மலேசிய தேசியக் கொடி

மலேசிய தேசியக் கொடி, (மலாய்: Jalur Gemilang (ஜாலுர் கெமிலாங்); ஆங்கிலம்: Stripes of Glory அல்லது Flag of Malaysia (கோடுகளின் புகழ்); என்பது மலேசியாவின் தேசியக் கொடியாகும்.


மலேசியா
பிற பெயர்கள் ஜாலுர் கெமிலாங் - Jalur Gemilang ("Stripes of Glory")
பயன்பாட்டு முறை Civil and state கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 1:2
ஏற்கப்பட்டது 26 மே 1950 (ஆரம்பத்தில் 11-புள்ளி நட்சத்திரமும், 11 பட்டைகளும்)
16 செப்டம்பர் 1963 (தற்போதைய 14-புள்ளி நட்சத்திரமும் 14 பட்டைகளும்)
வடிவம் 14 கிடைநிலைப் பட்டைகள் அடுத்தடுத்த சிவப்பு, வெள்ளை நிறங்களில்; மூலையில் உள்ள சதுரத்தில், நீலப் பின்புலத்தில் மஞ்சள் பிறையுடன் 14-புள்ளி நட்சத்திரம்.
வடிவமைப்பாளர் முகமது ஹம்சா[1]

இந்தக் கொடியில் 14 சிகப்பு மற்றும் வெள்ளைக் கோடுகளும்; ஊதா வண்ணத்தில் பிறையுடன் கூடிய 14 புள்ளி நட்சத்திரங்களும்; (பிந்தாங் பெர்செக்குத்துவான் (Bintang Persekutuan) - கூட்டாட்சி நட்சத்திரம் (Federal Star); அமையப் பெற்றுள்ளது.

நட்சத்திரத்தின் 13 முனைகள் மலேசியாவின் 13 மாநிலங்களையும் மற்றொன்று கூட்டரசையும் குறிக்கின்றன..[2]. பிறை மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமான இஸ்லாத்தையும், ஊதா வண்ணம் மலேசிய மக்களின் ஒருங்கிணைப்பையும், மஞ்சள் நட்சத்திரம் மலாயா அரசர்களின் வண்ணத்தையும் குறிக்கிறது..[3]

மேற்கோள்கள்

தொகு
  1. மலாயா கொடி முகமது ஹம்சாவின் வடிவமைப்பாகும். தற்போதையக் கொடி ஹம்சாவின் அசல் வடிவமைப்பாகும்.
  2. "Malaysia Flag". TalkMalaysia.com. Archived from the original on 2010-10-15. பார்க்கப்பட்ட நாள் 2009-09-15.
  3. Flags Of The World Malaysia: Description
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_தேசியக்_கொடி&oldid=3655270" இலிருந்து மீள்விக்கப்பட்டது