2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

போட்டிகள்
(2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை (2007 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 2007)மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் "சூப்பர் 8" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக அவுஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் அவூஸ்திரேலிய அணி இனக்கையை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட மூன்று குறைவானதாகும்.

2007 ICC cricket world cup
Singhala
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்TV fromat not channel
போட்டித் தொடர் வடிவம்Round robin, knockout
நடத்துனர்(கள்) மேற்கிந்தியத் தீவுகள்
வாகையாளர் ஆத்திரேலியா (47-ஆம் தடவை)
இரண்டாமவர்2007 world cup
மொத்த பங்கேற்பாளர்கள்16 (97 நாடுகளில் இருந்து)
மொத்த போட்டிகள்51
வருகைப்பதிவு6,72,000 (13,176 per match)
தொடர் நாயகன்ஆத்திரேலியா கிளென் மெக்ரா
அதிக ஓட்டங்கள்ஆத்திரேலியா மதிவ் எய்டன் (659)
அதிக வீழ்த்தல்கள்ஆத்திரேலியா கிளென் மெக்ரா (26)
2003

போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு

தொகு
 
2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் நடத்தும் நாடுகள்

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சுழற்சிமுறை கொள்கைக்கேற்ப மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமது நாட்டில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விட்டாலும் அது நிராகரிக்கப்பட்டு கரிபிய நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேர்மியுடா, புனித.வின்சண்ட் நாடுகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது.

இடங்கள்

தொகு

மேற்கிந்தியத் தீவுகளில் எட்டு இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. புனித.லுசியா, ஜமெய்கா, பார்படோஸ் ஏழு போட்டிகளை நடத்துவதோடு ஏனைய நாடுகள் ஆறு போட்டிகளை நடத்தும்.

மைதானத்தின் கொள்ளளவு, இருக்கைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.

நாடு நகர் மைதானம் கொள்ளளவு போட்டிகள் செலவு
  அன்டிகுவா பர்புடா செயிண்ட்.ஜோன்ஸ் சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் 20,000 சூப்பர் 8 US$ 54 மில்லியன் [1]
  பார்படோசு பிரிஜ்டவுண் கென்சிங்டன் ஓவல் அரங்கம் 32,000 சூப்பர் 8 & இறுதி US$69.1 மில்லியன் [2]
  கிரெனடா செயிண்ட். ஜோர்ஜ்ஸ் குயிண்ஸ் பார்க் அரங்கம் 20,000 சூப்பர் 8
  கயானா ஜோர்ஜ்டவுண் புரொவிடன்ஸ் அரங்கம் 20,000 சூப்பர் 8 US$26 மில்லியன்/US$46 மில்லியன்[3]
  ஜமேக்கா கிங்ஸ்டன் சபினா பார்க் அரங்கம் 30,000 குழு D & அரையிறுதி US$26 மில்லியன் [4]
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் பசேடிரே வோர்னர் பார்க் அரங்கம் 10,000 குழு A US$12 மில்லியன்
  செயிண்ட். லூசியா குரொஸ் தீவுகள் Beausejour அரங்கம் 20,000 குழு C & அரையிறுதி US$ 23 மில்லியன் [5]
  டிரினிடாட் மற்றும் டொபாகோ போர்ட் ஒப் ஸ்பெயின் குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் 25,000 குழு B

இவற்றுக்கு மேலதிகமாக நான்கு மைதானங்கள் முன்னோடிப் பயிற்சிப் போட்டிகளை நடத்தின.

நாடு நகர் மைதானம் கொள்ளலவு செலவு
  பார்படோசு பிரிஜ்டவுண் 3W ஓவல் அரங்கம் 3,500
  ஜமேக்கா டிரால்னீ கிரீன்பீல்ட் அரங்கம் 25,000 US$ 35 மில்லியன் [6]
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் கிங்ஸ் டவுண் ஆர்னோஸ் விலே அரங்கம் 12,000
  டிரினிடாட் மற்றும் டொபாகோ செயிண்ட். ஆகஸ்டீன் சர்.பிராங்க் வோரெல் நினைவு அரங்கம்

யமேக்க அரசு US$80.8 மில்லியனை விளையாட்டுத் தளங்களுக்காக செலவிட்டது [7]. இதில் சபினா மைதானத்தின் மறுசீரமைப்புச் செலவுகளும் அடங்கும் மேலும் US $20 மில்லியனை வேறு தேவைகளுக்கு செலவிட்டது. மொத்தம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது.

தகுதி பெற்ற அணிகள்

தொகு

தேர்வுத் (டெஸ்ட்) துடுப்பாட்ட போட்டித் தகுதி பெற்ற பத்து நாடுகளும் கென்யாவும் 2007 உலகக்கிண்ணத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தானாகத் தகுதி பெற்றதோடு ஐந்து மேலதிக அணிகள் ஐ.சி.சி கிண்ணத்தின் மூலம் தகுதி பெற்றன. 16 அணிகள் பங்குபெறுவதால் இது வரை நடைபெற்ற உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளில் 2007 போட்டித் தொடரே பெரியதாகும்.

தேர்வு மற்றும் ஒரு நாள் அணிகள்

  ஆஸ்திரேலியா
  வங்காளதேசம்
  இங்கிலாந்து
  இந்தியா
  நியூசிலாந்து

  பாக்கிஸ்தான்
  தென்னாபிரிக்கா
  இலங்கை
  மேற்கிந்தியத்தீவுகள்
  சிம்பாப்வே

ஒரு நாள் அணிகள்

  பெர்மியூடா
  கனடா
  கென்யா

  அயர்லாந்து
  நெதர்லாந்து
  ஸ்காட்லாந்து

விதிகளும் சட்டங்களும்

தொகு

போட்டிகள்

தொகு

பகல் நேரப் போட்டிகள் 0930 முதல் 1715 உள்நாட்டு நேரத்தில் நடைபெறும். ஆட்டத்தின் முதல் பகுதி 0930 முதல் 1300 வரையும் இரண்டாம் பகுதி 1345 முதல் 1715 வரையும் நடைபெறும். ஜமேக்கா தவிர்ந்த ஏனைய உலகக்கிண்ணத் திடல்கள் UTC-4 நேர வலயத்தில் அமைந்துள்ளன. ஜமேக்கா UTC-5 நேரவலயத்தில் அமைந்துள்ளது.

அனைத்துப் போட்டிகளும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளாக அமைவதோடு ஒருநாள் போட்டிகளுக்கான சட்ட விதிகள் பயன்பாட்டில் இருக்கும். நடுவர்கள் வேறு வகையில் தீர்மானிக்காவிட்டால் அனைத்துப் போட்டிகளும் ஒரு அணிக்கு 50 பந்து பரிமாற்றங்களைக் கொண்டிருக்கும். ஒரு பந்து வீச்சாளர் 10 நிறைவு (துடுப்பாட்டம்) வரை வீசலாம். பொருத்தமற்ற காலநிலையின் போது போட்டியில் முடிவு ஒன்றைப் பெறுவதற்காக இரண்டு அணிகளும் குறைந்தது 20 நிறைவுளை விளையாடியிருக்க வேண்டும் (வேறு முறையில் போட்டி வெற்றி பெறாவிட்டால்). இரண்டு அணிகளும் 20 நிறைவுகளை விளையாடியிருக்கும் நிலையில் டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.

பிடிகள் தொடர்பாக புதிய விதி கடைப்பிடிக்கப்படும். இதன்படி களத்தில் உள்ள நடுவர்கள் பந்து சரியாகப் பிடிக்கப்பட்டதா என்பதை அறிய தொலைக்காட்சி நடுவரிடம் (மூன்றாம் நடுவர்) வினவலாம். இதன் போது மட்டையாளர் பந்தை மட்டையால் அடிக்காவிட்டால் அதனையும் மூன்றாம் நடுவர் திடலில் உள்ள நடுவருக்கு தெரியப்படுத்தலாம்.[8]

தரப்படுத்தலுக்கான சீர்தரம்

தொகு

குழு நிலைப் போட்டிகளிலும் சூப்பர் 8 போட்டிகளிலும் வழங்கப்படும் புள்ளிகள்:

புள்ளிகள்
முடிவு புள்ளி
வெற்றி 2 புள்ளிகள்
சமம்/முடிவில்லை 1 புள்ளி
தோல்வி 0 புள்ளி

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதோடு குழுவில் தகுதி பெறாத அணிகளுக்கு எதிராக பெறப்பட்ட புள்ளிகள் அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லப்படமாட்டாது. சூப்பர் 8 சுற்றில் இவ்விரண்டு அணிகளும் இச்சுற்றுக்குத் தகுதி பெறும் 6 அணிகளுடன் போட்டியிடும். முதல் 4 அணிகள் அரை-இறுதிக்கு தகுதி பெறும். நிலை புள்ளிகளை மையமாக கொண்டு தீர்மானிக்கப்படும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெறும்போது பின்வரும் முறை தகுதியான அணியை தெரிவு செய்ய பயன்படுத்தப்படும்:

 1. குழு நிலை அல்லது சூப்பர் 8 நிலைகளில் கூடிய வெற்றிகள்.
 2. கூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).
 3. பந்துவீச்சுக்கு அதிகமான ஆட்டமிழப்புகள்.
 4. அவ்வணிகளுக்கிடையான போட்டியில் வெற்றி பெற்றவர்.
 5. குலுக்கல் முறை.

வெளியேற்ற நிலை

தொகு

வெளியேற்ற நிலை (Knockout Stage) போட்டிகளில் போட்டி சமப்பட்டாலோ அல்லது முடிவு பெறப்படாமல் போனாலோ பின்வரும் முறைகள் மூலம் அணிகள் தரப்படுத்தப்படும்.

 1. சமன் செய்த போட்டி - போல்-அவுட் (Bowl-out) முறை மூலம் இறுதிப் போடிக்கான அணி தெரிவுச் செய்யப்படும்.
 2. முடிவு இல்லை - சூப்பர் 8 போட்டிகளில் அதிகமான நிகர ஓட்டவீதத்தைக் கொண்ட அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும்.

இறுதிப்போட்டியில் இவ்வாரான நிகழ்வு இடம்பெறுமாயின் பின்வரும் முறை பயன்படுத்தப்படும்.

 1. சமன் செய்த போட்டி - போல்-அவுட் முறை மூலம் இறுதிப் போட்டிக்கான அணி தெரிவு செய்யப்படும்.
 2. முடிவு இல்லை - இரண்டு அணிகளும் நிகர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

ஊடகங்கள்

தொகு
 
மெலோ

துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. 2003 மற்றும் 2007 உலகக்கிண்ணப் போடிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களுக்கன உரிமையை வழங்குவதன் மூலம் 550 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாய் பெறப்பட்டுள்ளது.[9]. 2007 உலகக்கிண்ணம் 200க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படுவதோடு 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளகள் அதனை கண்டுகளிப்பாகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[10][11], மேலும் 100,000 பார்வையாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு துடுப்பாட்டத்தை நேரடியாக காண வருகை தருவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[12]

2007 உலகக்கிண்ணத்தில் "மெலோ" என பெயரிடப்பட்டுள்ள செம்மஞ்சள் நிற மீயர்கட் போட்டிச்சின்னமாக (mascot) தெரிவுச் செய்யப்பட்டுள்ளதோடு அதிகாரப்பூர்வ பாடல் யமேக்க பாடகரான செகி, பர்படொசியரான ரூபீ, திரினிடாடியரான பேயி-ஆன் லியொன்ஸ் என்பவர்கள் பாடிய "த கேம் ஒவ் லவ் அண்ட் யுனிட்டி பரணிடப்பட்டது 2009-05-27 at the வந்தவழி இயந்திரம் என்ற ஆங்கில மொழிப் பாடலாகும்.

முன்னோடிப் போட்டிகள்

தொகு

முக்கிய அணிகள் அனைத்தும் உலகக்கிண்னத்துக்குச் சற்று முன்னதாக மற்றைய முதன்மையான அணிகளுடன் பல ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் ஈடுப்பட்டன. பல முக்கோணத் தொடர்கள் நடத்தப்பட்டன.

உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதான அணிகளில் ஒருநாள் பன்னாட்டு போட்டி தரப்படுத்தல்கள்:

தரம் அணி புள்ளிகள் தரம் அணி புள்ளிகள்
1   தென்னாபிரிக்கா 128 9   வங்காளதேசம் 42
2   ஆஸ்திரேலியா 125 10   சிம்பாப்வே 22
3   நியூசிலாந்து 113 11   கென்யா 0
4   பாக்கிஸ்தான் 111 12   ஸ்காட்லாந்து 0% / 69%
5   இந்தியா 109 13   நெதர்லாந்து 0% / 50%
6   இலங்கை 108 14   அயர்லாந்து 0% / 44%
7   இங்கிலாந்து 106 15   கனடா 0% / 33%
8   மேற்கிந்தியத்தீவுகள் 101 16   பெர்மியூடா 0% / 28%

குறிப்பு:அணிகள் 12-16 அதிகாரப்பூர்வ ஒருநாள் பன்னாட்டு போட்டித் தரங்களை கொண்டில்லை. அவ்வணிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்துவ அணிகளுக்கிடையில் பெறப்பட்ட வெற்றிகளைக் கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ளன.

பயிற்சிப் போட்டிகள்

தொகு

உலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் காலநிலை மற்றும் களநிலைகளுக்கு இயல்புரும் வகையில் பயிற்சிப்போட்டிகளில் ஈடுபட்டன. இவை அதிகாரப்பூர்வமான ஒருநாள் பன்னாடுப் போட்டிகளாக கருதப்படவில்லை.[13] போட்டிகள் மார்ச் 15 திங்கள் தொடக்கம் மார்ச் 9 வரை நடைபெற்றன.

குழுக்கள்

தொகு

குழுக்களும் அணிகளும்

தொகு

உலகக்கிண்ணம் குழுநிலைப் போட்டிகளுடன் தொடங்கும். பார்வையாளர்களுக்கான வசதிகள் மேற்கிந்தியத்தீவுகளில் குறைவாக காணப்படுவதால், அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு பார்வையாளரர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பார்கள் என்ற மதிப்பீட்டின் காரணமாக அவை வெவ்வேறு குழுக்களில் இடப்பட்டன.[14]

குழுக்கள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2005 தரப்படுத்தல்கள் அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்டுள்ளன.

குழு A குழு B குழு C குழு D

  ஆஸ்திரேலியா (1)
  தென்னாபிரிக்கா (5)
  ஸ்காட்லாந்து (12)
  நெதர்லாந்து (16)

  இலங்கை (2)
  இந்தியா (6)
  வங்காளதேசம் (11)
  பெர்மியூடா (15)

  நியூசிலாந்து (3)
  இங்கிலாந்து (7)
  கென்யா (10)
  கனடா (14)

  பாக்கிஸ்தான் (4)
  மேற்கிந்தியத்தீவுகள் (8)
  சிம்பாப்வே (9)
  அயர்லாந்து (13)

அமைப்பு

தொகு

உலகக்கிண்ணத் தொடர், பயிற்சிப் போட்டிகளுடன் தொடங்கியது. குழுநிலைப் போட்டிகள் மார்ச் 13 செவ்வாயன்று தொடங்கி மார்ச் 25 ஞாயிறு வரை நடைபெற்றது. குழுநிலைப்போட்டிகளில் மொத்தம் 24 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழுவிலும் குழுநிலைப்போட்டிகளில் முதல் இடம் பெறும் இரண்டு அணிகள் அடுத்த சுற்று "சூப்பர் 8"க்கு தகுதி பெறும். அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகள் குழுவில் புள்ளிகளின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்களை அல்லாமல், குழுநிலைப் போட்டிகளுக்கு முன்னதாக அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களையே பெறும். குழுவில் முதல் இரண்டு என முன் குறிக்கப்பட்ட அணிகளுள் ஒன்று தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று நிரப்பப்படும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும்.[15]

சூப்பர் 8க்கு தகுதி பெறும் அணிகள் குழுநிலைப் போட்டிகளின் போது அக்குழுவில் தகுதிபெறும் மற்றைய அணியுடனான போட்டியில் பெற்ற புள்ளிகளை மட்டுமே முன் கொண்டு செல்லும். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் தகுதி பெறும் இரண்டு அணிகள் அச்சுற்றுக்கு தகுதி பெற்ற ஏனைய 6 அணிகளை எதிர்த்துப் போட்டியிடும். சூப்பர் 8 இன் முடிவில் முதலிடம் பெறும் 4 அணிகள் அரை-இறுதி போட்டிகளுக்கு தெரிவாகும். சூப்பர் 8 போட்டிகள் மார்ச் 27 செவ்வாய் தொடக்கம் ஏப்ரல் 21 சனி வரை நடைபெறும். சூப்பர் 8 சுற்றில் முன்னிலை வகிக்கும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு அது வெளியேற்ற நிலை (Knockout Stage) எனப்படும். சூப்பர் 8 இல் முதலிடத்தையும் 4வது இடத்தைப் பிடித்த அணிகளும், 2ஆம் 3ஆம் இடத்தைப் பிடித்த அணிகளும் அரை-இறுதி போட்டிகளில் விளையாடும். இவ்விரு போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.

தொடரின் எல்லாப் போட்டிகளும் காலநிலை கோளாறு காரணமான தடங்கல்களுக்காக போட்டிக்கு அடுத்தநாள் "கூடுதல் நாளாக" ஒதுக்கப்பட்டிருக்கும்.

குழுநிலைப் போட்டிகள்

தொகு

குழு A

தொகு

அனைத்துப் போட்டிகளும் 1330 UTC க்கு ஆரம்பமாகும்.

அணி Pts Pld W T L NR NRR
  ஆஸ்திரேலியா 6 3 3 0 0 0 +3.43
  தென்னாபிரிக்கா 4 3 2 0 1 0 +2.40
  நெதர்லாந்து 2 3 1 0 2 0 −2.53
  ஸ்காட்லாந்து 0 3 0 0 3 0 −3.79

புதன் மார்ச் 14 2007

ஆஸ்திரேலியா  
334/6 (50 நிறைவுகள்)
எதிர்   ஸ்காட்லாந்து
131 (40.1 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 203 ஓட்டங்களால் வெற்றி [16]
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்

வெள்ளி மார்ச் 16 2007

தென்னாபிரிக்கா  
353/3 (40 நிறைவுகள்)
எதிர்   நெதர்லாந்து
132/9 (40 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா 221ஓட்டங்களால் வெற்றி [17]
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்

ஞாயிறு மார்ச் 18 2007

ஆஸ்திரேலியா  
358/5 (50 நிறைவுகள்)
எதிர்   நெதர்லாந்து
129 (26.5 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 229 ஓட்டங்களால் வெற்றி[18]
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்

செவ்வாய் மார்ச் 20 2007

ஸ்காட்லாந்து  
186/8 (50 நிறைவுகள்)
எதிர்   தென்னாபிரிக்கா
188/3 (23.2 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா 7 இழப்புகளால் வெற்றி [19]
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்

வியாழன் மார்ச் 22 2007

ஸ்காட்லாந்து  
136 (34.1 நிறைவுகள்)
எதிர்   நெதர்லாந்து
140/2 (23.5 நிறைவுகள்)
  நெதர்லாந்து 8 இழப்புகளால் வெற்றி [20]
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்

ஞாயிறு மார்ச் 24 2007

ஆஸ்திரேலியா  
377/6 (50 நிறைவுகள்)
எதிர்   தென்னாபிரிக்கா
294 (48 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 83 ஓட்டங்களால் வெற்றி [21]
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்

குழு B

தொகு

எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு தொடங்கும்.

அணி Pts Pld W T L NR NRR
  இலங்கை 6 3 3 0 0 0 +3.49
  வங்காளதேசம் 4 3 2 0 1 0 -1.52
  இந்தியா 2 3 1 0 2 0 +1.21
  பெர்மியூடா 0 3 0 0 3 0 -4.35

வியாழன் மார்ச் 15 2007

இலங்கை  
321/6 (50 நிறைவுகள்)
எதிர்   பெர்மியூடா
78 (24.4 நிறைவுகள்)
  இலங்கை 243 ஓட்டங்களால் வெற்றி [22]
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ

சனி மார்ச் 17 2007

இந்தியா  
191 (49.3 நிறைவுகள்)
எதிர்   வங்காளதேசம்
192/5 (48.3 நிறைவுகள்)
  வங்காளதேசம் 5 இழப்புகளால் வெற்றி [23]
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ

திங்கள் மார்ச் 19 2007

இந்தியா  
413/5 (50 நிறைவுகள்)
எதிர்   பெர்மியூடா
156 (43.1 நிறைவுகள்)
  இந்தியா 257 ஓட்டங்களால் வெற்றி [24]
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ

புதன் மார்ச் 21 2007

இலங்கை  
318/4 (50 நிறைவுகள்)
எதிர்   வங்காளதேசம்
112 (37 of 46 நிறைவுகள்)
  இலங்கை 198 ஓட்டங்களால் வெற்றி [25]
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ

*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 46 பந்து பரிமாற்றங்களில் 311 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.


வெள்ளி மார்ச் 23 2007

இலங்கை  
254/6 (50 நிறைவுகள்)
எதிர்   இந்தியா
185 (43.3 நிறைவுகள்)
  இலங்கை 69 ஓட்டங்களால் வெற்றி [26]
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ

ஞாயிறு மார்ச் 25 2007

பெர்மியூடா  
94/9 (21 of 21 நிறைவுகள்)
எதிர்   வங்காளதேசம்
96/3 (17.3 நிறைவுகள்)
  வங்காளதேசம் 7 இழப்புகளால் வெற்றி [27]
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ

* பர்மியுடாவின் துடுப்பாட்டத்தின் போது பெய்த மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் 21 நிறைவுகள் வழங்கப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 21 பந்து பரிமாற்றங்களில் 96 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.


குழு C

தொகு

எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.

அணி Pts Pld W T L NR NRR
  நியூசிலாந்து 6 3 3 0 0 0 +2.14
  இங்கிலாந்து 4 3 2 0 1 0 +0.42
  கென்யா 2 3 1 0 2 0 −1.19
  கனடா 0 3 0 0 3 0 −1.39

புதன் மார்ச் 14 2007

கனடா  
199 (50 நிறைவுகள்)
எதிர்   கென்யா
203/3 (43.2 நிறைவுகள்)
  கென்யா 7 இழப்புகளால் வெற்றி [28]
Beausejour மைதானாம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா

வெள்ளி மார்ச் 16 2007

இங்கிலாந்து  
209/7 (50 நிறைவுகள்)
எதிர்   நியூசிலாந்து
210/4 (41 நிறைவுகள்)
  நியூசிலாந்து 6 இழப்புகளால் வெற்றி [29]
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா

ஞாயிறு மார்ச் 18 2007

இங்கிலாந்து  
279/6 (50 நிறைவுகள்)
எதிர்   கனடா
228/7 (50நிறைவுகள்)
  இங்கிலாந்து 51ஓட்டங்களால் வெற்றி[30]
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா

செவ்வாய் மார்ச் 20 2007

நியூசிலாந்து  
331/7 (50 நிறைவுகள்)
எதிர்   கென்யா
183 (49.2 நிறைவுகள்)
  நியூசிலாந்து 148 ஓட்டங்களால் வெற்றி[31]
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா

வியாழன் மார்ச் 22 2007

நியூசிலாந்து  
363/5 (50 நிறைவுகள்)
எதிர்   கனடா
249 (49.2 நிறைவுகள்)
  நியூசிலாந்து 114 ஓட்டங்களால் வெற்றி [32]
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா

சனி மார்ச் 24 2007

கென்யா  
177 (43 நிறைவுகள்)
எதிர்   இங்கிலாந்து
178/3 (33 நிறைவுகள்)
  இங்கிலாந்து 7 இழப்புகளால் வெற்றி [33]
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா

குழு D

தொகு

எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.

அணி Pts Pld W T L NR NRR
  மேற்கிந்தியத்தீவுகள் 6 3 3 0 0 0 +0.76
  அயர்லாந்து 3 3 1 1 1 0 −0.09
  பாக்கிஸ்தான் 2 3 1 0 2 0 +0.09
  சிம்பாப்வே 1 3 0 1 2 0 −0.89

செவ்வாய் மார்ச் 13 2007

மேற்கிந்தியத்தீவுகள்  
241/9 (50 நிறைவுகள்)
எதிர்   பாக்கிஸ்தான்
187 (47.2 நிறைவுகள்)
  மேற்கிந்தியத்தீவுகள் 54 ஒட்டங்களால் வெற்றி [34]
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா

வியாழன் மார்ச் 15 2007

சிம்பாப்வே  
221 (50 நிறைவுகள்)
எதிர்   அயர்லாந்து
221/9 (50 நிறைவுகள்)
போட்டி சமப்பட்டது[35]
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா

சனி மார்ச் 17 2007

பாகிஸ்தான்  
132 (45.4 நிறைவுகள்)
எதிர்   அயர்லாந்து
133 (7 விக்கெட்டுகளை இழந்து)
  அயர்லாந்து 3 இழப்புகளால் வெற்றி[36]
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா

திங்கள் மார்ச் 19 2007

சிம்பாப்வே  
202/5 (50 நிறைவுகள்)
எதிர்   மேற்கிந்தியத்தீவுகள்
204/4 (47.5 நிறைவுகள்)
  மேற்கிந்தியத்தீவுகள் 6 இழப்புகளால் வெற்றி[37] .
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா

புதன் மார்ச் 21 2007

பாகிஸ்தான்  
349 (49.5 நிறைவுகள்)
எதிர்   சிம்பாப்வே
99 (19.1 of 20 நிறைவுகள்)
  பாக்கிஸ்தான் 93 ஓட்டங்களால் வெற்றி [38].
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா

*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் சிம்பாப்வேக்கு 20 பந்து பரிமாற்றங்களில் 196 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.


வெள்ளி மார்ச் 23 2007

அயர்லாந்து
183/8 (48 நிறைவுகள்)
எதிர்   மேற்கிந்தியத்தீவுகள்
190/2 (38.1 of 48 நிறைவுகள்)
  மேற்கிந்தியத்தீவுகள் 8 இழப்புகளால் வெற்றி [39].
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா

*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு 40 பந்து பரிமாற்றங்களில் 190 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.


சுப்பர் 8

தொகு

எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.

அணி Pts Pld W T L NR RF OF RA OB NRR
  ஆஸ்திரேலியா 14 7 7 0 0 0 1725 266.1 1314 322 +2.4
  இலங்கை 10 7 5 0 2 0 1586 301.1 1275 337 +1.483
  நியூசிலாந்து 10 7 5 0 2 0 1378 308 1457 345.1 +0.253
  தென்னாபிரிக்கா 8 7 4 0 3 0 1561 299.1 1635 333.2 +0.313
  இங்கிலாந்து 6 7 3 0 4 0 1557 344.4 1511 307.4 -0.394
  மேற்கிந்தியத்தீவுகள் 4 7 2 0 5 0 1595 338.1 1781 337.1 -0.566
  வங்காளதேசம் 2 7 1 0 6 0 1084 318 1699 284 -1.514
  அயர்லாந்து 2 7 1 0 6 0 1111 333 1226 242 -1.73

சுருக்கங்கள்:

 • Pts = புள்ளிகள்
 • W = வெற்றி
 • T = சமன்
 • L = தோல்வி
 • RF = பெற்ற ஓட்டங்கள்
 • OF = துடுப்பெடுத்தாடிய நிறைவுகள்
 • RA = எதிராக பெறப்பட்ட ஓட்டங்கள்
 • OB = பந்து வீசிய நிறைவுகள்
 • NR = முடிவு இல்லை
 • NRR = நிகர ஓட்ட விகிதம்
 • PCF = குழு நிலையில் இருந்து முன் கொணர்ந்த புள்ளிகள்
 • Pld = விளையாடிய போட்டிகள்

அணிகளின் படி சூப்பர் 8 போட்டிகள்
ஆஸ். தெ.ஆ. இல. வ.தே. நியூ. இங். அய. மே.இ.
  ஆஸ்திரேலியா ஏப் 16 மார் 31 ஏப்20 ஏப் 08 ஏப் 13 மார் 27
  தென்னாபிரிக்கா மார் 28 ஏப் 07 ஏப் 14 ஏப் 17 ஏப் 03 ஏப் 10
  இலங்கை ஏப்16 மார் 28 ஏப் 12 ஏப் 04 ஏப் 18 ஏப் 01
  வங்காளதேசம் மார் 31 ஏப் 07 ஏப் 02 ஏப் 11 ஏப் 15 ஏப் 19
  நியூசிலாந்து ஏப் 20 ஏப் 14 ஏப் 12 ஏப் 02 ஏப் 09 மார் 29
  இங்கிலாந்து ஏப் 08 ஏப் 17 ஏப் 04 ஏப் 11 மார் 30 ஏப் 21
  அயர்லாந்து ஏப் 13 ஏப் 03 ஏப் 18 ஏப் 15 ஏப் 09 மார் 30
  மேற்கிந்தியத்தீவுகள் மார் 27 ஏப் 10 ஏப் 01 ஏப் 19 மார் 29 ஏப் 21

ஆஸ்திரேலியா  
322/6 (50 நிறைவுகள்)
மதிவ் எய்டன் 158 (143)
டெயிட் 31/3 (7.3 நிறைவுகள்)
பிரயன் லாரா 77 (83)
டெரன் பவல் 2/53 (10 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 103 ஓட்டங்களால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா
நடுவர்கள்: அலிம் டார், அசாட் ரவுவ்
ஆட்ட நாயகன்: மதிவ் எய்டன்
 • மார்ச் 27 அன்று அவுஸ்திரேலிய அணியின் சுற்றுக்குப் பின்னர் மழைக் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மார்ச் 28 அன்று போட்டி தொடரப்பட்டது.

இலங்கை  
209 (49.3 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா
212/9 (48.2 நிறைவுகள்)
திலகரத்ன டில்ஷான் 58 (76)
சார்ல் லங்கவெல்ட் 5/39 (10 நிறைவுகள்)
ஜக் கலிஸ் 86 (110)
லசித் மாலிங்க 4/54 (9.2 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா 1 விக்கெட்டால் வெற்றி
புரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், டரில் ஆப்பர்
ஆட்ட நாயகன்: சார்ல் லங்கவெல்ட்

  நியூசிலாந்து
179/3 (39.2 நிறைவுகள்)
கிறிஸ் கைல் 44 (56)
ஜேக்கப் ஓறம் 3/23 (8 நிறைவுகள்)
ஸ்கொட் ஸ்டைறிஸ் 80* (90)
டரென் பவெல் 2/39 (10 நிறைவுகள்)
நியூசிலாந்து   7 விக்கெட்டுகளால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா
நடுவர்கள்: அசாட் ரவூஃப், ரூடி கோர்ட்சென்
ஆட்ட நாயகன்: ஜேக்கப் ஓறம்

இங்கிலாந்து  
266/7 (50 நிறைவுகள்)
  அயர்லாந்து
218 (48.1 நிறைவுகள்)
போல் கொலிங்வுட் 90 (82)
போயிட் ரேங்கின் 2/28 (7 நிறைவுகள்)
நெயில் ஓ'பிரியன் 63 (88)
அன்றுவ் பிலின்டொப் 4/43 (8.1 நிறைவுகள்)
  இங்கிலாந்து 48 ஓட்டங்களால் வெற்றி
புரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா
நடுவர்கள்: பிளி டொக்டுரோவ், சிமொன் டஃப்
ஆட்ட நாயகன்: போல் கொலிங்வுட்

வங்காளதேசம்  
104/6 (22 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா
106/0 (13.5 of 22 நிறைவுகள்)
மசாரபே மொர்டாசா 25* (17)
கிலென் மக்றாத் 3/16 (5 நிறைவுகள்)
அடம் கில்கிறிஸ்ட் 59* (44)
அப்துர் ரசாக் 0/15 (3 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகளால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா
நடுவர்கள்: அலிம் டார், பிளி பொவ்டன்
ஆட்ட நாயகன்: கிலென் மக்றாத்
 • ஈரமான மைதானம் காரணாமாக போட்டி தாமதமானது. போட்டி அணிக்கு 22 பந்துப் பரிமற்றாமாக குறைக்கப்பட்டது.

இலங்கை  
303/5 (50 நிறைவுகள்)
  மேற்கிந்தியத்தீவுகள்
190 (50 இல் 44.3 நிறைவுகள்)
சனத் ஜெயசூரிய 115 (101)
டெரன் பவல் 2/38 (10 நிறைவுகள்)
சிவநாரயன் சந்திரபோல் 76 (110)
சனத் ஜெயசூரிய 3/38 (8.3 நிறைவுகள்)
  இலங்கை 113 ஓட்டங்களால் வெற்றி
புரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா
நடுவர்கள்: மார்க் பென்சன், டரில் ஆப்பர்
ஆட்ட நாயகன்: சனத் ஜெயசூரிய

வங்காளதேசம்  
174 (48.3 நிறைவுகள்)
  நியூசிலாந்து
178/1 (29.2 நிறைவுகள்)
மொகம்மட் றபீக் 30* (36)
ஸ்கொட் ஸ்டைரிஸ் 4/43 (10 நிறைவுகள்)
ஸ்டீபன் பிளேமிங் 102* (92)
சயிட் றசல் 1/22 (7 நிறைவுகள்)
  நியூசிலாந்து 9 இலகுகளால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா
நடுவர்கள்: அலிம் டார், ரூடி கோர்ட்சென்
ஆட்ட நாயகன்: சேன் பொன்ட்

அயர்லாந்து
152/8 (35 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா
165/3 (35 இல் 31.3 நிறைவுகள்)
அன்று வைட் 30 (30)
சார்ள் லிங்கவெட் 3/41 (7 நிறைவுகள்)
ஜக் கலிஸ் 66* (86)
பொயிட் ரன்கின் 2/26 (7 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா 7 இழப்புகளால் வெற்றி (DL)
புரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா
நடுவர்கள்: டரில் ஆப்பர், சிமொன் டஃப்
ஆட்ட நாயகன்: ஜக் கலிஸ்

இலங்கை  
235 (50 நிறைவுகள்)
  இங்கிலாந்து
233/8 (50 நிறைவுகள்)
உபுல் தரங்க 62 (103)
சஜீட் மகமூட் 4/50 (9 நிறைவுகள்)
கெவின் பீற்றசன் 58 (80)
தில்லார பர்னாட்டோ 3/41 (9 நிறைவுகள்)
  இலங்கை 2 ஓட்டங்களால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா
நடுவர்கள்: அசாட் ரவூஃப், பிளி பொவ்டன்
ஆட்ட நாயகன்: ரவி போபாரா

வங்காளதேசம்  
251/8 (50 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா
184 (48.4 நிறைவுகள்)
முகமட் அஸ்ரபுல் 87 (83)
அன்றே நீல் 5/45 (10 நிறைவுகள்)
ஏர்சல் கிப்ஸ் 56* (59)
அப்துர் ரசாக் 3/25 (9.4 நிறைவுகள்)
  வங்காளதேசம் 67 ஓட்டங்களால் வெற்றி
புரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா
நடுவர்கள்: மார்க் பென்சன், பிளி டொக்டுரோவ்
ஆட்ட நாயகன்: முகமட் அஸ்ரபுல்

இங்கிலாந்து  
247 (49.5 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா
248/3 (47.2 நிறைவுகள்)
கெவின் பீற்றசன் 104 (122)
நேதன் பிரேக்கன் 3/33 (10 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா
நடுவர்கள்: பிளி பொவ்டன்,ரூடி கோர்ட்சென்
ஆட்ட நாயகன்: சாயுன் டயிட்

நியூசிலாந்து  
263/8 (50 நிறைவுகள்)
  அயர்லாந்து
134 (37.4 நிறைவுகள்)
பீற்றர் ஃபுல்ரன் 83 (110)
கைல் மக்கெல்லன் 2/35 (10 நிறைவுகள்)
கெவின் ஓ'பிறையன் 49 (45)
டானியேல் வெட்டோறி 4/23 (8.4 நிறைவுகள்)
  நியூசிலாந்து 129 ஓட்டங்களால் வெற்றி
புரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சைமன் டோஃபெல்
ஆட்ட நாயகன்: பீற்றர் ஃபுல்ரன்

தென்னாபிரிக்கா  
356/4 (50 நிறைவுகள்)
எப் டி விலர்ஸ் 146 (129)
குரே கொலின்மோர் 2/41 (10 நிறைவுகள்)
ராம்நரேஸ் சர்வான் 92 (75)
சான் பொலக் 2/33 (8 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா 67 ஓட்டங்களால் வெற்றி
குயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா
நடுவர்கள்: மார்க் பென்சன், டரில் ஆப்பர்
ஆட்ட நாயகன்: எப் டி விலர்ஸ்

வங்காளதேசம்  
143 (37.2 நிறைவுகள்)
  இங்கிலாந்து
147/6 (44.5 நிறைவுகள்)
சக்கிபுல் உசைன் 57* (95)
மொண்டி பெனசார் 3/25 (7நிறைவுகள்)
மைகல் வோர்கன் 30 (59)
சயிட் றசல் 2/25 (10 நிறைவுகள்)
  இங்கிலாந்து 4 இழப்புகளால் வெற்றி
கென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சிமொன் டஃப்
ஆட்ட நாயகன்: சஜீட் மகமூட்

  இலங்கை
222/4 (45.1 நிறைவுகள்)
எஸ். ஸ்டைரிஸ் 111 (ஆட்டமிழக்காமல்)
முத்தையா முரளிதரன் 3/32 (10 நிறைவுகள்)
குமார் சங்கக்கார (69 ஆட்டமிழக்காமல்)
டனியல் விட்டோரி 2/35 (10 நிறைவுகள்)
  இலங்கை 6 இழப்புகளால் வெற்றி
குயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா
நடுவர்கள்: அசாட் ரவூஃப், பிளி டொக்டுரோவ்
ஆட்ட நாயகன்: சமிந்த வாஸ்

அயர்லாந்து
91 (30 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா
92/1 (12.2 நிறைவுகள்)
ஜோன் மூனி 23 (44)
கிளென் மெக்ரா 3/17 (7 நிறைவுகள்)
ஆடம் கில்கிறிஸ்ட் 34 (25)
டிரெண்ட் ஜோன்ஸ்டன் 1/18 (3 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 9 இழப்புகளால் வெற்றி
கென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்
நடுவர்கள்: பில்லி போவ்டன், ரூடி கோர்ட்சென்
ஆட்ட நாயகன்: கிளென் மெக்ரா

தென்னாபிரிக்கா  
193/7 (50 நிறைவுகள்)
  நியூசிலாந்து
196/5 (48.2 நிறைவுகள்)
ஹேர்ஷெல் கிப்ஸ் 60 (100)
கிறெய்க் மாக்மில்லன் 3/23 (5நிறைவுகள்)
ஸ்கொட் ஸ்டைரிஸ் 56 (84)
ஆண்ட்ரே நெல் 2/33 (9.2 நிறைவுகள்)
  நியூசிலாந்து 5 இழப்புகளால் வெற்றி
குயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா
நடுவர்கள்: மார்க் பென்சன், டறில் ஹார்ப்பர்
ஆட்ட நாயகன்: கெறெய்க் மாக்மில்லன்

அயர்லாந்து
243/7 (50 நிறைவுகள்)
  வங்காளதேசம்
169 (41.2 நிறைவுகள்)
வில்லியம் போர்டிபீல்ட் 85 (136)
மாசாரபீ மோடாசா 2/38 (10 நிறைவுகள்)
முகமது அஸ்ரபுல் 35 (36)
கைல் மெக்கிளான் 2/25 (8 நிறைவுகள்)
  அயர்லாந்து 74 ஓட்டங்க்களால் வெற்றி
கென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்
நடுவர்கள்: பில்லி போவ்டன், ஸ்டீவ் பக்னோர்
ஆட்ட நாயகன்: வில்லியம் போர்டிபீல்ட்

இலங்கை  
226 (49.4 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா
232/3 (42.4 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி
குயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா
நடுவர்கள்: அலீம் டார், பில்லி டொக்ட்ரோவ்
ஆட்ட நாயகன்: நேத்தன் பிராக்கன்

இங்கிலாந்து  
154 (48 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா
157/1 (19.2 பந்துப் பரிமாறங்கள்)
அன்றுவ் ஸ்டாரஸ் 46 (67)
அன்றுவ் ஆல் 5/18 (10 நிறைவுகள்)
கிறாம் ஸ்மித் 89* (58)
அன்றுவ் பிளிண்டொப் 1/36 (6 நிறைவுகள்)
  தென்னாபிரிக்கா 9 இழப்புகளால் வெற்றி
கென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சிமொன் டஃப்
ஆட்ட நாயகன்: அன்றுவ் ஆல்

அயர்லாந்து
77 (27.4 நிறைவுகள்)
  இலங்கை
81/2 (10 நிறைவுகள்)
ஜெரமி பிரே 20 (29)
முத்தையா முரளிதரன் 4/19 (5 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 39 (27)
டேவ் லாங்போட் 1/29 (3 நிறைவுகள்)
  இலங்கை 8 இழப்புகளால் வெற்றி
குயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா
நடுவர்கள்: மாக் பென்சன், பில்லி டொக்ட்ரோவ்
ஆட்ட நாயகன்: பர்வீஸ் மவுரூவ்

  வங்காளதேசம்
131 (43.5 நிறைவுகள்)
ராம்நரேஷ் சர்வான் 91* (90)
அஃப்டாப் அஹமது 1/12 (2 நிறைவுகள்)
முஷ்ஃபிக்கார் றஹீம் 38* (75)
டரென் பவெல் 3/38 (10 நிறைவுகள்)
  மேற்கிந்தியத்தீவுகள் 99 ஓட்டங்களால் வெற்றி
கென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்
நடுவர்கள்: பில்லி போடன், ரூடி கோர்ட்சென்
ஆட்ட நாயகன்: ராம்நரேஷ் சர்வான்

ஆஸ்திரேலியா  
348/6 (50 நிறைவுகள்)
  நியூசிலாந்து
133 (25.5 நிறைவுகள்)
மத்தியூ ஹேடன் 103 (100)
ஜாமெச் பிராங்கிளின் 3/74 (8 நிறைவுகள்)
பீட்டர் ஃபுல்டன் 62 (72)
பிராட் ஹொக் 4/29 (6.5 நிறைவுகள்)
  ஆஸ்திரேலியா 215 ஓட்டங்களால் வெற்றி
குயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா
நடுவர்கள்: அலீம் டார், அசாட் ராவூஃப்
ஆட்ட நாயகன்: மத்தியூ ஹேடன்

  இங்கிலாந்து
301/9 (49.5 பந்து பரிமாற்றங்காள்)
கிறிஸ் கைல் 79 (58)
மைக்கேல் வோன் 3/39 (10 நிறைவுகள்)
கெவின் பீற்றர்சன் 100 (91)
டுவைன் பிறாவோ 2/47 (9.5)
  இங்கிலாந்து ஒரு இலக்கால் வெற்றி
கென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்
நடுவர்கள்: றூடி கோர்ட்சென், சமொன் டோஃபெல்
ஆட்ட நாயகன்: கெவின் பீற்றர்சன்

வெளியேறு நிலை

தொகு
  அரை இறுதி இறுதி
             
ஏப்ரல் 24 - சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா
  2   இலங்கை 289/5  
  3   நியூசிலாந்து 208  
 
ஏப்ரல் 28 -கிங்ஸ்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்
       இலங்கை 215/8
     ஆஸ்திரேலியா 281/4
ஏப்ரல் 25 - Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா
  1   ஆஸ்திரேலியா 153/3
  4   தென்னாபிரிக்கா 149  

அரை இறுதிகள்

தொகு
இலங்கை  
289/5 (50 நிறைவுகள்)
  நியூசிலாந்து
208 (41.4 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 115* (109)
ஜேம்ஸ் பிராங்க்ளின் 2/46 (9 நிறைவுகள்)
பீட்டர் ஃபுல்ட்டன் 46 (77)
முத்தையா முரளிதரன் 4/31 (8 நிறைவுகள்)
  இலங்கை 81 ஓட்டங்களால் வெற்றி [40]
சபினா பார்க், கிங்ஸ்டன், ஜமெய்கா
நடுவர்கள்: ரூடி கோர்ட்சென், சைமன் டோஃபல்
ஆட்ட நாயகன்: மகெல ஜயவர்தன

தென்னாபிரிக்கா  
149 (43.5 பந்து பரிமாற்றங்கள்)
  ஆஸ்திரேலியா
153/3 (31.3 பந்து பரிமாற்றங்கள்)
ஜஸ்டின் கெம்ப் 49* (91)
ஷோன் டைட் 4/39 (10 பந்து பரிமாற்றங்கள்)
மைக்கல் கிளார்க் 60* (86)
ஷோன் பொல்லொக் 1/16 (5 பந்து பரிமாற்றங்கள்)
  ஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி [41]
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா
நடுவர்கள்: அலீம் டார், ஸ்டீவ் பக்நோர்
ஆட்ட நாயகன்: கிளென் மெக்ரா

இறுதி

தொகு
ஆஸ்திரேலியா  
281/4 (38 பந்து பரிமாற்றங்கள்)
  இலங்கை
215/8 (36 பந்து பரிமாற்றங்கள்)
அடம் கில்கிறிஸ்ற் 149 (104)
லசித் மாலிங்க 2/49 (8 பந்து பரிமாற்றங்கள்)
சனத் ஜெயசூரிய63 (67)
மைக்கல் கிளார்க் 2/30 (4 பந்து பரிமாற்றங்கள்)
  ஆஸ்திரேலியா 53 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
கென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்
நடுவர்கள்: ஸ்டீவ் பக்நர், அலீம் டார்
ஆட்ட நாயகன்: அடம் கில்கிறிஸ்ற்
 • மழை காரணமாக ஆட்டம் ஒவ்வொரு அணிக்கும் 38 பந்து பரிமாற்றங்களாகக் குறைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கான வெற்றி இலக்கு 36 நிறைவுகளில் 269 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இரண்டு அணிகளும் 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகி இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த ஒரு தோல்வியைத் தவிர இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா இலங்கை அணிக்கெதிராக விளையாடிய அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை இறுதி ஆட்டம் இலங்கை பங்குபற்றிய இரண்டாவது உலகக்கிண்ண இறுதி ஆட்டமாகும். அவுஸ்திரேலியாவுக்கு இது ஆறாவது ஆகும். அவுஸ்திரேலியா இப்போட்டித்தொடரை எந்த ஒரு ஆட்டத்தையும் இழக்காமல் விளையாடி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

தொகு

தொடரின் சிறந்த வீரர்: கிளென் மெக்ரா

சாதனைகள்

தொகு
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் (தற்போதய)
சாதனை எய்வு வீரர் நாடு
கூடிய ஓட்டங்கள்
659 எம்.எய்டன்   ஆஸ்திரேலியா
548 எம்.ஜயவர்தன   இலங்கை
539 ஆர்.பொன்டிங்   ஆஸ்திரேலியா
கூடிய இலக்குகள்
26 ஜி.மெக்ரா   ஆஸ்திரேலியா
23 எம்.முரளிதரன்   இலங்கை
எஸ்.டைற்   ஆஸ்திரேலியா
21 பி.ஓக்   ஆஸ்திரேலியா
கூடிய ஆட்டமிழப்புகள்
(குச்சக் காப்பாளர்)
17 ஏ.கில்கிறிஸ்ற்   ஆஸ்திரேலியா
15 கே.சங்கக்கார   இலங்கை
14 பி.மக்கலம்   நியூசிலாந்து
கூடிய பிடிகள்
(களத்தார்)
8 பி.கொலிங்வூட்   இங்கிலாந்து
ஜி.ஸ்மித்   தென்னாபிரிக்கா
7 எச்.கிப்ஸ்   தென்னாபிரிக்கா
ஈ.மோர்கன்   அயர்லாந்து
எம்.எய்டன்   ஆஸ்திரேலியா
ஆர்.பொன்டிங்   ஆஸ்திரேலியா
மூலம்: கிரிக்-இன்ஃவோ.கொம் தகவல் ஏப்ரல் 29, 2007.

முக்கிய நிகழ்வுகள்

தொகு

உலகக் கிண்ணப் போட்டிகளின் போது நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்:

 • அயர்லாந்து தமது முதல் உலகக் கிண்ணப் போட்டிகளை சிம்பாப்வேயுடன் சமன் செய்தது. இவ்வாறான நிகழ்வு உலகக்கிண்ணத்தில் நிகழ்வது இது மூன்றாவது முறையாகும்.
 • தென்னாபிரிக்க அணியின் ஹேர்ஷெல் கிப்ஸ் ஒரு ஓவரில் 6 ஆறுகளை நெதர்லாந்துக்கெதிராக அடித்து உலக சாதனை புரிந்தார்.
 • வங்காள தேச அணி முதல் சுற்றில் இந்திய அணியுடன் ஆடி வெற்றி பெற்றது.
 • அயர்லாந்து அணி பாகிஸ்தானை வென்றது. பாகிஸ்தான் இத்தோல்வி மூலம் சூப்பர் 8க்கு தெரிவாகவில்லை.
 • பாகிஸ்தானின் இத்தோல்விக்கு அடுத்தநாள் மார்ச் 18 2007 அன்று பாகிஸ்தானின் பயிற்றுநர் பாப் வுல்மர் தனது விடுதி அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
 • பாகிஸ்தான் அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக் ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 • வங்காள தேசத்தின் பர்முடாவுக்கு எதிரான 7 இலக்கு வெற்றியின் பின்னர் B குழுவில் இந்தியாவுக்குப் பதிலாக வங்கதேசம் சூப்பர் 8 போட்டிகளுக்கு தகுதி பெற்றது. வங்கதேசம் உலகக்கிண்ணப் போட்டிகளின் போது குழு நிலையில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது இது முதல் முறையாகும்.
 • ஏர்சல் கிப்ஸ் மற்றும் மத்தியூ எய்டனின் திறம் மிக்க ஆட்டத்தை அடுத்து செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அவர்களுக்கு செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் நாட்டின் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.
 • இலங்கைக்கு எதிராக அயர்லாந்து எடுத்த 77 ஓட்டங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் 6 ஆவது குறைந்தபட்ச ஓட்டமாகும்.
 • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் கலீஸ் 17 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் அவர் ஒரு நாள் போட்டியில் 9,000 ஓட்டங்களைக் கடந்த 10 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஓட்டங்களைக் கடந்த முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். கலீஸ் 256 போட்டிகளில் விளையாடி இந்த ஓட்டங்களை எடுத்துள்ளார்.
 • முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் அயர்லாந்தின் கெவின் ஓ பிறையன் முரளியின் `450' ஆவது விக்கெட்டாக வீழ்ந்தார்.
 • பிறையன் லாரா, றசல் ஆர்னல்ட், கிளென் மெக்ரா ஆகியோர் துடுப்பாட்டப் போட்டிகளில் இனி விளையாடுவதில்லை என அறிவித்துள்ளனர்.
 • இலங்கை அணியுடனான அரை இறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நியூசிலாந்து அணியின் ஸ்டீபன் பிளமிங்க் அவ்வணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலோட்டம்

தொகு

சவால்கள்

தொகு

பிப்ரவரி 2006இல் மேற்கிந்தியத்தீவுகள் உலகக்கிண்ணத்தை நடத்த தகுதி வாய்ந்ததா என சர் ரொனால்ட் சாண்டர்ஸ் கேள்வி எழுப்பினார்[42]. இவர் இப்பகுதி நாடுகள் புதிய திடல்கள் அமைப்பதற்கான கடன்களை உலகக்கிண்ண வருமானத்தையும் 2007க்குப் பிறகான சுற்றுலா கைத்தொழில் வளர்ச்சியையும் நம்பியே வங்கிகளிடமிருந்து பெறுவதாக எடுத்துக் காட்டினார்[43]. இதற்கு, இந்நிலப்பகுதியில் காணப்படும் துடுப்பாட்டம் மீதான அளவுக்குக் கூடிய பற்று இத்தொடரை வெற்றியடைய செய்யும் என மேற்கிந்திய வீரர்கள் பதிலளித்தனர் [44].

உலகக்கிண்ணத்துக்கான தயார் நிலையில் பல பிரச்சினைகள் தோன்றின. சில விளையாடுத் திடல்கள் மார்ச் 11 2007, உலகக்கிண்ண தொடக்க நிகழ்வின்போது 100% நிறைவடையவில்லை.[45] சபினா திடலில் பார்வையாளர்களது பாதுகாப்பு கருதி பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில் இருக்கைகள் அகற்றப்பட்டன.[46] டிரால்னீ திடல் யமேக்காவில் தயார்நிலை போட்டிகளின் போது திடல் ஊழியர்கள் உள்செல்ல முடியாமல் போனது [47]. மேலதிகமாக அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் பயிற்சித் திடல்கள் பற்றிய தமது கவலையை தெரிவித்திருந்தன[48].

உசாத்துணைகள்

தொகு
 1. "Sir Vivian Richards Stadium cost". Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03.
 2. Kensington Oval cost
 3. Providence Stadium cost பரணிடப்பட்டது 2007-05-06 at the வந்தவழி இயந்திரம்/
 4. "Sabina Park cost". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-27.
 5. "Warner Park Stadium cost" (PDF). Archived (PDF) from the original on 2004-08-23. பார்க்கப்பட்ட நாள் 2004-08-23.
 6. "Greenfield Stadium Coast". Archived from the original on 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2012-12-06.
 7. "Robert Bryan, executive director, Jamaica 2007 Cricket Limited (from www.jamaica-gleaner.com)". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-03-22.
 8. "ICC Playing Conditions for 2007 World Cup" (PDF). Archived from the original (PDF) on 2007-02-26. பார்க்கப்பட்ட நாள் February 27, 2007.
 9. "Sponsorship revenue". Archived from the original on 2007-03-09. பார்க்கப்பட்ட நாள் 2007-03-26.
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-25. பார்க்கப்பட்ட நாள் 2007-03-26.
 11. http://www.taipeitimes.com/News/editorials/archives/2007/03/11/2003351858
 12. "World Cup Overview". cricketworldcp.com. Archived from the original on 2007-01-24. பார்க்கப்பட்ட நாள் 2007-01-29.
 13. "ஐ.சி.சி அறிகை 51 ஓருநாள் போட்டிகள் மட்டுமே". Archived from the original on 2007-04-16. பார்க்கப்பட்ட நாள் 2007-03-26.
 14. "World Cup seedings plan announced". Archived from the original on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-03-26.
 15. "How the World Cup works". பிபிசி விளையாட்டு. 14 பெப்ரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-20. {{cite web}}: Check date values in: |date= (help)
 16. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ் எதிர் ஸ்கொட்
 17. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் தெ.ஆ. எதிர் நெதர்.
 18. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ். எதிர் நெத.
 19. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் ஸ்கொட். எதிர் தெ.ஆ.
 20. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் ஸ்கொ. எதிர் நெத.
 21. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ். எதிர் தெ.ஆ.
 22. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் பர்.
 23. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இந். எதிர் வங்.
 24. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இந். எதிர் பர்.
 25. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் வங்.
 26. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் இந்.[தொடர்பிழந்த இணைப்பு]
 27. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் பர். எதிர் வங்.
 28. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் கன. எதிர் கென்.
 29. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இங். எதிர் நிசி.
 30. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இங். எதிர் கன.
 31. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் நிசி. எதிர் கென்.
 32. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் நிசி. எதிர் கன.
 33. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் கென். எதிர் இங்.
 34. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் மே.தீ. எதிர் பாக்.
 35. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் சிம். எதிர் அய.
 36. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் பாக். எதிர் அய.
 37. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் சிம். எதிர் மே.தீ.
 38. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் பாக். எதிர் சிம்.
 39. கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அய. எதிர் மே.தீ.
 40. இலங்கை எதிர் நியூசிலாந்து
 41. தென்னாபிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா
 42. கரிபியன் நெட் செய்திகள்
 43. சாண்டரின் அறிக்கை
 44. "மேற்கிந்திய வீரர் நம்பிக்கை". Archived from the original on 2007-02-12. பார்க்கப்பட்ட நாள் 2007-03-22.
 45. "கட்டுமான வேலைகள் தாமதம்". Archived from the original on 2007-06-04. பார்க்கப்பட்ட நாள் 2007-03-23.
 46. "ஆசனங்கள் பிரச்சினை". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-03-23.
 47. ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
 48. "அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் பயிற்சி போதமை பற்றி கவலை". Archived from the original on 2007-03-06. பார்க்கப்பட்ட நாள் 2007-03-06.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

இறுதியாட்டம்

தொகு