மலேசியத் திரைப்படத்துறை

மலேசியத் திரைப்படத்துறை (Cinema of Malaysia) என்பது மலேசிய நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இங்கு தமிழ், மலாய், மாண்டரின், ஆங்கிலம் மற்றும் கண்டோனீயம் மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றது.

மலேசியத் திரைப்படத்துறை
கொலிஜியம் திரையரங்கம் கோலாலம்பூர்
திரைகளின் எண்ணிக்கை185,997 இருக்கைகள் (2017)
1,094 screens (2017)
151 indoor cinemas (2017)[1][2]
 • தனிநபருக்குஒரு திரைக்கு 183 இருக்கைகள் (2013)
100,000 மக்களுக்கு 3.5 திரைகள் (2015)
முதன்மை வழங்குநர்கள்ஸ்கொப் ரொடக்சன்ஸ்
ஆஸ்ட்ரோ ஷா
அனிமோன்ஸ்டா ஸ்டுடியோஸ் [3]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2019)[4][2]
மொத்தம்59
Number of admissions (2017)[5][2]
மொத்தம்72,840,000
தேசியத் திரைப்படங்கள்4,520,000 (6.2%)
நிகர நுழைவு வருமானம் (2017)[5][2]
மொத்தம்RM984 மில்லியன்
US$246 மில்லியன்
தேசியத் திரைப்படங்கள்RM57.6 மில்லியன் (5.9%)

மலேசியத் திரைப்படத்துறை ஆண்டுதோறும் சுமார் 60 திரைப்படங்களைத் தயாரிக்கிறது. ஆண்டு தோறும் தேசிய அளவில் 'மலேசியத் திரைப்பட விழா' என்ற விருது விழா கொண்டாடுகிறது. மலேசியாவில் சுமார் 150 திரையரங்குகள் உள்ளன, இது உள்ளூர் படங்கள் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களையும் திரையிடுகின்றது. வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் மலேசியாவில் படம்பிடிக்க மற்றும் இணை தயாரிப்பு முயற்சிகளை மேற்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். இதனால் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிப்பாடு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச அளவில் பிரபலமாக மலேசிய நடிகர்களான மைக்கேல் யோ மற்றும் ஹென்றி கோல்டிங் உள்ளனர்.

வரலாறு

தொகு

மலேசியத் திரைப்படத்துறையின் தோற்றம் 1933 ஆம் ஆண்டில் 'லீலா மஜ்னுனு' என்ற திரைப்படத்துடன் தொடங்கியது. இது இரண்டு பாரசீக காதலர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டது. பி.எஸ். ராஹான்ஸ் என்பவர் இயக்க, மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த பம்பாய் மோட்டிலால் கெமிக்கல் நிறுவனம் தயாரித்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைக் கவனித்த ரன் ரன் மற்றும் ரன் மீ ஷா என்ற இரண்டு சகோதரர்கள் 1937 ஆம் ஆண்டில் சாங்காயில் இருந்து சில திரைப்பட தயாரிப்பு உபகரணங்களை இறக்குமதி செய்து, சிங்கப்பூரில் உள்ள ஆம்பாஸ் சாலையில் உள்ள அவர்களின் சிறிய திரைப்படவளாகத்தில் மலாய் மொழித் திரைப்படங்களைத் தயாரிக்க தொடங்கினர். இருப்பினும 1941 இல் ஜப்பானிய படையெடுப்பு காரணமாக அவர்களால் ஐந்து அல்லது ஆறு திரைப்படங்களை மட்டுமே தயாரிக்க முடிந்தது.

மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை

தொகு

ஜகாட் என்ற திரைப்படம் மலேசியாவில் மிக வெற்றிகரமான படம் ஆகும். இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் சிறந்த மலேசிய திரைப்பட விருதை வென்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "Industry Information - Finas".
  3. "Table 6: Share of Top 3 distributors (Excel)". UNESCO Institute for Statistics. Archived from the original on 16 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Table 1: Feature Film Production - Genre/Method of Shooting". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "Table 11: Exhibition - Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு