மலேசிய நாட்டுப்பண்

(மலேசிய நாட்டுப் பண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


நெகாராகூ (மலாய்:Negaraku; ஆங்கிலம்:My Country; சீனம்:我的國家) என்பது மலேசிய நாட்டுப் பண் ஆகும். (தமிழ்: எங்கள் நாடு) என்று தொடங்கும் பாடலாகும். 1957-ஆம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு விடுதலை பெற்ற போது நெகாராகூ நாட்டின் தேசிய தீதமாகத் தெரிவு செய்யப்பட்டது.

நெகாராகூ
Negaraku

ஆங்கிலம்: My Country


மலேசியா தேசியப் பண் கீதம்
இயற்றியவர்பலர் (முதல் பாடலாசிரியர்: சயிபுல் பாகிரி), 1954
இசைபியர்-யோன் பெரெஞ்சே
(1780-1857)
சேர்க்கப்பட்டதுஆகத்து 1957; 67 ஆண்டுகளுக்கு முன்னர் (1957-08)
இசை மாதிரி
நெகாராகூ (கருவி இசை)

இந்தப் பாடலின் மெட்டு முதலில் மலாயா கூட்டரசின் ஒரு பகுதியான பேராக் மாநில அரசின் நாட்டுப் பண்ணுக்கு உரிய மெட்டாகப் பயன்படுத்தப்பட்டது.[1] பிரெஞ்சுப் பாடலாசிரியரான பியர்-ஜீன் டி பெரஞ்சர் (Pierre-Jean de Béranger) எழுதிய லா ரோசாலி (La Rosalie) எனும் பிரெஞ்சுப் பாடலுக்கான மெட்டைத் தழுவி உருவாக்கப்பட்டது.

பாடல் வரிகள்

தொகு
மலாய் எழுத்து [2] ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்பு[3] மாண்டரின் மொழிபெயர்ப்பு

Negaraku
Tanah tumpahnya darahku
Rakyat hidup
bersatu dan maju

Rahmat bahagia
Tuhan kurniakan
Raja kita
Selamat bertakhta

Rahmat bahagia
Tuhan kurniakan
Raja kita
Selamat bertakhta

Oh my motherland,
Where my life began,
Where people lives,
In harmony and prosperity,

With God given,
Blessing of happiness,
Our King,
Reign in peace.

With God given,
Blessing of happiness,
Our King,
Reign in peace.

எந்தன் நாடே
எந்தன் குருதி சிந்திய மண்ணே

மக்கள் வாழ்கிறார்கள்
ஒன்றுபட்டும் முன்னேறியும்

அன்பும் மகிழ்வும்
இறைமையின் அருளால்

நம்பேரரசர் நலத்தோடு
அரசாள்க

我的國家,

我生長的地方。

各族團結

前途無限無量。

但願上蒼,

福佑萬民安康。

祝我君王,

國祚萬壽無疆。

但願上蒼,

福佑萬民安康。

祝我君王,

國祚萬壽無疆。

வரலாறு

தொகு
 
மலேசிய நாட்டுப் பண்ணின் மெட்டின் மூலப் பாடலான லா ரோசாலி பிரெஞ்சுப் பாடலை எழுதிய இசை அமைப்பாளர் பியர்-ஜீன் டி பெரஞ்சர்.

போட்டி

தொகு

மலேசியா நாடு விடுதலை பெற்ற காலத்தில், மலாயக் கூட்டரசுக்குள் இருந்த 11 மாநில அரசுகளுக்கும் தனித் தனியாக நாட்டுப் பண்கள் இருந்தன. ஆனால் கூட்டரசுக்கு மட்டும் நாட்டுப்பண் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் முதலமைச்சராகவும்; உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த துங்கு அப்துல் ரகுமான், பொருத்தமான நாட்டுப்பண் ஒன்றைத் தேர்ந்து எடுப்பதற்காகத் தன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்.

இவரின் ஆலோசனையின்படி பன்னாட்டுப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. போட்டிக்கு 514 பாடல் பதிவுகள் உலகம் முழுமையில் இருந்தும் வந்தன. ஆனால் எதுவுமே சிறப்பாக, பொருத்தமாக அமையவில்லை. அதைத் தொடர்ந்து உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர்கள் சிலரிடம் இருந்து இசை அமைப்புக்களைக் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.

பெஞ்சமின் பிரிட்டன் (Benjamin Britten); இரண்டாம் எலிசபெத் அரசியின் முடிசூட்டலுக்கான அணிவகுப்பு இசையை உருவாக்கிய சர். வில்லியம் வால்ட்டன் (Sir William Walton); அமெரிக்க ஒப்பேரா இசையமைப்பாளர் கியான் கார்லோ மெனோட்டி (Gian Carlo Menotti); பின்னாளில் சிங்கப்பூரின் நாட்டுப் பண்ணுக்கு இசை அமைத்த சுபிர் சயித் (Zubir Said); ஆகியோர் தெரிவு செய்யப் பட்டவர்களுள் அடங்குவர். இவர்களின் இசை அமைப்புக்களையும் தேர்வுக் குழுவினர் தவிர்த்து விட்டனர்.

பேராக் நாட்டுப்பண் தெரிவு

தொகு
 
சீஷெல்ஸ் நாட்டில் நாடு கடந்து வாழ்ந்த காலத்தில் பேராக் மாநிலத்தின் நாட்டுப் பாடலை உருவாக்கிய சுல்தான் அப்துல்லா

இறுதியாக பேராக் மாநிலத்தின் நாட்டுப் பாடலின் மெட்டைப் பயன்படுத்திக் கொள்ளத் தேர்வுக் குழுவினர் தீர்மானித்தனர். அந்தப் பாடலின் மரபு சார்ந்த தன்மைக்காக அந்த மெட்டைப் பயன்படுத்துவது என முடிவானது.

பேராக் மாநிலக் கீதத்தின் இனிமையான மென்மை பலருக்கும் பிடித்துப் போகவே அதையே மலேசிய நாட்டின் தேசியப் பாடலாக மாற்றி அமைத்தார்கள்.1957 ஆகஸ்டு 5-ஆம் தேதி துங்கு அப்துல் ரகுமானும், நடுவர்களும் இணைந்து நாட்டுப் பண்ணுக்கான பாடல் வரிகளை எழுதினார்கள்.

பேராக் மாநிலத்தின் நாட்டுப் பண்

தொகு

பேராக் மாநிலத்தின் 26-ஆவது சுல்தான் அப்துல்லா முகமது சா II (Sultan Abdullah Muhammad Shah). இவர்தான் மலேசியத் தேசியப் பாடலான நெகாராகூ தோன்றுவதற்கு மூல காரணமாக அமைந்தவர். *லா ரோசாலி* (La Rosalie) எனும் ஒரு பாடல் புகழ்பெற்று விளங்கியது. அந்தப் பாடல், சீஷெல்ஸ் நாட்டின் மாஹே தீவில் புகழ் பெற்று இருந்தது. இந்தத் தீவில் தான் பேராக் சுல்தான், நாடு கடந்து வாழ்ந்து வந்தார்.

ஜேம்ஸ் பர்ச் (JWW Birch). பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய மேலாளராகப் பதவி வகித்தவர். இவர் 1875 நவம்பர் 2-ஆம் தேதி, மகாராஜா லேலா என்பவரால் பேராக், பாசீர் சாலாக் எனும் இடத்தில் கொலை செய்யப் பட்டார். ஜேம்ஸ் பர்ச் கொலையில் பேராக் சுல்தான் அப்துல்லா முகமட் ஷாவிற்கும் தொடர்பு இருந்ததாகச் சொல்லி, அவரைச் சீஷெல்ஸ் தீவிற்கு நாடு கடத்தினார்கள்.

சீஷெல்ஸ் தீவு

தொகு

சீஷெல்ஸ் தீவு (Seychelles) இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவிற்குக் கிழக்கே 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்தச் சீஷெல்ஸ் தீவில் 19-ஆம் நூற்றாண்டில் *லா ரோசாலி* (La Rosalie) எனும் ஒரு பாடல் புகழ்பெற்று விளங்கியது. பிரெஞ்சு நாட்டுக் கவிஞர் பியர் ஜீன் டி பெரஞ்சர் (Pierre Jean de Beranger) எழுதிய பாடல்.

சுல்தான் அப்துல்லா முகமட் ஷா அவர்கள் சீஷெல்ஸ் தீவில் இருந்த போது லா ரொசாலி எனும் பாடலின் இனிமையில் ஈர்க்கப் பட்டார். அவரும் ஓர் இசைப் பிரியர். அந்தப் பாடல் அவர் மனத்தில் நீங்காத ஓர் இடம் பிடித்துக் கொண்டது.[4]

பிரெஞ்சு மெல்லிசைப் பாடல்

தொகு

பேராக் சுல்தான் அங்கிருந்த காலத்தில் பாடலாசிரியர் பியர்-ஜீன் டி பெரஞ்சர் இசை அமைத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு பிரெஞ்சு மெல்லிசைப் பாடலை ஒரு பொது இசை நிகழ்ச்சியில் கேட்டதாகச் சொல்லப் படுகிறது. ஆனாலும், பியர்-ஜீன் டி பெரஞ்சர் அந்தப் பாடலுக்கு இசை அமைத்ததற்கான சான்றுகள் எதுவும் காணப்படவில்லை.

1883-ஆம் ஆண்டு சுல்தான் அப்துல்லா முகமட் ஷா விடுதலையானார். சீஷெல்ஸ் தீவின் இசைச் சுமையுடன் மலாயாவிற்கு வந்தார். வந்ததும் அதே அந்தப் பாடலை இறைவன் சுல்தானின் ஆயுளை நீட்டிப்பாராக (Allah Lanjutkan Usia Sultan) எனும் தலைப்பில் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்தார். அதையே பேராக் மாநிலப் பண்ணாகவும் மாற்றி அமைத்தார்.[5][6]

1990-களில் நெகாராகூ பாடலின் இசை இந்தோனேசியா நாட்டுப் பாடலான *தெராங் புலான்* (Terang Bulan) பாடலில் இருந்து மருவியது என இந்தோனேசியா கூறியது.[7] கடைசியில் வரலாற்றுச் சான்றுகள் முன் வைக்கப் பட்டன. அதோடு இந்தோனேசியா அமைதியானது.

மேற்கோள்கள்

தொகு
  1. Unity and progress are anthem themes. The Sunday Times. 25 August 1957
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-08.
  3. "நாட்டுக்கொரு பாட்டு 8: மலேசியாவில் பிரெஞ்சுக்கு மரியாதை". தி இந்து (தமிழ் ). 1 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
  4. மலேசியா தேசிய கீதம் நெகாராகூ பிறந்த கதை.
  5. The National Anthem of Malaysia - Negaraku
  6. "7.3.3 Lagu Kebangsaan" from Kurikulum Bersepadu Sekolah Menengah Sejarah Tingkatan 5 (Buku Teks) Dewan Bahasa & Pustaka 2003
  7. "Malaysia Anthem Furor Hits Wrong Note, Says Indonesian Expert". Jakarta Globe. 3 September 2009. பார்க்கப்பட்ட நாள் 14 August 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_நாட்டுப்பண்&oldid=4104870" இலிருந்து மீள்விக்கப்பட்டது