கென்சிங்டன் ஓவல் அரங்கம்
13°6′18.18″N 59°37′21.29″W / 13.1050500°N 59.6225806°W
2007 உலகக் கோப்பை போட்டியின் போது | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | பிரிஜ்டவுன், பார்படோசு |
இருக்கைகள் | 15,000 |
முடிவுகளின் பெயர்கள் | |
Malcolm Marshall End Joel Garner End | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 11 சனவரி 1930: மேற்கிந்தியத் தீவுகள் எ இங்கிலாந்து |
கடைசித் தேர்வு | 26 பிப்ரவரி 2009: மேற்கிந்தியத் தீவுகள் எ இங்கிலாந்து |
முதல் ஒநாப | 23 ஏப்ரல் 1985: மேற்கிந்தியத் தீவுகள் எ நியூசிலாந்து |
கடைசி ஒநாப | 28 ஏப்ரல் 2007: ஆத்திரேலியா எ இலங்கை |
28 பிப்ரவரி 2009 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ |
கென்சிங்டன் ஓவல் மைதானம் தலைநகர் பிரிஜ்டவுனுக்கு மேற்கில் பார்படோசு தீவில் அமைந்துள்ளது. இத்தீவின் விளையாட்டு மையமான இம்மைதானம் துடுப்பாட்டத்துக்கு முக்கிய இடம் அளிக்கிறது. இம்மைதானம் உள்ளூர் துடுப்பாட்டத்துக்கு முக்கிய மையமாதலால் "துடுப்பாட்டத்தின் மெக்கா" என இது உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது. இதன் 120 ஆண்டு வரலாற்றில் உள்ளூர், பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளையும் நடத்தியுள்ளது. பிக்விக் துடுப்பாட்டக் கழகம் 1895 இல் ஓவல் மைதானத்தை தனதாக்கியதோடு ஓவல் மைதானத்தில் துடுப்பாட்டம் ஆரம்பமானது.1895 இல் முதல் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டி இங்கு நடைபெற்றது. 1930 இல் இம்மைதானத்தின் முதல் பன்னாட்டு தேர்வு துடுப்பாட்டப் போட்டி மேற்கிந்தியத்தீவுகளுக்கும் இங்கிலாந்துக்குமிடயே நடைபெற்றது. தொடக்கம் முதல் இது வரை 43 தேர்வு துடுப்பாட்ட போட்டிகள் கென்சிங்டன் மைதானத்தில் நடைபெற்றுள்ளதோடு அவற்றில் 21 மேற்கிந்தியத்தீவுகள் அணியால் வெற்றிக்கொள்ளப்பட்டுள்ளன.
கென்சிங்டன் மைதானத்தின் பாரிய பார்வையாளர் அரங்குகள் 2007 உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக மீளக் கட்டப்பட்டவையாகும். மீள் நிர்மானத்துக்குப்பிறகு மைதானம் 28,000 பார்வையாளர்களுக்கான வசதிகளைக் கொண்டிருக்கும். மேலும் இது 2007 உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதி போட்டி இம்மைதானதிலேயே நடைபெற்றது. கென்சிங்டன் மைதானம் துடுப்பாட்டம் தவிர்ந்த கால்பந்து, ஒக்கி, தடகளப் போட்டிகள், பார்படோஸ் அழகுராணிப்போட்டி போன்றவற்றையும் நடத்தியுள்ளது. மைதானத்தில் பாரிய தொலைக்காட்சி யொன்று காணப்படுவதோடு, நீச்சல் குளத்தில் இருந்தவாறு போட்டிகளை கண்டுகளிக்கும் வசதி கொண்ட பார்வையாளர் அரங்கொன்றும் உள்ளது.
இவற்றையும் பார்க்க
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Kensington stands renamed பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம்: 9th, November 2006 - CBC Barbados
- Oval to be fully hi-tech பரணிடப்பட்டது 2007-01-06 at the வந்தவழி இயந்திரம்: 8th, March 2006 - Barbados Nation News
- Photo of the new Kensington Oval
- Kensington Oval profile