கைகு கருவொடு பெயரிய
    நன்மாவிலங்கை மன்னருள்ளும்
    மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்
    உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன் (ஓய்மானாட்டு நல்லியக்கோடன் – சிறுபாணாற்றுப்படை 119-122)

  4. இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்
    பெருமாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
    இல்லோர் செம்மலை நல்லியக்கோடனை (ஓய்மானாட்டு நல்லியக்கோடனை, புறத்திணை நந்நாகனார் - புறம் 176)

  5. நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
    வில்லியாதன் கிணையோம் பெரும (ஓய்மான் வில்லியாதனை, புறத்திணை நந்நாகனார் - புறம் 379)

  6. சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கைக் கட்டு அழித்த
    சேவகன் சீர் சேளாத செவி என்ன செவியே (சிலப்பதிகாரம், 17 ஆய்ச்சியர் குரவை)
  7. பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
    இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
    பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
    சார்ந்து கெழீஇயிலார் இல் (பழமொழி 92)
  8. கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
    ‘எம் நாட்டு ஆங்கண் இமயவரம்பனின்
    நன்னாள் செய்த நாளணி வேள்வியில்
    வந்தீகு என்றே’ வணங்கினர் வேண்டத்
    ‘தந்தேன் வரம்’ என்று எழுந்த்து ஒருகுரல் (சிலப்பதிகாரம் 30 வரந்தரு காதை)
  9. அதுகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்டம் முந்துறுத்து ஆங்கு அரந்தை கெடுத்து வரம் தரும் இவள் என, ஆடித் திங்கள் அகவயின் ஆங்கு ஓர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று. (சிலப்பதிகாரம், உரைபெறு கட்டுரை)
  10. கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
    தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப்-பிற்றையும்
    ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
    கோழியர்கோக் கிள்ளி களிறு! (முத்தொள்ளாயிரம்)
  11. செந்தமிழ் பேசப்பட்ட நிலம் எது என்பதில் 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாழ்ந்த இலக்கண உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தபோதிலும், செந்தமிழ் பேசப்பட்ட நிலத்தின் நாலாத் திசைகளிலும் உள்ள நிலத்தில் பேசப்பட்ட சில மாற்றுச்சொற்களை அவர்கள் திசைச்சொல் என்று காட்டினர். நாலாத் திசைகளிலும் இருந்த நிலங்களை அவர்கள் இரு வகையாகக் கொண்டனர். ஒன்று செந்தமிழ் சேர்நிலம் 12. மற்றொன்று செந்தமிழ் சூழ்நிலம். செந்தமிழ் சூழ்நிலத்தை அவர்கள் குறிப்பிடும்போது ‘சிங்களம்’ என்று இலங்கையைக் குறிப்பிடுகின்றனர்.
  12. இது ஆராயப்பட வேண்டிய செய்தி.


தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

தொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) இலோ அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

சங்ககாலப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் பற்றி எதுவாது செய்திகள் இருப்பின் அது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதினால் சிறப்பாக இருக்கும். நன்றி ஐயா. --Natkeeran (பேச்சு) 19:30, 26 திசம்பர் 2012 (UTC)Reply

தொகுத்துப் பார்க்கிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:22, 26 திசம்பர் 2012 (UTC)Reply

சமீபத்தில் அண்டன் ஆலமரத்தடியில் இலங்கைத் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றின் இணைப்பை பகிர்ந்திருந்தார். அதில் நாவிதன் (நாவாய் என்ற தமிழ் வார்த்தையின் வழி வந்திருக்கலாம்) என்ற சொல் காணப்படுகிறது. அதுவும் சங்ககாலம் தான் அதையும் நிங்கள் ஆய்வு கட்டுரை எழுதுவீர்களாயின் செர்த்துக் கொள்ளுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:00, 2 சனவரி 2013 (UTC)Reply

http://www.battinews.com/2012/09/Batticaloaancient.html?fb_comment_id=fbc_425815090810106_4240856_426061074118841# இது தான் அண்டனார் பகிர்ந்த இணைப்பு. இதில் முக்கிய வரி இது தான். பருவக நாவிக--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:56, 2 சனவரி 2013 (UTC)Reply

ஆஹா அண்டனார் இதை பத்தி ஒரு பத்தியே போட்டுவிட்டார். http://ta.wikipedia.org/s/2fl9--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:05, 2 சனவரி 2013 (UTC)Reply

  • அன்புள்ள தேனியாருக்கு, ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி. இப்போது அவருடைய கட்டுரையைப் பாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:13, 4 சனவரி 2013 (UTC)Reply
  • அன்புள்ள நற்கீரன், அடியில் தரப்பட்டுள்ள 'சங்ககால இலங்கை' என்னும் கட்டுரையை எனது சார்பில் முறைப்படி தாங்களே அனுப்பிவைக்க வேண்டுகிறேன். அல்லது அனுப்பவேண்டிய தொடர்பைத் தந்து உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:23, 6 சனவரி 2013 (UTC)Reply
Return to the user page of "Sengai Podhuvan/தொகுப்பு 6".