வலைவாசல்:துடுப்பாட்டம்

துடுப்பாட்டம்
தொகு 

அறிமுகம்

பந்து வீச்சாளர் மட்டையாளருக்கு பந்து வீசும் காட்சி

துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும்.

துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு ரீதியாக விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன.

தொகு 

சிறப்புக் கட்டுரை

விஸ்டன் கோப்பை (Wisden Trophy) என்பது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடக்கும் மட்டைப்பந்துப் போட்டியில் வழங்கப்படும் ஒரு கோப்பை ஆகும். இது விசுடன் நாட்குறிப்பின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1963ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கப்பட்டது. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்திற்கு ஏற்ப தொடர்கள் விளையாடப்படுகின்றன. ஒரு தொடர் வெற்றி-தோல்வியின்றி முடிந்தால், விஸ்டன் கோப்பையை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இந்தக் கோப்பை வெற்றியின் அடையாளமாக வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும். பிறகு அது மீண்டும் இலார்ட்சு மைதானத்தில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்படும். தற்போது இந்தக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வசம் உள்ளது.


தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

தொகு 

துடுப்பாட்ட முக்கிய செய்திகள்

செப்டம்பர்

நடப்புத் தொடர்கள்:

தொகு 

இன்றைய நாளில்...

தொகு 

சிறப்புப் படம்

கென்சிங்டன் ஓவல் மைதானம் மேற்கிந்தியத்தீவுகள் தலைநகர் பிரிஜ்டவுனுக்கு மேற்கில் பார்படோசு தீவில் அமைந்துள்ளது. இத்தீவின் விளையாட்டு மையமான இம்மைதானம் துடுப்பாட்டத்துக்கு முக்கிய இடம் அளிக்கிறது. இம்மைதானம் உள்ளூர் துடுப்பாட்டத்துக்கு முக்கிய மையமாதலால் "துடுப்பாட்டத்தின் மெக்கா" என இது உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது. இதன் 120 ஆண்டு வரலாற்றில் உள்ளூர், பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளையும் நடத்தியுள்ளது


தொகுப்பு

ஐசிசி தரவரிசை


laft

ஐசிசி தேர்வுத் துடுப்பாட்ட தரவரிசை
தரவரிசை அணி போட்டிகள் புள்ளிகள் மதிப்பீடு
1  இந்தியா 42 5,046 120
2  ஆத்திரேலியா 40 4,320 108
3  நியூசிலாந்து 33 3,449 105
4  தென்னாப்பிரிக்கா 31 3,177 102
5  இங்கிலாந்து 45 4,593 102
6  இலங்கை 43 3,935 92
7  பாக்கித்தான் 33 2,795 85
8  மேற்கிந்தியத் தீவுகள் 33 2,675 81
9  வங்காளதேசம் 26 1,566 60
10  ஆப்கானித்தான் 4 195 49
11  சிம்பாப்வே 9 140 16
12  அயர்லாந்து 3 0 0
மேற்கோள்கள்: Cricinfo rankings page, ICC Rankings, 6 சனவரி 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:துடுப்பாட்டம்&oldid=2873519" இலிருந்து மீள்விக்கப்பட்டது