மலேசியாவின் காலக்கோடு
மலேசியாவில் நடைபெற்ற மிக முக்கியமான நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய ஒரு காலவரிசை
மலேசியாவிலும் அதன் மாநிலங்களிலும் நடைபெற்ற மிக முக்கியமான நிகழ்ச்சிகள்; இயற்றப்பட்ட மிக முக்கியமான சட்டங்கள்; மலேசிய நிலப்பகுதிகளில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றங்கள்; மலேசிய அரசியலில் ஏற்பட்ட மிக முக்கியமான நிகழ்வுகள்; இவற்றை உள்ளடக்கிய ஒரு காலவரிசை அல்லது காலக்கோடு.
2-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
200 | பண்டைய இலங்காசுகம் |
பண்டைய கங்கா நகரம் |
3-ஆம் நூற்றாண்டு
தொகுஇத்தலைப்பின் கீழ் ஏதுமில்லை இந்தக் தலைப்பை விரிவாக்க நீங்களும் உதவலாம். (மே 2021) |
4-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
400 | கெடா துவா நாகரிகத்தின் தோற்றம். சுங்கை மாஸ் பகுதி மக்கள் வெளிநாட்டு வர்த்தகர்களுடன் வர்த்தகம் நடத்தினார்கள். நாகரிகத்தின் மையங்களாக சுங்கை மாஸ் மற்றும் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதிகள் விளங்கின. |
கங்கா நகரம் ஒரு துறைமுகமாக விளங்கியது. தங்கம், ஈயம் போன்ற கனிவளங்கள் வர்த்தகம் செய்யப்பட்டன. |
5-ஆம் நூற்றாண்டு
தொகுஇத்தலைப்பின் கீழ் ஏதுமில்லை இந்தக் தலைப்பை விரிவாக்க நீங்களும் உதவலாம். (மே 2021) |
6-ஆம் நூற்றாண்டு
தொகுஇத்தலைப்பின் கீழ் ஏதுமில்லை இந்தக் தலைப்பை விரிவாக்க நீங்களும் உதவலாம். (மே 2021) |
7-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
630 | இந்து பேரரசு; மலாய் பேரரசு. பாரசீகத்தைச் சேர்ந்த மகாராஜா தர்பார் ராஜா என்பவரால் கெடா பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. |
671 | சீனத் துறவி ஐ சிங் (I Ching), சீனாவில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் வழியில் கெடா பேரரசு மற்றும் ஸ்ரீ விஜயப் பேரரசுகளைப் பார்வையிட்டார்.[1] |
682 | சீனத் துறவி ஐ சிங் (I Ching), இந்தியாவில் இருந்து சீனாவுக்குச் செல்லும் வழியில் மீண்டும் கெடா பேரரசு மற்றும் ஸ்ரீ விஜயப் பேரரசுகளைப் பார்வையிட்டார். |
700 | தீபகற்ப மலேசியா பௌத்த சமயத்தின் சாரலில் இருந்தது. ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆளுமை. [2] |
சரவாக் சந்துபோங் மலையின் (Mount Santubong) அடிவாரத்தில், சரவாக் ஆற்றின் அருகில் டத்து மெர்பாத்தி (Datu Merpati) என்பவரால் சாவக பேரரசு (Sawaku Kingdom) தோற்றுவிக்கப்பட்டது. அதே காலக் கட்டத்தில் சாமாடோங் பேரரசு (Samadong Kingdom) சரவாக் சமராஹான் (Samarahan) பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது. |
8-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
750 | ஸ்ரீ விஜயப் பேரரசு இலங்காசுகத்தைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. |
775 | ஸ்ரீ விஜயப் பேரரசின் பேரரசர் இலங்காசுகத்தின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். லிகோர் (Ligor) எனும் இடத்தைத் தன் தலைநகரமாக மாற்றிக் கொண்டார். |
9-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
850 | கங்கா நகரம் ஸ்ரீ விஜய பேரரசின் தாக்குதலை எதிர்த்து தன் ஆளுமையைத் தற்காத்துக் கொண்டது. |
890 | கோத்தா கெலாங்கி பேரரசு கங்கா நகரத்தைத் தாக்கியது. கோத்தா கெலாங்கியின் மாமன்னர் பாலபுத்திரர் (Bolaputra) கங்கா நகரத்தின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டதும் பிரச்சினை சுமுகமானது. |
10-ஆம் நூற்றாண்டு
தொகுஇத்தலைப்பின் கீழ் ஏதுமில்லை இந்தக் தலைப்பை விரிவாக்க நீங்களும் உதவலாம். (மே 2021) |
11-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
1025 | தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த இராஜேந்திர சோழன் [[கடாரம்|கடாரத்தைத் தாக்கினார். இதனால் கெடா துவா; கங்கா நகரம் ஆகிய அரசுகளின் வணிகம் பெரிதும் பாதிப்பு அடைந்தது. |
1100 | சுங்கை ரெத்துஸ் (Sungai Retus) எனும் இடத்தில் துகாவ் (Tugau) என்பவரால் மெலானோ அரசு (Melano Kingdom) தோற்றுவிக்கப்பட்டது. |
12-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
1136 | பிரா ஓங் மகாவங்சன் (Phra Ong Mahawangsa) இஸ்லாம் மதத்திற்கு மாறினார். கெடா சுல்தானகத்தைத் தோற்றுவித்தார். தன் பெயரை சுல்தான் முசபர் ஷா (Sultan Mudzafar Shah I) என்று மாற்றிக் கொண்டார். இதன் மூலம் இந்து மத நடைமுறை ஒரு முடிவுக்கு வந்தது. |
13-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
1260 | சுமத்திராவில் இருந்து மினாங்கபாவு மக்கள் மலாயா தீபகற்பத்திற்குள் வந்தனர் |
1280 | சயாமிய சுகோத்தாய் அரசு (Sukhothai Kingdom) தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்தது. மாமன்னர் ஸ்ரீ தர்மராஜா (Sri Dharmaraja) என்பவரின் நக்கோன் சி தாமரட் அரசு (Nakhon Si Thammarat Kingdom), சயாமிய சுகோத்தாய் அரசின் அடிமை நாடானது. |
1299 | நீல உத்தமன் என்பவர் சிங்கப்பூர் சிற்றரசைத் தோற்றுவித்தார். |
14-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
1303 | இஸ்லாம் மதம் திரங்கானு மாநிலத்தில் பரவியது. இது கோலா பெராங் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின் (Terengganu Inscription Stone) மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. இது மலாய் உலகில், ஜாவி எழுத்துக்களின் தொடக்கக் காலச் சான்றாகும். |
1330 | சீனப் பயணி வாங் தயான் (Wang Dayuan) சிங்கப்பூருக்குப் பயணம். சிங்கப்பூரைச் சயாம் தாக்கியதைப் பதிவு செய்து உள்ளார். இதை லாங் யா மென் (Long Ya Men) மற்றும் பான் ஜூ (Ban Zu) எனும் சீனப் பயணிகளும் பதிவு செய்து உறுதிப்படுத்தி உள்ளனர். |
1360 | இந்து மதம்; பௌத்த மதம் சார்ந்த மஜபாகித் பேரரசு (Kingdom of Majapahit) ,சிங்கப்பூர் அரசைத் (Kingdom of Singapura) தாக்கித் தோற்கடித்தது. |
1362 | பாடாங் (Badang) எனும் புகழ்பெற்ற ஒரு மலாய்த் தலைவர் சிங்கப்பூரின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் |
1363 | புருணை சுல்தான் சிங்கப்பூர் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டு இஸ்லாமிற்கு மதம் மாறியதால் புருணை சுல்தானகம் தோற்றுவிக்கப்பட்டது. |
1398 | சிங்கப்பூர் சிற்றரசின் கடைசி ராஜாவான பரமேசுவரா, சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். |
15-ஆம் நூற்றாண்டு
தொகுஆண்டு | நிகழ்வு |
---|---|
1400 | மலாக்கா சுல்தானகம் பரமேசுவரா, சிங்கப்பூர் இராச்சியத்தின் (Kingdom of Singapura) கடைசி மன்னரால் நிறுவப்பட்டது. |
1403 | சீனத் தளபதி சென் செங் (மிங் வம்சம்) (Chen Cheng - Ming Dynasty) மலாக்காவை அடைந்து சீனாவின் மிங் அரச வம்சாவளிக்கும் மலாக்கா அரசுக்கும் இடையே தூதரக உறவுகளை ஏற்படுத்தினார். |
முதல் மலாய் - சீன அகராதி சீன எழுத்துக்களில் எழுதப்பட்டது. மலாக்காவில் பயன்படுத்தப்படும் வர்த்தகம் தொடர்பாக 500 சொற்களைக் கொண்டது. | |
1409 | சீனத் தளபதி செங் ஹோ (Cheng Ho) மலாக்காவை அடைந்தார். சீனா - மலாக்கா அரசுகளுக்கு இடையே தூதரக உறவுகளை வலுப்படுத்தினார். |
1414 | [மலாக்கா அரசு சுமத்திரா பாசாய் (Samudera Pasai) அரசுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. பரமேஸ்வரா பாசாய் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். |
1444 | மலாக்காவின் புகழ்பெற்ற பழங்கதை சார்ந்த தளபதி (Legendary Laksamana) ஹங் துவா, (Hang Tuah) மலாக்காவில் பிறந்தார். |
1445 | துன் பேராக் மலாக்கா இராணுவத்தை வழிநடத்தி சயாமியர்களை மூவார் எனும் இடத்தில் தோற்கடித்தார். |
1450 | சாரிப் உல் ஹசீம் (Sharif ul-Hashim) என்பவர் மலாக்காவில் இருந்து சூலு தீவிற்குச் சென்றார். சூலு அரசரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். சூலு சுல்தானகத்தை (Sultanate of Sulu) உருவாக்கினார். |
1451 | மலாக்கா அரசு தென்கிழக்காசியாவில் இஸ்லாம் மதத்தின் மையத் தளமாக விளங்கியது. |
1456 | துன் பேராக் மீண்டும் மலாக்கா இராணுவத்தை வழிநடத்தி சயாமியர்களைப் பத்து பகாட் எனும் இடத்தில் தோற்கடித்தார். அவர் மலாக்காவின் பெண்டாஹாராவாகப் பதவி உயர்வு பெற்றார். |
1459 | சீனாவின் மிங் பேரரசர் தனது மகள் ஹாங் லி போவையும் (Hang Li Po) மற்றும் 500 விசுவாசிகளையும் மலாக்காவின் சுல்தான் மன்சூர் ஷாவிற்குப் (Sultan Mansur Shah) பரிசாக அனுப்பி வைத்தார். மலாக்காவில் வாழ்ந்த சீனர்களுக்காகப் புக்கிட் சீனா (Bukit Cina) எனும் குடியேற்றப் பகுதியைச் சுல்தான் மன்சூர் ஷா நிறுவினார். |
1463 | ஜப்பானைச் சேர்ந்த ரியூக்யூ அரசுடன் (Ryukyu Kingdom) மலாக்கா சுல்தானகம் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. |
1470 | முதலமைச்சர் துன் பெசார் (Tun Besar) (முன்னர் மலாக்காவின் முதலைமைச்சராக இருந்த துன் பேராக்கின் மகன்), மலாக்கா இளவரசரின் தலைப்பாகையைத் (Tengkolok) தவறுதலாக இடம் மாற்றி வைத்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்டார். |
மலாக்கா ராஜா முகமட் (Muhammad Shah of Pahang) பகாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார். அங்கே அவர் பகாங் சுல்தானகத்தைத் தோற்றுவித்தார். |
மேற்கோள்கள்
தொகு- ↑ Junjiro Takakusu, (1896), A record of the Buddhist Religion as Practised in India and the Malay Archipelago AD 671–695, by I-tsing, Oxford, London.
- ↑ Andaya, Barbara Watson; Andaya, Leonard Y. (1982). A History of Malaysia. London: MacMillan Press Ltd. pp. 26–28, 61, 151–152, 242–243, 254–256, 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-27672-8.