விக்கிப்பீடியா பேச்சு:விக்கிமீடியா அறக்கட்டளை ஊடாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

https://meta.wikimedia.org/wiki/Community_Capacity_Development#Phase_2:_Community_discussion பாருங்கள். இதன் மூலமாக ஆறு தகுந்த புலங்களில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவ விக்கிமீடியா அறக்கட்டளை முன்வந்திருக்கிறது. இவற்றில் எந்தப் புலங்கள் நமக்குத் தகும், என்ன உதவிகள் தேவை என்று நாம் விரிவாக உரையாடி ஒரு சுருக்கத்தை விக்கிமீடியா அறக்கட்டளைக்குப் பரிந்துரைத்தால், அவர்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

  • On-wiki technical skills
  • Communications
  • Partnerships

ஆகிய மூன்று புலங்களில் நாம் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறேன். இவற்றின் சில செயற்றிட்டங்கள் ஏற்கனவே நாம் த. இ. க. மூலம் முன்னெடுக்க விரும்பும் பணிகளுடனும் ஒன்றிணைந்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.--இரவி (பேச்சு) 11:52, 25 ஆகத்து 2015 (UTC)Reply

கருத்து தேவை. குறிப்பாக, இலங்கையைக் களமாகக் கொண்டு சிறப்புப் பயிற்சிகள், வளங்களை உருவாக்க வாய்ப்பும் தேவையும் உண்டு என்று எண்ணுகிறேன். உங்கள் பரிந்துரைகளை அளிக்க வேண்டுகிறேன். கவனிக்க: @AntanO, சஞ்சீவி சிவகுமார், Shrikarsan, Kanags, மதனாஹரன், Booradleyp1, and Surya Prakash.S.A.: @Aathavan jaffna, Dineshkumar Ponnusamy, Balurbala, Commons sibi, Parvathisri, Mahir78, and Mohamed ijazz: @Semmal50, தமிழ்க்குரிசில், Mayooranathan, Sundar, Natkeeran, Kurumban, and Rsmn: @Kalaiarasy, Sivakumar, Sivakosaran, Selvasivagurunathan m, Ksmuthukrishnan, Seesiva, and Shanmugamp7: @George46, Jayarathina, and Chandravathanaa:. --இரவி (பேச்சு) 06:06, 30 ஆகத்து 2015 (UTC)Reply

வணக்கம், Community governance, Conflict management, On-wiki technical skills, New contributor engagement and growth, Partnerships Communications என அனைத்து நம் தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தேவை என்று எண்ணுகிறேன். நாம் புதுப்பயனர்களை தொடர்ந்து ஊக்குவிக்க, எனக்குத் தெரிந்தவரையிலும் எதுவும் செய்ய இயலவில்லை என்றே எண்ணுகிறேன். இது வரை Conflict management குறித்த தேவைகள் அவ்வளவாக இல்லாமல் இருந்தாலும் தமிழ் விக்கிப்பீடியா இனி வரும் காலங்களில் பலமடங்கு பயனர்களைப் பெரும்பொழுது இதனுடைய அவசியம் அதிகரிக்கும். ஏற்கனவே ஒருசில பிணக்குகள் வந்தபின் கொள்கைகளை வகுத்திருக்கிறோம்; இனிவரும் காலங்களில் அனைத்தும் தேவையான அளவில் வைத்துக் கொண்டால் நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:05, 31 ஆகத்து 2015 (UTC)Reply

சமூக ஆளுமை, முரண் மேலாண்மை, விக்கியில் தொழில்நுட்ப திறன்கள், புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவித்தல் மற்றும் வளர்த்தல், ஆகிய நான்கு பகுதிகளில் அதிக உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவித்தல் மற்றும் வளர்த்தல் பகுதியில் புதிய பங்களிப்பாளர்களை கொண்டு வரவும், பயிற்சியளிக்கவும், ஊக்குவிக்கவும், வளர்த்து விடவும் வேண்டிய கடப்பாடு உள்ளது.
முரண் மேலாண்மைப் பகுதியில் மாற்றுக் கருத்துகளை உள்வாங்குதல், சிக்கல் தீர்த்தல், முரண்பாடுகளை களைதல், பொது உடன்பாட்டுக்கு வருதல், பக்கச்சார்பற்ற வழிமுறைகளை தோற்றுவித்தல், பின்பற்றல் போன்றவைகள் அதிகம் தேவைப்படுகின்றது.
சமூக ஆளுமையில் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு பொதுத் தளத்தில் இயங்கவல்ல கொள்கைகளை வகுப்பதும் தேவையான ஒன்று.
விக்கியில் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்வதும், புதியர்களுக்கு அவற்றை விரைவாக கற்றுக் கொடுக்கவும் போதுமான கையேடுகள் இல்லை, பெரும்பாலானவை ஆங்கிலத்திலேயே உள்ளது. அவற்றை அனைவருக்கும் புரியும் வண்ணம் தமிழில் மொழியாக்கம் செய்யவோ, உருவாக்கவோ வேண்டும். மொழிக் கொள்கைகளில் அதிக இறுக்கம் காணப்படுவதை தவிர்க்க வேண்டும், அதற்கு இசைவாக மொழி மாற்றம் செய்யவும், மொழிப் பயன்பாட்டை செவ்வனே கற்கவும் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உதவி வேண்டும். --விண்ணன் (பேச்சு) 10:24, 2 செப்டம்பர் 2015 (UTC)

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. 2, 3 வாரங்களில் இவ்வாய்ப்பினை முன்வைத்து விக்கிச்சமூகத்துடன் உரையாடி ஏதேனும் ஒரு புலத்தின் கீழ் முதற்கட்டமாக பணித்திட்டம் அல்லது தேவையைச் சுட்டுமாறு விக்கிமீடியா அறக்கட்டளையில் கேட்டிருந்தார்கள். பொதுவாக, ஆறு புலங்களின் கீழும் இவற்றை ஊடறுத்தும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தேவைகள் உள்ளன என்பதே உண்மை. குறிப்பாக, பல நாட்கள் பங்களித்து வரும் பலருக்குமே ஒரு சில விடயங்களில் கூடுதல் தெளிவு தேவைப்படுவதைக் கடந்த இரண்டு மாதங்களில் பலரையும் சந்தித்து உரையாடி போது உணர முடிந்தது.

எனவே, என்னுடைய பரிந்துரை:

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான ஒரு மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்தலாம். இதில் எழுத்தாற்றல், மொழிபெயர்ப்பு, ஒளிப்படம் எடுத்தல், விக்கிமீடியா அமைப்பு முறை, பரப்புரைக்குத் தேவைப்படும் திறன்கள், அடிப்படை விக்கி நுட்பங்கள் முதலிய பல்வேறு பயிற்சிகளை அளிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Train_the_Trainer_Program/2015 பாருங்கள்.

இலங்கையில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கவனத்தைக் கூட்டும் வகையிலும், இலங்கை - இந்தியா பயனர்கள் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும் இப்பயிற்சியை இலங்கையில் வைத்து நடத்தலாம் என்பது என் ஆவல். இடர்கள் என்று பார்த்தால்: அ) பலரும் முதல் முறையாக கடவுச்சீட்டு எடுக்க வேண்டி வரலாம். ஆ) செலவு கூடுதல் என்றோ தனித்தனியாக இரு நாடுகளில் இரு பயிற்சிகள் நடத்தலாம் என்றோ விக்கிமீடியா அறக்கட்டளை கருத இடமுண்டு. ஆனால், இரு நாட்டுப் பயனர் நல்லுறவை வலியுறுத்தி இக்கவலையைத் தவிர்க்கலாம். இ) இலங்கையில் இதனைப் பொறுப்பெடுத்துச் செயற்படுத்த ஒரே நகரில் அல்லது அருகமை நகர்களில் அமைந்த விக்கிப்பீடியர்கள் குழு அல்லது ஒத்த கருத்துள்ள ஆர்வலர்கள் தேவை. ஒரு கல்வி நிறுவன ஆதரவும் இருந்தால் நன்றாக இருக்கும். ஈ) இது தொடர்பான செலவுகளுக்கு விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதில் சிக்கல் வருமா? முன்பு வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதில் சிக்கல் இருந்தது. செலவுத் தொகையைப் பொறுத்து ஒரு சில விக்கிப்பீடியர்களின் கூட்டுக் கணக்குக்கோ பல்கலைக்கழகம் போன்ற ஆதரவாளரின் கணக்குக்கோ பணத்தை அனுப்பி வைக்கக் கோர முடியும்.

ஆகக்கூடுதலாக 30 முதல் 40 பேர் வரை இத்தகைய பயிற்சியில் பங்கேற்பது வினைத்திறம் மிக்கதாக இருக்கும். குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ள விக்கிப்பீடியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். தகுந்த பயிற்சிகளை அளிக்கக் கூடியவர்களை இந்தியாவில் இருந்தும் வர வைக்கலாம்.

பல தமிழ்நாட்டு விக்கிப்பீடியர்களும் இலங்கையைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஒரு பயிற்சி இலங்கையில் அமைவது பல்வேறு வகையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 19:25, 10 செப்டம்பர் 2015 (UTC)

"இலங்கை - இந்தியா பயனர்கள் இடையே நல்லுறவை வளர்ப்பது" நல்நோக்கு எனினும், பல பயனர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்று இத்தகைய பயிற்சியில் கலந்து கொள்வது efficient ஆன செலவீனமாக நான் கருதவில்லை. பயணம் தவிர்த்து தங்குமிடம், உணவு வசதிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், இலங்கையில் எங்கு வைப்பது (கொழும்பில்/மலையகத்தில்/கிழக்கில்/யாழில்) என்ற கேள்வியும் எழுகிறது. அதே செலவில் கூடிய எண்ணிக்கையான பயிற்சிப் பட்டறைகளை பல இடங்களில் நடத்துவதும், நல்லுறவை மேம்படுத்தக் கூடிய வேறு செயற்திட்டங்களை மேற்கொள்வதும் பயன்மிக்கதாக அமையும் என்று கருதுகிறேன். (தேவையானால் "தகுந்த பயிற்சிகளை அளிக்கக் கூடியவர்களை இந்தியாவில் இருந்தும் வர வைக்கலாம்.") மேலும், இந்தியா - இலங்கை என்று மட்டுமன்றி கணிசமான தமிழர்கள் வாழும், தமிழ் வழிக் கல்வி இருக்கும் மலேசியாவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 20:07, 10 செப்டம்பர் 2015 (UTC)
Natkeeran, சற்று வெளிப்படையாகவே பேசுவோமே? தமிழ் விக்கிப்பீடியா ஒரு முக்கியக் கட்டத்தைக் கடக்கும் நிலையில் இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கம் முதலே இலங்கையைச் சேர்ந்த விக்கிப்பீடியர்களின் பங்களிப்பு கணிசமானதாக இருக்கிறது. மற்ற பல விக்கிப்பீடியாக்களைப் போல் அல்லாமல் தமிழ் விக்கிப்பீடியர்களின் ஒற்றுமை பேணப்பட தொடக்கக் கால தமிழ் விக்கிப்பீடியர்களின் முதிர்ச்சியும் ஒரு காரணம். பன்னாட்டுத் தமிழர்களுடனான நேரடிப் பழக்கம் இந்த முதிர்ச்சிக்கும் தெளிவுக்கும் முக்கியக் காரணம் ஆகும். நான் ஐரோப்பாவில் படித்த, வேலை பார்த்த காலத்தில் நேரடியாகப் பார்த்துப் பழகிய பல இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் ஈழத் தமிழர்களின், மொழி, பண்பாடு பற்றிய என்னுடைய புரிதலைப் பெரிதும் மேம்படுத்தியது. ஆனால், அத்தகைய புரிதல், ஒரு முறையேனும் இலங்கைத் தமிழர்களுடன் நேரடியாகப் பழகாமலோ இலங்கையையேனும் பார்க்காமலோ அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் கை கூடும் என்று நான் எண்ணவில்லை. ஆனால், அதற்கான தேவையை இப்போது உணர்கிறேன். இதே பயிற்சியை தமிழகத்தில் நடத்தி இலங்கையைச் சேர்ந்த பயனர்களை இங்கு வரவும் அழைப்பு விடுக்கலாம். ஆனால், முனைப்பாகப் பங்களிக்கும் பல இளம் வயது பங்களிப்பாளர்கள் வர இயலாமல் போகலாம். குறைவானவர்களே கலந்து கொள்ளும் நிலை வரலாம் (தமிழ்விக்கி10 கொண்டாட்டத்தில் மூன்று பயனர்களே கலந்து கொள்ள முடிந்தது). இதை எல்லாம் தாண்டி தமிழகத்தைச் சேர்ந்த பயனர்கள் இலங்கையை நேரில் கண்டு வருவது பல வகையிலும் புரிதலை மேம்படுத்தும். அதனை நானே 2013 இலங்கைப் பயணத்தின் போது உணர்ந்தேன். செலவு கூடலாம். சற்று செயற்றிறன் சிக்கல்கள் வரலாம். எனினும், இது தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு மட்டுமேயான நிகழ்வு என்பதால் இதனை மேம்படுத்தி முன்னகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பரப்புரையை முன்னிட்டு ஒரு அரை நாள் பொது நிகழ்வாக ஊடகங்களை அழைத்தும் நிகழ்ச்சி நடத்தலாம்.

எனவே,

1. விக்கிப்பீடியர்கள் திறன் மேம்பாட்டுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் என்பது முதற் பரிந்துரை - இதற்கு அனைவர் ஆதரவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

2. இம்முகாமை இலங்கையில் நடத்த முன்னுரிமை தரலாம் என்பது இரண்டாவது பரிந்துரை - இதில் கருத்தளவில் சிக்கல்கள் இல்லை. ஆனால், யாரேனும் களப் பணிகள், ஒருங்கிணைப்புக்கு பொறுப்பெடுத்து நடத்த முன்வர வேண்டும். ஆதரவு தரக்கூடிய கல்வி நிறுவனமும் பங்களிப்பாளர்களும் இலங்கையின் எந்த நகரில் இருந்தாலும் சரி. அங்கு நடத்தலாம். இணையம் மூலமாகச் செய்யக்கூடிய ஒருங்கிணைப்புப் பணிகளை அனைவரும் கலந்து செய்வோம். இதன் மூலம் களத்தில் உள்ளவர்களுக்கான சுமையைக் குறைக்கலாம்.

--இரவி (பேச்சு) 03:07, 11 செப்டம்பர் 2015 (UTC)

இலங்கையில் இப்பயிற்சியை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து உங்கள் கருத்து தேவை: @AntanO, சஞ்சீவி சிவகுமார், Shrikarsan, மதனாஹரன், Aathavan jaffna, Mohamed ijazz, Sivakosaran, Mayooranathan, and கோபி: --இரவி (பேச்சு) 07:05, 14 செப்டம்பர் 2015 (UTC)

இலங்கையில் பன்னாட்டு அளவிலான விக்கிப் பட்டறை ஒன்றை நடாத்துவது பயனர்களைக் கவருதல் மற்றும் நிலைத்திருக்கச் செய்தலில் பெருமளவு பங்களிக்கும் என்றே கருதுகின்றேன். எங்கு நடாத்தலாம், ஒருங்கிணைப்பில் பங்குகொள்ளக் கூடிய ஆளணிவளம் ,பயிற்சி இலக்கு மற்றும் உள்ளடக்கம் என்பன குறித்து தீர்க்கமாக முடிவெடுப்பதும் செயற்படுத்துவதில் பங்களிக்க உறுதியளிப்பதும் அவசியமாகும். எனக்கு ஓரிரு நாட்களை ஒதுக்கிச் செயற்பட முடியும். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 18:28, 14 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி, சஞ்சீவி சிவகுமார். உங்கள் பல்கலையில் இதனை ஒருங்கிணைக்க முடியுமா என்பது தான் என்னுடைய முதல் நம்பிக்கை / எதிர்பார்ப்பு :) நூலகம் திட்டம் ஒருங்கிணைத்த ஆவண மாநாடு போல் கொழும்பில் நடத்தினால், நடைமுறை ஏற்பாடுகள் இலகுவாக இருக்கலாம். ஆனால், திட்டமிட்டுள்ள பொது மக்களுக்கான அரை நாள் நிகழ்வில் பெருவாரியான தமிழ் ஊடகங்கள், தமிழர்களைச் சென்று சேரும் வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. கவனிக்க: @ஜெ.மயூரேசன், உமாபதி, and மு.மயூரன்:--இரவி (பேச்சு) 06:57, 15 செப்டம்பர் 2015 (UTC)

இடம், ஏற்பாட்டுக் குழு முதலியவற்றை முடிவு செய்ய இன்னும் காலம் தேவைப்படும் என்று உணர்கிறேன். எனவே, மேலும் தாமதப்படுத்தாமல் இத்தகைய ஒரு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை மட்டும் இப்போது ஒரு முன்மொழிவாக விக்கிமீடியா அறக்கட்டளைக்குத் தெரிவிக்கிறேன். மற்ற விவரங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எப்படியும் இது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய விக்கிமீடியா அறக்கட்டளைக்கும் சற்று காலம் பிடிக்கும். --இரவி (பேச்சு) 15:47, 16 செப்டம்பர் 2015 (UTC)

ஆம் இரவி. முன்மொழிவு குறித்த ஆதரவைப் பெற்றபின்/ பெறும் செயற்பாட்டை ஆரம்பித்த பின் இடம் பற்றிய கருத்துகளைப் பெற்று முடிவெடுப்போம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:45, 17 செப்டம்பர் 2015 (UTC)

விக்கிமீடியா அறக்கட்டளை ஊடான சமூகத் திறன் மேம்பாடு குறித்து தமிழ் விக்கிப்பீடியர் சமூக முன்மொழிவு / Proposal from Tamil Wikipedia Community regarding WMF's Community Capacity Development framework

தொகு

விக்கிமீடியா அறக்கட்டளை வளர்ந்து வரும் விக்கிமீடியா சமூகங்களின் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை வழங்குவதை தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் வரவேற்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள ஆறு புலங்களிலும் அவற்றை ஊடறுத்தும் இன்னும் சில புலங்களிலும் பல்வேறு நிலைகளிலும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு அவர்களின் தேவைக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வளங்களை வழங்குவதற்கான தேவையை தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் உணர்கிறது. எனவே, இது தொடர்பாக பின்வரும் தேவையை முன்வைக்கிறோம்:

பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தேவை. எழுத்தாற்றல், மொழிபெயர்ப்பு, ஒளிப்படம் எடுத்தல், விக்கிமீடியா அமைப்பு முறை, பரப்புரைக்குத் தேவைப்படும் திறன்கள், அடிப்படை விக்கி நுட்பங்கள் முதலிய பல்வேறு பயிற்சிகளை அளிக்கலாம். இப்பயிற்சி இலங்கை அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று நாட்கள் நடைபெறும். 40 முதல் 50 விக்கிப்பீடியர்கள் பங்கு பெறுவர். இவர்கள் முதன்மைப் பெயர்வெளியில் குறைந்தது 500 தொகுப்புகள் செய்திருப்பர் அல்லது அதற்கு இணையான பன்முகப் பங்களிப்பை நல்கி இருப்பர்.

விக்கிமீடியா அறக்கட்டளை இப்பயிற்சியைச் சிறப்பாக வழங்குவதற்கான திட்டமிடல் மற்றும் நிதி ஆதரவை வழங்க வேண்டும். நேரடிப் பயிற்சிக்குப் பிறகு தொடர்ந்து இத்திறன்களைத் தமிழ் விக்கிப்பீடியர்கள் மேம்படுத்திக் கொள்வதற்கான வளங்களையும் வழங்க வேண்டும். --இரவி (பேச்சு) 15:47, 16 செப்டம்பர் 2015 (UTC)

ஆதரவு (Support)

தொகு
  1. மதனாகரன் (பேச்சு) 16:44, 16 செப்டம்பர் 2015 (UTC)
  2.   ஆதரவு--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:04, 16 செப்டம்பர் 2015 (UTC)
  3. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:08, 16 செப்டம்பர் 2015 (UTC)
  4. ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀
  5. --நந்தகுமார் (பேச்சு) 19:07, 16 செப்டம்பர் 2015 (UTC)
  6. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:06, 17 செப்டம்பர் 2015 (UTC)
  7. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:40, 17 செப்டம்பர் 2015 (UTC)
  8. --மணியன் (பேச்சு) 04:22, 17 செப்டம்பர் 2015 (UTC)
  9.   ஆதரவு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:28, 17 செப்டம்பர் 2015 (UTC)
  10. --ஹிபாயத்துல்லா (பேச்சு) 13:43, 20 செப்டம்பர் 2015 (UTC)
  11.   ஆதரவு--இரா.பாலா (பேச்சு) 15:55, 21 செப்டம்பர் 2015 (UTC)
  12. -- மாதவன்  ( பேச்சு  ) 16:07, 10 அக்டோபர் 2015 (UTC)Reply

நடுநிலை (Neutral)

தொகு
  • பயிற்சிகளை ஆதரிக்கும் அதே வேளை, அவை cost effective ஆக செய்யப்பட வேண்டும். சமூகத்தின் நல்கையை நாம் சிக்கனாமச் செலவி செய்ய வேண்டும். --Natkeeran (பேச்சு) 18:45, 16 செப்டம்பர் 2015 (UTC)   விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:21, 21 செப்டம்பர் 2015 (UTC)

எதிர்ப்பு (Oppose)

தொகு

கருத்துகள் (Comments)

தொகு

வாக்கெடுப்பு முடிவுற்றது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கத்தைச் சரி பார்த்து, மேபடுத்தி உதவுங்கள். நன்றி. கவனிக்க: @Natkeeran and Sundar:--இரவி (பேச்சு) 12:26, 24 செப்டம்பர் 2015 (UTC)

சுருக்கம் (Summary)

தொகு

The Global Tamil Wikimedia Community (GTWC) welcomes the Wikimedia Foundation's effort to support emerging communities by offering Community Capacity Development framework. The GTWC recognizes the need for capacity development in many domains including and across the 6 domains identified by WMF. The degree of capacity development will also vary for different domains based on contributors' existing skill level and interest. In this context, we propose the following requirement:

Tamil Wikimedians living across the globe would benefit from a capacity development training camp. Translation, Prose writing, Photography, Understanding the Wikimedia movement and its organizational structure, Outreach, and MediaWiki are some of the areas in which training shall be given. This training shall be organized in India or Sri Lanka. The camp will be conducted for 3 full days with 40 to 50 participants who have contributed at least 500 edits in main namespace or something equally useful for Tamil Wikimedia projects. WMF shall support this camp by offering funding and program design expertise. It shall also offer resources so that contributors continue to work on these skills after attending the camp. The whole exercise shall be conducted in a cost-effective manner.

இற்றை

தொகு

விக்கிமீடியா அறக்கட்டளை ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் தொடர்பாக நாம் அனுப்பி வைத்த பரிந்துரைக்கான பின்னூட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறான ஒரு பொதுவான பயிற்சிக்கான தேவை உள்ளது என்பதை உணர்கிறார்கள். ஆனால், அதனை வழமையான Grants:PEG மூலமாக நிறைவேற்றித் தர விரும்புகிறார்கள். Community Capacity Development என்னும் இப்புதிய திட்டத்தைப் பொருத்த வரை, அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆறு புலங்களில் ஏதேனும் ஒன்றில் தனிக்கவனம் எடுத்து தமிழ் விக்கிச் சமூகம் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக, நுட்பத் திறன்கள் மேம்பாடு குறித்த புலத்தில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் ஈடுபட விரும்புகிறதா என்று கேட்கிறார்கள். இதன் கீழ் செய்யக்கூடிய ஒரு எடுத்துக்காட்டுத் திட்டத்தை இங்கு காணலாம்.

காலம் கருதி, இத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா ஈடுபடுவது பயனளிக்குமா, இதற்கான தேவை உள்ளதா என்று தமிழ் விக்கிப்பீடியாவில் நுட்ப ஆர்வம், திறம் உள்ள பங்களிப்பாளர்களிடம் மின்மடல் வழி கருத்து கோரி இருந்தேன். நற்கீரன், சுந்தர், சிபி, சீனிவாசன், நீச்சல்காரன் ஆகியோர் இத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா ஈடுபடுவதற்கான தேவை உள்ளது என்ற அடிப்படையில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அக்கருத்துகளின் சுருக்கங்களை இங்கும் பகிருமாறு அவர்களை வேண்டுகிறேன்.

பொதுவாக, ஒரு சமூகமாக நாம் பலரின் திறன்களை ஒருங்கிணைத்து வெற்றி காண்கிறோம். ஆனால், தனித்தனியாக பங்களிப்பாளர்கள் பார்வையில் இருந்து பார்க்கையில் ஒவ்வொருவரும் தங்களின் திறன்களை மேம்படுத்த, புதிய திறன்களைப் பெற இடம் இருப்பதை உணர முடிகிறது. இத்திட்டம் பெருமளவு மீடியாவிக்கி மற்றும் விக்கிமீடியா திட்டங்களின் வலைத்தளங்கள் சார்ந்தே இருக்கும் என்றே எதிர்பார்க்கிறேன். அதே வேளை, தமிழ் சார் நுட்பங்களுக்கான தேவையையும் சுட்டிக் காட்டி இவற்றை நமக்கு நாமே (peer-peer) கற்பிப்பதற்கான வளங்களை உருவாக்க முடியுமா என்று பார்க்கலாம்.

விக்கிமீடியா அறக்கட்டளை அலுவர் பரிந்துரைத்த அடிப்படையில், இத்திட்டத்திற்கான மைல்கற்கள் பின்வருமாறு அமையலாம்:

  1. அக்டோபர் 15 - நமது நுட்பத் திறன்கள், தேவைகள், ஆர்வங்கள் குறித்த கருத்தெடுப்பைத் தொடங்குவது.
  2. அக்டோபர் 30 - கருத்தெடுப்பு நிறைவு
  3. நவம்பர் 10 - கருத்தெடுப்பு விவரங்களை ஆய்ந்து அறிக்கை வெளியிடல்.
  4. நவம்பர் 30 - பாடத்திட்ட வடிவமைப்பு நிறைவு. தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய ஆக்கங்களை இனங்காணல். தமிழாக்கம் தொடங்குதல். # திசம்பர் 1 முதல் பிப்ரவரி 1, 2016 வரை - பயிற்சி நிகழ்வுகள். சில உள்ளூரில் இருக்கலாம். சில பன்னாட்டு வல்லுநர்கள் உதவியுடன்.
  5. பிப்ரவரி 1 - இச்சோதனைத் திட்டம் குறித்த செயற்பாடுக்கள் நிறைவு.
  6. சூன் 1 - இப்பயிற்சியின் விளைவுகள் குறித்து ஆய்தல். கருத்தெடுப்பு நடத்துதல். பயிற்சியின் விளைவாக இனங்காணக்கூடிய செயற்பாடுகள், நுட்பத் தன்னிறைவுகள் குறித்து திறனாய்தல்.

காலம் கருதி, தமிழ் விக்கிப்பீடியா சமூகம் இத்திட்டத்தில் ஈடுபட விரும்புகிறது என்ற தகவலை விக்கிமீடியா அறக்கட்டளைக்குத் தெரிவிக்கிறேன். மேற்கண்ட திட்டமிடல் படி, இப்பயிற்சியை ஒருங்கிணைக்க குறைந்தது மூன்று பேராவது முழு மூச்சாக முன்வந்தால் நன்று. ஏற்கனவே சீனிவாசன் முன்வந்துள்ளார். நானும் அறக்கட்டளையுடனான ஒருங்கிணைப்பில் உதவ முடியும். இப்பயிற்சி 90% இணையம் வழி நடைபெறும் என்பதால் அனைவரும் தயங்காமல் இதில் பங்கேற்க வேண்டும் என்று கோருகிறேன்.

280க்கும் மேற்பட்ட மொழிச் சமூகங்கள் இருக்கும் விக்கிப்பீடியாவில், விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவை நாடி வந்து கூட்டுறவு கொள்ள முனைகிறார்கள் என்பது நல்ல சேதி. அதனை எப்படிப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பது என்ற வகையில் அணுகினால் வெற்றி நமதே :)--இரவி (பேச்சு) 15:45, 10 அக்டோபர் 2015 (UTC)Reply

நமது கட்டுரையாக்கம் மற்றும் துப்புரவு பணிகளுக்கு உதவும் மீடியாவிக்கி தொடர்பான நுட்பத் தேவைகளுக்கான பயிற்சிகளுக்கு நான் ஆதரவளிக்கிறேன். அதே வேளையில் நமது விக்கித் திட்டங்களுக்கு உடனடி பயன்பாடில்லாத நுட்பத் தேவைகளில் நமது வளங்களைச் செலவழிப்பதும் தேவையற்றது என்பது எனது கருத்து. விக்கிமீடியா/மீடியாவிக்கி தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளில் என்னால் ஈடுபட இயலும் :)--சண்முகம்ப7 (பேச்சு) 16:00, 10 அக்டோபர் 2015 (UTC)Reply
இணைய வழியிலான ஒருங்கமைப்பை மேற்கொள்வதில் என்னால் பங்குகொள்ள முடியும். --மதனாகரன் (பேச்சு) 11:47, 13 அக்டோபர் 2015 (UTC)Reply
நான் சென்ற வாரம் மேலாளர்கள் தொடர்பான சந்திப்பிற்கு சான் பிரான்சிஸ்கோ சென்றிருந்த போது, வளரும் விக்கி சமூகங்களுக்கான விகிகிமீடிய அலுவலர் அசப் பர்டோவ்-ஐ சந்தித்து பேசினேன். அவர் CCD குறித்தான திட்டங்களை விளக்கி கூறினார். மேலும் அவர் என்னென்ன தொழில்நுட்ப பயிற்சிகள் தேவைப்படும் என்பது குறித்தான கருத்துக் கணிப்பபை (survey) உருவாக்கும் பணியில் இடுபட்டுள்ளார், அதனை விரைவில் நம்முடன் பகிர்வதாக கூறியுள்ளார். என்னென்ன தேவைகள் உள்ளன என்பது குறித்து ஒரு தெளிவான முடிவு கிடைத்த பிறகு, அவற்றிக்கான பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த உரையாடல்களை மேற்கொள்ளலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 03:56, 27 அக்டோபர் 2015 (UTC)Reply

குறிப்பான நுட்பப் பயிற்சிப் பரிந்துரைகள்

தொகு

"விக்கி api பயிற்சி"

தொகு

"எளிய உதாரணங்களோடு தொடங்கி, ஒரு bot செய்வது"

தொகு

"Widget, gadget, template உருவாக்குதல்"

தொகு

"wikidata ஐ பயன்படுத்தி பயனுள்ள செயலிகள் உருவாக்குதல்"

தொகு

விக்கிப்பீடியா வளங்களைப்(tools.wmflabs.org) பற்றிய பயிற்சி

தொகு

விக்கித் தரவுகள் - அனைத்து விக்கிகளுக்குமான அட்டவணைகள், நிலப்படங்கள்! + தன்மொழியாக்கம்

தொகு

அனைத்து விக்கிகளும் ஒரே தரவுகளைக் கொண்ட அட்டவணைகள், நிலப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை ஒரு இடத்தில் இட்டு, தன்மொழியாக்கம் மட்டும் செய்தால் நிறைய உழைப்பு சேமிப்பாகும். இற்றைப்படுத்தல், பராமரித்தல் இலகுவாகும். இதற்கான வாய்ப்புக்கள் என்ன? இது தொடர்பாக எதாவது முயற்சிகள் செய்யப்படுகின்றனவா? --Natkeeran (பேச்சு) 13:24, 14 அக்டோபர் 2015 (UTC)Reply

இதனைப் பார்க்கவும். Module:Lok sabha constituency. விக்கித் தரவுகளிலிருந்து தரவைப் பெற்று காட்டுகிறது. விக்கியில் பராமரிப்பு இருக்காது. விக்கித் தரவில் தேர்தல் முடிந்தவுடன் ஒருவிரிதாளின் மூலம் தொகுத்து அங்கு விக்கித்தரவில் (இதனைக் கொண்டு) பதிவேற்றிவிடலாம். --Mdmahir (பேச்சு) 15:29, 17 மார்ச் 2016 (UTC)

விரிதாளில் இருந்து கட்டுரை, கட்டுரையில் இருந்து விரிதாளுக்கு

தொகு

நீச்சல்காரன், மீடியாவிக்கி API பயன்படுத்தி வார்ப்புருக்களில் இருந்து தகவல்களை விரிதாளுக்கு extract செய்யும் செயலிகளை எழுதியுள்ளார். தானியங்கிகளைப் பயன்படுத்தி விரிதாளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி கட்டுரைகளை உருவாக்கும் முறை நெடுங்காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இந்த நுட்பங்கள் தொடர்பான பரவலான புரிதல், திறன் விருத்தி இருந்தால் நன்று. --Natkeeran (பேச்சு) 13:24, 14 அக்டோபர் 2015 (UTC)Reply


நுட்பங்களுக்கான பயிற்சி மிகவும் தேவையே.

தொகு

எந்தெந்த மொழிகளுக்கான பயிற்சிகள் தேவை என்று பட்டியலிட்டு, அந்த மொழிகளுக்கான அடிப்படைப் பயிற்சியும், விக்கி api உடனான பயிற்சியும் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டும்.

எளிய உதாரணங்களோடு தொடங்கி, ஒரு bot செய்வது வரை விளக்குவதாக இருக்கலாம்.

Widget, gadget, template உருவாக்குதலுக்கும் wikidata ஐ பயன்படுத்தி பயனுள்ள செயலிகள் உருவாக்குதலுக்கும் இதே போல செய்யலாம்.

வீடியோ பாடங்களாகவும் செய்யலாம்.

தமிழ் விக்கியில் நுட்ப வல்லுனர்களை இரு/மூன்று மடங்காக்குதல் என்ற இலக்கில் செயல்படலாம்.

ஒருங்கிணைப்புப் பணிகளை இணையவழியிலேயே செய்யலாம் எனில் நான் உதவுகிறேன்.

--த.சீனிவாசன் (பேச்சு) 01:26, 15 அக்டோபர் 2015 (UTC)Reply

பயிற்சிக்கான முன்னேற்பாடுகள்

தொகு

இப்பயிற்சி தொடர்பாக நாம் பங்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், பின்வரும் மூன்று அடிப்படைகளில் பயிற்சிகள் தேவைப்படுகிறது என்றும் தமிழ் விக்கிச்சமூகத்துக்குப் பெரிதும் பயன்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

  • பல்வேறு விக்கிக் கருவிகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் (An overview and tutorials on many existing tools)
  • Bot programming for beginners
  • Quarry, Wikidata Query போன்றவை மூலம் புள்ளிவிவரங்கள், தரவுகளை ஆய்தல் Statistics and data mining using Quarry and Wikidata Query (WDQ) & விக்கித்தரவுப் பயிற்சி (Wikidata ontology -- items, properties, values, units)

அடுத்து நாம் செய்ய வேண்டியது?

  • என்னென்ன கருவிகளில் பயிற்சி தேவை என்று இங்கு குறிப்பிடுங்கள்.
  • ஏதேனும் ஒரு வார இறுதியில் தான் பயிற்சி அமையும். மார்ச்சு இரண்டாம் வாரத்தில் இருந்து சூன் இரண்டாம் வாரத்துக்குள் இத்தேதி அமைய வேண்டும். தேதிகள் தொடர்பாக மூன்று மாற்றுத் தேதிகள் தரலாம். இலங்கையில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றால், அங்கு பள்ளி விடுமுறையாக உள்ள நாட்களில் நடத்தலாம்.
  • சென்னையில் இப்பயிற்சி நல்கத் தோதான இடங்களுக்கான பரிந்துரை தேவை. சென்னையின் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் விக்கிப்பீடியர்கள் தங்கள் நிறுவனங்களில் கேட்டுப் பார்க்கலாம். வழமையாக, இது போன்ற பயிற்சி வகுப்பறைகளை இந்நிறுவனங்கள் கொண்டிருக்கும். --இரவி (பேச்சு) 20:16, 2 பெப்ரவரி 2016 (UTC)
@Ravidreams:, Bot programming for beginners என்பது விடுபட்டுள்ளது. இணைத்துள்ளேன். சற்று மாற்றி அமைத்துள்ளேன்.--Natkeeran (பேச்சு) 19:09, 3 பெப்ரவரி 2016 (UTC)

பட்டறைக்கான பயனர் பதிவு

தொகு

ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் பட்டறை நடத்த வாய்ப்புள்ளது. விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து அலுவலர்கள் வர வேண்டி இருத்தல், தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் ஆகிய சூழல்களைக் கருத்தில் கொண்டு இத்தேதிகளே தோதாக அமைந்தன. ஏப்ரல் 29 (வெள்ளி) பொதுவான பயனர் அறிமுகம், நுட்பம் சாரா உரையாடல்கள் அமையும். முன்கூட்டியே வர முடிந்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பணிக்குச் செல்பவர்களும் பயிற்சியில் கலந்து கொள்ளும் வகையில் நுட்பப் பயிற்சி ஏப்ரல் (சனி), மே 1 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும். இது ஓரளவு அடிப்படை விக்கிப்பீடியா அறிமுகம் உள்ளவர்களுக்கான பயிற்சி என்பதால், இன்றைய தேதியில் குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள் (அதாவது கட்டுரைகளில் 500 தொகுப்புகளாவது செய்திருக்க வேண்டும். 500 முழு கட்டுரைகள் அல்ல) செய்திருப்பவர்கள் அல்லது முதன்மையாக நுட்பப் பங்களிப்புகள் செய்பவர்கள் மட்டும் இப்பயிற்சியில் இடம்பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன். வேறு வகையில் பங்கேற்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பரிந்துரைகளை வரவேற்கிறேன். எப்படி ஆயினும் 30 முதல் 40 பேர் பங்கேற்கும் வகையிலேயே நம்மிடம் வளங்கள் உள்ளன. எனவே, மற்றவர்கள் விண்ணப்பிப்பதைத் தவிர்க்கலாம்.

நாள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1

இடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை

பயிற்சி அளிப்போர்: அசாப் பர்தோவ், யுவராசு பாண்டியன் (விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர்கள்)

இந்தியாவுக்குள் இருந்தும் இலங்கையில் இருந்தும் சென்னைக்கு வருவதற்கான போக்குவரத்துச் செலவுகள், சென்னையில் தங்குமிடம், உணவுச் செலவுகள் பொறுப்பேற்கப்படும். இவ்விரு நாடுகளுக்கு வெளியே இருந்து யாரேனும் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கான செலவைப் பொறுப்பேற்பது சிரமம். ஆனால், கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் தயங்காமல் பதிவு செய்யுங்கள். அதற்கான நிதி வாய்ப்புகளையும் ஆராய்வோம்.

கீழே உங்கள் பெயர், மற்ற விவரங்களை நான் பதிவு செய்துள்ளது போலவே பதிவு செய்யுங்கள். இலங்கையில் இருந்து வருபவர்கள் தங்கள் ஊரில் இருந்து கொழும்பு வருவதற்கான போக்குவரத்து, தங்குமிடம், இதர தேவைகளையும் குறிப்பிடுங்கள். பெரும்பாலும், விமானச் சீட்டு நேரடியாக உங்களுக்கு வழங்கப்படும். அதைத் தவிர மற்ற போக்குவரத்துச் செலவுகளை நிகழ்வில் கலந்து கொள்ளும் போது திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் தங்கள் செலவுகளுக்கான உரிய கட்டணச் சான்றுகளைச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். கட்டணச் சான்று அளிக்காத தானிகள் முதலிய சேவைகளுக்கு சிறிய அளவிலான தொகை என்றால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். மற்றபடி, கடவுச் சீட்டு / விசா செலவு, வாடகைச் சீருந்து, விடுதி, உணவகம், பேருந்து / இரயில் கட்டணச் சான்றுகளைச் சேகரித்து வையுங்கள்.

பல்வேறு திட்டமிடல் முடிவுகள் எடுக்க வேண்டி இருப்பதால், தங்கள் பெயர்களை மார்ச்சு 24 28, 2016 இரவு 11:59 UTC க்கு முன்பு பதியுமாறு வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 12:13, 17 மார்ச் 2016 (UTC)

கருத்துகள் / கேள்விகள்

தொகு

@AntanO, சஞ்சீவி சிவகுமார், Shrikarsan, மதனாஹரன், Booradleyp1, and Surya Prakash.S.A.: @Aathavan jaffna, Balurbala, Commons sibi, Parvathisri, Mahir78, and Mohamed ijazz: @தமிழ்க்குரிசில், Mayooranathan, and Rsmn: @Sivakumar, Sivakosaran, Selvasivagurunathan m, Ksmuthukrishnan, Seesiva, and Shanmugamp7: @Neechalkaran, Sengai Podhuvan, and Sodabottle: @பரிதிமதி, Aswn, Vatsan34, Nandhinikandhasamy, Iramuthusamy, கி. கார்த்திகேயன், and எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: @Yokishivam, பா.ஜம்புலிங்கம், சக்திகுமார் லெட்சுமணன், கி.மூர்த்தி, Info-farmer, and Saranbiotech20: @Inbamkumar86, Jagadeeswarann99, Karthickbala, Arunankapilan, Balurbala, எஸ்ஸார், and Logicwiki: @Fahimrazick, Srithern, Arafath.riyath, அரிஅரவேலன், ஜெ.மயூரேசன், Arulghsr, and தென்காசி சுப்பிரமணியன்:

இந்நிகழ்வில் தாங்கள் கலந்து கொள்வது பயன்மிக்கதாக இருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு பல தமிழ் விக்கிப்பீடியர்கள் 3 நாட்கள் ஒன்று கூடும் நிகழ்வாக இருக்கும். எனவே, தங்கள் பெயர்களைப் பதிந்து நிகழ்ச்சியை உறுதிப்படுத்த உதவ வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 19:55, 18 மார்ச் 2016 (UTC)

நுட்ப உரையாடலை அல்லது விரிவுரைகளை மட்டும் காணொலி அல்லது ஒலியாக யூடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றலாமா? --AntanO 15:58, 21 மார்ச் 2016 (UTC) +1--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:25, 24 மார்ச் 2016 (UTC) +1--மணியன் (பேச்சு) 03:28, 24 மார்ச் 2016 (UTC)
@AntanO and Dineshkumar Ponnusamy: அனைத்து வகையிலும் ஆவணப்படுத்த முயல்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:18, 26 மார்ச் 2016 (UTC)

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான பெயர் பதிவு இன்னும் இரு நாட்களில் முடிவுறுகிறது. எனவே, அனைவரும் மறவாமல் பெயர் பதிய வேண்டுகிறேன். கலந்து கொள்பவர்களின் தோராயமான எண்ணிக்கை, தேவைகள் முன்கூட்டியே தெரிந்தால் தான் நிகழ்ச்சியைத் திட்டமிட முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 18:08, 26 மார்ச் 2016 (UTC)

இரவி, எனக்கும் ஏப் 30, மே 1 தேதிகளில் கலந்து கொள்ள விருப்பம். பட்டியலில் உள்ள சிவக்குமார் நான் தானா தெரியவில்லை. (3.2.23 22. சிவக்குமார் கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 30 மற்றும் மே 1)--சிவக்குமார் \பேச்சு 10:40, 29 மார்ச் 2016 (UTC)
சிவக்குமார், அது நீங்கள் தான். கூடுதல் விவரங்களைச் சேர்த்து விடுங்கள் :)--இரவி (பேச்சு) 13:01, 29 மார்ச் 2016 (UTC)
நிகழ்வை நேரலையாக காண, கலந்து கொள்ள விருப்பம். -- Mdmahir (பேச்சு) 04:27, 16 ஏப்ரல் 2016 (UTC)

பதிவு செய்த பயனர்கள்

தொகு

1. அ. இரவிசங்கர்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். இரயில் அல்லது பேருந்து. பெங்களூரில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • மடிக்கணிணி தேவை: இல்லை. என்னுடைய மடிக்கணினியைக் கொண்டு வர இயலும்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை

2. உலோ.செந்தமிழ்க்கோதை

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • நான் சென்னையில் வாழ்வதால் பிற உதவிகள் தேவையில்லை.

சொ.பிரசாத்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • இலங்கையில் இருந்து வந்து கலந்து கொள்ள வேண்டும்
  • உதவிகள் செய்ய முடியுமாயின் தொடர்புகொள்ளவும்
@Prasadbatti:, இது ஏற்கனவே முனைப்பாகப் பங்களித்து வரும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான சிறப்புப் பயிற்சி. எனவே, தற்போது இப்பயிற்சிக்கு உங்களை அழைப்பது பொருத்தமாக இருக்காது. புதுப் பயனர் பக்கம் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்களின் பங்களிக்க வரவேற்கிறோம்.--இரவி (பேச்சு) 19:55, 18 மார்ச் 2016 (UTC)

3. ஹிபாயத்துல்லா

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். இரயில் அல்லது பேருந்து. கும்பகோணத்தில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை

4. நீச்சல்காரன்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 30 மற்றும் மே 1
  • சென்னையில் இருப்பதால் பிற உதவிகள் தேவையில்லை
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். இரயில் அல்லது பேருந்து. ஆத்தூரில் இருந்து..
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 28 மாலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 2 காலை

6. நா ஸ்ரீதர்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். இரயில் அல்லது பேருந்து. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை

7. இரா. பாலசுப்ரமணியம் (Balurbala)

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1.
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். இரயில் அல்லது பேருந்து. நாகர்கோவிலில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை.
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை.
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை

10. சஞ்சீவி சிவகுமார்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். உள்ளூர் போக்குவரத்து (பேருந்து), விமான போக்குவரத்து இலங்கையில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர விரும்புகிறேன்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 28 மாலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 2 காலை/மாலை
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். உள்ளூர் போக்குவரத்து (பேருந்து), விமான போக்குவரத்து இலங்கையில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர விரும்புகிறேன்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 28 மாலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 2 காலை/மாலை
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். உள்ளூர் போக்குவரத்து (பேருந்து), விமான போக்குவரத்து இலங்கையில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர விரும்புகிறேன்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 28 மாலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 2 காலை/மாலை
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். ஆம். இரயில் அல்லது பேருந்து. கோவையில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: இல்லை
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 28 மாலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 2 காலை/மாலை

14. த.சீனிவாசன்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • நான் சென்னையில் வாழ்வதால் பிற உதவிகள் தேவையில்லை.
  • கலந்து கொள்ளும் நாள்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். உள்ளூர்ப் போக்குவரத்து (பேருந்து), விமானப் போக்குவரத்து இலங்கையில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர விரும்புகிறேன்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 28 மாலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 2 காலை/மாலை
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • நான் சென்னையில் வாழ்வதால் பிற உதவிகள் தேவையில்லை.

17. செம்மல்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • என் இல்லம் சென்னையில் இருப்பதால் தங்கல், போக்குவரத்து ஏந்துகள் தொடர்பான ஏற்பாடுகள் தேவையில்லை.
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்பிரல் 29, 30, மே 1
  • போக்குவரத்து: (ஜகார்த்தா) இந்தோனேசியாவிலிருந்து (கொழும்பு) இலங்கை வழியாக வரலாம். விமானப் பயண உதவி வேண்டும். ஏப்பிரல் 28 அன்றே இந்தியாவுக்கு வந்து சேரலாம். சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல ஏற்பாடு தேவை.
  • உணவு, தங்குமிடம்: தனியறை தேவை (வந்து சேர்ந்த நாள் முதல் நிகழ்ச்சி முடிந்து மறு நாள் வரை). முஸ்லிம் முறைப்படி உணவு தேவை (உணவுக் கட்டணத்தை நானே வழங்கலாம்).
  • சென்னையிலிருந்து புறப்படும் நாள்: 2016 மே 7. நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இந்தியாவில் சில நாட்கள் தங்கியிருக்க விரும்புகிறேன். அதற்கான செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 03:50, 27 மார்ச் 2016 (UTC)
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். பேருந்து. ஒசூரில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை அருளரசன்Arulghsr (பேச்சு) 13:24, 27 மார்ச் 2016 (UTC)

20. செங்கைப் பொதுவன்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • இல்லம் சென்னையில் இருப்பதால் தங்கல், போக்குவரத்து ஏந்துகள் தொடர்பான ஏற்பாடுகள் தேவையில்லை.

21. செங்கைச் செல்வி

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • இல்லம் சென்னையில் இருப்பதால் தங்கல், போக்குவரத்து ஏந்துகள் தொடர்பான ஏற்பாடுகள் தேவையில்லை.

22. சிவக்குமார்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி - தேவையில்லை
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன்.
  • கணினி தேவைப்படுமாயின் எனக்கு ஒரு கணினி ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன். அல்லது பகிர்ந்து கொள்ளலாம்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 30 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை

23. நந்தினி

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 30 மட்டும்

24. பரிதிமதி

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: 29

25. இரகுமானுதீன் (CIS)

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 30 மற்றும் மே 1

26. தீட்டோ தத்தா (CIS)

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். இரயில் அல்லது பேருந்து. இருந்து..
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 மாலை.
  • சென்னையை விட்டு மாலை மே 1
  • கலந்து கொள்ளும் நாள்: மே 1 மட்டும்; காலை முதல் - மாலை முடிய.
  • காஞ்சிபுரம் - சென்னை வர போக (பேருந்து) பயணப்படியும், நண்பகல் உணவும் தேவை.

29. மா. செல்வசிவகுருநாதன்

தொகு
  • கலந்து கொள்ளும் வாய்ப்பு: 50%
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • சென்னையில் இருப்பதால் வேறு உதவிகள் தேவைப்படாது
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • சென்னையில் இருப்பதால் வேறு உதவிகள் தேவைப்படாது
  • மடிக்கணிணி தேவை: ஆம். ஒரு மடிக்கணினியை ஏற்பாடு செய்து கொண்டு முயல்கிறேன்
@Cangaran:, இது ஏற்கனவே முனைப்பாகப் பங்களித்து வரும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான சிறப்புப் பயிற்சி. எனவே, தற்போது இப்பயிற்சிக்கு உங்களை அழைப்பது பொருத்தமாக இருக்காது. புதுப் பயனர் பக்கம் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்களின் பங்களிக்க வரவேற்கிறோம்.--இரவி (பேச்சு) 15:40, 28 மார்ச் 2016 (UTC)
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். இரயில் அல்லது பேருந்து. மதுரையில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • மடிக்கணிணி தேவை: இல்லை. என்னுடைய மடிக்கணினியைக் கொண்டு வர இயலும்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 1 மாலை

31. எஸ்ஸார்

தொகு
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • கலந்து கொள்ளும் நாட்கள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
  • போக்குவரத்து உதவி தேவை: ஆம். இரயில் அல்லது வானூர்தி. பூனேவில் இருந்து.
  • உணவு, தங்குமிட உதவி தேவை: ஆம். விடுதி அறையை மற்ற விக்கி நண்பர்களுடன் பகிர உடன்படுகிறேன். தனி அறை வேண்டாம்.
  • மடிக்கணிணி தேவை: இல்லை. என்னுடைய மடிக்கணினியைக் கொண்டு வர இயலும்.
  • சென்னை வந்து சேரும் நாள்: ஏப்ரல் 29 காலை.
  • சென்னையை விட்டு கிளம்பும் நாள்: மே 2

பெயர் பதிவு நிறைவுற்றது. இறுதி நேர வசதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இன்னும் ஐவருக்கான இடங்களையும் உள்ளடக்கித் திட்டமிடுவோம். நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பான நடைமுறை ஒருங்கிணைப்புகளை மின்மடல் மூலமாகத் தொடர்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 07:49, 29 மார்ச் 2016 (UTC)

இற்றை

தொகு

விக்கி நுட்பப் பயிற்சி திட்டமிட்டபடி வரும் வெள்ளி, சனி, ஞாயிறு (ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1) சென்னையில் நடைபெறும். தங்குமிடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை நாளை தெரியப்படுத்துகிறேன். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தங்கள் பயணத்துக்கான ஏற்பாடுகளை மட்டும் தாங்களே கவனிக்க வேண்டுகிறேன். ஏதேனும் தகவல் தேவையென்றால் 99431 68304 அழையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 16:49, 25 ஏப்ரல் 2016 (UTC)

இடம்

தொகு

வெளியூர்களில் இருந்து வருவோருக்கான தங்குமிடம்

தொகு

அண்ணா மேலாண்மை நிலையம் தங்கும் விடுதி,

“மகிழம்பூ”,

163/1, பி.எஸ். குமாரசாமி இராஜா சாலை,

(பசுமைவழிச்சாலை), சென்னை - 600028

தொலைப்பேசி - +91-(0)44- 24938247 / 24937170

கூகுள் வரைபடத்தில் இருப்பிடம் - https://goo.gl/maps/TB8RFWyR6c52

அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் - அடையாறு நோக்கி / அடையாற்றில் இருந்து புறப்படும் பேருந்துகள் நிற்கும் இடம் - MGR Janaki College அல்லது Sathya Studios Bus stop. அங்கு இறங்கி தங்கும் இடம் நடக்கும் தூரமே (பார்க்க - நடந்து வரும் வழிக்கான வரைபடம்). அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களது குடியிருப்புக்கு அருகே உள்ள இடம் என்றும் விசாரித்து வரலாம்.

பறக்கும் இரயில் மூலம் வருபவர்கள் Greenways Road நிறுத்தத்தில் இறங்கி 1 கி. மீ. தூரம் வர வேண்டி இருக்கும். (வரைபடம்)

பயிற்சி நடக்கும் இடம்

தொகு

வெள்ளி அன்று:

தமிழ் இணையக் கல்விக்கழகம்,

அண்ணா பல்கலைக்கழக வளாகம்,

காந்தி மண்டபம் சாலை,

கோட்டூர்புரம் காவல் நிலையம் எதிரில்,

அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்,

சென்னை – 600 025.

தொ.பே : 91-44-2220 9400

சனி மற்றும் ஞாயிறு:

அண்ணா நூற்றாண்டு நூலகம் கருத்தரங்க அறை,

காந்தி மண்டபம் சாலை,

கோட்டூர்புரம் காவல் நிலையம் எதிரில்,

சென்னை – 600 025.

சனி, ஞாயிறு நிகழ்விடம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டு தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்திலேயே நடைபெற வாய்ப்புண்டு. எனவே, வரும் முன் 99431 68304 என்ற எனெ எண்ணுக்கு அழைத்து உறுதிப்படுத்திக் கொண்டு வரலாம். நன்றி.--இரவி (பேச்சு) 21:20, 27 ஏப்ரல் 2016 (UTC)

Return to the project page "விக்கிமீடியா அறக்கட்டளை ஊடாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்".