Ksmuthukrishnan
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
தொகுமலேசியாவைச் சேர்ந்தவர். பல ஆண்டுகள் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். உள் நாட்டுக் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கணினி ஆசிரியராகவும், மொழிப் பயிற்றுநராகவும் பணியாற்றியவர். கணினித் துறைக்குப் புலம் பெயர்ந்தவர். மியன்மார் மாண்டலே பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் பட்டம் பெற்றவர்.
மலேசியாவில் பல கணினிப் பயிலரங்குகளை நடத்தியவர். 2010-இல் மலேசியா பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு கணினிப் பயிலரங்கை நடத்தியவர். மலேசியாவில் பல தமிழ்ச் சங்கங்களின் அறிவுரையாளர். 2009-ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசியாவைப் பற்றி 1,935 கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தற்சமயம் தமிழ் மலர் (மலேசியா) நாளிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மயில் வார இதழின் ஆசிரியர் குழுமம்; மலேசிய நண்பன் நாளிதழின் ‘கணினியும் நீங்களும்’ பகுதியின் பொறுப்பாசிரியர். ஓய்வு கிடைக்கும் போது கணினி பழுது பார்ப்பது; மலைகள் ஏறுவது வெளிப்புற நடவடிக்கைகள். ஓவியங்கள் வரைவது முன்னைய பொழுது போக்கு. தற்போது பேரப் பிள்ளைகளின் வழிகாட்டி. மூத்த பேரன் ஒரு மருத்துவர்; மூத்த பேத்தி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்.
- பிறப்பிடம் மலாக்கா.
- வளர்ந்த இடம் கோலாலம்பூர்.
- வாழ்விடம் ஈப்போ பேராக்
மேல்விவரங்கள்
தொகு
|
விக்கிப்பீடியா பங்களிப்புகள்
தொகுஇதுவரை மலேசியாவைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் 1,935. <<< விவரங்களுக்கு
வலைப் பதிவு
தொகுமின்னஞ்சல்
தொகுksmuthukrishnan@gmail.com
மேற்கோள்
தொகுமேலும்
தொகு