Cangaran
என்னைப் பற்றி
தொகுஅறிவுச் செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவன். கட்டற்ற மென்பொருள், திறந்த மூலம் ஆகிய இயக்கங்கள் மீது மதிப்பும் ஈர்ப்பும் கொண்டவன். விக்கிப்பீடியா திட்டங்களில் பங்களிப்பது பல வகைகளிலும் உவகை அளிப்பது எனக்கு.
எனது மொழிக் கொள்கை
தொகுதனிப்பட்ட அளவில் தனித்தமிழை முன்னெடுக்க விரும்புபவன். எனினும் அது இயல்பாக நிகழ வேண்டும் என்பது என் கொள்கை. எனவே எனது வலைப்பதிவுகளிலும் இன்ன பிற ஆக்கங்களிலும் கூடுமானவரை தனித்தமிழில் அமைய முயல்வேன். விக்கிப்பிடியா போன்ற பொது வெளியீடுகளில் தனித்தமிழ் வழக்கை பயன்படுத்துவதைக் காட்டிலும் பொது வழக்கை கடைபிடிக்க வேண்டும் என்பது என் கருத்து.
கலைச்சொற்களை பற்றிய எனது நிலைபாடு
தொகுகலைச்சொற்கள் ஒரு கருத்தாக்கத்தை குறிப்பவை. ஏற்கனவே ஒரு கலைச்சொல் பயன்பாட்டில் உள்ளதென்றால் அதை பயன்படுத்த வேண்டும். ஆகவே ஒரு அடிப்படையான விசாரிப்புகளின்றி புதிய கலைச்சொற்கள் உருவாக்கத்தை செய்யக்கூடாது என்பது என் கருத்து
தொடர் உரையாடல்கள் வழி என் கருத்துகளை மேம்படுத்த விழைகிறேன்.