வாருங்கள்!

வாருங்கள், Winnan Tirunallur, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி 23:45, 10 ஆகத்து 2015 (UTC)

தண்ணீர்த்தடம்தொகு

மேற்குறித்த கட்டுரையில் என்ன கூற வருகிறீர்கள் எனப் புரியவில்லை. உரையில் ஏதோ விடுபட்டுள்ளது போலுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 15:27, 11 ஆகத்து 2015 (UTC)

இக் கட்டுரையை புதிதாக தொடக்கியதால் ஓரிரு வரிகள் மட்டுமே இணைத்தேன். தற்போது, புரியமளவில் தகவல்களை திருத்தியிருக்கின்றேன். மேற்கொண்டு மேலதிக தகவல்களையும் விரைவில் இணைக்கப் பார்க்கின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 20:13, 11 ஆகத்து 2015 (UTC)
 •   விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 01:10, 12 ஆகத்து 2015 (UTC)
 • தண்ணீர்த்தடம் கட்டுரையைக் கண்டேன். மகிழச்சி. விக்கித்தரவுடன் இணைத்துள்ளீர்கள். இரட்டிப்பு மகிழ்ச்சி. தொடர்ந்து அக்கட்டுரையை விரிவாக்கக் கோருகிறேன். உங்களது ஆற்றலை, கட்டுரையை விரிவாக்குதில் செலவழிக்கக் கோருகிறேன். நமது தமிழ் விக்கிக்கு பல நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைக் கொணர, ஆளுக்கு ஒரு முயற்சி செய்வோம். தற்போதுள்ள விக்கித்தமிழ் என்ற புதுவெள்ளத்தில், தேவையற்ற பல இருக்கலாம். அதனைத் தெளிந்த நீராக்க சில காலம் ஆகலாம். எனவே, தொடர்ந்து எழுதுக. எனவே, உங்கள் ஆற்றலை, ஏதாவது ஒரு விக்கிமீடியத் திட்டங்களில் குவியப்படுத்துங்கள். விக்சனரி, பொதுவகம் குறித்த உதவிகள் தேவைப்படின், என்னுடைய பேச்சுப்பக்க்த்தில் தெரிவிக்கவும். ஓங்குக தமிழ் வளம்! வளர்க்க தமிழர் நலம்!! வணக்கம்.--உழவன் (உரை) 03:02, 16 ஆகத்து 2015 (UTC)
தங்களின் கருத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஆம், தமிழ் விக்கியில் பல செப்பனிடும் பணிகள் தேவைப்படுகின்றன. தமிழ் விக்கியை பயன்படுத்துவோர்கள், புதிய சொற்களை உருவாக்க முனையும் போது, ஏற்கனவே அதனை ஒத்த சொற்கள் சங்க இலக்கியத்தில், இடைக்கால இலக்கியத்தில், நாட்டுப்புற இலக்கியத்தில், வட்டார வழக்குகளில், தமிழின் துணைமொழியான மலையாளத்தில் இருக்கின்றனவா என அலசி அதிலிருக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்த முனைவதே சிறப்பு என்பது எனது எண்ணம். தண்ணீர்த்தடம் என்ற சொல் மலையாளம், குமரி வட்டார தமிழ் வழக்குகளில் இருக்கின்றன. அதனால் அதனை பயன்படுத்தலானேன். மலையாள மொழியை ஓரளவு வாசிக்க முடியும் என்பதால், மலையாளத்தில் இருக்கும் பழந்தமிழ் சொற்களை எடுத்தாள முயல்கின்றேன். வட்டார வழக்குகளில் காணப்படும் நல்ல தமிழ் சொற்களையும் கொண்டு வருவது விக்கி தமிழை மேம்படுத்தும் என்பது எனது எண்ணம். நன்றிகள் தோழரே. --Winnan Tirunallur (பேச்சு) 05:22, 16 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 05:39, 16 ஆகத்து 2015 (UTC)

தலைப்பு மாற்றம்தொகு

தலைப்பு மாற்றம் செய்ய வேண்டுமாயின் பேச்சுப்பக்கத்தில் உரையாடவும். --AntanO 18:59, 15 ஆகத்து 2015 (UTC)

பேச்சு பக்கத்தில் நானிட்ட கருத்துக்கு யாரும் பதில் தரவில்லை, இப்பக்கத்தில் கடைசியாக பதில் கூறி பல மாதங்கள் ஆகிவிட்டன. அதனால் தலைப்பை மாற்றினேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். --Winnan Tirunallur (பேச்சு) 19:05, 15 ஆகத்து 2015 (UTC)
விக்கி சமூகத்தின் ஒருமித்த கருத்திலேயே பல விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சிலவேளை காலதாமதமாகியும் காத்திருக்க வேண்டியுள்ளது. :( --AntanO 19:12, 15 ஆகத்து 2015 (UTC)
அறிய தந்தமைக்கு மிக்க நன்றிகள். அப் பக்கத்தில் ஏற்கனவே பலரும் இராசச்சுத்தான் என்ற பெயரை வைப்பதற்கு மாற்றுக் கருத்து தெரிவித்து விவாதித்துள்ளனர். பொதுநடைமுறையில் ராஜஸ்தான் என்றே புழக்கத்தில் உள்ளது. அதை தமிழ் படுத்தினால் ராசத்தான் என்றே வரும். இராசச்சுத்தான் என்ற சொல் எங்குமே நடைமுறையில் இல்லை. ஆக, ஒரு முடிவுக்கு வரும் வரை அப் பக்கத்தை ராஜஸ்தான் என்றே நிறுவிடுக. பின்னர் அதை எந்த பெயருக்கு மாற்றுவது என்பதை விவாதித்து முடிவுக்கு வருவோம் என்பது என் கருத்து தோழரே !. --Winnan Tirunallur (பேச்சு) 19:15, 15 ஆகத்து 2015 (UTC)
ஒரு சில நாட்கள் பார்த்திருந்து, தீர்வு நோக்கிய கருத்தை அங்கு இட்டு, மாற்றிவிடுகிறேன். --AntanO 19:22, 15 ஆகத்து 2015 (UTC)
நல்லதொரு வழிமுறை தான், தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றிகள். --Winnan Tirunallur (பேச்சு) 19:23, 15 ஆகத்து 2015 (UTC)

தடைதொகு

பேச்சுப் பக்கத்தில் உரையாடிபின்தான் முக்கிய தலைப்புக்களை மாற்றலாம். உரையாடல் பக்கங்களில் பல பயனர்கள் பல நாட்கள் செலவிட்டு உரையாடியுள்ளார்கள். அவ்வாறிருக்க நீங்கள் தன்னிச்சையாக செயற்படுவதைத் தடுக்க வேண்டியுள்ளது. நீங்கள் 3 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளீர்கள். தடை நீங்கியதும், பயனுள்ள பங்களிப்புக்களை வழங்க அழைக்கப்படுகிறீர்கள். --AntanO 10:56, 21 ஆகத்து 2015 (UTC)
தோழர் @AntanO: அவர்களுக்கு வணக்கம், முதற்கண்ணாக எவ்வித முன்னறிவிப்பும் தராமல், எவ்வித முன்னெச்சரிக்கையும் வாய்ப்பும் நல்காமல் என்னை தடாலடியாக தடை செய்த தங்கள் மாண்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். அது மட்டுமின்றி, தங்களையோ வேறு எந்தவொரு நிர்வாகியையோ தொடர்பு கொள்ள வழிவகையும் கொடுக்காமல் என்னை முடக்கியமைக்காக பேருவகை அடைந்தேன். சரி போகட்டும் அது தங்களின் விருப்பம், அதற்கான அதிகாரமும் வசதியும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அதை நான் மதிக்கின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)
ஆனால் என்னை எக் காரணத்திற்காக முடக்கினீர்கள் என்பதை அறிய வேண்டியவனாய் நான் இருக்கின்றேன். தலைப்பு மாற்றம் என்பது விக்கிபீடியா தந்திருக்கும் ஒரு வாய்ப்பு, இதை புதுப்பயனர், பழைய பயனர், நிர்வாகி என தனித்தனியாக வழங்கப்படவில்லை. பொதுவில் வழங்கப்படும் தலைப்புகளுக்கு முரணான தலைப்புகளைக் கட்டுரைகள் கொண்டிருந்தால் அதை மாற்றலாம் என்பதே விக்கிபீடியாவின் கொள்கையாக நான் வாசித்தவரையில் நான் அறிந்து கொண்டது. --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)
ஒருவேளை அத்தகைய கொள்கைகளை நான் தவறாக புரிந்து கொண்டேனா, அல்லது என்ன என்பதை புதியவனான எனக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு தங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அல்லது எவ்வித வாய்ப்பும் நல்காமல் புதுப் பயனர் ஒருவருக்கு போதிய அவகாசமும் வழங்காமல் தடை செய்வது தான் தமிழ் விக்கிபீடியாவின் நடைமுறையா என்பதையும் நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)
என்னை எந்தக் கட்டுரைக்காக தடை செய்தீர்கள் என்ற விளக்கத்தை அறிந்து கொள்ள ஆர்வமுடையவனாயிருக்கின்றேன். அறியத் தந்தால் தொடர்ந்து பேச பேருதவியாக இருக்கும். --Winnan Tirunallur (பேச்சு) 13:29, 24 ஆகத்து 2015 (UTC)
Blocks should be used to prevent imminent or continuing damage and disruption to Wikipedia. Deterrence is based upon the likelihood of repetition. For example, though it might have been justifiable to block an editor a short time ago, such a block may no longer be justifiable right now, particularly if the actions have since ceased or the conduct issues have been resolved. என தடைக் கொள்கை அறிவிக்கிறது. இராசத்தான் கட்டுரையில் நகர்த்தியதற்காக பேச்சுப் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தேன். ஆனால் மீண்டும் ஆஸ்திரியா கட்டுரை நகர்த்தப்பட்டது. ஏன் இந்த அவசரம்? நிற்க, தடைசெய்யப்பட்ட பின்னரும் அறிவிப்பின்றி நீங்கள் தலைப்புக்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள். விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றிய வழிகாட்டல் உள்ளது. எனவே, விக்கிப்பீடியாவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருவரை தடைசெய்வதில் பிழையில்லை. Blocks should be used to and encourage a more productive, congenial editing style within community norms. என தடைக் கொள்கை குறிப்பிடுகிறது. நீங்கள் தலைப்புக்களை நகர்த்திக் கொண்டிருக்க, அதை மீளவித்து தொடர்ந்தும் உங்களுக்கு அறிவிப்பு வழங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? ஒருதடவை சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டீகளா? முன்னறிவித்துவிட்டுத்தான் தடைசெய்ய வேண்டும் என்ற நியதி இல்லை. விக்கிப்பீடியாவிற்கு பாதிப்பு கருதும் இடத்தில் தடை செய்யலாம். ஆகவேதான் 3 நாட்களுக்காக தடையாக அது அமைந்தது. --AntanO 19:48, 10 செப்டம்பர் 2015 (UTC)

எச்சரிக்கைதொகு

1. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு பற்றிய உங்கள் கருத்துகள் உள்வாங்கப்பட்டு அது தொடர்பான கொள்கை வரைவுக்கு முனைந்துள்ளோம். எனவே, ஒரே கருத்தைப் பல்வேறு பக்கங்களில் பதிவதைத் தவிருங்கள். இது அனைவரின் ஆற்றலையும் வீணாக்கும். 2. //விரும்பினால் இலங்கைத்தமிழ், தனித்தமிழ் எனத் தனி விக்கிபீடியா பக்கத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.// போன்ற விசமத்தனமான, பன்னாட்டுத் தமிழர்கள் ஒன்று கூடி உழைக்கும் திட்டத்தில் குழப்பத்தையும், ஒற்றுமையின்மையையும் தூண்டும் கருத்துகளைத் தவிருங்கள். உங்களின் இப்போக்கு தொடர்ந்தால் உங்கள் பயனர் கணக்கைத் தடை செய்ய வேண்டி வரலாம். --இரவி (பேச்சு) 07:07, 25 ஆகத்து 2015 (UTC)

1. எனது கருத்தை உள்வாங்கி அது தொடர்பான கொள்கை வரைவுக்கு முனைந்துள்ளமைக்கு மிக்க நன்றிகள்.--Winnan Tirunallur (பேச்சு) 07:19, 25 ஆகத்து 2015 (UTC)
2. பன்னாட்டு தமிழர்கள் ஒன்று கூடி உழைக்கும் திட்டத்தில் சென்னை வட்டார மொழியை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து மனவருத்தத்தை ஏற்படுத்தியமைக்கு தங்களின் மேலான கருத்தை எதிர்ப்பார்க்கின்றேன். இங்கு குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பது எனது எண்ணமல்ல, அவ்வாறு பேச நேர்ந்திருந்தால், அதற்கு தார்மீக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறான கருத்தையும் பின்வாங்கிக் கொள்கின்றேன். நன்றிகள் ! --Winnan Tirunallur (பேச்சு) 07:19, 25 ஆகத்து 2015 (UTC)
வணக்கம் விண்ணன்! தங்களைப் போன்ற எழுத்தார்வம் மிக்கவர்களின் பங்களிப்பு, தமிழ் விக்கிக்கு மிகவும் தேவைப்படுகிறது. உணர்ச்சிவயப்படாது தங்களுடைய கருத்துகளை முன்வைத்து, நயமாக உரையாடுங்கள்; தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக தங்களால் பங்களிக்க இயலும் என்பது எனது கருத்து.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:29, 25 ஆகத்து 2015 (UTC)
தன்மையாகவே நான் உரையாட விரும்புகின்றேன். ஆனால் எப்படி உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியும் சொல்லுங்கள். எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு நிர்வாகி @AntanO: என்னை தடை செய்துவிட்டு போகின்றார். மாற்றுக் கருத்தை எடுத்துக் கூறி உரையாடும் போது தேவையில்லாமல் எம் ஊரைப் பற்றியும் எம் நாட்டைப் பற்றியும் தரக்குறைவாக பேசுகின்றார் @Fahimrazick: மற்றொருவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது என்றால் யாமும் மனிதனே. இருந்தாலும் கூடுமானவரை கட்டுப்பாட்டுக்குள்ளேயே உரையாட விரும்புகின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 10:07, 25 ஆகத்து 2015 (UTC)
நானும் தமிழ்நாட்டில் பிறந்து சென்னையில் படித்து வளர்ந்தவன் தான். யாரும் எதனையும் தரக்குறைவாக கூறியதாக உணரவில்லை. பல்வேறு பார்வைகள் கொண்ட பன்னாட்டுத் தமிழர்கள் பங்களிக்கும் திட்டத்தில் இது போன்று உரையாடல் சூட்டில் எழும் வாதங்களைத் தாண்டி ஆக்கப்பணிகளில் கவனம் செலுத்தும் முதிர்ச்சியை வளர்த்துக் கொள்வது அவசியம். கிரந்தப் பிரச்சினையில் உங்கள் கருத்தைப் பதிந்து விட்டீர்கள். மற்றவர்கள் கருத்துகளையும் உள்வாங்கி கொள்கை வழிகாட்டுதல் உருவாக்க முனைவோம். அது வரை, மற்ற விக்கிப்பணிகளில் பங்களிப்பதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் உங்கள் இயல்பு கிரந்தம் பயன்படுத்தியே கூட எழுதுங்கள். அவற்றில் மற்றவர்களும் பங்களித்து முதற்பக்கக் கட்டுரைத் தரத்துக்கு உயர்த்துவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:14, 25 ஆகத்து 2015 (UTC)
கிரந்தம் பற்றிய விவாதங்களில் தேவையே இல்லாமல் @Fahimrazick: சென்னையைப் பற்றி இழுத்தமை மனவருத்தத்தைத் தருகின்றது. நான் எந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ விவாதங்களின் போது பேசவேயில்லை. தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டில் உள்ளனர், அவர்களுக்கும் புரியுமாறு கட்டுரைகளில் தலைப்பிடும் போது கவனம் செலுத்துவது நல்லது என்றேன். ஆனால், இதில் சென்னையைப் பற்றி மட்டும் @Fahimrazick: சொன்னது நிச்சயம் கவலை தருகின்றது. நிச்சயமாக இங்குள்ள பலரும் பல வருடங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள், உங்களுக்குள் நட்பும் புரிந்துணர்வும் இருக்கலாம், அதனால் எப்படி பேசுவது என்ன பேசுவது என்பதெல்லம் தெரிந்திருக்கும். இவை எனக்குத் தெரியாது, மனதில் சரியெனப் பட்டதை எடுத்து வைக்கின்றேன். எனக்கான பங்களிப்பை நான் எங்கும் சென்றளிக்க முடியும். ஆனால், இதில் உங்களைப் போல நானும் பங்கெடுக்க விரும்பியே வந்தேன். ஆனால், தற்சமயம் அது மன சங்கடத்திலேயே போய் முடியும் போலுள்ளது. இயன்றவரை பங்களிப்பைச் செய்ய முயல்கின்றேன். அன்பார்ந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள். --Winnan Tirunallur (பேச்சு) 10:34, 25 ஆகத்து 2015 (UTC)

விண்ணன்! நான் உங்களையோ சென்னையைப் பற்றியோ கிஞ்சித்தும் தரக்குறைவாகக் கூறவில்லை. சென்னையில் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கில் மிதமிஞ்சிக் கலந்திருக்கும் ஆங்கிலத்தைத்தான் சுட்டிக் காட்டினேன். நாம் பேசும் சொற்களில் மிதமிஞ்சி ஆங்கிலம் கலந்திருந்தால் அதைத் தமிழென்று கூற முடியாதல்லவா? சென்னையைக் குறிப்பிடக் காரணம் சென்னையே தமிழகத்தின் தலை நகர் என்பதே. ஆயினும் நான் கூறியது உங்கள் மனத்தைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். விக்கிப்பீடியாவில் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு பண்பாட்டுப் பின்னணிகளையும் கொண்டோர் பங்களிக்கின்றனர். நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தேனாயினும் தற்போது இந்தோனேசியாவின் தலை நகரில் இருக்கிறேன். இங்கே எனக்குத் தமிழில் பேசி மகிழப் பெரு விருப்பமிருந்தாலும் தமிழறிந்தோரைக் கண்டு கொள்வது மிகக் கடினமே. நானும் பெரும்பாலும் ஆங்கிலத்திலோ இந்தோனேசிய மொழியிலோதான் உரையாட வேண்டியிருக்கிறது. அவ்வாறிருந்தும் என் முதன் மொழி தமிழென்பதால் தமிழை நேசிக்கிறேன். நான் கற்ற தமிழின் மூலம் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் மற்றோரும் பயனடையச் செய்ய வேண்டுமென்பதே என் வேணவா. தமிழர் பலர் மேடானில் இருக்கிறார்கள். ஆயினும் தலை நகரில் தமிழர்கள் மிகவும் சொற்பமானோரே இருக்கின்றனர். அவர்களுக்குக்கூட சரிவரத் தமிழில் பேசத் தெரியவில்லை. பெரும்பாலும் இந்தோனேசிய மொழியைக் கலந்து கலந்து பேசுவார்கள். நான் கிரந்தத்தை எதிர்க்கும் தமிழ்ப் பித்தனல்லன். தமிழில் எழுதுகையில் முடிந்தவரை கிரந்தமும் வேற்றுமொழிச் சொற்களும் கலப்பதைத் தவிர்க்கிறேன். ஆயினும் தவிர்க்க முடியாத சில வேளைகளில் பயன்படுத்துகிறேன். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாரத் தமிழ் மொழி நிலைத்திருக்கக் காரணம் அதைக் கட்டுப்படுத்தும் இலக்கணமும் மொழியியற் சான்றோரின் முயற்சியுமே. மாறாக, வேற்று மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் ஒவ்வொருவரும் தத்தம் மனங்களுக்குப் பிடித்தவாறு கலந்து பயன்படுத்துவதைச் சட்டை செய்யாதிருந்திருந்தால், தமிழ் மொழி என்றோ சிதைந்து பல்வேறு மொழிகளாகச் சிதறிப் போயிருக்கும். தமிழின் செம்மை என்றோ சீர் கெட்டுப் போயிருக்கும். அவ்வாறு நிகழாமல் தமிழ் நிலைக்க வேண்டுமானால் நற்றமிழிலேயே ஆக்கங்கள் படைக்கப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 11:09, 25 ஆகத்து 2015 (UTC)

வாழ்த்துக்கள்தொகு

கிரந்தம் கட்டாய நீக்கம் இல்லாமலும், அதேவேளையில் கிரந்தமற்ற தலைப்பு என்ற இயல்பான பொதுப்பெயர் வைத்தல் தொடர்பான உங்கள் அத்துணை பரிந்துரையும் அபாரம். பிற பொதுத்தளங்களில் எழுதிவருபவர்களுக்கு இந்நடை உகந்ததாக இருப்பதில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறீர்கள். ஏறக்குறைய உங்களின் நிலையில்தான் நானும் இருக்கிறேன். இதை ஒரே நாளில் விக்கிக்கு வெளியிலோ விக்கிக்கு உள்ளேயோ மாற்ற முடியாது. இப்படி ஆதங்கப்பட்டவர்கள் எல்லாம் விக்கியைவிட்டுச் செல்வதாலேயே விக்கிநடையில் ஒருவிதப் பொதுப்பெயர் தவிர்ப்பு நிலைவுவதாக நினைக்கிறேன். விக்கியைவிட்டுச் செல்லாமல் குறைந்தபட்சச் செயல்திட்டங்களைக் கொண்டு இங்கும் செயல்படுங்கள். இங்குள்ளவர்களைப் போன்ற அர்ப்பணிப்பானவர்களை வெளியில் காணமுடியாது. அத்தகையோரின் மனம் நோகாமல் பக்குவமாகக் கருத்துக்களை வையுங்கள்.--நீச்சல்காரன் (பேச்சு) 00:33, 26 ஆகத்து 2015 (UTC)

தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் ! சத்தமேயில்லாமல் நாவி, வாணி போன்ற தளங்களை உருவாக்கி தமிழிற்கு அருஞ்சாதனை செய்துவரும் தங்களைப் போன்றோரது வழிகாட்டல் எனக்கு நிச்சயம் உதவியாகவும் ஊக்கமாகவும் இருக்கும். ஒவ்வொரு தளத்தில் எப்படி பேச வேண்டும் என்ற வழிமுறை இருக்கின்றது என நினைக்கின்றேன். கடந்த சில நாட்களில் கொஞ்சம் அதீதமாகவே எனது கருத்துக்களை முன்வைத்தேன். ஆனால், அதற்கு இசைந்து இங்குள்ள பல தோழர்களும் பதிலளிக்க முன் வந்திருப்பதே பெருமகிழ்ச்சி தருகின்றது. நிச்சயம் தமிழ் விக்கிபீடியாவை விட்டு வெளியேறப் போவதில்லை, எனக்கான வெளியில் என்னாலான பங்களிப்பை இங்கிருந்து ஆற்ற முயல்கின்றேன். அன்புக்கும் வழிகாட்டலுக்கும் நன்றிகள் தோழரே. --Winnan Tirunallur (பேச்சு) 04:04, 26 ஆகத்து 2015 (UTC)

நெஸ்டோர் சால்வடோர் அமாரில்லாதொகு

வணக்கம்! இந்தக் கட்டுரையை படிக்க இயலாதவாறு, நீண்ட வெற்றிடம் காணப்படுகிறது. சரிசெய்து தந்தால், தேவைப்படும் முன்னேற்றங்களை செய்து உதவ இயலும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:23, 26 ஆகத்து 2015 (UTC)

தற்சமயம் திருத்தங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எந்த மாதிரியான குறைகள் தென்படுகின்றன என விளக்கமாகச் சொன்னால், புரிந்து கொண்டு சரி செய்ய உதவியாக இருக்கும். --விண்ணன் (பேச்சு) 06:40, 26 ஆகத்து 2015 (UTC)

குறைந்தபட்சம் ஒரு மேற்கோளையாவது முதற்கட்டமாக காட்டுதல் சிறப்பு. கூடுதல் மேற்கோள்களை படிப்படியாக சேர்க்கலாம். அதிகப்படியான Bold Formatஐ (தடித்த எழுத்துகளை) தவிர்த்தல் நன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:59, 26 ஆகத்து 2015 (UTC)

நான் ஆங்கில கட்டுரைகளிலிருந்தே மொழிமாற்றம் செய்கின்றேன். இயன்றவரை ஒரு மேற்கோள் தொடுப்பையிட முனைகின்றேன். நிச்சயம் தடித்த எழுத்துக்களை குறைத்து பயன்படுத்துகின்றனர். அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். --விண்ணன் (பேச்சு) 07:07, 26 ஆகத்து 2015 (UTC)

வாழ்த்துக்கள்தொகு

சீரிய பல கட்டுரைகளை வழங்கும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.−முன்நிற்கும் கருத்து செலின் ஜார்ஜ் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

 1.   விருப்பம் --விண்ணன் (பேச்சு) 00:41, 27 ஆகத்து 2015 (UTC)
 2.   விருப்பம்'வட்டாரவழக்குச் சொற்களில', உங்களுக்கு அனுபவம் இருப்பதாகத் தெரிகிறது. எந்த வட்டாரவழக்குச்சொற்களைப் பற்றி, உங்களைக் கேட்கலாம்? விக்சனரியில் அவற்றை பதிவேற்றவே, உங்களை அணுகுகிறேன்.--உழவன் (உரை) 02:12, 27 ஆகத்து 2015 (UTC)
அன்பிற்கு நன்றிகள் ! எனக்கு தொண்டை மண்டலத்து வட்டார வழக்குகளான ( சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ) ஆகியவற்றில் அதிக பரிச்சயம் உள்ளது. --விண்ணன் (பேச்சு) 04:30, 27 ஆகத்து 2015 (UTC)
அப்படியானால், விக்சனரிக்கு வருக. பல வருடங்களாக வட்டார வழக்குகளைப் பதிவேற்ற வேண்டும் என்று எண்ணினேன். அதுபற்றிய தெரியாததால், செயற்படவில்லை. விக்சனரிக்கு வந்து உங்கள் கணக்கினுள் இருக்கும் மணல்தொட்டி(பயிற்சிப் பக்கம்) என்ற பகுதியில் ஒரு வட்டாரத்திற்குப் பத்து சொற்களை என, சோதனைக்காக பகிரவும். பின்பு அவற்றை அதிக அளவில தானியக்க முறையில் பதிவேற்றலாம். வணக்கம். ஆவலுடன் காத்திருப்பேன்--உழவன் (உரை) 08:53, 28 ஆகத்து 2015 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றிதொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Winnan Tirunallur!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:16, 29 ஆகத்து 2015 (UTC)

சஙீரான்தொகு

நீங்கள் சஙீரான் பக்கத்தை மாற்ற முன்னர் அதைப் பற்றி அதன் பேச்சுப் பக்கத்தில் உரையாடியிருக்க வேண்டும். ஏற்கனவே அதைப் பற்றி நிகழ்ந்த உரையாடல் அதன் பேச்சுப் பக்கத்தில் காணப்படுகிறது. அதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மாற்றினீர்களென்று கூறுவீர்களா?--பாஹிம் (பேச்சு) 07:43, 5 செப்டம்பர் 2015 (UTC)

சஙீரான் எப்படி ஒலிப்பீர்கள்? தமிழில் இப்படி சொற்கள் ஏதும் முன்பு அமைக்கப்பட்டுள்ளதா? ஒன்று சங்ஙீரான் என்று வந்திருக்க வேண்டும் அல்லது, சங்கீரான் என்று வந்திருக்க வேண்டும். --விண்ணன் (பேச்சு) 18:14, 5 செப்டம்பர் 2015 (UTC)
எது எவ்வாறிருந்தாலும், இது குறித்து உரையாடி ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே தலைப்பை மாற்றலாம். சஙீரான் என்பதை ஒலிக்க உங்களுக்கு ஏன் சிரமமாக உள்ளது?--Kanags \உரையாடுக 22:00, 5 செப்டம்பர் 2015 (UTC)
விக்கிபீடியாவில் பல பக்கங்களின் தலைப்பை உரையாடமாலேயே மாற்றியுள்ளனர்? ஏன் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. சரி போகட்டும், இனி உரையாடுகின்றேன். சஙீரான் என்பதை எப்படி ஒலிப்பீர்கள் IPA தாருங்கள். அதே போல ஙகர உயிர்மெய் எழுத்து தனித்து வருகின்ற சொல் தமிழில் உண்டா? ஆதாரம் தாருங்கள்? --விண்ணன் (பேச்சு) 22:07, 5 செப்டம்பர் 2015 (UTC)
சஙீரான் என்பதை துல்லியமாக ஒலிப்பது எப்படி என்ற ஒலிபதிவை பதிவேற்றவும். அது மட்டுமின்றி ஙகர உயிர்மெய் தனித்து சொற்களில் வருமா என்பதை இலக்கண ஆசிரியர்களிடம் கேட்டு சரி பார்த்துக் கொள்ளவும். --விண்ணன் (பேச்சு) 22:16, 5 செப்டம்பர் 2015 (UTC)
சஙீரான் என்பதன் ஆங்கிலம், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் அவ்வளவு ஏன் இந்தோனேசியா, ஜாவா மொழிகளிலும் Sangiran, சங்கிரான் என்றே எழுதியுள்ள போது தமிழில் மட்டுமே ஏன் சஙீரான் என எழுதியுள்ளீர்கள், மூல ஒலிக்கு அது நெருங்கி வரலாம், ஆனால் தமிழர் வாய்க்குள் அது புகுந்து வருமா? --விண்ணன் (பேச்சு) 22:17, 5 செப்டம்பர் 2015 (UTC)

அணன்தொகு

அணன் என்பது தங்கள் கணக்கா? பார்க்க: விக்கிப்பீடியா:கைப்பாவை. அல்லது தங்கள் தொரண்டோ நண்பரா? --மதனாகரன் (பேச்சு) 18:11, 5 செப்டம்பர் 2015 (UTC)

ஆம், அவர் எனது டொராண்டோ நண்பர் ஆவார், இருவரும் ஒரே அடுக்குமாடியில் தான் குடியிருக்கின்றோம். எனக்கு விவாதங்களில் பல குழப்பங்கள் இருந்ததால், அவரை விளக்கமளிக்கச் சொன்னேன். --விண்ணன் (பேச்சு) 18:16, 5 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி. ஒரே இணைய இணைப்பிலிருந்து இருவரும் பங்களிப்பதால் {{User shared IP address|அருணன்}} என்ற வார்ப்புருவைத் தங்கள் பயனர் பக்கத்தில் இடும்படி வேண்டிக்கொள்கிறேன். இது குழப்பங்களைத் தவிர்க்க உதவும். --மதனாகரன் (பேச்சு) 18:20, 5 செப்டம்பர் 2015 (UTC)

இதனையும் பார்க்க: விக்கிப்பீடியா:கைப்பாவை#ஒரே IP-ஐ பகிர்தல் --மதனாகரன் (பேச்சு) 18:35, 5 செப்டம்பர் 2015 (UTC)

கிரந்தம்தொகு

கிரந்தம் நீக்கப்பட்ட சொற்களில் மீண்டும் கிரந்த எழுத்துகளை வலிந்து சேர்ப்பதைத் தவிர்க்கவும். --மதனாகரன் (பேச்சு) 13:28, 8 செப்டம்பர் 2015 (UTC)

கூடுதல் எழுத்தில் உருவாக்கப்பட்ட கட்டுரையிலிருந்து கிரந்தத்தை தன்னிச்சையாக நீக்குவதைத் தவிர்க்கவும். --விண்ணன் (பேச்சு) 13:32, 8 செப்டம்பர் 2015 (UTC)
விக்கிபீடியா நியதி " Article titles should be recognizable, concise, natural, precise, and consistent. " கட்டுரையின் தலைப்பு பொதுவில் அறியத்தக்கதாய் இருக்க வேண்டும், "Use commonly recognizable names" Wikipedia is not a crystal ball. We do not know what terms will be used in the future, but only what is and has been in use, and is therefore familiar to our readers. விதிமீறல் செய்து கொண்டிருப்பது தாங்கள் தான். பொதுவில் பயன்படுத்தப்படும், அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் தலைப்பையே பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் என்ன தலைப்பு உருவாகும் என்ற யூகத்தில் சோதனைக் களமாக விக்கிபீடியாவை பயன்படுத்தலாகாது. நன்றிகள். --விண்ணன் (பேச்சு) 13:30, 8 செப்டம்பர் 2015 (UTC)

இறுதி அறிவுறுத்தல்தொகு

முக்கிய தலைப்புக்களை தன்னிச்சையாக மாற்றுதல், காரணமின்றி பாராமரிப்பு வார்ப்புருக்களை நீக்குதல், பயனர்களுடன் கண்ணியமற்று உரையாடுதல் போன்ற உங்கள் செயற்பாடுகள் தொடர்ந்தால் நீண்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ நீங்கள் தடை செய்யப்படலாம். குறிப்பாக, எந்தவிடயமாயினும் கண்ணியமாக உரையாடுக. எள்ளல் நோக்கல் உரையாடலை தவிர்க்குமாறு உங்களுக்கு வேறு சிலராலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனங்களைத் தவிர்க்கிறது. நன்றி. --AntanO 14:19, 8 செப்டம்பர் 2015 (UTC)

முக்கிய தலைப்புக்களை தன்னிச்சையாக மாற்றுதல் - நன்கு கவனிக்கம் தலைப்பை நான் அங்கு மாற்றவில்லை.
வார்ப்புருக்களை நீக்குதல் - வார்ப்புருக்களை நீக்கவில்லை.
பயனர்களுடன் கண்ணியமற்று உரையாடுதல் - கூடுமான வரை கண்ணியமாகத் தான் உரையாடி வருகின்றேன். எந்த இடத்திலும் தகாத சொற்களை பயன்படுத்தவில்லை. மதனாஹரனது எள்ளல் பதிலுக்கு மறுபதில் மட்டுமே தந்தேன். குற்றங்கள் காணுமிடத்து அதைச் சுட்டிக் காட்டினேன்.

ஆனால், எள்ளல் பேச்சைத் தொடங்கிய மதனாஹரன் அவர்களுக்கு இவ்விதமனா எச்சரிக்கையை தாங்கள் தரவில்லை. குழு மனப்பான்மையை தங்களைப் போன்ற நிர்வாகிகள் கைவிட்டு நடுநிலைமையோடு செயல்படுவதும் நல்லது நண்பரே. --விண்ணன் (பேச்சு) 14:25, 8 செப்டம்பர் 2015 (UTC)

இதற்கும் முன்னைய கேள்விகளுக்கும் இன்று பதில் தருவேன். சம்பந்தமுடைய பக்கத்தில் மட்டும் பேச்சைச் தொடரவும். ஒரே விடயத்தை அங்கும் இங்குமாக உரையாட வேண்டாம். --AntanO 14:29, 8 செப்டம்பர் 2015 (UTC)
சம்பந்தப்பட்ட பக்கங்களில் தான் உரையாடுகின்றேன். ஸ்காட்லாந்து சொல்லாட்சி குறித்து இங்கும், தங்களின் எச்சரிக்கைக் குறித்து இங்கும், தங்களின் குழுவாத மனப்பான்மை குறித்த எனது ஐயம் குறித்து இங்கும். நன்றிகள் ! --விண்ணன் (பேச்சு) 14:32, 8 செப்டம்பர் 2015 (UTC)

Please Refer: Wikipedi Rule - Editors have learned that formation into "gangs" is the most effective way of imposing their views on opposite-minded contributors. It makes a travesty of the revert-rule when one individual can simply send an e-mail alert to friends requesting a timely "revert favour" once he has reached the limit of his daily reverts. This may apply to deletion debates as well, where a group of editors may be organised so as to always vote en masse in favour of keeping an article written by one of the gang, or related to the gang's main field of interest; or to push through deletion if their interest is a deletionism. Gangs sometimes do serious damage to Wikipedia's policies and guidelines also; by ganging up they can be written to say almost anything.

இரு பங்களிப்பாளருக்கு இந்த கட்டுரையில் கருத்து வேறுபாடு எழுந்த சமயம், எவ்வித உரையாடலுக்கும் வழி கொடாது, தன்னிச்சையாக ஒருவருக்கு சார்பாக திருத்தங்களைச் செய்வது குழுவமைத்து செயல்படுவதைப் போன்றதாகும்? தங்களுக்கு தெரியாத நியதியுமில்லை, நியாயமுமில்லை, ஆன போதும், விக்கியின் நியமங்களுக்கு உட்பட்டு செயல்படுவது நல்லது நண்பரே. நன்றிகள். --விண்ணன் (பேச்சு) 15:01, 8 செப்டம்பர் 2015 (UTC)

உங்கள் மறுப்புக்கு சில எடுத்துக்காட்டுக்கள்
அதே பக்கனளின் அதே பக்கங்களில், எவ்வித உரையாடலுமின்றி உங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் பலரும் தலைப்பை பலமுறை மாற்றியிருக்கின்றனர். --விண்ணன் (பேச்சு) 01:34, 11 செப்டம்பர் 2015 (UTC)
சம்பந்தப்பட்ட வார்ப்புரு கடந்த பல வருடங்களாக அப்படியே கிடந்தது. --விண்ணன் (பேச்சு) 01:34, 11 செப்டம்பர் 2015 (UTC)
 • பயனர்களுடன் கண்ணியமற்று உரையாடுதல் - எ.கா: //விரும்பினால் இலங்கைத்தமிழ், தனித்தமிழ் எனத் தனி விக்கிபீடியா பக்கத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்//, //மொத்த குழுவும் களத்தில் இறங்கியாச்சா?//, ஹி ஹி //
இந்த உரையாடலில் எங்கே தனி நபர் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது, எங்கே தகாத சொற்கள் பயன்பட்டுள்ளன. உங்களின் அகராதியில் மாற்றுக் கருத்தே முன் வைக்கக் கூடாது போலும். கண்ணியம் என்ற சொல்லில் எவை எல்லாம் அடங்கும் அடங்காது என விதி இயற்றியுள்ளீர்களா?!

ஒன்று மற்றும் நன்றாக புரிகின்றது, தமிழ் விக்கியில் கிடைத்த நிர்வாக அதிகாரத்தை பிடிக்காதவர்கள் மீது ஏவி அவர்களை காலி செய்ய முயல்கின்றீர்கள் என்பது மட்டும் நன்றாகவே புரிகின்றது. அதனால் தான் உங்கள் குழுவினர் இதே தவற்றைச் செய்யும் போது கமுக்கமாக இருந்து விட்டு, மற்றவர் செய்யும் போது அதை பூதகாரமாக்குகின்றீர். நான் செய்தவையாக தாங்கள் கூறியவை, விக்கிபீடியாவில் எந்த விதியின் கீழ் குற்றமாகும், என்பதை தொடுப்போடு பகிருங்கள் தொடர்ந்து பேசுவோம்.

அதுவரைக்கும் எப்படி காலி செய்யலாம் என உட்கார்ந்து யோசியுங்கள். வாழ்த்துக்கள் !--விண்ணன் (பேச்சு) 01:30, 11 செப்டம்பர் 2015 (UTC)

இவ்வாறு பல எடுத்துக்காட்டுகளையும் சுட்டிகளையும் நான் குறிப்பிட முடியும். இங்கேயுள்ள எச்சரிக்கை குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதல்ல. மாறாக, தொடர்ச்சியான உங்கள் செயற்பாடுகளின் விளைவாகும். எனவே ஆக்கபூர்வமாகப் பங்களியுங்கள். (இது போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் நீண்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ நீங்கள் தடை செய்யப்படலாம்.) குறிப்பு: இதனையும் பார்க்க: விக்கிப்பீடியா:கைப்பாவை#ஒரே IP-ஐ பகிர்தல். --AntanO 20:16, 10 செப்டம்பர் 2015 (UTC)

எச்சரிக்கை என்பது விதி மீறப்படும் போது அவற்றை முறையாக விளக்கி அறிவுரை செய்வதும், அது தொடர்ந்து மீறப்படும் போது எச்சரிக்கை விடுப்பதே. எவ்வித விளக்கமும் தராமல் தடை செய்வது, விளக்கம் கேட்டால், பதில் தராமல் காணாமல் போவது, தங்கள் குழுவினர் செய்யும் செயல்களை கண்டும் காணாமலும் இருப்பது, பின்னர் தக்க சமயத்தில் revert செய்து சாதகமாக்குவது. பின்னர் சம்பந்தப்படாத விடயத்தில், வந்து மறைமுக மிரட்டல் விடுவது. இது தான் தங்கள் தருமமமா? தங்களைத் தவிர வேறு யாரும் இங்கே நிருவாக நிலையில் இல்லையா? ஏனெனில் தங்களின் செயல்பாட்டில் எனக்கு சந்தேகங்கள் எழுகின்றன, ஆகையால் மற்ற நிருவாகிகள் வந்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். தாங்கள் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு விக்கிபீடிய விதிகளின் பிரிவுகளை குறிப்பிட்டு விளக்கமளிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன். நன்றிகள் !--விண்ணன் (பேச்சு) 01:30, 11 செப்டம்பர் 2015 (UTC)
கைப்பாவை என்பதில் ஒரே ஐபியை பயன்படுத்தும் இரு நபர்கள் குழுவமைத்து ஒரே கட்டுரையில் உரையாடுவதும், மாறி மாறி திருத்தங்களைச் செய்வதுமே கூடாதது. ஒரே ஐபியில் இருப்பவர்கள் வேறு வேறு கட்டுரைகளில் பங்களிப்பது குற்றமில்லை. உள்ளிதவரு கண்டந்தை கட்டுரைக்காகவே எனது நண்பரது உதவியை நாடி நானே இங்கு அவரை வரவைத்தேன். அது குழுவமைத்து ஒரு சிலரைப் போல செயல்படவல்ல, உங்களுக்கு ஆட்சேபனம் என்றால், அவரை விக்கிபீடியாவிலிருந்து வெளியேறச் சொதாங்கள் உட்பட இங்கு சிலரது செயல்பாடுகள் விக்கிபீடியாவின் தலைமை விதிகளுக்கு புறம்பாகவே இருப்பதாக தென்படுகின்றது. ஒருவேளை எனது குரல் இங்கு நசுக்கப்பட்டால், விக்கிபீடியாவின் தலைமையகத்திற்கு பிரச்சனைகளை கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை, அதனால் மற்ற நிருவாகிகளும் புதிய மாற்றுக் கருத்துடைய பங்களிப்பாளர்களை ஒதுக்கும் போக்கின் நிலைமை குறித்து விளக்கம் தந்தால் நல்லது. நன்றிகள் !--விண்ணன் (பேச்சு) 01:32, 11 செப்டம்பர் 2015 (UTC)ல்கின்றேன். அது தான் செய்ய முடியும்.--விண்ணன் (பேச்சு) 01:30, 11 செப்டம்பர் 2015 (UTC)

இங்கு எனது அறிவிப்புக்கள் இப்பேச்சுப்பக்கத்திற்கு உரிய பயனருக்கே. இன்னொருவரைக் காட்டி திசைதிருப்ப வேண்டாம். //இந்த உரையாடலில் எங்கே தனி நபர் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது// நான் குறிப்பிடுவது கண்ணியமான உரையாடலை. எ.கா: //அதுவரைக்கும் எப்படி காலி செய்யலாம் என உட்கார்ந்து யோசியுங்கள். வாழ்த்துக்கள் !// இது போன்ற பேச்சுக்கள். கண்ணியமான உரையாடும்படி நான் மட்டுமலல பலர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. --AntanO 17:37, 11 செப்டம்பர் 2015 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம்! தலைப்பு மாற்றங்கள் குறித்து, பேச்சுப் பக்கங்களில் பொறுமையாக உரையாடிய பிறகு செயல்படுமாறு வேண்டுகிறேன். தேவையற்ற உரைகளை எழுதி, நமது வளத்தை வீணாக்கலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:20, 8 செப்டம்பர் 2015 (UTC)

நன்றிகள் தோழரே. --விண்ணன் (பேச்சு) 14:26, 8 செப்டம்பர் 2015 (UTC)
வணக்கம். நாம் அனைவருமே நம்மால் முடிந்ததை தமிழுக்கும், தமிழ் விக்கிபீடியாவிற்கும் செய்ய வேண்டும் என்று தன்னார்வலர்களாக வந்தவர்களே. எனவே, அனைவரும் தயவு செய்து பொறுமையாக உரையாடுங்கள். நாம்தான் நம் இளையத் தலைமுறைக்கு எடுத்துகாட்டுகளாகத் திகழ வேண்டும். இங்கு நாம் பதிவிடுவதை அனைவரும் படிக்கிறார்கள். எனவே, யாரும் உணர்ச்சிவயப்படாதீர்கள். அனைவரும் ஒன்று கூடி பங்களிப்போம். அனைவரும் அமைதி கொள்ளுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 05:01, 11 செப்டம்பர் 2015 (UTC)
  விருப்பம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:31, 11 செப்டம்பர் 2015 (UTC)

குறிப்புகள்தொகு

 • விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள், பயன்பாட்டு விதிகள் ஆகியவற்றுக்குப் புறம்பாக ஒரு விக்கிப்பீடியாவின் நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே விக்கிமீடியா அறக்கட்டளை தலையிட வாய்ப்புண்டு. இவற்றிலும் கூட பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களே சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சிக்கல் தீர்வு முறைக்கான வழிகாட்டுதலுமே கிடைக்கும். மொழி நடை சார்ந்த சிக்கல்கள் தமிழ் உட்பட பல்வேறு மொழி விக்கிப்பீடியாக்களிலும் உள்ளன என்பதே விக்கிமீடியா அறக்கட்டளை அறிந்தே இருக்கிறது.
 • விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் தவிர்த்த பிற அடிப்படைக் கொள்கைகள் குறித்து ஆங்கிலம் உள்ளிட்ட விக்கிப்பீடியாக்களில் ஒப்பு நோக்கலாமே ஒழிய, அவற்றை அப்படியே இங்கு நடைமுறைப்படுத்துவதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் பல்லாயிரம் ஆண்டு பழமையும் தொடர்ச்சியும் வாய்ந்த தமிழின் நடை எப்படி இருக்க வேண்டும் என்று இங்கு பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் தான் கூடி இணக்க முடிவை நோக்கிச் செல்ல வேண்டும்.
 • தமிழ் விக்கிப்பீடியாவில் 37 பேர் நிருவாக அணுக்கம் பெற்றுள்ளார்கள். நிருவாகிகள் எண்ணிக்கை அடிப்படையில், இந்திய மொழிகளில் இது முதல் இடம். உலக மொழிகளில் 18 ஆவது இடம். இவர்களில் பலரும் மொழிநடை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் மாறுபட்ட கருத்துடையவர்கள். எனவே, ஒரு (சிறு) குழு கட்டுப்படுத்துகிறது என்பது உண்மைக்குப் புறம்பான நோக்கு. உண்மையில், நிருவாகிகளை நோக்கி முன்வைக்கப்படும் பல முறையீடுகள் அவர்களை நோக்கி மட்டுமே வைக்கத் தேவையற்றவை. பிணக்குத் தீர்வில் ஈடுபாடுள்ள எந்த ஒரு பயனரும் பல பிணக்குகளுக்கான தீர்வுகளை முன்னெடுக்க முடியும். இவற்றை நிருவாகிகள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பது, தேவையற்ற அதிகார அடுக்குகளை உருவாக்கும் என்பதால் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உகந்ததும் அன்று. சிக்கல் என்னவென்றால், இவ்வாறு பிணக்குத் தீர்வில் ஈடுபடுவோர் எந்த ஒரு விக்கிப்பீடியா சமூகத்திலும் குறைவானவர்களே. நிருவாகிகள் உட்பட பலரும், பல்வேறு ஈடுபாடுகள், விக்கிக்கு வெளியேயான கடமைகள் கொண்டவர்கள் என்பதால் எல்லா சிக்கல்களிலும் தீர்வுகளை எட்ட முனையாமல் தங்கள் வழமையான பங்களிப்பைத் தொடர்வது வழமையே. இதனை ஒரு சிலருக்கான மறைமுக ஆதரவாக கருத்தில் கொள்ள முடியாது.
 • தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தனித்தமிழ் நோக்கிய நகர்வு இருந்தது. அது எதிர்வினைகளையும் பெற்றது. அதன் பிறகு தற்போது ஒரு சமநிலை இருப்பதாகவே உணர்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு பக்கங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒரு சில பக்கங்களில் உரையாடல் இன்றியும் தலைப்புகள் மாற்றப்பட்டன. ஆனால், 69,000 தலைப்புகளைக் கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் இன்றும் பல இலட்சக்கணக்கான பக்கங்களில் கிரந்தம் கலந்தே இருக்கிறது. அதனை யாரும் வலிந்து முற்று முழுதாக மாற்ற முனையவில்லை. இடைப்பட்ட காலத்தில் மாற்றப்பட்ட சில பக்கங்களில் தலைப்புகள் அவ்வாறே நீடிப்பதும், நீடிக்க விட்டிருப்பதும் இவ்வாறான போக்குகளை உணர்த்துவதற்கான வரலாற்றுப் பதிவுகளாகவே. இது தொடர்பான உரையாடல்களும் தீர்வுகளும் இன்னும் எட்டப்படவில்லை என்பதையே இது குறிக்கிறது.
 • தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம், புறப்பெயர்கள் குறித்து மட்டும் அன்று, தமிழ் இலக்கணத்தின் பல்வேறு கூறுகளை எந்த அளவு நடைமுறைப்படுத்துவது என்பதிலேயே மாற்றுக் கருத்துகள் உள்ளன. நடைமுறை நோக்கில் பார்த்தால் இவை பலவற்றிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரே நாளில் முடிவு காண முடியாது. அவ்வாறு செய்ய முற்படுவதும் சமூகத்தை அயர வைத்து பிளப்பதாகவே முடியும். விக்கி என்பதே தொடர் மாற்றத்துக்கு உட்பட்டது என்பதால், இத்தகைய முரண்களை அறிந்தே கடந்து தொடர்ந்து பங்களித்து வருகிறோம். எனவே, திரும்பத் திரும்ப பக்கம் பக்கமாக ஒரே விசயத்தைத் திரும்பத் திரும்ப உரையாடுவதில் பயன் இல்லை.
 • பொதுத்தமிழ் என்ற பெயரில் கிரந்தம் சேர்ப்பு வலியுறுத்தப்படுவதை ஏற்றால், நாளை இதே பெயரில் இலங்கைத் தமிழ் சொற்களையும் நீக்கக் கோர மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? பல இலட்சம் பக்கங்களில் கிரந்தம் இருந்தாலும் ஒரு பக்கத்திலும் தனித்தமிழ் இருக்கலாகாது என்று முறையிடுவதை ஏன் பாசிச நிலைப்பாடாக கருதக்கூடாது? இன்று ஒரு தனித்தமிழ் ஆர்வலர் தனித்தமிழில் கட்டுரைகள் எழுதினால் முன்னணிப் பதிப்பகங்களும் இதழ்களும் அவற்றை அவ்வாறே வெளியிட மாட்டார்கள் என்பது அறிவீ்ர்களா? இப்படிப் பொதுவெளியில் தணிக்கை செய்து விட்டு, அதனையே பொது வழக்காக விக்கிப்பீடியாவிலும் முன்னிறுத்துவது முறையா? மொழிநடை குறித்த விக்கிப்பீடியா வழமை என்பது இந்தச் சமூகப் போக்கைக் கருத்தில் கொள்ளாமல் இயங்குவது தகுமா?
 • உங்கள் பல்வேறு பங்களிப்புகளிலும் தகுந்த உரையாடல் இன்றி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். இதே உறுதியைத் தற்போது உள்ள ஒவ்வொரு பயனருக்கும் தர முடியும். இந்த உறுதியின் அடிப்படையில் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வளர்முகமாகப் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:54, 11 செப்டம்பர் 2015 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Winnan_Tirunallur&oldid=3185201" இருந்து மீள்விக்கப்பட்டது